டெல்லி சுல்தான்கள்
கி.பி 13 முதல் 16ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரையிலான காலத்தில் 1200 - 1550 இஸ்லாமிய அரசு( டெல்லி சுல்தானியம் ) நிறுவப்பட்டது. இதன் விளைவாக இஸ்லாமிய நிறுவனங்களும் , இஸ்லாமிய பண்பாடும் இந்தியாவில் காலூன்றின. அரேபியரான கோரி முகமது படையெடுத்து அப்பகுதியில் உள்ள செல்வங்களை கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்.
முதல் தரையின் போர் கி.பி 1191:
- கோரி முகமதுவிற்கும் பிருத்திவிராஜ் சௌகானிற்கும்( அஜ்மீர் பகுதி )
- இடையே முதல் தரையின் போர் நடைபெற்றது.
- கோரி முகமது பிருத்திவிராஜ் சௌகானின் தபர்ஹிந்தா ( பட்டிண்டா ) கோட்டையை தாக்கினார்.
- பிருத்திவிராஜ் சௌகான் தபர்ஹிந்தாவுக்கு சென்று 1191ல் முதலாவது தரையின் போரை நிகழ்த்தினார்.
- பிருத்திவிராஜ் சௌகான் வெற்றி பெற்றார்.முகமது கோரி காயமடைந்தார். ஒரு குதிரை வீரன் அவரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றான்.
இரண்டாவது தரையின் போர் கி.பி 1192 :
- பிருத்திவிராஜ் சௌகான் நினைத்ததற்கு மாறாக அடுத்த ஆண்டில் 1192ல் முகமது கோரி அஜ்மீர் மீது மீண்டும் படையெடுத்தார்.
- போரில் பிருத்திவிராஜ் சௌகான் தோல்வியுற்றார். ஆனால் மீண்டும் அஜ்மீரின் ஆட்சி பொறுப்பை பிருத்திவிராஜிடமே ஒப்படைத்தார். முகமது கோரி பின்னர் பிருத்திவிராஜ் சௌகான் மீது இராஜ துரோக குற்றம்சாட்டி அவரை கொன்றார். பிறகு தனது நம்பிக்கைக்குரிய தளபதியான குத்புதீன் ஐபக்கை இந்திய பகுதிக்கான தனது துணை ஆட்சியாளராக நியமித்தார்.
சந்த்வார் போர் கி.பி 1194:
- கோரிக்கும், ஜெயச்சந்திரனுக்கும் ( பிருத்திவிராஜ் சௌகானின் மாமனார் ) இடையே நடைபெற்றது.
- கன்னோசி அரசர் ஜெயச்சந்திரரை எதிர்த்து போரிடுவதற்காக மீண்டும் முகமது கோரி இந்தியா வந்தார்.
- ஜெயச்சந்திரன் மகள் சம்யுக்தாவை பிருத்திவிராஜ் கடத்திச் சென்றதை ஒட்டி இருவருக்கும் இடையே பகை இருந்தது.
- இதனால் தனிமைப்பட்டு நின்ற ஜெயச்சந்திராவை எளிதாக கோரி வென்றார்.
- திரும்பும் வழியில் சிந்து நதிக்கரையில் தங்கியிருந்த போது அடையாளம் தெரியாதவர்களால் கோரிக் கொல்லப்பட்டார்.
டெல்லி சுல்தானியம்
- முகமது கோரி விட்டுச் சென்ற அடிமைகள் மூலம் உருவானதே டெல்லி சுல்தானியம்.
- இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி 1200-ல் நிறுவப்பட்டது.
- அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் பண்டகன்(இராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் பாரசீக சொல்) எனும் அடிமைகளைப் பேணினார்.
- அவர்கள் மாகாண அளவில் ஆளுநர்களாக பணியாமர்த்தப்பட்டு பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
- கி.பி 1206 இல் கோரியின் இறப்புக்குப் பின்னர் அவரின் அடிமையாளரான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கிய பகுதிகளுக்கு தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டார்.
- இவ்வரச மரபு “மம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது.
- மம்லுக் - அடிமை ( அரேபிய மொழியில்)
- மம்லுக் - உடமை என்றும் பொருள்
டெல்லி சுல்தானியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள்
- அல்-பெருனி : தாரிக்- அல்-ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவமும் ஞானமும் மதமும்)
- மின்ஹஜ் உஸ் சிராஜ் : தபகத்-இ- நசிரி (1260) அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு
- ஜியாவுத்தின் பாரனி : தாரிக்- இ- பெரோஸ்ஷாகி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு
- அமிர் குஸ்ரு : மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன் உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் பாரசீக மொழியில்)
- துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
- சமஸ்- இ- சிராஜ் அஃபிஃப் : தாரிக்-இ- பெரோஜ்ஷாஹி (டில்லி சுல்தானியம் பற்றி பாரசீக மொழியில் உள்ள பாரனியின் குறிப்புகளை ஒட்டியது.
- குலாம் யாஹ்யா பின் அஹ்மத் : தாரிக்-இ- முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
- ஃபெரிஷ்டா : இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு(பாரசீக மொழி)
“பாரசீக வரலாற்று ஆவணங்கள், தில்லி சுல்தானியம் குறித்து மிகைப்படுத்திக் கூறுகின்றன. குறிப்பிட்ட சுல்தானின் ஆட்சியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த அவற்றின் கருத்துக்கள் எந்த விமர்சனமும் இன்றி நவீன கல்விப்புலத்தினுள் சேர்க்கப்பட்டுள்ளன”.
- சுனில் குமார், Emergence of Delhi Sultanate
டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த வம்சங்கள்
- அடிமை வம்சம்: கிபி 1206 - 1290
- கில்ஜி வம்சம்: கிபி 1290 - 1320
- துக்ளக் வம்சம்: கிபி 1320 - 1413
- சையது வம்சம்: கிபி 1414 - 1451
- லோடி வம்சம்: கிபி 1451 - 1526
அடிமை வம்சம் (கிபி 1206 - 1290)
- அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர் குத்புதீன் ஐபக். பண்டகன் என்பது பண்ட என்பதன் பன்மையாகும். இச்சொல்லுக்கு படை அடிமை என்று பொருள். இராணுவப்பணி அனுபவம், பேரரசருடனான நெருக்கம் , நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தரம் பிரிக்கப்பட்டார்கள். இந்த நம்பிக்கை அவர்கள் ஆளுநர்களாகவும், தளபதிகளாகவும் நியமிக்கப்படுவதற்கு வழிகோலியது.
- வட இந்தியாவில் குரித் பண்டகன், மொய்சுதீன் கோரியின் அடிமைகள் ஆவர். இந்த அடிமைகளுக்கு சொந்த சமூக அடையாளம் இல்லை. இதனால் அவர்களது எஜமானர்கள் அவர்களுக்கு புதிய பெயர்கள் சூட்டினர்.
- நிஸ்பா என்பதையும் உள்ளடக்கிய அப்பெயர்கள் அவர்களது சமூக அல்லது பிரதேச அடையாளத்தைக் குறித்தன.
- அடிமைகள் தங்களது எஜமானர்களின் நிஸ்பாவைக் கொண்டிருந்தனர்.
- மொயசுதீனின் அடிமை, மொய்சு என்னும் நிஸ்பாவை கொண்டிருப்பார்.
- சுல்தான் சும்சுதீன் இல்துமிஷின் அடிமையை ஷம்ஸி பண்டகன் என்று குறிப்பிடுவார்.
குத்புதீன் ஐபக் (1206 - 1210)
- குத்புதீன் ஐபக் , சிறுவனாக இருந்த போதே கஜினியின் ஓர் அடிமையாக சுல்தான் முகமது கோரிக்கு விற்கப்பட்டார்.
- அவரது திறமையையும் , விசுவாசத்தையும் கண்ட முகமது கோரி இந்தியாவில் தான் வெற்றி பெற்ற ஒரு மாகாணத்திற்கு பொறுப்பு ஆளுநராக அவரை நியமித்தார்.
- பீகாரையும், வங்கத்தையும் (கீழை கங்கை சமவெளி பகுதி) கைப்பற்றுவதற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முகமது பின் பக்தியார் கில்ஜி துருக்கிய தளபதி குத்புதீன் ஐபக்கிற்கு உதவினார்.
- கி.பி 1206ல் முகமது கோரி இறப்பிற்கு பின் குத்புதீன் தன்னை அரசராக பிரகடனப்படுத்தி கொண்டார்.
- குத்புதீன் லாகூரை தலைநகராகக் கொண்டு ஆட்சியை தொடங்கினார். பின்னர் தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
- மத்திய மற்றும் மேற்கு சிந்து கங்கை சமவெளி பகுதிகளுக்கு தானே தலைமையேற்று போரிட்டு பல பகுதிகளை கைப்பற்றினார்.
- டெல்லியில் குவ்வத்- உல்- இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியை கட்டினார். இதுவே இந்தியாவில் உள்ள மிகப் பழமையான மசூதி ஆகும்.
- இவர் சூஃபித்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் நினைவாக குதும்பினாரை கட்ட ஆரம்பித்தார்.
- டெல்லிக்கு அருகில் உள்ள இந்திரபிரஸ்தத்தில் இராணுவ நிலையத்தை நிறுவினார்.
- ஜிஸியா வரியை விதித்தார். ஜிஸியா வரி என்பது முதன்முதலாக இஸ்லாம் அல்லாத மக்கள் மீது விதிக்கப்பட்ட வரி ஆகும்.
- கி.பி 1210-ல் லாகூரில் சௌகான் (குதிரை போலோ) எனும் விளையாட்டின் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்து இறந்தார்.
- இவரது சிறப்பு பெயர்: லால் பக்ஷ்
- இவர் ஹசன் நிசாமி , பக்ரே முதிர் ஆகியோரை ஆதரித்தார்.
Resource:
- Tamil Nadu Government Samacheer Books from 6th Standard to 12th Standard.
- Delhi Sultanate by Maps created from DEMIS Mapserver, which are public domain. Koba-chanTerritorial area: पाटलिपुत्र (talk), per Schwartberg Atlas p.148 - This file has been extracted from another file, CC BY-SA 3.0,
- Second battle of Tarain image By Allan Stewart - Hutchinson's story of the nations
- Qutab Minar CC-by-sa PlaneMad/Wikimedia work under a creative commons license - Own work, CC BY-SA 2.5
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment