ஹூமாயூன் மீண்டும் வருதல்
- ஷெர்ஷா 1545 இல் காலமானார். அவருக்கு பின் வந்த அரசர்கள் வலிமைக் குன்றியவர்களாக இருந்தனர். மேலும் அவர்களுடைய ஆட்சி அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
- கன்னோசிப் போரில் தோற்று தப்பி ஓடிய ஹூமாயூன் பாரசீகத்தில் தஞ்சம் புகுந்தார்.
- பின்னர் பாரசீக படைகளுடன் ஆப்கானிஸ்தான் சென்ற ஹூமாயூன் காபூலையும் காந்தகாரையும் கைப்பற்றினார்.
- ஆனால் அவருடைய சகோதரரான கம்ரான் அவர் கைப்பற்றிய பகுதிகளை அமைதியாக ஆட்சி புரிய ஹூமாயூனை அனுமதிக்கவில்லை.
- சகோதரர்களுக்கிடையே ஆன இந்த போராட்டம் சமாதானத்தில் முடிந்தது.
- சூர் பேரரசு பல துண்டுகளாக சிதைவடைந்தது. இதனால் ஹூமாயூனுக்கு தில்லி மீதானப் படையெடுப்பு எளிதானது.
- பாரசீக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா தாமஸ் என்பவரின் உதவியால் கி.பி 1555 டெல்லியை மீண்டும் கைப்பற்றினார் ஹூமாயூன்.
- ஆனால் மிக விரைவிலேயே 1556-ல் டெல்லி கோட்டைக்குள் இருந்த நூலகம் ஒன்றின் மாடிப்படிகளில் இடறி விழுந்து இறந்து போனார்.
📌 வாழ்க்கை முழுவதும் தவறி விழுந்த ஹூமாயுன் வாழ்க்கையை விட்டே தவறி விழுந்தார் - லேன்பூல்
- ரஜப்புதனத்து பாலைவனங்களில் ஹூமாயூன் அலைந்து திரிந்த பொழுது அவருக்கு கி.பி 1542ல் அக்பர்(ஜலாலுதீன்) பிறந்தார் .
- அக்பர் 14 வயதில் முடி சூட்டிக்கொண்டார் அக்பர் சிறுவனாக இருந்ததால் பைராம் கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.
இரண்டாம் பானிபட் போர் கிபி 1556
- சூர் வம்சத்தை சேர்ந்த இந்துப் படைத்தளபதியான ஹெமு (ஆப்கானி அரசன் அடில்ஷாவின்( ஷெர்ஷாவின் வழிவந்தவர்) படை தளபதி ) கிபி 1556-ல் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றிக் கொண்டார்.
- அக்பர் கிபி 1556 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியை நோக்கி புறப்பட்டு ஹெமுவை இரண்டாம் பானிபட் போரில் சந்தித்தார்.
- போர் ஹெமுவுக்கு சாதகமாக முடியவிருந்த நிலையில் கண்ணில் அம்பொன்று பாயவே ஹெமு மயக்கமுற்று கீழே விழுந்தார். தலைமை இல்லாத ஆப்கானிய படைகளை முகலாயப் படைகள் வெற்றி கொண்டன.
- ஹெமு கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
- இவற்றின் மூலம் அக்பருக்கு ஆக்ரா மற்றும் தில்லி மீண்டும் கிடைத்தது. முகலாய பேரரசு மீண்டும் நிறுவப்பட்டது.
அக்பரும் பைராம்கானும்
- அக்பரின் முதல் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் பகர ஆளுநர் பைராம் கானின் நாடு குவாலியர் அஜ்மீர் உட்பட காபூலில் இருந்து ஜான்சி வரை விரிவடைந்தது .
- தன் சாதனைகளின் காரணமாக பைராம்கான் ஏனைய பிரபுக்களிடம் ஏளனத்துடன் நடந்து கொண்டார்.
- அன்றாட ஆட்சி விவகாரங்களில் பைராம்கானின் மேலாதிக்கத்தை அக்பரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அக்பர் பைராம்கானை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.இதன் விளைவாக பைராம்கான் கலகம் செய்தார்.
- அக்பர் பைராம்கானை அழைத்து மெக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் செல்லும் வழியில் ஆப்கானியன் ஒருவனால் பைராம்கான் கொல்லப்பட்டார்.
- பைராம்கானின் குடும்பம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டது. பைராம்கானின் மகன் அப்துல் ரகீம் அறிவுக்கூர்மை மிக்க மேதையாக கான்-இ- கானான் என்ற பட்டத்துடன் அக்பரின் அவையில் ஒளிர்ந்தார்.
அக்பரின் போர் வெற்றிகள்
- 1562 இல் மாளவம் கையகப்படுத்தப்பட்டது. அதன் ஆட்சியாளரான பாஜி பகதூர் அக்பரின் அரசவையில் மன்சப்தாராக ஆக்கப்பட்டார் .
- அக்பர் 1564 ஆம் ஆண்டு கோண்டுவானாவை (இந்தியாவின் மையப்பகுதி) ஆட்சி புரிந்த இராணி துர்காவதி மற்றும் அவரின் மகன் வீரநாராயணனுடன் கடும் போர் புரிந்து அப்பகுதியை கைப்பற்றினார் .
- மேவாரின் அரசன் உதயசிங்குடன் ஆறு மாத காலம் போரிட்டு இறுதியில் சித்தூர் கையகப்படுத்தப்பட்டது. இப்போரில் ராணா உதய்சிங் பின்வாங்கவே (குன்றுகளுக்குள்) அவருடைய தளபதியான ஜெய்மால் , பட்டா ஆகியோர் தொடர்ந்து போரிட்டனர். இப்போரில் முப்பதாயிரம் ரஜபுத்திர வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அக்பர் ஜெயமால் , பட்டா ஆகியோரின் துணிச்சலை கண்டு வியந்தார். அவர்களை சிறப்பிக்கும் பொருட்டு அவர்களின் நினைவாக ஆக்ரா கோட்டையின் முக்கிய நுழைவு வாயிலில் அவர்களது சிலைகளை நிறுவினார்.
- சித்தூர் கைப்பற்றப்பட்டதால் மற்ற ரஜபுத்திர அரசுகளான ராந்தம்பூர், கலிஞ்சர் , பிக்கானீர் , ஜோத்பூர் , ஜெய்சால்மர் ஆகியவை தாமாகவே அக்பரிடம் சரணடைந்தன .
- கி.பி 1573 இல் முசாபர்ஷாவிடமிருந்து குஜராத்தை கைப்பற்றினார் .
- பீகார் வங்காளம் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த தாவுத்கான் அக்பரால் தோற்கடிக்கப்பட்டு அவ்விருபகுதிகளும் 1576 இல் முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டது.
- மேவார் மற்றும் மார்வார் ஆகிய ரஜபுத்திர அரசுகள் முகலாயப் பேரரசை எதிர்த்து நின்றன.
- அக்பர் 1576 இல் உதய்சிங்கின் மகனான ராணா பிரதாப்பை ஹால்டிகாட் போரில் வெற்றிக்கொண்டார் .
- ராஜா மான்சிங் , பகவான்தாஸ் ஆகியோரின் உதவியுடன் மிர்சா ஹக்கீமை தோற்கடித்தார் .
- கிபி 1586 இல் காஷ்மீரையும் 1591ல் சிந்துவையும் அக்பர் கைப்பற்றினார் .
- 1591 இல் பாண்டேஜ் பகுதியும் கைப்பற்றப்பட்டது.
- 1596 இல் சந்த் பீவி தோற்கடிக்கப்பட்டு பெரார் பகுதியும் கைப்பற்றப்பட்டது.
- 1604 செப்டம்பரில் நோய்வாய்ப்பட்ட அக்பர், 1605 அக்டோபர் 27 இயற்கையை எய்தினார்.
- அக்பரின் உடல் ஆக்ராவுக்கு அருகே சிக்கந்தராவில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
அக்பரின் நிர்வாக சீர்திருத்தங்கள்
- இந்துக்களுடைய நம்பிக்கையை பெறுவதற்காக அக்பர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
- முஸ்லீம் அல்லாதவர் மீது விதிக்கப்பட்டிருந்த ஜிஸியா வரியையும் இந்துக்களின் புனித யாத்திரைகளின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியையும் நீக்கினார்.
- போர் கைதிகளை அடிமையாக்கும் நடைமுறை கைவிடப்பட்டது.
- இந்து விதவைகள் பின்பற்றிய உடன்கட்டை ஏறும் வழக்கமும் ஒழிக்கப்பட்டது.
- அக்பர் கல்வியை பெரிதும் ஆதரித்தார. அவரது சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்து பிரதிகள் இருந்தன .
- தொடக்கத்தில் ஆக்ரா அக்பரின் தலைநகராக இருந்தது.பதேபூர் சிக்ரி என்னும் புதிய தலைநகரை பின்னாளில் அக்பர் உருவாக்கினார். தற்போது கைவிடப்பட்ட நகரமாக இருந்தாலும் இன்றும் அழகான மசூதிகளோடும் புலந்தர்வாசா மற்றும் ஏனைய கட்டிடங்களோடும் திகழ்கின்றது.
நிலவருவாய் முறை
- ராஜா தோடர்மால் நிலவருவாய் முறையை சீர்திருத்தம் செய்தார்.
- நில வருவாய் முறை ஜப்தி அல்லது பந்தோபஸ்து முறை என்று அழைக்கப்பட்டது.
- ராஜா தோடர்மால் சீர்திருத்த முறைக்கு தாசாலா முறை என்று பெயர்.
- பத்தாண்டு கால விளைச்சலைப் பொறுத்து நிலத்தின் வகை பிரிக்கப்பட்டது.
📊 Land Reforms
நிலம் | பயிரிடக்கூடிய காலம் |
---|---|
போலஜ் | ஆண்டு முழுக்க பயிர் விளையும் நிலம் |
பரௌதி | இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது |
சச்சார் | மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது |
பஞ்சார் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு ஒரு முறை பயிரிடப்படுவது |
நவரத்தினங்கள்
- அக்பரின் அவையை நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்ட ஒன்பது அறிஞர்கள் அலங்கரித்தனர்
🌟 Navaratnas (Nine Gems) in Akbar's Court 🌟
பெயர் | பதவி | குறிப்புகள் |
---|---|---|
பீர்பால் | விகடகவி | அக்பருக்கு மிகவும் பிடித்தவர் |
மியான் | இந்து பாடகர் | முஸ்லிமாக மதம் மாறியவர் |
ராஜா தோடர்மால் | நிதி அமைச்சர் | நிலவருவாய் சீர்திருத்தம் |
அபுல் பாசல் | தலைமை ஆலோசகர் | அக்பர் நாமா மற்றும் அயினி அக்பரி நூலின் ஆசிரியர் |
ஃபைசி | தலைசிறந்த கவிஞர் | இராமாயணம் மகாபாரதம் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். |
ராஜா மான்சிங் | படைத்தளபதி | முகலாய பேரரசு விரிவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்பு. அக்பரின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதி |
பகிர் அஸியோதின் | ஆன்மீகவாதி மற்றும் பேரரசின் ஆலோசகர் | ஆன்மீகவாதி மற்றும் பேரரசின் ஆலோசகர் |
முல்லா தோ பியாஸா | ஆலோசகர் | இவருடைய கதைகள் பிரபலமானவை |
அப்துல் ரஹீம் | தலைசிறந்த கவிஞர் | கான்-இ-கானா என்னும் பட்டம் பெற்றவர். பைராம்கானின் மகன். |
ரஜபுத்திர கொள்கை
- ரஜபுத்திர அரச குடும்பங்களோடு திருமண உறவை மேற்கொள்ளுதல் மற்றும் அரசவையில் அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்துவது என்பது ராஜ புத்திர கொள்கையாகும்.
- அக்பருக்கு முன்னரே பல முஸ்லிம் அரசர்கள் ரஜபுத்திர இளவரசிகளை திருமணம் செய்திருந்தனர் .
- ஆனால் அக்பர் அவர்களின் குடும்பங்களுடன் நெருக்கமான உறவினை மேற்கொண்டார்.
- அக்பர் ஆம்பர் நாட்டு அரசர் பீகாரிமால் எனப்பட்ட ராஜா பாராமல் மகளான ஹர்க்காபாயை மணந்தார். இந்த ஹர்க்காபாயே பின்னாளில் ஜோதா அக்பர் என அழைக்கப்பட்டார்.
- மேலும் பிக்கானீர் , ஜெய்சால்மர் ஆகிய ரஜபுத்திர இளவரசிகளையும் மணந்து கொண்டார் .
- ஹர்க்காபாய் பெற்றெடுத்த இளவரசர் சலீம் பின்னர் ராஜா பகவான்தாஸின் மகளை மணந்தார் .
- ராஜா பகவான்தாஸின் மகன் ராஜா மான்சிங் அக்பரின் நம்பிக்கையுடைய படைத்தளபதி ஆனார்
- அக்பரின் ரஜபுத்திர கொள்கை மிகச் சிறந்த இராணுவ தளபதிகளையும் சிறந்த நிர்வாகிகளையும் பேரரசுக்கு வழங்கியது .
- வருவாய் துறை நிர்வாகத்தில் நிபுணத்துவம் உடைய ராஜா தோடர்மால் திவானாக பதவி உயர்த்தப்பட்டார்.
மன்சப்தாரி முறை
- அக்பர் முறைப்படுத்தப்பட்ட மைய நிர்வாக முறையை உருவாக்கினார்.
- மன்சப்தாரி முறையை உருவாக்கினார்.
- இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் மன்சப்தார் பட்டம் வழங்கப்பட்டு , பிரபுக்கள், குடிமை பணி சார்ந்த அதிகாரிகள் மற்றும் இராணுவ நிர்வாகம் சார்ந்த அதிகாரிகள் ஆகிய அனைவரும் ஒரே பணியின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.
- மன்சப்தாரி தகுதி ஜாட் , சவார் என இருவகைப்பட்டது.
- ஜாட் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது. எண்ணிக்கையானது 10 முதல் 10 ஆயிரம் வீரர்கள் வரை இருந்தது.
- சவார் குதிரைகளின் எண்ணிக்கையை குறிப்பதாகும் .
- அக்பரின் தொடக்க காலத்தில் பிரபுக்கள் மத்திய ஆசியாவை சார்ந்தவர்களாக மட்டுமே இருந்தனர்.
- ஆனால் மன்சப்தாரி முறை மூலம் ரஜபுத்திரரும் இந்திய முஸ்லிம்களும்(ஷேக்சதா) பிரபுக்கள் வரிசையில் இடம் பெற்றனர்
- மன்சப்தாரிகளுக்கு ஊதியமாக பணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக அவர்களுக்கு நிலங்களும் (ஜாகீர்) ஒதுக்கப்பட்டன. அந்நிலப்பகுதியில் வரி வசூலிக்கும் உரிமை மன்சப்தாருக்கு வழங்கப்பட்டது .
- இது பரம்பரை உரிமை அல்ல.
- மன்சப்தார் இறந்து விட்டால் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஜாகீரை அரசு உடனடியாக கையகப்படுத்தும்.
அக்பரின் மத கொள்கை (தீன்இலாகி)
- அக்பர் வைதீக முஸ்லீம். ஆனால் சூபி தத்துவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஒரு இணக்கமான போக்கை மேற்கொண்டார்.
- ஏனைய மதங்கள் தொடர்பான கோட்பாடுகளையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட அவர் அனைவருக்கும் அமைதி (சுல்-இ-குல்) என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தார்.
- மதங்களுக்கு இடையேயான தொடர்புகள் பற்றி அக்பர் மேற்கொண்ட தத்துவ விவாதங்கள் மீது வெறுப்பு கொண்ட சமகால வரலாற்று அறிஞர் பதானி அக்பர் இஸ்லாமைப் புறக்கணித்தார் என குற்றம் சாட்டினார் .
- அக்பர் இபாதத் கானா என்னும் வழிபாட்டு கூட்டத்தை நிறுவினார்.
- தொடக்கத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் இங்கு கூடி ஆன்மீக விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.
- பின்னர் அக்பர் இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் கடவுள் மறுப்பாளர்களையும் விவாதங்களில் பங்கேற்க அழைத்தார்.
- இவ்விவாதங்களால் மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டது. இதனால் 1582ல் அக்பர் இவற்றை நிறுத்தினார்.
- அக்பர் பல்வேறு மதங்களைச் சேர்ந்த புகழ்பெற்ற ஞானிகளோடு தொடர்பு கொண்டு உண்மை எதுவென அறிய முயன்றார்.
1. புருஷோத்தம் , தேவி - இந்து மதம்
2. மெகர்ஜிராணா - ஜொராஸ்திரிய மதம்
3. அக்வாவிவா , மான்சரட் என்னும் போர்ச்சுகீசியர் - கிறிஸ்தவ மதம்
4. ஹிர விஜயசூரி - சமண மதம்
- ஒரே ஒரு கடவுள் மட்டும் இருப்பதாக அவர் உணர்ந்தார். இது தீன் இலாகி(தௌகித்-இ-இலாகி) என அழைக்கப்பட்டது. இதன் பொருள் தெய்வீக ஒரு கடவுள் கோட்பாடு ஆகும்.
- இது ஒரு புதிய மதம் அல்ல. ஆனால் சூபி மரபின் ஒரு வகை முறையாக கருதலாம். அக்பர் பீர் மதகுரு என அழைக்கப்பட்டார். அக்பர் மதகுரு என்ற அடிப்படையில் சீடர்களை சேர்த்திருந்தார். (முரிக்கள் சூபி சீடர்கள்)
- பல்லாயிரக்கணக்கானோர் அக்பரின் சீடர்களாக சேர்ந்தனர் .
- சமஸ்கிருத , அராபிய , கிரேக்க மற்றும் ஏனைய மொழி நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்வதற்காக ஒரு பெரிய மொழியாக்க துறையை அக்பர் உருவாக்கினார்.
- இராமாயணம் , மகாபாரதம் , அதர்வவேதம் , விவிலியம் , குரான் ஆகிய அனைத்தும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன.
- இராமாயணம் மகாபாரதம் - அபுல் பைசி பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.
- அக்பருக்கு பின்னர் தீன் இலாகி இல்லாமல் போனது.
Resources:
- Tamilnadu Government Samacheer School Books from 6th Standard to 12th Standard
Image Attribution
- Akbar Image by Govardhan/ Mir Ali Heravi - https://www.metmuseum.org/Collections/search-the-collections/140008579?rpp=20&pg=1&ft=govardhan&pos=4, Public Domain
- Mughal Empire Map under Akbar rule by Charles Joppen - "Historical Atlas of India," by Charles Joppen (London: Longmans, Green & Co., 1907), Public Domain
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment