மராத்தியர்களின் எழுச்சி மற்றும் மராத்திய மாமன்னர் சிவாஜியின் போர் வெற்றிகள்

 மராத்தியர்களின் எழுச்சி

  • முகலாயர்களின் வீழ்ச்சியில் மராத்தியர் முக்கிய பங்கு வகித்தனர்.
  • பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் மையப் பகுதியில் மராத்திய மாமன்னர் சிவாஜியின் தலைமையில் முகலாய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றனர் மராத்தியர்.
  • தஞ்சாவூரில் நாயக்க மன்னரின் ஆட்சி முடிவடைந்தவுடன் மராத்திய தளபதி வெங்கோஜி (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரன்) தமிழகத்தில் மராத்திய ஆட்சியை ஏற்படுத்தினார். 
  • தஞ்சையில் 1674 ஆம் ஆண்டு தொடங்கிய மராத்திய ஆட்சி 1832 ஆம் ஆண்டு இரண்டாம்  சரபோஜி மன்னர் மரணம் வரை நீடித்தது. 


மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள்

  • தக்காணம் மற்றும் மகாராஷ்டிரா மலைப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள் மராத்தியர்கள். 
  • மராத்தியர்கள் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி கொங்கனம் என்று அழைக்கப்பட்டது.
  • செங்குத்தான மலைகள், பள்ளத்தாக்குகள்,  மலைக்கோட்டைகளும் இவர்களுக்கு பாதுகாப்பு அரண்களாக திகழ்ந்தன.
  • வலிமை மிகுந்த காலாட்படையும் ஆபத்தான ஆயுதங்களையும் கொண்டிருந்த முகலாய இராணுவத்துடன் நேரடியாக மோதுவதை மராத்தியர்கள் தவிர்த்தனர்.
  • கொரில்லா தாக்குதல் முறையை பின்பற்றினர். கொரில்லா போர் முறை என்பது ஒரு முறை சாரா போர்முறை ஆகும். மலைகளுக்கு இடையே மறைந்து கொண்டு திடீரென எதிரிகளை தாக்கும் முறையாகும்.
  • இரவு நேரங்களில் திடீரென மின்னல் வேகத்தில் தாக்குதல்களை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் திறமை கொண்டிருந்தனர் மராத்தியர்கள்.
  • முஸ்லீம்களின் செயல்பாடுகளினால் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் பக்தி இயக்கம் பரவியதன் மூலமாகவும் மராத்தியர்கள் இடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கியது.
  • துக்காராம், ராம்தாஸ், ஏகநாதர் ஆகியோர் பக்தி இயக்கத்தின் முன்னோடிகள் ஆவர்.
  • துக்காராம்,  ராமதாஸ் ஆகியோர் சிவாஜியின் வாழ்வின் மீது கணிசமான செல்வாக்கு செலுத்தினர்.


மாமன்னர் சிவாஜி(1627 முதல் 1680 வரை) 


The Great King Shivaji - Maratha Empire

  • பூனாவிற்கு அருகில் உள்ள ஜின்னார் என்ற இடத்திற்கு அருகே சிவனர் சிவனேரிக்கோட்டையில் 1627 சிவாஜி பிறந்தார்.
  • இவரது தந்தை ஷாஜி போஸ்லே மற்றும் தாய் ஜீஜாபாய்.
  • இவரது தந்தையான ஷாஜி போன்ஸ்லே தந்தை வழியில் மேவாரின் சிசோடியாக்களின் வழி தோன்றல் மற்றும்  தாய் வழியில் தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர் வழி தோன்றல் ஆவார்.
  • அகமது நகர் அகமது ஷாவின் அபிசீனிய அமைச்சராகவும் முன்னாள் அடிமையாகவும் இருந்த மாலிக் அம்பர் (1548 - 1626) என்பவரின் கீழ் ஷாஜி போன்ஸ்லே பணி புரிந்தார்.
  • மாலிக் அம்பர் மறைவுக்குப் பிறகு அரசியலில் ஈடுபட்ட ஷாஜி போன்ஸ்லே அகமது நகர் முகலாயர்களால் இணைக்கப்பட்ட பிறகு பீஜப்பூர் சுல்தானிடம் பணியை தொடர்ந்தார்.
  • துக்காபாய் என்பவரை இரண்டாவது திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முதல் மனைவியான ஜீஜாபாய் மற்றும் மகன் சிவாஜியை பூனாவில் இருந்த சாஜி போன்ஸ்லேவின் ஜாகிர்தாரரான தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பொறுப்பில் விட்டார்.

  • ஜாகீர்: இராணுவம் மற்றும் நிர்வாக சேவைகளுக்காக அங்கீகாரமாக வழங்கப்பட்ட நிலமாகும்.
  • மராத்திய நாட்டில் மத எழுச்சி என்பது பிராமண சமயம் சார்ந்ததாக இல்லை. அமைப்புகள் சடங்குகள் வகுப்பு வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான தனது போராட்டத்தைப் பொறுத்தவரை வழக்கத்தில் உள்ள கொள்கைக்கு மாறாக அது அமைந்தது. துறவிகள் பெரும்பாலும் பிராமண வகுப்பை சாராமல் சமூகத்தின் அடிநிலையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர் - நீதிபதி ரானடே

  • சிவாஜிக்கு குதிரை ஏற்றம் மற்றும் போரிடும் முறையை கற்றுத் தந்தவர் - தாதாஜி கொண்டதேவ்.
  • ஜிஜாபாய் மகாபாரதம் ராமாயண கதைகளை சிவாஜிக்கு கற்று தந்தார்.
  • சிவாஜி துறவி ராம்தாஸ்  அவர்களை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.
  • சிவாஜி தமது 19 வயது முதல் இராணுவ செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.
  • 1645 இல் கோண்டுவானா  கோட்டை கைப்பற்றப்பட்டது. 
  • 1546 இல் தோர்னாக் கோட்டையை பீஜப்பூர் சுல்தான் இடமிருந்து கைப்பற்றினார்.
  • தோர்னாவில் இருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த ராய்க்கர் கோட்டையும் கைப்பற்றினார்.
  • 1647 தாதாஜி கொண்டதேவ் மறைந்த பிறகு தமது தந்தையின் ஜாகிர் நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சிவாஜி ஏற்றார்.
  • இதனைத் தொடர்ந்து பாராமதி,  இந்தபுரம், புரந்தர், கொன்டானா ஆகிய கோட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
  • கல்யாண் என்ற முக்கிய நகரையும் மராத்தியர் கைப்பற்றி இருந்தனர்.
  • பீஜப்பூர்  சுல்தான் சிவாஜியின் தந்தையை சிறையில் அடைத்தார்.
  • 1649 ஆம் ஆண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் பீஜப்பூர்  சுல்தான் சாஜியை விடுதலை செய்தார்.
  • இதனால் 1649 முதல் 1655 வரை ராணுவ செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார் சிவாஜி(தந்தையின் மரணம் வரை). 
  • 1656 ஆம் ஆண்டு சிவாஜி இராணுவ செயல்பாடுகளில் மீண்டும் ஈடுபடத் தொடங்கினார்.
  • சதாரா மாவட்டத்தில் உள்ள ஜாவ்லி என்ற இடத்தை கைப்பற்றினார்.
  • ஜாவ்லி என்ற இடத்திற்கு மேற்கே இரண்டு மைல் தொலைவில் பிரதாப்கர் என்ற புதிய கோட்டை கட்டப்பட்டது.
  • 1656 நவம்பர் மாதம் பீஜப்பூரில் முகமது அடில்ஷா மரணம் அடைந்தார். 18 வயதே நிரம்பிய இரண்டாம் அடில்ஷா  அடுத்து பொறுப்பு ஏற்றார்.
  • 1657 பீடார், கல்யாணி,  புரந்தர் ஆகியவற்றை ஒளரங்கசீப் கைப்பற்றினார். 
  • எனவே பீஜப்பூர் சுல்தானும் சிவாஜியும் ஔரங்கசீப்புடன் சமரசம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • அந்த நேரத்தில் ஷாஜகான் நோய்வாய்பட்டார். டில்லியில் அரியணையை பிடிக்க ஒளரங்கசீப் தில்லி சென்றார்.
  • இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சிவாஜி வடக்கு கொங்கனம் மீது போர்த் தொடுத்து கல்யாண், பிவாண்டி,  மாகுலி கோட்டைகளைக் கைப்பற்றினார்.
  • முகலாயர்களிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை என்பதால் பீஜப்பூர் சுல்தான் சிவாஜி மீது தாக்குதல் நடத்த முடிவு செய்து அப்சல் கான் என்பவரை அனுப்பி வைத்தார்.
  • “மலையில் ஒளிந்து கொண்டிருக்கும் எலியை சங்கிலியில் கட்டி இழுத்துக்கொண்டு வருவேன்” - அப்சல்கான் 
  • மலை பாங்கான பகுதியில் சண்டையிடுவது அவருக்கு சிரமமாக இருந்தது. சிவாஜி புலி நகத்தால் அப்சல்கானை கிழித்து கொலை செய்தார்.
  • பீஜப்பூர் சுல்தான் தாமே படைகளுக்கு தலைமை தாங்கினார். போர் ஓராண்டு காலம் நீடித்தது. ஆனால் எந்த பகுதியையும் வெல்ல முடியவில்லை.
  • சிவாஜி தம் ஆளுகைக்கு கீழ் உள்ள பகுதிகளின் ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
  • 1658 ஜூலை மாதம் ஔரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறினார்.
  • சிவாஜியை அடக்குவதை நோக்கமாகக் கொண்டு, 1660 ஆம் ஆண்டு செயிஷ்டகான்  என்பவரை தக்காணத்தின் ஆளுநராக நியமித்தார். 
  • செயிஷ்டகான் பூனா என்ற இடத்தில் முகாமிட்டிருந்தார்.
  • இதனை அறிந்த சிவாஜி அவரை சந்திக்க 400 பேர் கொண்ட திருமண கோஷ்டியினர் போன்று வேடம் அணிந்து செயிஷ்டகான் தங்கி இருந்த இடத்தை அடைந்தார்.
  • இதனால் 1663 டிசம்பரில் ஒளரங்கசீப் செயிஷ்டகானை தக்காணத்தில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டார். 
  • 1664 ஆம் ஆண்டு சிவாஜி சூரத் நகரை தாக்கி கொள்ளையடித்தார். 
  • 1665 ஆம் ஆண்டு பீஜப்பூரை இணைக்கவும் சிவாஜியை வீழ்த்துவதற்காகவும் ரஜபுத்திர தளபதி ராஜா ஜெய்சிங் என்பவர் தலைமையில் இராணுவத்தை ஒளரங்கசீப் அனுப்பினார்.
  • அப்பொழுது மூவாசம் (முதலாம் பகதூர்ஷா) தக்காணத்தின் ஆளுநராக பதவி வகித்தார்.
  • முகலாயப்படை சிவாஜியை சூழ்ந்து கொண்டனர். ராய்க்கர் கோட்டை அச்சுறுத்தலுக்கு உள்ளானது.
  • 1665 ஆம் ஆண்டு புரந்தர்  கோட்டையை படைகள் சுற்றி வளைத்தன.
  • சிவாஜி வேறுவழியின்றி அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.

  • 1665 ஜூன் 11 புரந்தர் உடன்படிக்கை: 
  • இந்த உடன்படிக்கையின்படி தன்னுடைய 35 கோட்டைகளில் 23 முகலாயர்களுக்கு கொடுத்தார் சிவாஜி. 
  • மன்சப்தாராக செயல்பட்டு பீஜப்பூரை கைப்பற்ற முகலாயருக்கு உதவ ஒப்புக்கொண்டார். 

  • முகலாய அரசவையை பார்வையிடுமாறு சிவாஜியிடம் ஜெய்சிங் வற்புறுத்தினார். 1666 மே மாதம் சிவாஜியும் அவரது மகனும் ஆக்ராவை அடைந்தனர். அங்கு சிவாஜி அவமானப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
  • சிவாஜி சிவாஜி பழக்கூடை ஒன்றில் ஒளிந்து கொண்டு அங்கிருந்து தப்பினார்.
  • பீராரில் சிவாஜிக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஜாகீர் நிலத்தின் ஒரு பகுதியை ஒளரங்கசீப் எடுத்துக்கொண்டார். 
  • இதனால் கோபமடைந்த சிவாஜி முகலாயர் சேவையிலிருந்த தனது படைகளை திரும்ப அழைத்துக்கொண்டார். 
  • புரந்தர் உடன்படிக்கையால் சிவாஜி தான் தான் இழந்த கோட்டைகளை திரும்ப மீட்டுக்கொண்டார். 
  • 1670 ஆம் ஆண்டு சூரத் நகரை அவர் மீண்டும் கைப்பற்றினார். 
  • 1672 ஆம் ஆண்டு சூரத்திலிருந்து சௌத் எனப்படும் 1/4 வரியை வருடாந்திர கப்பமாக பெற்றார்.
  • 1674 ஜூன் 6ஆம் தேதி சிவாஜி ராய்கர் கோட்டையில் வேதமுறைப்படி அரியணை ஏறினார். சத்ரபதி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டார். 
  • சத்ரபதி சமஸ்கிருத சொல் 
சத்ர-குடை  ; பதி - தலைவன் அல்லது பிரபு (அரசன் அல்லது பேரரசன் என்ற சொல்லுக்கு இணையானது)
  • 1976 ஆம் ஆண்டு தெற்கு பகுதிகளில் சிவாஜி தனது வெற்றியை துவக்கினார். கோல்கொண்டா சுல்தானுடன் ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • செஞ்சி,  வேலூர் ஆகியவற்றை கைப்பற்றினார்.
  • சகோதர உறவினாலான வெங்கோஜியை (அல்லது எக்கோஜியை) தஞ்சாவூரை நிர்வகிக்குமாறு பணித்தார். 
  • கர்நாடக முற்றுகை முயற்சிகள் சிவாஜிக்கு பெருமையையும் புகழையும் கொடுத்தன. 
  • மதுரை நாயக்கர்களுக்கு பெரும் தொகையை கர்ப்பமாக தரவும் உறுதியளித்தார். 
  • சிவாஜியின் கடைசி நாட்கள் மகிழ்ச்சியானவையாக இல்லை. அவரது அவரது மூத்த மகன் சாம்பாஜி அவரை கைவிட்டுவிட்டு முகலாய முகாமில் இணைந்தார். சாம்பாஜி திரும்பிய போது ஒளரங்காசீப்பால் சிறைபிடிக்கப்பட்டு பன்ஹாலாக் கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
  • அடுத்தடுத்த போர்கள் சிவாஜியின் உடல் நலத்தை பாதித்தன. 
  • சிவாஜி (53 வயதில்) 1680 ஆம் ஆண்டு காலமானார்.


சிவாஜிக்கு பிறகு மராத்தியர் 

சிவாஜி மறைந்து ஓராண்டுக்கு பிறகு அவரது மூத்த மகன் சாம்பாஜி மராட்டிய இராணுவத்திற்கு தலைமை ஏற்று ஆட்சி பொறுப்பை ஏற்றார். 

 

சாம்பாஜி 



Sambhaji - Maratha Empire

  • சாம்பாஜி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முகலாய பகுதிக்குள் நுழைந்து பீராரில் பகதூர்பூரை கைப்பற்றி அங்கிருந்த சொத்துக்களை கைப்பற்றினார்.
  • இதனால் ஆத்திரமடைந்த ஒளரங்கசீப் மேவாரை சேர்ந்த ரஜபுத்திரர்களுடன் சமரசம் மேற்கொண்டு தக்காண பகுதிக்குள் படைகளை வழிநடத்திச்சென்றார். 
  • 1686 பீஜப்பூர் மற்றும் 1687 கோல்கொண்டா ஆகியவை கைப்பற்றப்பட்டது.
  • ஒளரங்கசீப்பிற்கு எதிராக கலகம் செய்த அவரது மகன் அக்பர் மகாராஷ்டிராவிற்கு வந்தார். 
  • சாம்பாஜி அவர்களுக்கு பாதுகாப்பு தந்தார்.
  • இதனால் ஒளரங்கசீப் சாம்பாஜியை ஒழித்துக் கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்.
  • சாம்பாஜி தம்முடைய குடும்ப அர்ச்சகரான கவிகலாஷ் என்பவரின் ஒழுக்க கேடான செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார்.
  • கவிகலாஷ் புகழ்பெற்ற அறிஞர்,  கவிஞர் மற்றும் மாந்திரீகம் செய்பவர்.
  • முகலாயப் படைகள் சாம்பாஜியை கைது செய்தபோது கவிகலாஷ் உடனிருந்தார். இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் (1689).
  • சாம்பாஜி மறைந்த பிறகு அவரது இளவல் ராஜாராம் செஞ்சி கோட்டையில் இருந்து சண்டையை தொடங்கினார். 
  • ராஜாராம் 1700-ல் மரணம் அடைந்த பிறகு அவரது மனைவி தாராபாய் தலைமையில் போராட்டம் தொடர்ந்தது.
  • 1707ல் ஒளரங்கசீப் மறைந்த போது மராத்தியர் பலகோட்டை கொத்தளங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்.
  • ஔரங்கசீப் இறந்த பிறகு சாம்பாஜியின் மகன் சாஹு விடுதலை ஆகி மராத்தியரின் அரியணையை அலங்கரித்தார். 

 

சாஹு மற்றும் அவருக்குப்பின் வந்தவர்கள்

  • உள்நாட்டு கழகத்தில் வெற்றி பெற்று 1708ல் சாஹு அரியணைகள் அமர்ந்தார். 
  • பாலாஜி விஸ்வநாத் அவருக்கு ஆதரவாக இருந்தார். 
  • அதற்கு நன்றி கடனாக பாலாஜி விஸ்வநாத்தை பேஸ்வாவாக 1713 இல் நியமித்தார். 
  • சாஹு சதாராவுக்கு ஓய்வெடுக்க சென்றார். பூனாவிலிருந்து பேஸ்வா ஆட்சி செய்ய தொடங்கினார்.
  • கோல்ஹாபூரை தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார். 
  • ராஜா ராமின் இரண்டாவது மனைவி ராஜாபாய் அவரது மகன் இரண்டாம் சாம்பாஜி,  தாராபாய் மற்றும் அவரது மகன் ஆகியோரை 1714 இல் சிறைப்பிடித்தார்.
  • இரண்டாம் சாம்பாஜி கோல்பூரில் அரியணை ஏறினார். சாஹுவின் அதிகாரத்தை அவர் ஏற்க வேண்டி இருந்தது. 
  •  1749 இல் ராமராஜா அரியணை ஏறினார் 
  •  1761ல் தாராபாய் மரணம் 
  •  1777-ல் ராமராஜா மரணம் 
  •  1777 லிருந்து 1818 வரை இரண்டாம் சாஹு பெயர் அளவில் ஆட்சி செய்தார். இவர் ராமராஜின் தத்துமகன். 
  • இரண்டாம் 1818 முதல் 1839 வரை பிரதாப் சிங் ஆட்சி புரிந்தார்.இவர் இரண்டாம் சாஹுவின் மகன். 
  • இவரை  பிரிட்டிஷ் அரசு ஆட்சியில் இருந்து நீக்கியது. 1847 சிறையில் மரணமடைந்தார். அதன் பிறகு இரண்டாம் சாஜி (பிரதாப் சிங்கின் இளவல்) 1839 முதல் 1848 தன்னுடைய மரணம் வரை ஆட்சி புரிந்தார்.

Resources :
  • Tamil Nadu School Samacheer Books from 6th Standard to 12 th Standard .
Image Attribution :


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"





No comments:

Post a Comment