டெல்லி சுல்தான்கள்
அடிமை வம்சம்
இல்துமிஷ் (1210-1236)
- சம்சுதீன் இல்துமிஷ் துருக்கிய இனத்தை சார்ந்த குத்புதீன் ஐபக்கின் அடிமை.
- ஐபக்கின் மகன் ஆரம் ஷா திறமை அற்றவராக இருந்தார்.
- குத்புதீன் ஐபக்கின் அடிமையும் மருமகனுமான சம்சுதீன் இல்துமிஷ் ஐபக்கின் மகன் ஆட்சிக்கு வருவதை தடுத்து தானே ஆட்சி பொறுப்பேற்றார்.
- இவருடைய ஆட்சியின் போது மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை அச்சுறுத்தினர்.
- ஏற்கனவே செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்ட ஜலாலுதீன்( குவாரிஜம் ஷா ஜலாலுதீன்) என்பார் இல்துமிஷிடம் அடைக்கலம் கேட்டிருந்தார்..
- அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து மங்கோலியர் படையெடுப்பில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். ஒருவேளை மங்ககோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்ள துருக்கிய பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அது சகல்கானி அல்லது நாற்பதின்மர் குழு என்று அழைக்கப்பட்டது.
- குவாலியர், ரான்தாம்பூர், ஆஸ்மீர், ஜலோர் ஆகிய இடங்களில் ராஜபுத்திரர்களுக்கிடையே நிலவிய குழப்பங்களை முடித்து வைத்தார்.
- லாகூரிலும் முல்தானிலும் நஸ்ருதீன் குபச்சாவின் படையை எதிர்த்து வெற்றி பெற்றார்.
- வங்க ஆளுநர் அலிவர்தனின் சதியை முறியடித்தார்.
- தனது படைகளில் பணியாற்றியோர்க்கு 'இத்தாக்களை' (நிலங்களை) வழங்கினார். இக்தா இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலம் ஆகும். இவ்வாறு நிலங்களை பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி எனப்பட்டனர். இவர்கள் தனது படைகள் மற்றும் குதிரைகள் பராமரிப்பு செலவிற்காக வழங்கப்பட்ட நிலங்களில் வரி வசூல் உரிமையையும் பெற்றனர்.
- ஐபக்கால் தொடங்கப்பட்ட குதும்பினாரின் கட்டுமான பணிகளை நிறைவு செய்தார். கட்டி முடிக்கும்போது இதன் உயரம் 238 அடி. பின்னர் பெரோஷா துக்ளக் காலத்தில் குதுப்மினார் மறுசீரமைப்பு செய்யப்பட்டது அதன் பின்னர் இதன் உயரம் 243 ஆக மாற்றப்பட்டது.
- இரண்டு அடிப்படை நாணயங்களான செம்பு , வெள்ளி தங்காவை அறிமுகம் செய்தார்.
- வெள்ளி: தங்கா அல்லது டாங்கா
- செம்பு: ஜிடால்
- 26 ஆண்டுகள் ஆட்சி புரிந்த இல்துமிஷ் ஏப்ரல் 1236 இல் இயற்கை எய்தினார்.
- பேரரசர் இல்துமிஷின் மகள்.
- இல்துமிஷின் மகன் ருக்குதீன் பிரோஸ் மரணமுற்றதால் தனது மகளான ரசியா சுல்தானாவை டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார் இல்துமிஷ்.
- இரசியா அரியணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- இவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏராளமான தடைகளை கடந்து இரசியா பேரரசியாக பதவி ஏற்றார்.
- ஜலாலுதீன் யாகூத் என்ற ஒரு அபிசீனிய அடிமையை அவர் குதிரை இலாயப் பணித்துறை தலைவராக (அமீர் - இ - அகுர்) ஒர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். இது துருக்கிய பிரபுகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
- குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதை போல் கையில் வில் , அம்புடன் அரச பரிவாரங்கள் சூழ இரசியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு திரையிடவில்லை. - இபின் பதூதா (மொராக்கோ)
- இரசியாவுக்கு பொதுமக்கள் ஆதரவு இருந்ததால் டெல்லியில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
- தெற்கு பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவை தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைச் சதிகாரங்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியில் இருந்து அகற்றினர்.
- துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் 1240ல் இரசியா கொலையுண்டார்.
இரண்டாம் நசீர் அல்லுதீன் முகமது (1246-1266)
- இல்துமிஷின் கடைசி மகன் இரண்டாம் நசீர் முகம்மது. இல்துமிஷின் வாரிசுகள் தங்கள் தந்தையர்களால் நியமிக்கப்பட்ட தளபதிகளையும் ஆளுநர்களையும் எதிர்த்து போரிட்டு தோற்றினர்.
- மூத்த பிரபுக்களாகிய அவர்கள் தொடர்ந்து தில்லி அரசியலில் தலையிட்டனர். இல்துமிஷின் வாரிசுகளுக்கு நிபந்தனைகள் விதித்து வந்தனர்.
- கிழக்கே லக்னோவதி (நவீன வங்கம்)மேற்கே பஞ்சாப் சிந்து மாகாணங்களில் நியமிக்கப்பட்ட அடிமை ஆளுநர்கள் தில்லியின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறி சுதந்திர அரசர்களாக அறிவித்தனர்.
- 1254-ல் வடமேற்கில் ஷிவாலிக் ஆட்சி பகுதியில் தளபதியாக இருந்த உலுக்கான் இல்துமிஷ் ஆட்சியின் போது அடிமையாகவும் இளைஞராகவும் இருந்தவர். அவர் ஆட்சி அதிகார பிரதிநிதி என பொருள்படும் நயிப் -இ-முல்க் என்று பட்டம் சூட்டிக்கொண்டார்.. பிறகு 1266 ல் சுல்தான் கியாஸ்-உத்-தின் பால்பனாக தில்லி ஆட்சியை கைப்பற்றினார்.
கியாசுதீன் பால்பன் (1266-1287)
- நாற்பதின்மர் என்றழைக்கப்பட்ட துருக்கிய பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ்வமைப்பை பால்பன் ஒழித்தார்.
- தனது ஆட்சிக்கு எதிராக சதி செய்வோரையும், இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறை ஒன்றை நிறுவினார்.
- தனக்கு அடங்க மறுத்த ஆளுநர்கள் அவர்களின் உள்ளூர் கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்தினார்.
- தில்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும், தோவாபிலும் நடந்த தாக்குதல்களைப் பற்றி பரணி குறிப்பிடுகின்றார். இந்த தாக்குதல்களின் போது காடுகள் அழிக்கப்பட்டன. புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டு புதிய நிலங்கள் புதிதாக படையில் சேர்ந்த ஆப்கானியர்களுக்கும் மற்றவர்களுக்கும் குத்தகையில்லா நிலங்களாக (மஃப்ருஸி) வழங்கப்பட்டு பயிரிடப்பட்டன.
- வடமேற்கில் மேவாரில் கொலை ,கொள்ளைகள் ஈடுபட்ட 'மியோ' என்ற இஸ்லாமிய சமூகத்தின் மீது பால்பனே முன்னின்று தாக்குதல் நடத்தினார். அவரின் படைவீரர்கள் மியாக்களைத் தேடிபிடித்துக் கொன்றனர்.
- தோவாப் பகுதியில் இராஜபுத்திர அரண்கள் அழிக்கப்பட்டன.
- பால்பன் கலகங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கினார்.
- தனது பிடித்த ஒரு அடிமையான துக்ரில்கானை வங்கத்தின் ஆளுநராக நியமித்தார். ஆனால் விரைவிலே துக்ரில்கான் கலகம் செய்தார். கலகத்தை ஒடுக்க பால்பன் அனுப்பிய அவத் ஆளுநர் அமின்கான் பின்வாங்கவே பிறகு இரு படைப்பிரிவுகளை அனுப்ப அவையும் தோல்வியைத் தழுவின. இறுதியில் பால்பனே வங்கத்திற்குச் சென்றார். இதனை கேள்வியுற்ற துக்ரில்கான் தப்பியோடினார். முதலில் லக்நௌதிக்கும் பிறகு திரிபுராவை நோக்கியும் சென்ற துக்ரில்கானைப் பிடித்து பால்பனின் படைவீரர்கள் அவரைக் கொன்றனர். பிறகு வங்கத்தின் ஆளுநராக பால்பனின் மகன் நியமிக்கப்பட்டார்.
- மங்கோலியர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக தனது இராணுவத்தை பால்பன் பலப்படுத்தி கொண்டார். படிண்டா, சுனம், சாமானா ஆகிய கோட்டைகளில் கூடுதல் படைகளை நிறுத்தினார். ஈரானின் மங்கோலிய பொறுப்பு ஆளுநரும், செங்கிஸ்கான் பேரனுமான ஹீலுக்கானுடன் நல்லுறவை பேணுவதற்கு அவர் முயற்சி செய்தார்.
- சாட்லெஜிக்கு அப்பால் முன்னேறி வரமாட்டோம் என்ற வாக்குறுதியை மங்கோலியர்களிடமிருந்து பால்பன் பெற்றார். மங்கோலிய தாக்குதல்களில் இருந்து எல்லை பகுதிகளைக் காக்க தனது விருப்பத்திற்குரிய மகன் முகமது கானுக்கு முல்தானின் ஆளுநர் பொறுப்பு அளித்திருந்தார். நட்புறவு இருந்த போதிலும் ஒரு மங்கோலியரோடு ஏற்பட்ட ஒரு மோதலில் முகமது கான் கொல்லப்பட்டார்.
- இதனால் மனமுடைந்த பால்பன் 1286 இல் இறந்தார். பால்பன் இறந்த பிறகு அவருடைய மகன் புக்ரா கான் ஒரு சுதந்திர அரசாட்சியாக பிரிந்து போனாரேயன்றி தந்தையின் அரியணையைக் கோரவில்லை.
- பால்பனின் மகனான கைக்குபாத் சிற்றின்பத்தில் வீழ்ந்து கிடந்தார். திறமையற்றவராகவும் இருந்தார்.
- 1290 இல் படைத்தளபதியாக பணியாற்றிய மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரச பிரதிநிதியாகப் (நாயிப்) பொறுப்பேற்றார். சுல்தான் கைகுபாத்தின் பெயரால் அவர் நாட்டை ஆண்டார்.
- பின்னர் ஜலாலுதீனால் அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவரால் கைகுபாத் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஜலாலுதீன் முறையாக அரியணை ஏறினார்.
- பாரசீகத்தை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ரு என்பவரை பால்பன் ஆதரித்தார்.
கில்ஜி அரசு வம்சம் ( 1290 - 1320)
ஜலாலுதீன் கில்ஜி 1296 - 1316
- பால்பனின் மகன் கைகுபாத் அரசராகும் தகுதியற்றவராக இருந்தார். இதனால் அவரது மூன்று வயது மகன் கைமார்ஸ் அரியணையில் அமர்த்தபட்டார்.
- பேரரசின் அமைச்சர்கள் , பொறுப்பு ஆளுநர் போன்றவை நியமிப்பதில் குழப்பம் நிலவுவே படைத்தளபதி ஜலாலுதீன் கைகுபாத்தின் பெயரால் ஆட்சி செய்தார்.
- விரைவிலேயே கைகுபாத்தை ஒரு அதிகாரி மூலம் கொலை செய்து முறைப்படி அரசர் ஆனார்.
- ஜலாலுதீன் ஓர் ஆப்கானியர். இதனால் ஆரம்பக் காலகட்டத்தில் துருக்கிய பிரபுக்களிடம் எதிர்ப்பு இருந்தது. விரைவிலேயே ஜலாலுதீன் பிரபுக்கள் பலரையும் தன்வசப்படுத்திவிட்டார்.
- ஜலாலுதீன் தன் முதிய வயதில் கூட மங்கோலிய கூட்டங்களை எதிர்த்து போரிட்டு இந்தியாவிற்குள் அவர்கள் நுழைவதை தடுத்து நிறுத்தினார்(1292).
- காராவின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த ஜலாலுதீன் கில்ஜியின் உடன்பிறந்தார் மகனும் மருமகனுமான அலாவுதீன் மால்வா மீது படையெடுத்து பெரும் செல்வத்தோடு திரும்பினார்.
- இவ்வெற்றி தக்காணத்திலிருந்த யாதவ அரசின் தலைநகரான தேவகிரி மீது படையெடுப்பதற்கான உந்துதலை அலாவுதீனுக்கு ஏற்படுத்தியது.
- அலாவுதீன் யாதவ அரசர் ராமச்சந்திரனை தோற்கடித்து பெருஞ்செல்வத்தோடு திரும்பினார். அச்செல்வத்தை முக்கிய பிரபுகளுக்கும் படைத் தளபதிகளுக்கும் கையூட்டாகக் கொடுத்து ஜலாலுதீனை வஞ்சமாக கொன்றார்.
- 1296 இல் தன்னை டெல்லியின் சுல்தானாக அலாவுதீன் அறிவித்துக் கொண்டார்.
அலாவுதீன் கில்ஜி 1296-1316
- அவரது இரண்டாவது ஆட்சி ஆண்டில் (1298) டெல்லியை உக்கிரமாக தாக்கினார். அலாவுதீன் படையால் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. 1305 இல் தோஆப் சமவெளிப் பகுதியின் வழியே நுழைந்து மீண்டும் தாக்கினார். இம்முறை மங்கோலியரை தோற்கடித்த அலாவுதீன் படை அவர்களை அதிகமாக சிறை பிடித்துக் கொன்றது. கடைசி மங்கோலிய தாக்குதல் 1307 -1308 இல் நிகழ்ந்தது. இது மங்கோலியர்களுக்கு கடுமையான பதிலடியாக அமைந்தது.
இராணுவ தாக்குதல்கள்
- தேவகிரி 1296 , 1307 , 1314
- குஜராத் 1299 - 1300
- ராந்தாம்பூர் 1301
- சித்தூர் 1303
- மால்வா 1305 .
- மேற்கூறிய இத்தாக்குதல்கள் இராணுவ அதிகாரம் , அரசியல் அதிகாரத்தை பறைசாற்றவும் செல்வத்தை பெருக்குவதற்காக மட்டுமே நடத்தப்பட்டன.
- தீபகற்பத்தில் அவருடைய முதல் இலக்கு மேற்கு தக்காணத்தில் இருந்த தேவகிரியாகும். 1307-ல் தேவகிரி கோட்டையை கைப்பற்ற ஒரு பெரும் படையை மாலிக்கபூர் தலைமையில் அனுப்பினார்.
- 1309 காகதீய (தெலுங்கானா பகுதி) அரசர் பிரதாபருத்ரதேவா தோற்கடிக்கப்பட்டார்.
- 1310 ஹொய்சாள அரசர் வீரவல்லாளன் தோற்கடிக்கப்பட்டார். பிறகு மாலிக்கபூர் தமிழ்நாட்டுக்கு படை எடுத்து சென்று சிதம்பரம் , திருவரங்கம் மதுரை ஆகிய இடங்களை சூறையாடினார். தமிழ் பிரதேசங்களில் இருந்த இஸ்லாமியர் பாண்டிய மன்னர்கள் சார்பாக மாலிக்கபூரை எதிர்த்து போரிட்டனர். 1311 இல் ஏராளமான செல்வங்களுடன் மாலிக்கபூர் டெல்லி திரும்பினார்.
உள்நாட்டு சீர்திருத்தங்கள்
- பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களைத் தடை செய்தார்.
- ஊழலில் ஈடுபட்ட அரசு அலுவலர்களைத் தண்டித்தார்
- மது , போதை பொருட்களைத் தடை செய்யப்பட்டன.
- சூதாடிகள் நகரத்துக்கு வெளியே துரத்தப்பட்டனர்.
- மதுவிலக்கு பெருமளவில் மீறப்பட்டதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
- உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டன.
- அலாவுதீன் விதித்த வரிச்சுமை செல்வந்தர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
சந்தை சீர்திருத்தங்கள்
- படைவீரர்களுக்கு கொள்ளையில் பங்குதாராமல் பணமாக ஊதியம் வழங்கிய முதல் சுல்தான் அலாவுதீன். படைவீரர்களுக்கு குறைந்த ஊதியமே அளிக்கப்பட்டது.
- டெல்லியிலும் ஏனைய இடங்களிலும் இருந்த தனது படைப்பிரிவுகளுக்கு கட்டாய உணவுதானிய கொள்முதல் முறையை அறிமுகம் செய்தார். கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயிக்கப்பட்டது.
- வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்க பண்டக சாலையில் சேர்த்து வைக்கப்பட்டது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்க ஒற்றர்கள் நியமிக்கப்பட்டனர்.
- எடை குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் விற்பவரின் உடலிலிருந்து அதற்கு சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண் முன்னே வீசப்பட்டது.
- சித்தூர் சூரையாடல் 1303 : சித்தூரில் ராஜபுத்திர படைகளை அலாவுதீன் படைகள் திணறடித்தன. இச்சூழலில் கோட்டைக்குள் இருந்த ஆடவரும், பெண்களும் தங்களது மரபின்படி 'ஜவ்ஹர்' எனப்படும் சடங்கை நடத்தினர்.
- ஜவ்ஹர் : ஆடவர்கள் கோட்டையை விட்டு வெளியேறிய போர்க்களத்தில் மாள்வர். பெண்கள் தீக்குளிப்பர்
- அலாவுதீன் வாரிசுகள்: அலாவுதீன் தனது மூத்த மகன் கிசிர்கானை வாரிசாக நியமித்தார். அலாவுதீன் 1316 இல் இறந்தார். இருப்பினும் அலாவுதீன் நம்பிக்கைக்குரியவராக மாலிக்காஃபூர் இருந்தார். எனவே மாலிக்காஃபூர் தாமே ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்டார். ஆட்சிக்கு வந்த முப்பது நாட்களில் பிரபுகளால் கொல்லப்பட்டார்.
- காஸி மாலிக் 1320 ல் கியாசுதீன் துக்ளக்காக ஆட்சியில் அமர்ந்தார்.
Resource :
- Tamil Nadu State Government Samacheer School Books from 6th Strandard to 12th Standard.
Image Attribution:
- Map of Mamluk Dynasty By Maps created from DEMIS Mapserver, which are public domain. Koba-chanTerritorial area: पाटलिपुत्र (talk), per Schwartberg Atlas p.147 - This file has been extracted from another file, CC BY-SA 3.0
- Iltumish tomb By Bikashrd - Own work, CC BY-SA 4.0
- Map of Khalji Sultanate By Maps created from DEMIS Mapserver, which are public domain. Koba-chanTerritorial area: पाटलिपुत्र (talk), per Schwartberg Atlas p.38 map C and Schwartberg Atlas p.147 map i - This file has been extracted from another file, CC BY-SA 3.0
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment