முகலாயப் பேரரசு: நிர்வாகம், இராணுவம், கலை, பொருளாதாரம் மற்றும் வீழ்ச்சி காரணங்கள்

முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா 

பொருளடக்கம்:

  • 1. முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா
    • 1.1 இராணுவ நிர்வாகம்
    • 1.2 நீதி நிர்வாகம்
    • 1.3 பொருளாதாரம்
    • 1.4 வர்த்தகமும் வாணிகமும்
    • 1.5 மதம்
    • 1.6 அறிவியலும் தொழில்நுட்பமும்
    • 1.7 கட்டடக்கலை
    • 1.8 ஓவியம்
    • 1.9 இசையும் நடனமும்
    • 1.10 இலக்கியம்
  • 2. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

1. முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா 

1.1 இராணுவ நிர்வாகம்

  • இராணுவம் தரைப்படை , குதிரைப்படை , யானைப்படை மற்றும் பீரங்கிப்படை என நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. 
  • இந்நான்கு படைகளில் குதிரைப்படை முக்கிய பங்கு வகித்தது .
  • அக்பர் மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார். 

 

1.2 நீதி நிர்வாகம் 

  • பேரரசர் நீதியின் உற்றாக கருதப்பட்டார் .
  • தலைமைக்காசி பேரரசருக்கு நீதி பரிபாலனம் செய்ய உதவினார் .
  • புனித நூலான குர்ஆனின் உதவி கொண்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன .
  • நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் கொத்தவாள் சட்ட ஒழுங்கை பராமரித்தார்.
  • கிராம நிர்வாகம் கிராம பஞ்சாயத்துகளிடம் (முறைப்படுத்தப்படாத கிராம அளவிலான நீதி வழங்கும் அமைப்புகள்) வழங்கப்பட்டிருந்தது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினர்.


1.3 பொருளாதாரம் 

  • முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும். கிராமப்புறங்களில் பல்வகை பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
  • வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளமாக இருந்தது.
  • ஜமீன்தார்களும் கிராம தலைவர்களும் ஏராளமான நிலங்களை கொண்டிருந்தனர். அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது .
  • கிணற்று நீர் பாசனமே முக்கிய பாசன முறையாக இருந்தது .
  • ரஃபி , காரிப் ஆகிய இரு வேளாண் பருவங்களில் பயிர் செய்யப்பட்ட பயிர் வகைகளை அய்னி அக்பரி பட்டியலிடுகிறது .
  • புகையிலையும் மக்காச்சோளமும் 17 ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகின. 
  • அதற்குப் பின்னரே மிளகாயும் வேர்கடலையும் அறிமுகமாகின .
  • அன்னாச்சிப்பழம் 16ம் நூற்றாண்டில் அறிமுகமானது.
  • ஒட்டுமுறையில் பல மாம்பழ ரகங்களை போர்ச்சுகீசியர் வளர்த்தார்கள் .
  • உருளைக்கிழங்கு, தக்காளி, கொய்யா ஆகியவை பின்னர் வந்தன.
  • அவுரி மற்றுமொரு முகலாயர் கால வணிக பயிராகும்.
  • பட்டு உற்பத்தியில் வங்காளம் அதிகமான பட்டு துணியை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு அனுப்பி வைக்கும் தலைமை பட்டு உற்பத்தி மையமாயிற்று.
  • அக்பர் ஜப்தி முறையே பிரகடனம் செய்தார். இம்முறை தோடர்மலால் அறிமுகம் செய்யப்பட்டது. நிலத்தின் அளவு, விளைவிக்கப்பட்ட பயிர் ஆகியவற்றின் அடிப்படையில் வரி பணமாக வசூலிக்கப்பட்டது.
  • தஸ்கர்: இது ஒரு அட்டவணை. இது பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய வரிகள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கியது.
  • கர்கானா என்னும் தொழிற்கூடங்களில் விலை உயர்ந்த கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன .
  • அரச குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை அரண்மனைச் சார்ந்த கர்கானாக்கள் உற்பத்தி செய்தன.


1.4 வர்த்தகமும் வாணிகமும் 

Mughal's Empire : Coin of Aurangazeb


  • பஞ்சாரா என்னும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களை தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நிபுணத்துவம் பெற்றிருந்தது.
  • அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கியமாக திகழ்ந்தது.
  • சோழமண்டலக் கடற்கரை தனது பருத்தித் துணி உற்பத்திக்காக புகழ்பெற்று இருந்தது.
  • லாகூர், காஷ்மீர் சால்வைகளுக்கும் தரை விரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்திக்கும் புகழ் பெற்றிருந்தது . 
  • பொருட்கள் இடம் விட்டு இடம் செல்வதற்கு உண்டி என்று அழைக்கப்பட்ட கடன் பத்திரங்கள் உதவின.
  • சராய்கள் (ஓய்வு விடுதிகள்) வணிகர்களின் பயணங்களை ஊக்குவித்தன.
  • குஜராத்தை சேர்ந்த போரா முஸ்லீம்கள், ரஜபுதனத்து மார்வாடிகள், சோழமண்டல கடற்கரையைச் சார்ந்த செட்டியார்கள், மலபார் முஸ்லிம்கள் ஆகியோர் உயர் புகழ் பெற்ற வணிக சமூகத்தினர் ஆவர் .
  • ஐரோப்பியர்கள் நறுமணப் பொருட்கள், சாயங்கள், வங்காளப்பட்டு, மஸ்லின், சொரசொரப்பான அச்சிடப்பட்ட துணி, பளபளப்பான பருத்தி துணி ஆகியவற்றை இங்கு கொள்முதல் செய்தனர். இதற்கு மாறாக இந்தியாவில் பெருமளவில் தங்கத்தையும் வெளியையும் இறக்குமதி செய்தனர்.
  • முகலாயரின் வெள்ளி நாணய முறை வெள்ளிக்கான தேவையை அதிகரித்தது. 

1.5 மதம்

  • 16, 17 ஆகிய நூற்றாண்டுகள் வைணவ மதத்தின் நூற்றாண்டுகளாகும்.
  • இராமர் வழிபாட்டு மரபை தனது புகழ்பெற்ற பக்தி பாடல்கள் மூலம் முன்மொழிந்த துளசிதாசர் (ராமசரிதமனஸ்) ராமரை கடவுளின் அவதாரமாக சித்தரித்தார்.
  • இக்காலகட்டத்தில் பக்தி இயக்கம் பெரும் வளர்ச்சி பெற்றது. கவிஞர்களும் இறையடியார்களும் நாட்டின் பல பகுதிகளில் தோன்றினர். சடங்குகளையும் சாதி முறையையும் அவர்கள் விமர்சனம் செய்து கேள்விக்கு உள்ளாக்கினர்.
  • தங்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்கு சமஸ்கிருத மொழியை பயன்படுத்தாமல் மக்களின் மொழியை பயன்படுத்தினர்.
  • வல்லபச்சாரியார் அவருடைய மகன் வித்தல்நாத் ஆகியோர் கிருஷ்ண வழிபாட்டை பரப்புரை செய்தனர்.
  • இப்பிரிவை பின்பற்றிய சூர்தாஸ் சூர்-சராவளி என்னும் இலக்கியத்தை உள்ளூர் மொழியில் எழுதினார்.
  • ஏகநாதர் துக்காராம் ஆகியோர் மகாராஷ்டிராவை சேர்ந்த பக்தி இயக்க கவிஞர்களாவர்.
  • பிரபலப்படுத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தி இயக்கமான தசருதா இயக்கம் தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தோரின் இயக்கமாக மாறியது.
  • பக்தி இயக்கத்தின் மிக முக்கிய ஆளுமை கபீர் ஆவார் . நெசவு குடும்பத்தைச் சார்ந்த இவர் முழுமையான ஒரு கடவுள் கோட்பாட்டை முன் வைத்தார். உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் சாதி முறையையும் கண்டித்தார் .
  • ரவி தாஸ் தோல் பதனிடும் தொழிலாளி. 
  • சைன் சிகை அலங்கார தொழில் செய்பவர். 
  • தாது பருத்தியை சுத்தம் செய்பவர் ஆவார்.
  • ஹரியானாவைச் சேர்ந்த சத்னாமி சமூகத்தவர் தங்களை கபீர் மற்றும் அவருடைய போதனைகளின் வழித்தோன்றல்கள் எனக் கூறுவதில் பெருமை கொள்கின்றனர். 

1.5.1 சீக்கிய மதம் 

  • ஒரு கடவுள் கோட்பாட்டை முன்னெடுத்த இயக்கமாக தோன்றி பின்னர் அங்கீகரிக்கப்பட்ட உலகம் மதங்களில் ஒன்றாக பரிணமித்தது .
  • சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பில் இஸ்லாமிய மதகுருவான ஷேக் பரித், பக்தி இயக்கப் புலவர்களாலான நாமதேவர், கபீர், சைன், ரவிதாஸ் ஆகியோரின் போதனைகளை உள்ளடக்கமாய் கொண்டுள்ளது.
  • "கடவுள் ஒருவரே" என குருநாதர் நம்பினார். கடவுள் உருவமற்றவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்று கூறினார். உருவ வழிபாட்டையும் மத சடங்குகளையும் கண்டனம் செய்தார். சாதி முறையை எதிர்த்தார். அனைத்து மக்களின் மீதும் அன்பு செலுத்துதல், நன்னெறியை கடைபிடித்தல், ஒழுக்கம் ஆகியவற்றை பின்பற்ற வற்புறுத்தினார்.

 

1.5.2 சூபியிசம் 

  • சூபியிசம் இஸ்லாமிய உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன் வைக்கும் ஒரு மத கோட்பாடு . ஈரானில் தோன்றியை இக்கோட்பாடு இந்தியாவில் செழித்து வளர்ந்தது.

1.5.3 கிறிஸ்தவம் 

  • ஐரோப்பிய வணிகர்களின் வருகையோடு பிரான்சிஸ் சேவியர் , இராபர்ட்-டி-நொபிலி போன்ற கிறிஸ்தவ மதப்பரப்பாளர்களும் இந்தியா வந்தனர். தொடக்ககால கிறிஸ்தவ மதப்பரப்பளர்கள் கத்தோலிக்கர்களாவர். 
  • டேனியர்களின் ஆதரவின் கீழ் முதல் லூத்தரன் மதப்பரப்பாளர்கள் 1706-ல் தரங்கம்பாடிக்கு வந்தனர். அவர்களில் ஒருவரான சீகன் பால்கு 1814 இல் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழியாக்கம் செய்தார்.

1.6 அறிவியலும் தொழில்நுட்பமும் 

  • முஸ்லிம் கல்வி நிறுவனங்களான மதரசாக்கள் முஸ்லிம் இறையியலின் மீது அதிக கவனம் செலுத்தியது. வாரணாசி போன்ற மிகச்சிறந்த கல்வி மையங்களில் ஜோதிடம் கற்றுத் தரப்பட்டது.
  • ஐரோப்பாவில் இருந்த பல்கலைக்கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லை என பிரான்ஸ் நாட்டு பயணி வெர்னியர் குறிப்பிடுகிறார்.
  • அக்பரின் அவைகளைப் புலவரான பெய்சி பாஸ்கரசார்யாவின் புகழ் பெற்ற கணித நூலான லீலாவதியை மொழி பெயர்த்தார்.
  • நீர் இறைப்பதற்காக பல பீப்பாய்கள் இணைக்கப்பட்ட சக்கரமான பாரசீக சக்கரம் பாபர் காலத்தில் அறிமுகமானது.
  • வரிசையாக விசைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட சற்றே கடினமான நீர் இறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்கிரியில் நிறுவப்பட்டது .
  • வெடியுப்பை பயன்படுத்தி நீரை குளிர்விக்கும் முறையை பரவலாக்கிய பெருமை அக்பரை சாரும்.
  • கப்பலின் ஒட்டகம் என சொல்லப்படும் தொழில்நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்த முதல் மனிதர் என அக்பர் புகழப்படுகிறார். இத்தொழில்நுட்பத்தின் படி ஒரு படகின் மீதே கப்பல் கட்டப்படும்.
  • வரலாற்றறிஞர் இர்பான் ஹபீப் இந்தியாவின் பின்தங்கிய நிலையை கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்.
    • இந்திய படைகளில் மேட்ச்-லாக் எனப்படும் பழைய பாணிலான துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருந்த பொழுது ஐரோப்பாவில் பிளின்ட் லாக் எனப்படும் நவீன துப்பாக்கிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன .
    • செலவு மிக்க செம்பினாலான பீரங்கிகளை இந்தியா தொடர்ந்து பயன்படுத்தி வந்த போது ஐரோப்பாவில் முன்னதாகவே அவை பயன்பாட்டிலிருந்து நீங்கிவிட்டன.
    • இதற்குக் காரணம் 17 ஆம் நூற்றாண்டில் கூட இந்தியாவில் வார்ப்பிரும்பை உற்பத்தி செய்ய இயலாமல் போனதே ஆகும்.

1.7 கட்டடக்கலை 

  • முகலாயர் காலத்தில் கட்டிடக்கலையில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி உலகக்கலையில் குறிப்பிடத்தக்க கட்டமாகும்.
  • குமிழ்களை கொண்ட கவிதை மாடங்களாலும் ஒப்பனை மிகுந்த கலங்கரை விளக்கம் போன்ற கோபுரங்களாலும் நான்கு மூலைகளிலும் எழுப்பப்பட்டுள்ள தூபி மாடங்களாலும் படங்கள் வரையப்பட்டு பதிக்கப்பட்ட ஓடுகலாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய வடிவங்களுக்கு முகலாய கட்டடங்கள் பெயர் பெற்றவையாகும்.
  • சூர் வம்சத்து அரசர்கள் டெல்லியில் புராணக்கிலா, பீகாரில் சசாரம் என்னுமிடத்தில் கட்டிய ஷெர்ஷா, இஸ்லாம் ஷா ஆகியோரின் கல்லறைகள் போன்ற கண்களைக் கவரும் கட்டிடங்களை விட்டுச் சென்றுள்ளனர்.
  • அக்பரின் புதிய தலைநகரான பதேப்பூர் சிக்கிரி கோட்டைகளால் சூழப்பட்ட எழுச்சியூட்டும் பல கட்டடங்களை கொண்டுள்ளது. பதேபூர் சிக்கிரியின் மலைப்பூட்டும் வாயிற் பகுதியும் அக்பரின் சிகப்பு நிற மற்றும் பளிங்கு நிறக்கற்களால் கட்டிய புலந்தர்வாசாவும் நேர்த்தியான கட்டிடக்கலையில் முகலாயரின் சாதனைகளாக கருதப்படுகின்றன.

Mughal Empire : Buland Darwasa

  • ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை மாடம் சில பௌத்த கட்டிடக்கலை கூறுகளைக் கொண்டுள்ளது.
  • ஷாஜகான் காலத்தில் முகலாயக் கட்டடக்கலை அதன் சிகரத்தை எட்டியது.
  • திவானி ஆம், திவானி காஸ், மோதிமஹால், ஹீரமஹால் போன்ற பிரம்மிப்பூட்டும் கட்டிடங்களால் சூழப்பட்டுள்ள செங்கோட்டை ஷாஜகான் காலத்து கட்டிடக்கலை திறன்களை பிரதிபலிக்கின்றன. ஷாஜகான், ஷாஜகானா பாத் என்ற ஒரு நகரத்தையே (இன்றைய பழைய தில்லி) உருவாக்கினார். இங்குதான் செங்கோட்டையும் ஜும்மா மசூதியும் அமைந்துள்ளன.
  • ஔரங்கசீப் காலத்தில் லாகூரில் பாதுஷாஹி மசூதி கட்டப்பட்டது.

Mughal Empire : Badshahi Mosue

  • ஜஹாங்கீர் ஷாஜகான் ஆகியோர் உருவாக்கிய ஷாலிமர் தோட்டங்கள் இந்திய தோட்டக்கலையில் குறிப்பிடத்தக்கவையாகும்.
  • முகலாயரின் மிகவும் போற்றத்தக்கச் சாதனை டெல்லிக்கு நீர் கொண்டு வரும் மேற்கு யமுனா கால்வாயைக் கட்டியதாகும்.

1.8 ஓவியம்

  • மத்திய ஆசியாவில் இருந்து ஹுமாயினோடு இந்தியா வந்த நுண்ணோவியக் கலைஞர்களான அப்துல் சமத், மீர் சையத் அலி ஆகியோரிடமிருந்து இந்திய ஓவியங்கள் ஊக்கம் பெற்றன.
  • இலக்கிய நூல்களை விளக்கும் பொருட்டே ஓவியங்கள் பெரிதும் வரையப்பட்டன.
  • பாரசீக மொழியில் எழுதப்பட்ட மகாபாரதத்திலும் அயினி அக்பரிலும் பல ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
  •  தஷ்வந்த், பசவன் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்த முக்கிய ஓவியர்களாவர்.
  • ஜஹாங்கீர் காலத்தில் உருவப்படத்தை வரைதல், விலங்குகளை வரைவதும் வளர்ச்சி பெற்றது. இத்துறையில் மன்சூர் பெரிதும் அறியப்பட்டவராவார்.
  • ஷாஜகான் ஓவிய மரபை தொடர்ந்தார் ஆனால் ஔரங்கசீப்பின் அலட்சியத்தால் ஓவியர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கலைந்து சென்றதன் மூலம் பிராந்திய அளவில் ஓவியக்கலை வளர்ந்தது. 

1.9 இசையும் நடனமும்

  • பல மெல்லிசை பாடல்களை இயற்றிய குவாலியரை சேர்ந்த தான்சென் ஏனைய 35 இசை கலைஞர்களோடு அக்பரால் ஆதரிக்கப்பட்டாரென அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது.
  • ஜஹாங்கீரும் ஷாஜகானும் இசையை ஆதரித்தவர்களே.
  • ஔரங்கசீப் இசைக்கு எதிரானவர் என்ற பொதுக்கருத்து ஒன்று நிலவுகிறது. ஆனால் அவருடைய காலத்தில் தான் இந்தியாவின் செவ்வியல் இசை குறித்த பல நூல்கள் எழுதப்பட்டன.
  • பிற்கால முகலாய அரசர்களில் ஒருவரான முகமது ஷா இசைத்துறையில் முக்கிய வளர்ச்சி ஏற்பட காரணமாக இருந்தார்.
  • பாபர் நாமா, பாதுஷா நாமா ஆகிய நூல்களில் இசைக்கருவிகளோடு பெண்கள் நடனமாடும் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. 

1.10 இலக்கியம்

  • பாரசீகம், சமஸ்கிருதம் மற்றும் பிராந்திய மொழிகள் முகலாயர் காலத்தில் நன்கு வளர்ச்சி அடைந்தன.
  • முகலாயப் பேரரசிலும் தக்காண அரசுகளிலும் பாரசீக மொழியே நிர்வாக மொழியாக இருந்தது.
  • அக்பர்நாமா என்னும் நூலில் அக்பரின் வரலாற்றை அபுல் பாசல் தொகுத்து வழங்கியுள்ளார். முகலாய நிர்வாகத்தை பற்றி அவர் அய்னி அக்பரியில் விவரித்துள்ளார். அறிவியல், புள்ளியியல், புவியியல், பண்பாடு ஆகியவற்றின் மீது அய்னி அக்பரியை கொண்டுள்ள அக்கறையாகவே அது பாராட்டப்பட வேண்டும்.
  • அப்துல் ஹமீது லகோரி, முகமது வரிஸ் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஷாஜகான் வாழ்க்கை வரலாறான பாதுஷா நாமா, அய்னி அக்பரியை முன் உதாரணமாக கொண்டு எழுதப்பட்டதே ஆகும்.
  • ஔரங்கசீப்பின் முதல் 10 ஆண்டுகால ஆட்சியைப்பற்றி ஆலம்கீர் நாமா என்னும் நூலை எழுதிய முகமது காசிம் இதே முறையைத்தான் பின்பற்றினார்.
  • பாபரின், சகதாய் துருக்கிய மொழியில் எழுதிய சுயசரிதையே அப்துல் ரகீம் கான்-இ-கானான் என்பவர் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்தார்.
  • தபிஸ்தான் என்னும் நூல் பல்வேறு மதங்களின் நம்பிக்கைகள் மற்றும் அம்மதங்கள் தொடர்பான நூல்கள் ஆகியன குறித்து பாரபட்சமற்ற விவரங்களைக் கொண்டுள்ளது.
  • அக்பரின் அவைக்களப்புலவரும் அபுல்பாசலின் சகோதரருமான அபுல் பெய்சி மேற்பார்வையில் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • தாரா ஷீகோவால் உபநிடதங்கள் சர்-இ-அக்பர் (மாபெரும் ரகசியம்) என்னும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. 
  • அபுல் பெய்சியின் மஸ்னாவி, உத்பி, நசிரி ஆகியன இந்தியாவின் பாரசீக கவிதைகளுக்கு வளம் சேர்த்தன.
  • கல்ஹாணர், காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய 'ராஜவலிபதகா' என்னும் நூல் அக்பரின் ஆட்சிக்காலத்தில் பிரக்ஞயப்பட்டரால் தொகுக்கப்பட்டது .
  • அக்பரின் வானியலறிஞரான நீலகண்டர், தஜிகனிலகந்தி என்னும் வானியல் ஆய்வு நூலைப் படைத்தார்.
  • ஷாஜகானின் அவைக்காலப் புலவரான ஜெகநாத பண்டிதர் 'ரசகங்காதாரா' என்னும் சிறப்புக்குரிய நூலை எழுதினார்.
  • அப்துல் ரகீம் கான்-இ-கானான் என்பவர் வாழ்க்கைக் குறித்த , மனித உறவுகள் தொடர்பான பாரசீகர்களின் சிந்தனைகள் இழையோடும் பக்தி பாடல்களை இந்தியின் கிளை மொழியான பிரிஜி என்னும் வடிவத்தில் எழுதினார்.
  • துக்காராமின் பாடல்கள் ஒரு கடவுள் கோட்பாட்டின் மேல் ஆர்வத்தை தூண்டியது.
  • முக்தீஸ்வரர் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் இலக்கிய வளம் கொண்ட மராத்திய மொழியில் எழுதினார் .
  • விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் தனது ஆமூக்த மால்யதா (ஆண்டாளை பற்றிய காவியம்) மூலமாகவும் அவருடைய அவைகளப்புலவரான அல்லசானி பெத்தண்ணா தனது மனுசரித்ரா என்னும் நூலின் மூலமாகவும் தெலுங்கு இலக்கியத்தின் கலங்கரை விளக்கங்களாக திகழ்கின்றனர்.
  • இக்காலத்தில் தமிழிலிருந்து தனியாக பிரிந்த மலையாளம் இலக்கிய நிலை பெற்றது. இராமாயணமும் மகாபாரதமும் மலையாள மொழியில் எழுதப்பட்டன.
  • அசாமிய மொழியில் பக்தி பாடலை முன்மாதிரியாகக் கொண்டு சங்கரதேவர் ஒரு புதிய இலக்கிய மரபை உருவாக்கினார். இராமாயணமும் மகாபாரதமும் அசாமி மொழியில் எழுதப்பட்டன.
  • இதேக் காலப்பகுதியில் தமிழ் இலக்கியப்பரப்பில் சைவ, வைணவ இலக்கியங்கள் பெரும் செல்வாக்கு பெற்று திகழ்ந்தன. 
  • மாபெரும் சைவப் புலவரான குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காசி சென்று வந்ததாக கூறப்படுகின்றது. அவர் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் , நீதிநெறி விளக்கம் ஆகிய முக்கிய இலக்கியங்களை இயற்றினார்.
  • தாயுமானவர் சமரச சன்மார்க்கம் என்னும் அறத்தை உள்ளடக்கிய பக்திப்பாடல்களை இயற்றினார்.
  • கிறிஸ்தவ மதப்பரப்பாளர்களான இராபர்ட்-டி- நொபிலி , கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) ஆகியோர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை செய்ய தொடங்கியிருந்தனர்.


2. முகலாயரின் வீழ்ச்சிக்கான காரணங்கள் 

  • ஔரங்கசீப்பின் தக்காண மற்றும் சமய கொள்கைகள் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
  • ஔவுரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு முகலாயப் பேரரசு வேகமாக வீழ்ச்சி அடைந்தது.
  • 1739 ஆம் ஆண்டு நாதிர்ஷா முகலாயப் பேரரசரை சிறைப்பிடித்து டெல்லியை சூரையாடிய போது தான் பேரரசின் பலவீனம் வெளிப்பட்டது.
  • பரந்த பேரரசை கட்டிக்காப்பது கடினமாக இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போர்களினால் நிதி நிலைமையும் மோசமாகியது.
  • பெரும் அளவிலான வளங்களையும் மிகப்பெரும் ராணுவத்தையும் கொண்டிருந்த போதிலும் முகலாய அரசு ஒரு கடற்படையை கொண்ட சக்தியாக இல்லை. முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாகும். 

உலக அளவில் மாபெரும் அரசர்களின் காலம்

அக்பரின் காலமான 1556 முதல் 1605 வரை மாபெரும் அரசர்களின் காலமாகும். இக்கால கட்டத்தை சேர்ந்த பிற அரசர்கள்:

  • இங்கிலாந்தின் பேரரசி எலிசபெத்
  • ஷேக்ஸ்பியர்
  • போர்பான் வம்சத்தின் முதல் அரசர் நான்காம் ஹென்றி
  • பாரசீக சபாவி அரச வம்சத்தின் மாபெரும் வலிமைமிக்க அரசர் மகா அப்பாஸ்



Resources :

  • Tamil Nadu Government School Samacheer Books from 6th Standard to 12th Standard.

Image Attribution:

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


No comments:

Post a Comment