ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகானின் ஆட்சிக்காலம்
ஜஹாங்கீர் கிபி 1605 - 1627
- ஹுமாயூனுக்குப் பின் அவருடைய மகன் சலீம், “நூருதீன் ஜஹாங்கீர்” என்ற பட்டப்பெயருடன் அரியணை ஏறினார்.
- ஆனால் ஜஹாங்கீரின் மகனான குஸ்ரு இதனை எதிர்த்து சீக்கிய குருவான (ஐந்தாம் சீக்கிய குரு) அர்ஜுன் தேவின் ஆதரவோடு கலகம் செய்தார்.
- கலகம் ஒடுக்கப்பட்டு குஷ்ரு கைது செய்யப்பட்டார். அவரது விழிகள் அகற்றப்பட்டன.
- மேலும் கலகம் ஏற்பட காரணமாக இருந்த குரு அர்ஜுன் தேவ் கொல்லப்பட்டார்.
- வங்காளத்தில் கலகம் செய்த ஆப்கானியரான உஸ்மான் கான் என்பவரை ஜஹாங்கீர் பணிய செய்தார்.
- ராணா உதய்சிங்கின் பேரனான ராணா அமர் சிங்கிற்கு எதிராக தனது மகன் இளவரசன் குர்ரம் (பின்னாளில் ஷாஜகான்) தலைமையில் படையெடுப்பு நடத்தி ஒழுங்கு படுத்தப்பட்டது.
- 1608ல் தக்கான அரசு அகமது நகர் மாலிக் ஆம்பரின் கீழ் தன்னை ஒரு சுதந்திர அரசாக அறிவித்தது.
- அகமது நகரை குர்ரம் கைப்பற்ற பல முயற்சிகள் மேற்கொண்டும் அவை தோல்வியை தழுவின.
- ஜஹாங்கீரின் ஆட்சியில் வில்லியம் ஹாக்கின்ஸ்(கி. பி 1608), சர் தாமஸ் ரோ ஆகிய இரண்டு ஆங்கிலேயர்களும் முகலாய பேரவைக்கு வருகை புரிந்தனர்.
- ஜஹாங்கீர் போர்ச்சுக்கீசியருக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் வணிக உரிமையை வழங்கினார்.
- இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ்-ன் பிரதிநிதியாக வருகை புரிந்த தாமஸ்ரோ (கி.பி 1215 -16) சூரத் நகரில் முதல் வணிக மையத்தை அமைக்க அனுமதி பெற்றார்.
- ஜஹாங்கீர் அரசாட்சியைக் காட்டிலும் கலைகள், ஓவியம், தோட்டங்கள் மற்றும் மலர்கள் ஆகியவற்றின் மீது அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
- இதனால் ஜஹாங்கீரின் மனைவியார் நூர்ஜஹான் (உலகின் ஒளி) என அறியப்பட்ட மெஹருன்னிசா உண்மையான அதிகாரத்தை பெற்றவராக திகழ்ந்தார்.
- கி.பி 1613 முதல் 1621 வரையிலான காலம் நூர்ஜஹானின் காலம் என்று அழைக்கப்பட்டது.
- நூர்ஜகான் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியின் காரணமாக இளவரசர் குர்ரம் தந்தைக்கு எதிராக கலகம் செய்தார்.
- ஆனால் ஜஹாங்கீரின் விசுவாசம் மிக்க தளபதியான மகபத்கான் முயற்சியால் குர்ரம் தக்காணம் திரும்பினார்.
- நூர்ஜகானின் சதி நடவடிக்கைகள் காரணமாக மகபத்கான் கலகம் செய்தார். ஆனால் நூர்ஜஹானின் திறமையான செயலால் கலகம் ஒடுக்கப்பட்டதால் மகபத்கானும் தக்காணம் சென்று குர்ரமுடன் கைகோத்தார்.
- நூர்ஜஹானின் தந்தை இதிமத்தௌலா ஒரு பண்பாளர். அவருக்கு தலைமை திவான் பதவி தரப்பட்டது.
- அவரது மூத்த சகோதரர் ஆசப்கானுக்கு உயிர் குடியினருக்கு மட்டுமே வழங்கப்படுகின்ற கான் இ சாமன் பதவி வழங்கப்பட்டது.
- கி.பி 1612 இல் இளவரசர் குர்ரம் ஆசப்கானின் மகளான அட்ஜிமந் பானுபேகம் (பின்னாளில் மும்தாஜ்) என்பவரை மணந்தார்.
- நூர்ஜகானுக்கு ஆதரவாக செயல்பட்ட குழு ஜிண்டா குழு.
- ஜஹாங்கிரி இறப்புக்கு பின் நூர்ஜஹான் தன் மருமகன் ஷாரியார் என்பவருக்கு மணிமுடி சூட்ட முயன்றார்.
- ஆனால் ஆசப்கானின் முயற்சியால் இளவரசர் குர்ரம் ஷாஜகான் என்ற பெயருடன் அரியணை ஏறினார்.
- ஜகாங்கீரின் சுயசரிதை துசுக்கு-இ-ஜஹாங்கிரி ஆகும்.
மாலிக் ஆம்பர்
- எத்தியோபாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட அடிமை.
- பல இடங்கள் மாறிய பிறகு இறுதியாக செங்கிஸ்கானிடம் வந்து சேர்ந்தார்.
- செங்கிஸ்கானின் மரணத்திற்கு பிறகு அவருடைய மனைவி மாலிக் ஆம்பரை சுதந்திர மனிதனாக்கினார்.
- தென்னிந்திய சுல்தானியம் ஒன்றில் ராணுவ தளபதியாகவும் பகர ஆளுநராகவும் ஆனார்.
- கி. பி 1626 மே 14, மாலிக் ஆம்பரின் மரணத்திற்கு பின், இவரால் பயிற்றுவிக்கப்பட்ட மராத்தியர்கள் ஒரு சக்தியாக மாறினர்.
ஷாஜஹான் கி.பி 1627 - 1658
- ஷாஜகான் என்றால் உலகத்தின் அரசர் என்று பொருள்
- இயற்பெயர் குர்ரம்
- இவர் ஜஹாங்கீரின் மூன்றாவது மகன் ஆவார்.
- இவருடைய ஆட்சிக்காலம் “முகலாயர்களின் பொற்காலம்” என அழைக்கப்படுகிறது.
- ஷாஜகான் பிரான்ஸ் நாட்டின் 14 ஆம் லூயியின் சமகாலத்தவர்.
- ஷாஜகான் ஆக்ராவில் அரியணை ஏறினார்.
- தெற்கு பிராந்தியங்களில் ஆளுநராக இருந்த கான்ஜகான் என்னும் பட்டப்பெயர் கொண்ட ஆப்கானியராகிய பிர்லோடி ஷாஜகான் உடன் பகைமை பாராட்டினார்.
- ஷாஜகான் அவரை தக்காண அரசியலிலிருந்து இடமாற்றம் செய்து ஆணை பிறப்பித்தும் அவர் இரண்டாம் மூர்தசா நிசாமுடன் (அகமது நகர் சுல்தான்) இணைந்து கலகம் செய்தார்.
- நிலைமை மோசம் அடையவே தக்காணத்திற்கு விரைந்தார் ஷாஜகான். புதிய தக்காண ஆளுநரான ஆசப்கான் என்னும் பட்டம் கொண்ட இராதத்கான் பேரரசின் படைகளுக்கு தலைமை ஏற்று பால் காட் பகுதியை தாக்கினார்.
- போரில் ஏற்படும் சேதங்களைக் கண்டு மூர்த்தசா கான்ஜகான் உடனான தனது போக்கை மாற்றிக் கொள்ளவே,கான்ஜகான் தௌலதாபாத்திலிருந்து தப்பி மாளவம் சென்றார் .
- ஆனால் விரைவிலேயே கைது செய்யப்பட்ட கான்ஜகான் கொல்லப்பட்டார் .
- ஷாஜகான் தக்காணத்தை விட்டு செல்லும் முன் அப்பகுதியை நான்கு மாநிலங்களாக (தௌலதாபாத் , காண்டேஷ் , பெரார் , தெலுங்கானா) பிரித்தார் . இப்பகுதிகளுக்கு ஆளுநராக ஔரங்கசீப்பை (18 வயது) நியமித்தார் .
- முகலாயருக்கு வலுவான போட்டியாளராக திகழ்ந்த மாலிக் ஆம்பருடனான கடுமையான தாக்குதலுக்கு பிறகு அகமது நகர் முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டது .
- கி.பி1636 இல் ஷாஜகான் முகமது மகபத்கானின் உதவியோடு அகமது நகரின் நிசாம் ஷாஜி அரசர்களை பணியை செய்தார் .
- கி.பி 1638ல் ஷாஜகான் பாரசீகப் போரில் அரங்கேரிய அரசியல் சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி காந்தகாரை இணைத்துக் கொண்டார்.இது அக்பரால் கைப்பற்றப்பட்டு பின்னர் ஜஹாங்கிறால் இழக்கப்பட்ட பகுதி ஆகும்.
- போர்ச்சுகீசியர்கள் கோவாவில் ஒரு ஆளுநரை கொண்டிருக்கும் அதிகாரத்தை பெற்று இருந்தனர். இவர்களது குடியிருப்புகள் ஹீக்ளியில் இருந்தன. ஹீக்ளில் இருந்த 200 போர்ச்சுகீசியர்கள் 600 இந்திய அடிமைகளைக் கொண்டிருந்தனர். இப்போர்ச்சுகீசியரை அவர்களது குடியிருப்புகளில் இருந்தும் துரத்தும்படி வங்காள ஆளுநருக்கு உத்தரவிட்டார் ஷாஜகான்.
- கி.பி 1641 இல் ஷாஜகானின் மாமனாரான ஆசப்கான் மரணமடைந்தார்.
- கி.பி 1645 நூர்ஜகான் மரணமடைந்தார் .
- கி.பி 1657 ல் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து அவருடைய நான்கு மைதர்கள் மைந்தர்கள் வாரிசுரிமை போரில் ஈடுபட்டனர்.
- மூன்று சகோதரர்களை ( தாரா ,சூஜா, முராத்) கொன்று ஔரங்கசீப் அரியணை ஏறினார்.
- ஆக்ரா கோட்டையில் உள்ள அந்தப்புறப் பகுதியில் ஷாஜகான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். எட்டு ஆண்டுகளை ஷாஜகான் ஒரு கைதியாகவே ஷாபர்ஜ் அரண்மனையில் கழித்தார்
- கி.பி 1666-ல் ஷாஜகான் இறந்தார். அவரது உடல் தாஜ்மஹாலில் மும்தாஜின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
🚨 ஷாஜகான் காலத்தில் முகலாய பேரவைக்கு வருகை புரிந்த வெளிநாட்டு பயணிகள் :
- பெர்னியர் - பிரெஞ்ச் மருத்துவர்
- தாவர்னியர் - பிரெஞ்சு வைர வியாபாரி
- மாண்டெல்கோ - ஜெர்மன் பயணி மற்றும் துணிச்சல் வீரர்
- பீட்டர் முண்டி -இங்கிலாந்து வணிகர்
- மனுச்சி - இத்தாலிய எழுத்தாளர் ✨
ஷாஜகான் கலை மற்றும் கட்டிடக்கலையில் ஆற்றிய பங்கு
- ஜும்மா மசூதியை உருவாக்கினார் .
- ஷாஜகானாபாத் என்கின்ற புதிய அழகிய தலைநகரை உருவாக்கினார் .
- உலகப் புகழ்பெற்ற மயிலாசனத்தை உருவாக்கி அதில் கோகினூர் வைரத்தை பதிய வைத்தார். 1739இல் பாரசீக படையெடுப்பாளரான நாதர்ஷா இந்த வைரத்தை எடுத்துச் சென்றார் .
- ஆக்ராவில் முத்து மசூதி மோதி பள்ளிவாசல் கட்டினார்
- உலக புகழ்பெற்ற தாஜ்மகாலை கட்டினார்.
தாஜ்மஹால்
🌟 தாஜ்மஹால் 🌟
- தாஜ்மஹாலை "உஷ்தாத் இஷா" என்ற தலைமை சிற்பியின் மேற்பார்வையில் ஆக்ராவில் 22 ஆண்டுகள் , சுமார் 20 லட்சம் செலவில் கட்டினார் .
- கி.பி 1612ல் திருமணம் ஆனதில் தொடங்கி 1631-ல் குழந்தைப்பேரின் போது மரணம் அடைந்த மனைவி மும்தாஜ்க்கு அழியா புகழை அளிப்பதற்காக ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டினார் .
கி.பி 1632-ல் தொடங்கி 1638 டு 39 இல் கல்லறை மாடபணிகள் முடிக்கப்பட்டன.
ஏனைய கட்டிடங்கள் 1643 இல் முடிவடைந்தன.
- அலங்கார வேலைகள் 1647 வரை தொடர்ந்தது ..
- சுமார் 20000 மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றப்பட்டனர்
ஷாஜகானின் சிறப்பு பெயர்கள்
- கட்டிடக்கலையின் இளவரசர்
- பொறியாளர் பேரரசர்
Resources:
- Tamil Nadu Government Samacheer School Books from 6th Standard to 12th Standard
Image Attribution:
- Mughal Sultan Jahangir Image by Abu al-Hasan (1589-1630) - Bonhams, Public Domain
- Mughal Sultan Shah Jahan Image by Bichitr - This file was derived from: 'Jujhar Singh Bundela Kneels in Submission to Shah Jahan', painted by Bichitr, c. 1630, Chester Beatty Library (cropped).jpg, Public Domain
- Taj Mahal Image by amaldla from san francisco - taj mahal, CC BY-SA 2.0
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment