சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்: மத்திய அரசு, மாகாண அரசு , வருவாய் நிர்வாகம் , இராணுவ அமைப்பு மற்றும் நீதித்துறை

சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்

மத்திய அரசு

அன்றாட நிர்வாகத்தில் தனக்கு உதவ அஷ்ட பிரதான் என்று அழைக்கப்பட்ட ஆலோசனை சபையை வைத்திருந்தார் சிவாஜி.

 

சிவாஜி ஆட்சியில் மராத்திய நிர்வாகம்

1. முக்கிய பிரதான் பேஷ்வா பிரதம மந்திரி :

  • நாட்டின் பொது நலன்கள் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவது இவரது முக்கிய கடமையாகும் .

 

2. அமர்த்தியா அல்லது நிதி அமைச்சர் அல்லது மஜீம்தார் 

  • அரசின் அனைத்து பொது கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பம் இடுவது இவரது வேலை .


3. வாக்கியனாவிஸ் மந்திரி உள்துறை அமைச்சர் 

  • அரசின் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரித்தார்.


4. சுமந்த் டாபிர் துபிர் வெளியுறவு துறை அமைச்சர் 

  • மன்னருக்கு போர் மற்றும் அமைதி குறித்த அனைத்து விஷயங்களிலும் ஆலோசனைகளை வழங்கினார்.
  • பிற நாடுகளின் தூதர்களையும் பிரதிநிதிகளையும் வரவேற்கும் பொறுப்பையும் ஏற்றிருந்தார். 


5. சச்சிவ் சுருநாவிஸ் உள்துறை செயலர் 

  • அரசரின் அன்றாட கடிதப் போக்குவரத்தை கவனித்துக் கொள்ளுதல் வரைவுகளை திருத்துதல். 
  • பர்கானாக்களில் கணக்குகளை சரிபார்த்தல். 


 6. பண்டிட் ராவ் தனத்தியாக்சா முதாசிப்  மதத்தலைவர் தலைமை அர்ச்சகர் 

  • மதம் தொடர்பான சடங்குகளுக்கும் தான தர்மங்களுக்கும் பொறுப்பேற்று இருந்தார். சமூகச் சட்டதிட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு அவர் நீதிபதியாக இருந்தார். 


7. நியாயதீஷ் தலைமை நீதிபதி 

  • குடிமை மற்றும் ஒரு ராணுவ நீதிக்கு பொறுப்பேற்று இருந்தனர் 


8. சாரிநெளபத் தலைமை தளபதி 

  • இராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு அமைப்பு ரீதியாக பராமரிப்பது ராணுவத்தை நிர்வாகிப்பது ஆகியவற்றை கவனித்துக் கொண்டார்.
  • நியாயதீஷ் மற்றும் பண்டிட்ராவ் தவிர அனைத்து அமைச்சர்களும் ராணுவத்தை வழி நடத்துவதற்கு தலைமை ஏற்பதோடு பயணங்களுக்கும் தலைமை ஏற்க வேண்டும் .
  • அனைத்து அரசு கடிதங்கள் ஆவணங்கள் ஒப்பந்தங்கள் ஆகியன அரசர் பேஸ்வா ஆகியோரின் இலச்சினையும் மற்றும் தனத்தியாக்சா நியாயதிக்சா சேனாதிபதி தவிர்த்த 4 அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும் .
  • பல அமைச்சர்களின் கீழ் 18 அரசு துறைகள் இருந்தன. 


மாகாண அரசு

  • நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது பேரரசை நான்கு மாகாணங்களாக பிரித்தார் .
  • மாகாணங்களில் வைஸ்ராய் எனப்படும் அரசு பிரதிநிதியை அமர்த்தினார் .
  • மாகாணங்கள் பிராந்த் எனப்படும் பல பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டன .
  • ஜாகீர் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்கப்பட்டது .
  • எந்த பதவியும் பரம்பரையாளர் இல்லை. பிராந்தியத்தின் செயல்பாடுகளுக்கான  மையமாக கோட்டை அமைந்து இருந்தது. பாரம்பரிய படி கிராமம் என்பது நிர்வாக நடைமுறையின் கடைசி அலகாக இருந்தது.


வருவாய் நிர்வாக அமைப்பு

  • நிலம் அளவீடு செய்யப்பட்டு மதிப்பிடப்பட்டது.
  • மொத்த உற்பத்தியில் அரசின் உரிமையாக 30 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அது பணமாகவோ பொருளாகவோ செலுத்தப்பட்டது .
  • பின்னர் இந்த வரி 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
  • பஞ்ச காலத்தில் அரசு பணத்தையும் உணவு தானியங்களையும் உழவர்களுக்கு முன் பணம் அல்லது முன் பொருளாக கொடுத்தது. பின்னர் அவற்றை தவணை முறையில் திரும்ப செலுத்த வேண்டும். விவசாயிகள் கால்நடை வாங்க விதைப்புக்காக இன்ன பிற தேவைகளுக்காக கடன்கள் வழங்கப்பட்டன .


செளத் மற்றும் சர்தேஷ்முகி 

  • மராத்தியர் கை பற்றிய மாவட்டத்தின் வருவாயில் 1/4 பங்கு சவுத் என வசூலிக்கப்பட்டது.
  • தேசாய்கள், தேஷ்முக்குகளின் பிரதம தலைமையாக சர்தேஷ்முக் திகழ்ந்தார்.
  • மரபு வழியாக தனது நாட்டின் சர்தேஷ்முக்காக சிவாஜி விளங்கினார்.
  • சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக சிவாஜி தனது கூடுதல் வருவாயில் 10 சதவீதத்தை சர்தேஷ்முகி என்னும் வரி மூலம் பெற்றார். 


இராணுவ அமைப்பு 

  • காலாட்படை குதிரை படை யானை படை ஆயுதப்படை என ராணுவத்தில் நான்கு பிரிவுகள் இருந்தன.
  • படைவீரர்களுக்கு வீடு வழங்கப்பட்டது அவர்களுக்கு முறைப்படி ஊதியமும் வழங்கப்பட்டது.
  • கொரில்லா போர் முறையில் வீரர்கள் சிறந்து விளங்கிய போதிலும் பாரம்பரிய போர் முறையிலும் அவர்கள் பயிற்சி பெற்றனர்.
  • காலாட்படை ரெஜிமென்ட்கள் பிரிகேடுகள் என பிரிக்கப்பட்டது.
  • ஒன்பது வீரர்களைக் கொண்ட சிறிய படை பிரிவுக்கு நாயக் கார்பரல் தலைமை வகித்தார்.
  • சாரிநெளபத் குதிரை படையின் தலைமை தளபதியாக பதவி வகித்தார்.
  • சாராநௌபத்திற்கு கீழ் ஹாஜாரிகள் பணியமர்த்தப்பட்டன. ஒவ்வொரு ஹாஜாரிக்கு கீழும் பத்து ஜமால்தாரர்கள் இருந்தனர். ஒவ்வொரு ஜமால்தாரருக்கு கீழும் ஐந்து ஹவில்தார்கள் பொறுப்பேற்றனர்.  
  • ஒவ்வொரு ஹவில்தார்களுக்கு கீழும் இது 25 குதிரைப்படை வீரர்கள் இருந்தனர். அவர்கள் சார்ஜண்ட் தகுதிக்கு இணையாக கருதப்பட்டனர்.
  • ஒவ்வொரு குதிரை படையும் இரண்டாக பிரிக்கப்பட்டது.
  • அரசு மூலமாக குதிரைகள் வழங்கப்பட்ட வீரர்கள் பர்கிர்கள் எனப்பட்டனர். தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் ஷைலேதார்கள் எனப்பட்டனர். இது தவிர நீர் கொண்டு செல்லும் குதிரை படை வீரர்களும் குதிரைகளுக்கு லாடம் கட்டுபவர்களும் இருந்தனர். 


நீதித்துறை

  • நீதி நிர்வாகம் மரபு வழிபட்டதாக இருந்தது. நிரந்தரமான நீதிமன்றங்களோ நீதி வழிமுறைகளோ இல்லை. விசாரணை முறை அனைவருக்கும் பொதுவானது .
  • கிராமங்களில் பஞ்சாயத்து நடைமுறை இருந்தது.
  • கிரிமினல் வழக்குகளை பட்டேல்கள் விசாரித்தனர்.
  • சிவில் கிரிமினல் வழக்குகளுக்கான மேல் முறையீடுகளை தலைமை நீதிபதி நியாயதீஷ் ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு விசாரித்தார்.
  • ஹாஜிர்மஸ்லிம் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது.

Resources:
  • Tamil Nadu Government School Samacheer Books from 6th Standard to 12th Standard.

Image Attribution :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



  


No comments:

Post a Comment