முகலாயப்பேரரசு தோற்றம்: முகலாயப் பேரரசர் பாபர் , ஹீமாயூன் மற்றும் சூர் வம்சத்தின் ஷெர்ஷா

முகலாயப் பேரரசு தோற்றம்


முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர். இப்பேரரசு கி.பி 1526 முதல் 1857 வரை நீடித்தது. முகலாயப் பேரரசு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது அதன் ஆட்சிப்பகுதி ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரையிலும் , காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரையிலும் பரவி இருந்தது. இந்தியா முழுவதும் ஒரு மையப்படுத்தப்பட்ட சீரான நிர்வாக அமைப்பை முகலாயர் உருவாக்கினர். முகலாயர்கள் குறிப்பாக அக்பர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே நாட்டினராக ஒருங்கிணைத்து ஒரு கூட்டு தேசிய அடையாள அரசியலை உருவாக்கினார்.


முகலாய வம்சத்தை சேர்ந்த முக்கியமான அரசர்கள் 

  • பாபர் கி.பி 1526 -1530
  • ஹீமாயூன் கி.பி 1530-1540 & 1555-1556
  • அக்பர் கி.பி 1556 - 1605 
  • ஜஹாங்கீர் கி.பி 1605 -1627 
  • ஷாஜகான் கி.பி 1627 - 1658 
  • ஔரங்கசீப் கி.பி 1658 - 1707 


இப்பேரரசு 1707-ல் ஔரங்கசீப்பின் மறைவுக்கு பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 1707 முதல் 1857 வரை முகலாயப் பேரரசு பெயரளவுக்கே ஒரு அரசாக இயங்கி வந்தது.

 

ஜாகிருதீன் முகமது பாபர் (கிபி 1526 - 1530)


Mughal Emperor Babur - Mughal Dynasty

  • பாபர் 1483இல் பிப்ரவரி 14-ஆம் தேதி பிறந்தார்.
  • இவரது இயற்பெயர் ஜாகிருதீன் (நம்பிக்கையை காப்பவர்) முகமது .
  • தந்தை வழியில் பாபர் தைமூரின் கொள்ளுப்பேரன் ஆவார். தாய் வழியில் பாபருடைய தாத்தா தாஷ்கண்டைச் சேர்ந்த யூனுஸ்கான் (இவர் மாபெரும் மங்கோலி அரசன் செங்கிஸ்கானின் 13 ஆவது தலைமுறை) ஆவார்.
  • பாபர் 11 வயது சிறுவனாக இருந்தபோது தனது தந்தையிடமிருந்து சாமர்கண்டை (தற்பொழுது உசுப்பெக்கிஸ்தானில் உள்ள ஒரு நகரம்) மரபுரிமை சொத்தாக பெற்றார்.
  • எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் அரியணை இழந்த அவர் விரைவில் அதை மீட்டார்.
  • ஆனால் மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் (துருக்கிய இனக்குழு); சபாவி (ஈரானை ஆட்சி செய்தவர்கள். ஷியா முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள்) உதுமானிய துருக்கியர் (சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள்) ஆகியோருடைய மேலாதிக்க போட்டி பாபரை வாய்ப்புத் தேடி வேறு இடங்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தியது.
  • துயரம் நிறைந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாபர் காபூலின்  ஆட்சியை கைப்பற்றினார்.
  • லோடி வம்சத்தை சேர்ந்த தில்லி சுல்தான் தன் நாட்டை விரிவுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஆப்கானியர் மற்றும் ராஜபுத்திரர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தின.
  • இப்ராஹிம் லோடியின் எதிரியான தவுலத்கான் லோடியும் , மேவாரியின் அரசன் மற்றும் ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்புகளின் தலைவருமான ராணா சங்காவும் பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு அழைப்பு விடுத்து தூது குழுக்களை அனுப்பினர்.
  • ஆனால் பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது முதலில் அவருக்கு உதவி செய்வதாக கூறிய தவுலத்கான் லோடி பின்வாங்கவே, அவரின் படைகளை பாபர் லாகூரில் வென்றார்.

பாபரின் முக்கிய படையெடுப்புகள்: 


முதல் பானிபட் போர் (ஏப்ரல் 21,1526) : 


First Battle of Panipat - Mughal Dynasty

  • பாபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் நடைபெற்றது.
  • பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை தனது சிறிய படையை கொண்டு வீழ்த்தினார்.
  • பாபரின் வெற்றிக்கு காரணமானவை:
    • மிகச் சரியான போர் வியூகங்கள் 
    • பீரங்கிப் படையை (Artillery) பயன்படுத்தியது 
  • பாபர் தில்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றி இருந்தாலும் ஆப்கானியர்களையும் ராஜபுத்திரர்களையும் அடக்க வேண்டி இருந்தது.

பீரங்கிப் படை (Artillery)

பீரங்கிப் படையை முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தியது பாபர் ஆவார். பாபருக்கு முன்னர் இந்தியாவில் பீரங்கிப் படையைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் இல்லை.

வெடிமருந்து முதல் முதலில் சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை அடைந்தது. 14ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இது துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும் பயன்படுத்தப்பட்டது.


கான்வா போர் கி.பி 1527 

  • பாபருக்கும் மேவாடின் அரசனான ராணா சங்காவிற்கும் இடையே கான்வா என்னும் இடத்தில் நடைபெற்றது.
  • ராணா சங்கவிற்கு ஆதரவளித்தவர்கள்
    • ஆப்கான் முஸ்லிம்கள்
    • இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது லோடி
    • மேவாட்டின் அரசன் ஹசன்கான் மேவாட்டி 
  • இப்போரில் ராணா சங்கா தோற்கடிக்கப்பட்டார். 
  • பாபர் இப்போரில் கைப்பற்றிய இடங்கள் குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகள் 

சந்தேரிப்போர் கி.பி 1528 

  • பாபருக்கும் மேதினிராய் என்பவருக்கும் இடையே நடைபெற்றது. இப்போரில் பாபர் வெற்றி பெற்றார்.
  • இப்போரின் மூலம் சந்தேரி என்ற பகுதியை கைப்பற்றினார்.

காக்ரா போர் கி.பி 1529 

  • இப்ராஹீம் லோடியின் சகோதரரான முகமது லோடியும், அவரது மருமகனான நஸ்ரத்ஷாவும் பாபருக்கு எதிராக சதி செய்தனர்.
  • இதனை அறிந்த பாபர் அவர்கள் மீது 1529 ஆம் ஆண்டு போர் தொடுத்தார்.
  • கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இப்போர் நடைபெற்றது.
  • ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போராகும்.
  • இப்போரில் பாபர் ஆப்கானியரை தோற்கடித்தார்.
  • ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் கி. பி 1530 இல் காலமானார்.

பாபரின் பெருமைகள்

  • பாபர் பாரசீக , அராபிய மொழிகளில் புலமை பெற்றவர்.
  • பாபரின் சுயசரிதை நூல்: துசுக்-இ-பாபரி (பாபர் நாமா). இது உலக செவியல் இலக்கியமாகக் கருதப்படுகிறது.
Illustrations in the Babur Namah - Mughal Emperor Babur


  • முதல் பானிபட் போரின் வெற்றிக்கு பிறகு தம்மை 'இந்துஸ்தானத்தின் பேரரசர்' என பாபர் அறிவித்துக் கொண்டார்.
  • கான்வா போரின் வெற்றிக்குப் பிறகு பாபர் 'காஸி' என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டார்.

இந்தியாவைப் பற்றி பாபர், 

இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு. பெருமளவிலாளான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது. இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் , ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.

  • பாபரின் ஆட்சியில் அவருக்கு சொந்தமான பகுதிகள் பாதுகாப்பாக இருந்தன. இருந்த போதிலும் ராந்தம்பூர் , குவாலியர் , சந்தேரி மற்றும் ராஜபுத்திரர்களின் பரந்த பாலைவனப் பகுதிகளிலும் ராஜபுத்திர தலைவர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதனால் ஒழுங்குப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லை.
  • பாபர் ஹீமாயூனுக்கு இடர்பாடுகள் நிறைந்த பணியை விட்டு சென்றார்.

ஹீமாயூன் (கி.பி 1530 - 1540) 


Humayun : The Mughal Emperor

  • பாபரின் மூத்த மகன் ஹீமாயூன்  (நல்வாய்ப்பு) ஆவார். 
  • ஹீமாயூன் பண்பாடும் கல்வி அறிவும் மிக்கவர். ஆனால் அவரது தந்தை போல் பெரும் வீரர் அல்ல.
  • ஹீமாயூன் அரசப்பதவி ஏற்ற உடன் தன் தந்தையின் விருப்பத்திற்கிணங்க தாம் பெற்ற நாட்டை தன் சகோதரர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.
  • ஹீமாயூனின் சகோதரர்கள் கம்ரான், அஸ்காரி மற்றும் ஹிண்டால் ஆவார்கள்.
  • ஆனாலும் இம்மூவருக்குமே தில்லி அரியணையின் மேல் ஆசை இருந்தது.
  • இவர்களைத் தவிரா ஹீமாயூனுக்கு வேறு சில போட்டிகள் இருந்தன. அவர்களில் குறிப்பிட்டத் தக்கவர் பீகாரையும் வங்காளத்தையும் ஆட்சி செய்து வந்த ஆப்கானியரான ஷெர்ஷா சூர் ஆவார்.
  • காபூல் , காந்தகார் பகுதிகளுக்கு பொறுப்பு வகித்த கம்ரான் தன்னுடைய அதிகாரத்தை பஞ்சாப் வரை நீட்டித்தார். ஹீமாயூன் உள்நாட்டு போரை தவிற்ப்பதற்காக கம்ரானின் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக் கொண்டார்.
  • 1532 இல் தௌரா என்னும் இடத்தில் ஆப்கானியரைத் தோற்கடித்த ஹீமாயூன் சுனார் கோட்டையை முற்றுகையிட்டார்.
  • முகலாயருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று ஷெர்ஷா சூர் கூறிய பொய்யான வாக்குறுதியை நம்பி ஹீமாயூன் முற்றுகையை கைவிட்டார். ஆனால் இம்முடிவு பின்னர் அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு  வழி வகுத்தது.
  • ஹீமாயூன் தில்லியில் 'தீன்பனா' என்னும் புதிய நகரை நிர்வகித்துக் கொண்டிருந்தார். இந்நேரத்தை பயன்படுத்தி பகதூர்ஷா ராஜஸ்தானை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் முகலாயருக்கு எதிரானவர்களை தூண்டிவிட்டு அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்தார்.
  • ஹீமாயூன் பகதூர்ஷா மேல் போர் தொடுத்து குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அஸ்காரியின் பொறுப்பில் விட்டார். ஹீமாயூன் பகதூர்ஷாவுடன் போரிட்ட சமயத்தை பயன்படுத்தி கொண்டு ஷெர்கான் வங்காள ஆட்சியாளரை தோற்கடித்து தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்.
  • குஜராத் மக்களின் கலகங்களை அடக்க முடியாமல் திணறிய அஸ்காரி ஆக்ரா நோக்கி புறப்பட்டார். சகோதரர் அஸ்காரி ஆக்ராவை கைப்பற்றி தனதாக்கிக் கொள்வார் என்று அஞ்சிய ஹீமாயூன் தனது சகோதரரை பின்தொடர்ந்தார். ராஜஸ்தானில் சந்தித்துக் கொண்ட சகோதரர்கள் இருவரும் சமாதானமாகினர்.
  • ஹீமாயூன் ஷெர்ஷாவை எதிர்கொள்ள வங்காளம் நோக்கி புறப்பட்டார். சகோதரர் ஹிண்டால் கிளர்ச்சி செய்வதாக தகவல் வரவே , ஹீமாயூன் அதை அடக்க ஆக்ரா புறப்பட்டார். ஆனால் அதற்குள் ஷெர்கானின் படைகள் , ஹீமாயூனின் படைகளை தாக்கினர்.

சௌசா போர் கி.பி 1539 

  • ஹீமாயூனுக்கும் ஷெர்கானுக்கும் இடையே நடைபெற்றது சௌசா என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. 
  • இப்போரில் ஷெர்கான் வெற்றி பெற்றார்.
  • 7000 முகலாய பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர்.
  • உயிரை காத்துக் கொள்ள தப்பி ஓடிய ஹீமாயூன் கங்கை நதியை நீந்திக் கடந்து ஆக்ராவை அடைந்தார்.

கன்னோசிப்போர் கி.பி 1540

  • ஹீமாயுனுக்கும் ஷெர்கானுக்கும் இடையே நடைபெற்றது .
  • சௌசாப் போரில் தப்பியோடிய ஹீமாயூன் ஆக்ராவை அடைந்தார். அவர் தனது சகோதரர்களான அஸ்காரி , ஹிண்டால் ஆகியோர் ஆகியோரின் உதவியோடு ஷெர்கானை மீண்டும் எதிர்த்துப் போரிட்டார். இப்போரில் ஹீமாயூனின் படைகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டன. ஹீமாயூன் நாடற்ற அரசரானார்.

ஷெர்ஷாவும் சூர் மரபு தோற்றமும் 


Painting of Sher Shah Suri : Sur Dynasy

  • கன்னோசிப் போரில் தோல்வி அடைந்த ஹீமாயூன் கி. பி 1555-ல் மீண்டும் அரியணையைக் கைப்பற்றினார்.
  • இதற்கு இடைப்பட்ட காலத்தில் சூர் வம்சத்தை சேர்ந்த ஷெர்ஷாவால் தில்லி ஆளப்பட்டது .
  • ஒரு ஜாகிர்தாரரின் குடும்பத்தில் பிறந்த ஷெர்ஷாவின் இயற்பெயர் பரித். ஒரு புலியை கொன்றதால் ஷெர்கான் என்னும் பெயரை பெற்றார்.
  • அரியணை ஏறியப்பின் ஷெர்ஷா என்று அழைக்கப்பட்டார்.
  • இவருடைய இராணுவ மதிநுட்பமும் அரசியல் செயல்திறனும் ஹீமாயூன் மற்றும் ஏனைய இராசபுத்திர அரசர்களுக்கு எதிராக இவருக்கு வெற்றிகளை ஈந்தன. 
  • மாளவம் போரிடாமலேயே அவரிடம் வீழ்ந்தது.
  • மேவாரின் உதய்சிங் எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் இவரிடம் சரண் அடைந்தார்.
  • கலிஞ்சாரை கைப்பற்றும் முயற்சியில் தோல்விகண்டார். கலிஞ்சார் கோட்டையை தகர்க்கும் முயற்சியில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தின் காரணமாக 1545 இல் உயிரிழந்தார்.
  • அவருக்கு பின் அரியணையேறிய அவருடைய இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா கி.பி 1553 வரை ஆட்சி புரிந்தார்.
  • சிறுவயதிலேயே இஸ்லாம் ஷா மரணமடைந்தார். இதனால் வாரிசுரிமை பற்றிய குழப்பம் நிலவியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ஹீமாயூன் தில்லியை சூர் வம்ச அரசர்களிடமிருந்து மீட்டார்.

ஷெர்ஷாவின் சீர்திருத்தங்கள் 

  • காஷ்மீரை நீங்கலாக மிகப் பெரிய பேரரசை (வங்காள முதல் சிந்து வரை) நிறுவினார்.
  • டெல்லி சுல்தானியத்தின் உள்ளாட்சித் துறை நிர்வாக கட்டமைப்பு ஒரு சில மாற்றங்களோடு பின்பற்றப்பட்டது .
  • கிராமங்களில் களவு போகும் பொருட்களுக்கு கிராம தலைவரே பொறுப்பு என்றானது.
  • "விவசாயம் சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான்" என ஷெர்ஷா நம்பினார்.
  • நிலங்கள் முறையாக அளவை செய்யப்பட்டு நிலங்களின் வளத்திற்கு ஏற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
  •  சில பகுதிகளில் ஜாகிர்தாரி முறையும் ஜமீன்தாரி முறையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டன.


ஜாகிர்தாரி முறை ஜமீன்தாரி முறை
இது ஒரு நில உடைமை முறை ஆகும். இது மற்றொரு நில உடைமை முறையாகும்.ஜமீன்தார் என்றால் நில உடமையாளர் (பாரசீகத்தில்) என்று பொருள். 

டெல்லி சுல்தானியர் காலத்தில் வளர்ச்சி பெற்றது.

இம்முறையின் கீழ் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரமும் நிர்வாக அதிகாரமும் அரசாங்கத்தை சார்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

முகலாயர் காலத்தில் பிரபுக்கள் வர்த்தகத்தினரே ஜமீன்தர்களாக இருந்தனர். அக்பர் பிரபுக்களுக்கும் , முந்தைய அரச குடும்பங்களின் வழித்தோன்றல்களுக்கும் நிலங்களை வழங்கி அவற்றை பரம்பரையாக அனுபவிக்கும் உரிமையை வழங்கினார்.

ஜமீன்தார்கள் குத்தகைக்காரர்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் வரிவசூல் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தினர்.

  • ஷெர்ஷா வணிகத்தை ஊக்குவிக்க வணிக வரிகளை எளிமைப்படுத்தினார். நுழைவு வரி மற்றும் விற்பனை வரி மட்டுமே வசூலிக்கப்பட்டன.
  • தங்கம் , வெள்ளி , செப்பு காசுகளில் இடம் பெறும் உலோகங்களின் தர அளவு வரையறை செய்யப்பட்டது.
  • ஷெர்ஷாவின் நாணய முறை முகலாயர் காலம் முழுவதும் அப்படியே பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நாணய முறைக்கு அடித்தளமானது.
  • வணிகத்தையும் வர்த்தகத்தையும் மேம்படுத்த உறுதியான சாலை வசதி முறையை பராமரித்தார்.
  • பழைய சாலைகள் புதுப்பிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் புதிய சாலைகளும் அமைக்கப்பட்டன.
  • சில முக்கிய சாலைகள்
    • சிந்து முதல் சோனர்கான் வரை 
    • லாகூர் முதல் முல்தான் வரை 
    • குஜராத் கடற்கரை துறைமுகங்களை  ஆக்ரா மற்றும் ஜோத்பூர் ஆகிய நகரங்களோடு இணைக்கும் சாலை
  • அனைத்து சாலைகளிலும் சராய் எனப்படும் சத்திரங்கள் அமைக்கப்பட்டு வணிகர்கள் தங்கவும் உணவருந்தவும் வசதிகள் செய்யப்பட்டன.
  • ஷெர்ஷாவால் உருவாக்கப்பட்ட ஒரு சில சராய்கள் இன்றளவும் உள்ளன .
  • ஆதரவற்றோருக்கு கருவூலத்திலிருந்து உதவித்தொகை வழங்கினார்.
  • ஷெர்ஷா ஒரு வைதீக சன்னி முஸ்லீம் ஆவார். பாரபட்சமில்லாமல் நீதி வழங்கினார். கடுமையான தண்டனைகள் மூலம் பேரரசில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தார்.
  • மிகவும் புகழப்படும் அக்பர் , தோடர்மால் ஆகியோரின் நிதி நிர்வாக முறை பெரும் அளவில் ஷெர்ஷாவின் நிதி நிர்வாக முறையை அடித்தளமாகக் கொண்டதாகும் .
  • தில்லியில் புராணகிலா என்னும் புதிய நகரை நிர்மாணித்தார்.
  • தன்னுடைய கல்லறை மாடத்தை சசாரம் என்னும் இடத்தில் கட்டினார்.


Resource :

  • Tamil Nadu State Board School Samacheer Books from 6th Standard to 12th Standard

Image Attribution:

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

No comments:

Post a Comment