குப்தர்கள் காலம்
வணிகமும் வர்த்தகமும்
குப்தர்களின் பொருளாதார வலிமைக்கு வணிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். சிரேஷ்டி, சார்த்தவஹா என்ற இரு வேறுபட்ட வகைகளை சேர்ந்த வணிகர்கள் இருந்தனர்.
சிரேஷ்டி
- ஒரே இடத்தில் தங்கி இருப்பவர்.
- தனது செல்வம் மற்றும் வணிகத்திலும் , வணிக மையத்தை நிர்வகிப்பதன் மூலமும் பெற்ற வளத்தால் மரியாதைக்குரிய நிலையில் இருந்தவர்கள்.
சார்த்தவஹா
- இலாபத்திற்காக ஊர் ஊராக சென்று வணிகம் செய்தனர்.
- எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி சென்றனர்.
- மிளகு , சந்தனக்கட்டை, தந்தம் , யானைகள் , குதிரைகள் , தங்கம் , செம்பு , இரும்பு மற்றும் மைக்கா ஆகியவை விற்கப்பட்டன.
- வணிகக் குழுக்களில் கைவினை கலைஞர்கள் , வணிகர்கள் இருந்தது பற்றிய குறிப்புகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
- நாரத ஸ்மிருதி , பிருகஸ்பதி ஸ்மிருதி ஆகியவை வணிக குழுக்களின் அமைப்பு செயல்பாடு குறித்து விவரிக்கின்றன. ஒரு குழுவில், குழு தலைவர் மற்றும் 2 , 3 , 4 அல்லது 5நிர்வாக அதிகாரிகள் இருந்ததாக இவை குறிப்பிடுகின்றன.
- தமது குழு உறுப்பினர்களின் தகராறுகளின் மீது தீர்ப்பு வழங்கியது குறித்து பிருகஸ்பதி ஸ்மிருதி கூறுகிறது .
- குழுவின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அரசு ஒப்புதல் அளித்த தீர வேண்டும்.
- வணிகக் குழுக்களில் கைவினைஞர்களுக்கான குழுக்கள் , வங்கியாளர்களுக்கான குழுக்கள் , வணிகர்களுக்கான குழுக்கள் என பலவித குழுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழும அமைப்புகள் இயங்கியதாக குறிப்புகள் உள்ளன.
- பயணிகளின் நலன்களுக்காக நிழல் குடை , விடுதிகள் , சத்திரங்கள் , கோவில்கள் , தோட்டங்கள் , மண்டபங்கள் ஏற்படுத்தி தரும் கொடை நடவடிக்கைகளிலும் வணிகக் குழுக்களும் , குழுமங்களும் ஈடுபட்டு வந்ததாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.
- மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்புகளில் வணிக குழுக்களின் தலைவர்கள் முக்கிய பங்காற்றி வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன .
- வணிக வங்கிகள் , கவிகை வண்டி வணிகக்குழுக்கள், கைவினைஞர்கள் குழுக்களின் குழுமங்கள் அமைப்புகள் இயங்கியதாகவும் குறிப்புகள் உள்ளன .
- கந்துவட்டி நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
- மேற்கு கரையில்,
- கல்யாண் , சால் போன்ற துறைமுகங்கள் இருந்தன.
- மலபார் , மங்களூர் , சலோபடானா, நயோபடானா , பந்தேபடானா போன்ற வணிகச் சந்தைகளும் இயங்கி உள்ளன .
- வங்கத்தின் தாமிரலிப்தி கிழக்கு கடற்கரையின் முக்கியமான வணிக மையம் என பாகியான் குறிப்பிடுகிறார் .
- சீனா இடையிலான கடல் பயணத்தில் எதிர்கொள்ள நேரிடும் இடர்கள் குறித்து பாகியான் குறிப்பிடுகிறார் .
- இத்துறை முகங்கள் ஒருபுறம் பாரசீகம் அரேபியா, பைசாந்தியம் போன்ற நாடு நகரங்களோடும் துறைமுகங்களோடும், மறுபுறம் இலங்கை சீனா தென்கிழக்கு ஆசிய நாடுகளோடும் இணைக்கப்பட்டிருந்தன .
- அபூர்வமான ரத்தின கற்கள், மெல்லிய துணி வகைகள், வாசனை திரவியங்கள் இந்தியாவிலிருந்து விற்கப்பட்டன.
- சீனாவில் இருந்து பட்டும், இதர பொருள்களும் இறக்குமதி செய்யப்பட்டன.
கலையும் கட்டிடக்கலையும்
நாகரா, திராவிடம் பாணியிலான கலைகள் வளர்ந்தன.
குடைவரைக் கோயில்கள்
- பாறைகளை குடைந்து கட்டப்படுபவை .
- முகப்பு பகுதியில் அலங்காரத்திலும் , உள்பக்க தூண்களின் வடிவமைப்பிலும் விரிவான மாற்றங்களை கொண்டு வந்தனர்.
- எடுத்துக்காட்டு
- அஜந்தா எல்லோரா - மகாராஷ்டிரம் ( UNESCO அங்கீகாரம் 1983)
- பாக் - மத்திய பிரதேசம்
- உதயகிரி குகைகள் - ஒடிசா
கட்டுமான கோவில்கள்
கட்டுமான கோவில்களை முதன்முதலாக கட்டியவர்கள் குப்தர்களே.
- தட்டையான கூரை கொண்ட சதுர கோவில்கள்
- விமானத்துடன் (இரண்டாவது மாடி) கூடிய தட்டையான கூரை கொண்ட சதுரக்கோயில்கள்
- வளைக்கோட்டு கோபுரம் (சிகரம்) கொண்ட கோவில்கள்
- செவ்வகக் கோவில்கள்
- வட்ட வடிவக் கோவில்கள்
இரண்டாவது குழுவை சேர்ந்த கோவில்கள் திராவிட முறையின் பல கூறுகளைக் கொண்டவையாக உள்ளன.கருவறைக்கு மேலே சிகரம் அமைக்கும் புதுமை மூன்றாவது பாணியில் சிறப்பு ஆகும். அது நாகரா பாணியில் முக்கிய அம்சமாகும்.
ஸ்தூபிகள்
ஏராளமான எண்ணிக்கையில் கட்டப்பட்டன
- சமத் - உத்திரபிரதேசம்
- ரத்தினகிரி - ஒடிசா
- மிர்பூர்கான் - சிந்து
கல் சிற்பங்கள்
- நிற்கும் நிலையில் உள்ள புத்தர் சிலை - சாரநாத்
- வராக அவதார சிலை - உதயகிரி குகை நுழைவு வாயில், ஒடிசா
உலோகச் சிற்பங்கள்
- புத்தரின் 18 அடி செம்பு சிலை - நாளந்தா , பீகார்
- ஏழரை அடி புத்தர் சிலை - சுல்தான்கஞ்ச்
ஓவியங்கள்
- குப்தர்களின் சுவரோவியம் அஜந்தா , பாக் மற்றும் பாதாமி ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
- அஜந்தாவின் சுவரோவியங்கள் பிரெஸ்கோ எனப்படும் சுவரோவிய வகையைச் சேர்ந்தவையல்ல.
- பிரஸ்கோ ஓவியங்கள் :
- சுவரின் பூச்சு ஈரமாக இருக்கும் போதே வரையப்படுபவை.
- ஆனால் அஜந்தாவின் சுவரோவியங்கள் பூச்சு காய்ந்த பின் வரையப்பட்டவை. அஜந்தா மற்றும் பாக்கில் காணப்படும் ஓவியங்கள் மத்திய பிரதேச ஓவியப்பள்ளி முறையின் தலைசிறந்த ஓவியங்கள் ஆகும்.
சுடுமண் சிற்பங்களும் , மட்பாண்டக்கலையும்
- களிமண்ணால் செய்த சிறு உருவங்கள் மதம் சார்ந்த , மதம் சாராத நோக்கங்களுக்காக பயன்பட்டன.
- விஷ்ணு , கார்த்திகேயன், துர்க்கை, நாகர் மற்றும் பல ஆண் , பெண் கடவுளர்களின் சிறு களிமண் உருவங்கள் கிடைத்துள்ளன .
- அச்சிசத்திரா , ராய்கார் , ஹஸ்தினாபூர் ,பஷார் ஆகிய இடங்களில் குப்தர் கால மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன.
- இக்காலகட்டத்து மட்பண்டங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம் "சிவப்பு மட்பாண்டங்கள்" ஆகும்.
சமூகம்
- நான்கு வர்ணங்களைக் கொண்ட வர்ணாசிரம முறை பின்பற்றப்பட்டது.
- அது தந்தை வழி சமூகமாக இருந்தது மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
- அவற்றின் படி பெண்கள் ஆண்களால் (தந்தை, கணவன், மூத்த மகன்) பாதுகாக்கப்பட வேண்டும்.
- பலதார மணம் நடைமுறையிலிருந்தது.
- குபேரநாகா ,துருபசுவாமினி இருவரும் இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியர்.
- உடன்கட்டை (சதி) ஏறும் முறை பின்பற்றப்பட்டது .
அடிமைகள்
குப்தர்கள் காலத்தில் பல்வகைப்பட்ட அடிமைகள் இருந்ததாக சான்றுகள் உள்ளன. அவை மேலை நாடுகளில் இருந்தது போல ஒரு நிறுவனமாக இல்லை.
மதம்
- வேதமும் , வேதச்சடங்குகளும் புத்துயிர் பெற்றன.
- சமுத்திரகுப்தரும் , முதலாம் குமாரகுப்தரும் அஸ்வமேத யாகம் நடத்தினர்.
- குப்தர்களின் காலத்தில் தான் உருவ வழிபாடு தோன்றியது.
- வைணவம் , சைவம் இரு பிரிவுகள் தோன்றியது .
- புத்த மதம் இரண்டாகப் பிரிந்தாலும் தொடர்ந்து வளர்ந்து வந்தது.
சமஸ்கிருத இலக்கியம்
- குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்கினர்.
- அனைத்து கல்வெட்டுகளும் , பட்டயங்களும் சமஸ்கிருதத்தில் தான் எழுதப்பட்டன.
- பண்டையக் காலத்தில் உருவான ஸ்மிருதிகள்: நல்லொழுக்கம் ,அரசியல் , கலை மற்றும் பண்பாடு குறித்து பேசிய சமய நூல்கள் ஆகும்.
- தர்மசாஸ்திரங்களும் , புராணங்களும் இந்த இலக்கிய கட்டமைப்பின் மையப் பொருளை வடிவமைத்தன.
சமஸ்கிருத இலக்கணம்
- பாணினி - அஷ்டத்தியாயி (சமஸ்கிருத இலக்கணம்)
- பதஞ்சலி - மஹாபாஷ்யா (சமஸ்கிருத இலக்கணம்)
- அமரக்கோசம் ( சமஸ்கிருத சொற்களஞ்சியம்) - அமரசிம்மர்
- சந்திரவியாகரணம்( இலக்கண நூல் ) - சந்திர கோமியர் (வங்காளத்தை சேர்ந்த பௌத்த அறிஞர்)
புராணங்களும் இதிகாசங்களும்
- இன்று நாம் அறிந்திருக்கும் வடிவில் புராணங்கள் இந்த காலத்தில் தான் இயற்றப்பட்டன.
- இவை பிராமணர்களால் பதிவு செய்யப்பட்ட தொன்மை கதைகளாக இருந்தன.
- உண்மையில் இவை தொடக்கத்தில் பாணவர்களால் பாடப்பட்டவை. பிராமணர்களின் கைக்கு வந்ததும் இவை செவ்வியல் சமஸ்கிருதத்தில் மீண்டும் இயற்றப்பட்டன.
- மகாபாரதம் ,இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் மெருகேரி செம்மை அடைந்து தமது இறுதி வடிவினை பெற்றன.
- 18 முக்கிய புராணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- அவைகளில் பிரம்மபுராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம் , கந்தபுராணம் சிவமகா புராணம் , மார்க்கண்டேய புராணம் , அக்னி புராணம் , பவிஷ்ய புராணம் , மத்ஸ்ய புராணம் , ஸ்ரீமத்பகவத் புராணம் ஆகியவை நன்கு அறியப்பட்டவை .
பௌத்த இலக்கியம்
- தொடக்க கால பௌத்த இலக்கியங்கள் மக்கள் மொழியான பாலி மொழியில் இருந்தன. பின்னர் சமஸ்கிருத கவிதையும் , வசனமுமாக மீண்டும் எழுதப்பட்டன.
- ஆர்யதேவர் , ஆர்யசங்கர் ஆகிய இருவரும் குப்தர் கால குறிப்பிட தகுந்த எழுத்தாளர்கள் ஆவார்கள்.
- தர்க்க அறிவியல் சார்ந்த முழுமையான பௌத்த நூல் வசுபந்துவால் எழுதப்பட்டது.
- வசுபந்தின் சீடரான திக்நாகரும் பல அரிய நூல்களை எழுதினார் .
சமண இலக்கியம்
- சமணர்களின் மத நூல்களும் தொடக்கத்தில் பிராகிருத மொழியிலேயே எழுதப்பட்டன. பின்னர் தான் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டன.
- இவர்களது முயற்சியால் சமண மத கோட்பாடுகளை பரப்ப பல இந்து புராணங்களும் , இதிகாசங்களும் , சமண மதக்கண்ணோட்டத்தில் மாற்றி எழுதப்பட்டன.
- விமலா சமண இராமாயணத்தை எழுதியவர்.
- சித்தசேன திவாகரா சமணர்களிடையே தர்க்க சாஸ்திரத்திற்கு அடித்தளமிட்டவர்.
சமயம் சாரா இலக்கியம்
காளிதாசர் இயற்கையை, அழகை எழுதிய கவிஞர்.
- காளிதாசனின் புகழ் பெற்ற நாடகங்கள் :
- சாகுந்தலம்
- மாளவிகாக்னி மித்ரம்
- விக்ரம ஊர்வசியம்
- காளிதாசனின் காப்பியங்கள்
- ரகுவம்சம்
- குமார சம்பவம்
- காளிதாசனின் கவிதை நூல் மேகதூதம்
- சூத்ரகர் மிருச்சகடிகம்
- விசாகதத்தர் : முத்ராராட்சசம் , தேவி சந்திரகுப்தம்
- இக்கால நாடகத்தில் மேட்டுக்குடி கதாபாத்திரங்கள் சமஸ்கிருதத்தில் பேச , எளிய கதாபாத்திரங்கள் பிராகிருதத்தில் பேசுகின்றன.
மொழியும் இலக்கியமும்
- பிராக்கிருதத்திற்கு அரசவைக்கு வெளியே ஆதரவு இருந்தது .
- குப்தர் காலத்தில் பிராக்கிருத மொழியின் பல்வேறு வடிவங்கள் உருவாகின
- சூரசேனி வடிவம் - மதுரா
- அர்த்மகதி வடிவம் - ஆவுத் ,பண்டேல்கண்ட்
- மகதி வடிவம் - நவீன பீகார்
கணிதமும் வானவியலும்
- சுழியம் என்ற கருத்தாக்கத்தை கண்டுபிடித்து அதன் விளைவாக பதின்ம இலக்க முறை கண்டுபிடித்தது ஆகிய பெருமை குப்தர்களையே சாரும்.
- கிபி ஐந்தின் இறுதி முதல் கிபி 6 இன் துவக்கம் வரையிலான காலகட்டத்தில் ஆர்யபட்டர் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார். சூரிய சித்தாந்தா (நூல்)
- பூமியின் சுற்றளவு குறித்த கணக்கீட்டில் ஆர்யபட்டரின் கணிப்பு நவீன மதிப்பீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது.
- பூமி ஒரு அச்சில் தன்னை தானே சுற்றுகிறது என்பதை கண்டுபிடித்த முதல் வானவியலாளர் அவர்தான்.
- கணிதம் , கோணவியல் , இயற்கணிதம் ஆகியவற்றைப் பற்றி பேசும் ஆர்யபட்டீயம் என்ற நூலை அவர் எழுதினார்.
- வராகமிகிரர் (கி.பி 6 ) : பிருஹத்சம்ஹிதா , பஞ்சசித்தாந்திகா, பிருஹத் ஜாதகா
- பிருஹத்சம்ஹிதா - வானவியல், புவியியல் , தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவற்றிற்கான கலைக்களஞ்சியமாகும்.
- பிரம்மகுப்தர் (கிபி 6ன் கடைசி -கிபி 7 இன் துவக்கம் ): கணிதம் மற்றும் வானவியலுக்கான முக்கிய நூல்களான பிரும்மஸ்புத - சித்தாந்தம் , கண்டகாத்யகா ஆகிய நூல்களை எழுதி உள்ளார்.
மருத்துவ அறிவியல்
- மருந்துகள் தயாரிக்க உலோகம் , பாதரசம் மற்றும் இரும்பு ஆகியவற்றை பயன்படுத்தி இருப்பது குறித்து வராகமிஹிரரும் , பிறரும் எழுதியுள்ளனர்.
- நவனிதகம் என்ற மருத்துவ நூல் நோய்களுக்கான மருந்துகள் , மருந்துகள் தயாரிக்கும் முறை ஆகியவற்றை கூறுகின்றது.
- பாலகாப்யா எழுதிய ஹஸ்த்யாயுர்வேதா என்ற நூல் விலங்குகளுக்கான மருத்துவ நூலாகும்
- தன்வந்திரி - ஆயுர்வேத மருத்துவம்
- சரகர் -ஒரு மருத்துவ அறிவியல் அறிஞர்
- சுஸ்ருதர் - அறுவை சிகிச்சை செயல்முறையை பற்றி விளக்கிய முதல் இந்தியர் ஆவார்.
- வாக்பட்டர் - அஷ்டாங்க சங்கிரக , அஷ்டாங்க கிருதய சம்ஹிதை (மருத்துவம் )
- சரகர் - சரகசம்ஹிதா (மருத்துவ நூல் )
- மருத்துவ மும்மணிகள் : வாக்பட்டர் , சரகர் , சுஸ்ருதர்
நாளந்தா
- மகா விஹாரா என்று அழைக்கப்படுகிறது.
- பண்டைய மகதப்பேரரசில்( இன்றைய பீகார்) இருந்த மிகப்பெரிய பௌத்த மடாலயம் ஆகும்.
- பாட்னாவிற்கு தென்மேற்கே 95 கி.மீ தூரத்தில் பீகாரின் ஷெரீப் நகர் அருகே உள்ளது. கி.பி 500 - 1200 வரை புகழ்பெற்ற கல்விசாலையாக இருந்தது.
- 2016ல் யுனெஸ்கோவின் உலகின் தொன்மை சின்னமாக அறிவித்து பாதுகாக்கின்றது.
- இந்தியாவின் தொடக்கக்கால பல்கலைக்கழகங்கள் தட்சசீலம் , நாளந்தா, விக்ரமசீலா.
- கிபி 5 மற்றும் 6ம் நூற்றாண்டுகளின் புத்த பேரரசின் ஆதரவில் தழைத்தோங்கியது.
- பின்னர் கன்னோசியைசேர்ந்த பேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
- நாளந்தாவில் பௌத்த தத்துவமே முக்கிய பாடமாக இருந்தது.யோகா , வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன.
- யுவான் சுவாங் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
- எட்டு பாடசாலைகளும் , மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
- திபெத், சீனா , கொரியா , மத்திய ஆசியா போன்ற இடங்களில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்தனர்.
- இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் இப்பல்கலைக்கழகத்திற்கும் இந்தோனேசியாவின் சைலேந்திர வம்சத்தோடும் தொடர்பு இருந்தது தெரிய வருகிறது. இவ்வம்சத்தின் அரசர் ஒருவர் இவ்வளாகத்தில் ஒரு மடாலயத்தையும் கட்டியுள்ளார்.
- முறையான அகழாய்வு 1915-ல் ஆரம்பித்தது. அப்போது 12 ஹெக்டேர் பரப்பில் ( 30 ஏக்கர் ) அமைந்துள்ள 11 மடாலயங்களும் , ஆறு செங்கல் கோவில்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
- அண்மையில் இந்தியா மற்ற தெற்கு , தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உதவியோடு இப்பல்கலைக்கழகத்தை புதுப்பித்துள்ளது .
- புகழ்பெற்ற நாளந்தா பௌத்த பல்கலைக்கழகத்தை அழித்தவர் பக்தியார் கில்ஜி.
- யுவன் சுவாங் (சீனப்பயணி ) தனது பயண குறிப்புகளின் நாளந்தா குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளார் .
- நாளந்தா நூலகத்தில் இருந்த இலக்கணம், இலக்கியம் , தர்க்கம், வானியல் மருத்துவம் குறித்த நூறாயிரக்கணக்கான கையெழுத்து பிரதிகளும் , நூல்களும் துருக்கிய சுரையாடலில் அழிந்தன.
குப்தர்களின் வீழ்ச்சி
- குப்த அரசின் கடைசி அரசர் விஷ்ணு குப்தர் கி.பி 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார்.
- உள்நாட்டு பூசல்களும் , அரசக் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின.
- ஹீணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது.பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது ஆகிய குப்த பேரரசு வீச்சுக்கு காரணங்களாயின.
Resource:
- Tamil Nadu State Government Samacheer School Books from 6th standard to 12th standard.
- https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
No comments:
Post a Comment