டெல்லி சுல்தான்கள்
சையது மரபு (கி.பி 1414 - 1451)
- தைமூர் ஒரு டெல்லியை விட்டு செல்லும் பொழுது கிசிர்கான் என்பவரை முல்தானின் ஆளுநராக நியமித்தார். கிசிர்கான் 1414 இல் டெல்லியை கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை நிறுவினர்.
- 1421ல் கிசிர்கான் மறைவுக்கு பிறகு அவரது மகன் முபாரக் ஷா மன்னரானார்.
- முபாரக் ஷா டெல்லி நீதிமன்றத்தில் இந்து மத உயர் குடியினரை நியமித்தார். யமுனை நதி கரையில் "முபாரக் பாத்" என்னும் நகரை நிர்மாணித்தார்.
- 1434 இல் முபாரக் ஷா கொல்லப்பட்டார். இவரது சுயசரிதை தாலிக்-இ- முபாரக் ஷாகி எனப்படும். இதனை எழுதியவர் பாகியா- அகமத்-கான் -சிரிந்தி.
- முபாரக் ஷாவின் மரணத்தை அடுத்து அவரது சகோதரனின் மகன் முகமது ஷா மன்னரானார்.
- முகமது ஷா லாகூர் ஆளுநர் பஹ்லுல் லோடி உதவியுடன் மாளவத்தின் மீது படையெடுத்து அதனை வென்றார். இவ்வெற்றி காரணமாக முகமது ஷா பஹ்லுல் லோடிக்கு “கானிகானா” என்ற பட்டத்தை வழங்கினார்.
- 1445 இல் முகமது ஷா மரணம் அடைந்தார். முகமது ஷாவை அடுத்து அலாவுதீன் ஷா மன்னரானார். இவர் திறமையற்று செயல்பட்டதால் பஹ்லுல் லோடி டெல்லி ஆட்சியை கைப்பற்றி அலாவுதீனுக்கு கட்டாய ஓய்வளித்தார். அலாவுதீன் ஆலம் ஷா 1451ல் தனது அரசப் பதவியை துறந்தார்.
🔔 “தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்து தில்லுக்கு வெளியே ஒரு சிறிய நகருக்குச் சென்று முழுமையாக முப்பது ஆண்டுகள் மனநிறைவோடும் அமைதியாகவும் வாழ்ந்த ஒரே சுல்தான் சையத் வம்சத்தில் வந்த ஆலம் ஷா.” - Abraham Eraly, The age of Wrath.
லோடி வம்சம் கி.பி 1451- 1526
லோடி வம்சத்தை தோற்றுவித்தவர் பஹ்லுல் லோடி . இவர் அரியணையில் அமராமல் உயர் குடியினருடன் கம்பளத்தில் அமர்ந்து ஆட்சி செய்தார்.
சிக்கந்தர் லோடி கி.பி 1489 - 1515
- இவர் பகலூல் லோடியின் மகன் ஆவார்.
- சிக்கந்தர் ஷா என்ற பட்டப்பெயருடன் ஆட்சியை தொடங்கினார்.
- தமது பேரரசை பஞ்சாப் முதல் பீகார் வரை விரிவடைய செய்தார்.
- ஆக்ரா நகரை கட்டினார்.
- இவர் லோடி மரபின் மிகச்சிறந்த அரசர் ஆவார்.
- செனாய் எனப்படும் ஒரு வகை இசையை மிகவும் விரும்பினார்.
- லக்ஜெட்- இ -சிக்கந்தர் ஷாஜி என்ற இசைத் தொகுப்பு இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது.
இப்ராஹிம் லோடி கிபி 1517 -1526
- இவர் சிக்கந்தர் லோடியின் மூத்த மகன் ஆவார்.
- தவுலத்கான் லோடியின் மகனை இவர் கொடுமைப்படுத்தியதால் தவுலத்கான் லோடி காபுல் மன்னரான பாபரை உதவிக்கு அழைத்தார்.
- பாபர் கி.பி 1526 இல் முதலாம் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை வென்றார். இதன் மூலம் டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம்
- பேரரசு பல மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இவை இக்தாக்கள் எனப்பட்டன. இவற்றை இக்தா (முக்திகள் அல்லது வாலிகள்) என்று அழைக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் நிர்வாகம் செய்தனர்.
- நிலவரி வசூலிப்பது சட்ட ஒழுங்கை பராமரிப்பது இவர்களின் பணியாகும். மேலும் அரசு சேவைக்கு படை குழுக்களை பராமரிப்பதற்கும் சுல்தான்களுக்கு இவர்கள் தேவைப்பட்டனர்.
- சுல்தான்கள் சில குறிப்பிட்ட பகுதிகளை தங்களின் நேரடி கட்டுப்பாட்டில் (கலிஸா) வைத்துக்கொண்டனர். இத்தகைய பகுதிகளில் வசூலிக்கும் வருவாயிலிருந்தே சுல்தான்களின் சொந்த படை குழுக்களின் (ஹப்ம்-இ-கால்ப்) அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டது.
- மாகாணங்கள் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. இவை ஷிக்தா எனப்பட்டன.
- ஷிக்தாவிற்கு கீழ் பல கிராமங்கள் இணைந்த பகுதியாக பர்கானா இருந்தது. இதன் தலைவர் அமில் அல்லது முன்ஷிப் எனப்பட்டார்.
- ஆட்சியின் அடிப்படை அலகாக கிராமங்கள் கருதப்பட்டன. கிராமங்களை நிர்வாகித்தவர் கணக்கர் , பட்வாரி என அழைக்கப்பட்டனர்.
- பிரபுக்கள் வகுப்பினர் அனைவரும் செழிப்பான சமூக பொருளாதார வாழ்க்கையை அனுபவித்தனர்.
- தொடக்கத்தில் துருக்கியர் மட்டுமே பிரபுக்களாக இருந்தனர். நீண்ட காலத்திற்கு ஆப்கானியரும் ஈரானியரும் இந்திய இஸ்லாமியரும் பிரபுக்கள் வகுப்பிலிருந்து விலக்கப்பட்டிருந்தனர்.
பொருளாதாரம்
- உற்பத்தி பொருளில் பாதி என்ற அடிப்படையில் நிலவரி கடுமையாக விதிக்கப்பட்டது.
- பரம்பரையாக வரி வசூலித்து வந்தோர் (சௌத்ரிகள்), கிராம தலைவர் (கோட்கள்) ஆகியோரின் நிதி தேவை கடுமையாக குறைக்கப்பட்டது.
- தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரி வசூல் ஒரு கடுமையான விவசாய கிளர்ச்சியை குறிப்பாக டெல்லிக்கு அருகே உள்ள தோ- ஆப் பகுதியில் 1332 - 34 காலகட்டத்தில் தூண்டி விட்டது.
🔔 நிலங்கள்:
1. இத்தா - ஊதியத்திற்கு பதிலாக வழங்கப்பட்ட நிலம்
2. காஸிரா - அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள நிலம் இதன் மூலம் வரும் வருவாய் நேரடியாக அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
3. இனாம் - சமய தலைவர்களுக்கும் சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலம்.
1. இத்தா - ஊதியத்திற்கு பதிலாக வழங்கப்பட்ட நிலம்
2. காஸிரா - அரசின் நேரடி கண்காணிப்பில் உள்ள நிலம் இதன் மூலம் வரும் வருவாய் நேரடியாக அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
3. இனாம் - சமய தலைவர்களுக்கும் சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலம்.
- 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே செப்பு காசுகளோடு தங்கம் , வெள்ளி காசுகளையும் சுல்தான்கள் வெளியிடத் தொடங்கினர்.
- நாணயம் எட்டு தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது. 25 வகைகள் இருந்தன.
- கில்ஜி காலத்தில் ஒரு வெள்ளி தாங்கா 48 ஜிடால்கள்
- துக்ளக் காலத்தில் ஒரு வெள்ளி தாங்கா 50 ஜிடால்கள்
🔔 “மேற்கு எல்லை பகுதிகளில் மங்கோலிய படையெடுப்புகள் வெற்றி பெற்ற போதிலும் தரைவழியிலும் கடல் வழியிலும் நிகழ்ந்த இந்தியாவின் அயல் வணிகம் இக்காலத்தில் கணிசமாக வளர்ச்சி பெற்றது."- இர்ஃபான் ஹபீப்
வணிகம்:
- சுல்தான்களும் பிரபுக்களும் ஆடம்பரப் பொருட்களை மிகவும் விரும்பியதால் உள்நாட்டு வணிகம் புத்துயிர் பெற்றது.
- பருத்தி பட்டு துணி உற்பத்தி அதிகமாக இருந்தது.
- சுல்தான் மற்றும் அரசு குடும்பத்திற்கு தேவையான பொருள் அரசருக்கு சொந்தமான கர்கானாக்களில் (தொழிற்சாலை) உற்பத்தி செய்யப்பட்டன.
- ஒரு நகர்ப்புற பொருளாதாரத்தால் இயங்கியது. தில்லி, லாகூர், முல்தான், காரா, லக்னோ, அன்ஹில்வாரா, கேம்பில், தௌலதாபாத் ஆகிய நகரங்கள் சமண மார்வாரிகள், இந்து முல்தானிகள், முஸ்லிம் போராக்கள், குரசானியர், ஆப்கானியர், ஈரானியர் ஆகியோரின் வணிக நடவடிக்கையால் செழித்திருந்தன.
- குஜராத்திகளும் தமிழர்களும் கடல் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். அதே நேரத்தில் இந்து முல்தானிகளும், முஸ்லிம் குரசானியரும், ஆப்கானியரும் ஈரானியரும் மத்திய ஆசியாவுடன் தரைவழி வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.
சமூகத்தில் பெண்களின் நிலை
- அடிமை முறை ஏற்கனவே இந்தியாவில் நிலவியது இருப்பினும் 13, 14-ஆம் நூற்றாண்டுகளில் அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
- மத்திய கால இந்திய பெண்களிடம் கல்வியின்மை பரவலாக காணப்பட்டது.
- சில இந்து சாதிகளில் உயர்குடிப் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவமானத்திற்கு உரியதாகவும் கருதப்பட்டது.
- மேல்தட்டு இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர் தவிர வேறு எந்த ஆண்களோடும் பேசக்கூடாது என்பதற்காக ஸெனானாவில் (பெண்கள் வசிப்பிடம்) ஒதுக்கி வைக்கப்பட்டனர். செல்வப் பெண்கள் மூடு பல்லக்கில் பயணம் செய்தனர்.
- பர்தா அணிந்திருந்த போதிலும் சில விஷயங்களில் இஸ்லாமிய பெண்களுக்கு பெரும்பாலான இந்து பெண்களை காட்டிலும் சமூகத்தில் உயர்ந்த தகுதியும் , அதிகார சுதந்திரமும் இருந்தன.
- இஸ்லாமிய பெண்கள் தங்களின் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறவும், மணவிலக்கு பெறவும் உரிமை இருந்தது. இந்த உரிமைகள் இந்து பெண்களுக்கு இல்லை.
- இஸ்லாமிய மரபில் விதவைகள் உடன்கட்டை (சதி) ஏறும் வழக்கம் அறியப்பட்டிருக்கவில்லை.
- பெண்கள் படிக்கவும் எழுதவும் கற்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் பலதார மணத்திற்கு ஏற்பளித்தது.
சமயம்
- பல கடவுளர்களை வழிபட்ட இந்துக்களைப் போலன்றி இஸ்லாமியர் ஓர் இறை வழிபாட்டை பின்பற்றினர்.
- பகவத் கீதை குறிப்பிடுவதைப் போல இந்து மதத்தில் வெகு நீண்ட காலமாக ஓர் இறைப்போக்கு இருந்து வந்தது.
- அல்பெருனி சுட்டியதைப் போல ஓரிறைக் கொள்கைக்கு இஸ்லாமியத்திற்கும் உள்ள நெருக்கமானது இக்கோட்பாட்டை ஓரத்திலிருந்து மையத்திற்கு கொண்டுவர உதவியது.
- 13ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் பசவண்ணர் நிறுவிய லிங்காயத் பிரிவு ஒரு கடவுளையே( பரமசிவன் )நம்பியது. இதற்கு இணையான தமிழகத்தில் சித்தர்கள் விளங்கினர். ஒரு கடவுளை பாடிய இவர்கள் சாதியை, வைதீகத்தை, மறுபிறப்பை சாடினர்.
- மகாராஷ்டிராவில் நாமதேவர் உருவ வழிபாட்டையையும் சாதி பாகுபாடுகளையும் எதிர்த்தார். இவர் ஓர் இறைக் கொள்கையை கடுமையாகப் பின்பற்றினார்.
தொழில்துறை வளர்ச்சி
- சீனர் கண்டுபிடித்து அரேபியர் கற்றுக் கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம் டெல்லி சுல்தானியர் காலத்தில் இந்தியாவில் அறிமுகமானது.
- சீனர் கண்டுபிடித்த நூற்பு சக்கரம் 14-ம் நூற்றாண்டில் ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தது. இது நூற்பவர்களின் உற்பத்தி திறனை ஆறு மடங்கு அதிகரிக்க உதவியது.
- அதனைத் தொடர்ந்து தறிகளில் மிதிப்பொறிகள் அறிமுகம் செய்யப்பட்டன. நெசவு வேலையை விரைவுப்படுத்த இது உதவியது.
- 15 ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்டன.
கல்வி
- இஸ்லாமிய உலக கல்வி மரபுகள் அறிமுகம் ஆயின.
- மக்தப் என்பது ஒரு பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கு படிக்கவும் எழுதவும் கற்றுத் தரும் இடமாகும்.
- மதரஸா: உயர்கல்வி கற்றுக் கொள்கின்ற இடம். வழக்கமாக மதரஸாவுக்கு ஒரு கட்டடம் இருந்தது. தனி ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர். அங்கே மாணவர்கள் தங்கி இருக்கவும், நூலகத்துக்கும் தொழுகைக்கும் என சில அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
- பெரோஸ் துக்ளக் டெல்லியில் ஒரு பெரிய மதரஸாவைக் கட்டினார். அங்கே குர்ஆன் உரை இறைத்தூதரின் வாக்குகள் இஸ்லாமிய சட்டங்கள் (ஃபிக்) கற்பிக்கப்பட்டன - பரணி
- சிக்கந்தர் லோடி தமது ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்தப்களிலும், மதராஸாக்களிலும் ஆசிரியர்களை நியமித்தார். அவர்களுக்கு நிலமும் மானியமும் ஒதுக்கினார்.
கட்டடக்கலை
- வளைவு, கவிகை, நிலவறைகள், சுண்ணாம்புக்கலவை பயன்பாடு, சாராசெனிய அம்சங்கள் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாகின.
- பளிங்குகள், சிகப்பு, சாம்பல், மஞ்சள் நிற மணற்கல் பயன்பாடு கட்டிடங்களுக்கு பேரழகூட்டின.
- முதல் மெய்யான வளைவால் அலங்கரிக்கப்பட்டது பால்பனின் கல்லறை.
- குவாத் உல் இஸ்லாம் மசூதிக்கு ஒரு நுழைவு வாயிலாக அலாவுதீன் கில்ஜி கட்டிய அலைதர்வாச முதல் உண்மையான கவிகையாகும்.
சிற்பக்கலை மற்றும் ஓவியம்
- கட்டடங்களை விலங்கு மற்றும் மனித சித்திரங்கள் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாமிய விரோதம் என்று இஸ்லாமிய இறையியல் கருதியது.
- உருவங்களுக்கு பதிலாக பூ மற்றும் இதர வடிவ வெளிப்பாடுகள் செய்யப்பட்டன.
- குர்ஆன் வாசகங்களைக் கொண்டு கட்டிடங்களை அழகுப்படுத்தும் கலையான அரேபிய சித்திர எழுத்து வேலை கட்டிடங்களுக்கு எழிலூட்டியது.
இசை மற்றும் நடனம்
- ரபாய் சாரங்கி போன்ற இசைக்கருவிகளை இஸ்லாமியர் கொண்டு வந்தனர்.
- இந்திய இசை உலகில் உள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது - அமீர்குஸ்ரு
- சூஃபி துறவியான பிர்போதன் இக்காலத்தில் ஒரு மிகப்பெரும் இசை கலைஞராக கருதப்பட்டார்.
- பெரோஸ் துக்ளக் இசையின் மீது காட்டிய ஆர்வத்தால் ராக்தர்பன் என்ற சமஸ்கிருத இசை நூல் பாரசீக மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
- இசைக் கலைஞர் நுஸ்ரத் காட்டன் , நடனக்கலைஞர் மிர் அஃப்ரோஸ் ஆகியோர் ஜலாலுதீன் அரசவையில் இருந்ததை ஜியாவுத் பரணி குறிப்பிடுகிறார்.
இலக்கியம்
- பாரசீக உரைநடைகளிலும் கவிதையிலும் ஒரு முக்கியமானவராக அமீர்குஸ்ரு தனது ஒன்பது வானங்கள் (Nu Siphr) நூலில் தம்மை ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
- சூஃபி துறவி நிசாமுதீன் அவுலியாவின் உரையாடல்களை கொண்ட "ஃபவாய் துல் ஃபவாத்" என்ற ஒரு நூலை அமிர்ஹாஸ்ஸன் தொகுத்தார்.
- பாரசீக உரைநடையின் ஆசானாக ஜியாவுத் பரணி தோன்றினார்.
- கிளிநூல் என்னும் துதிநமக என்பது ஜியா நக்ஷபி பாரசீக மொழி பெயர்த்த சமஸ்கிருத கதைகளின் தொகுப்பாகும்.
- மகாபாரதமும் ராஜதரங்கிணியும் கூட பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன.
- உயர் அறிவு பூர்வ சிந்தனை மொழியாக சமஸ்கிருதம் தொடர்ந்தது.
🔔1276 ஆம் ஆண்டுக்குரிய செவ்வியல் சமஸ்கிருத கல்வெட்டு (பாலம் பவோலி) சுல்தான் பால்பனின் நல்லாட்சியின் விளைவாக விஷ்ணு பகவான் எந்த கவலைகளும் இன்று துயில்கிறார் என்கிறது.
Resource:
- Tamil Nadu State Board Samacheer School Books from 6th standard to 12th Standard.
Image Attribution:
- Sayyid Dynasty Map created from DEMIS Mapserver, which are public domain. Koba-chanTerritorial area: पाटलिपुत्र (talk), per Schwartberg Atlas p.148 - This file has been extracted from another file, CC BY-SA 3.0
- Lodi Dynasty Map created from DEMIS Mapserver, which are public domain. Koba-chanTerritorial area: पाटलिपुत्र (talk), per Schwartberg Atlas p.148 - This file has been extracted from another file, CC BY-SA 3.0
- Alai Darwaza Image created by Alimallick - Own work, CC BY-SA 3.0
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment