குப்தர்களின் நிர்வாக முறை
குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர்.
தெய்வீக உரிமைக் கோட்பாடு: அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவராவர். மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.
அரசர்
- அதிகார படிநிலைகள் குப்தர் ஆட்சியில் காணப்பட்டன. அரசர்கள் மகாராஜாதிராஜா, பரம-பட்டாரக, சாம்ராட், பரமேஸ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள்.
- பரம-தைவத = கடவுளின் பரம பக்தன்
- பரம-பாகவத = வாசுதேவ கிருஷ்ணனின் பரம பக்தன் போன்ற அடையாள மொழிகளால் தம்மை கடவுளோடும் இணைத்து கொண்டனர்.
- தம்மை தெய்வாம்சம் பொருந்தியவர்கள் என்ற பிம்பத்தை முன்னிறுத்தியதாக வரலாற்றாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
- உதாரணமாக அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்
- குமாரமாத்யா என்ற சொல் ஆறு வைசாலி முத்திரைகளில் இடம்பெற்றுள்ளது. இந்த பதவி தனக்கெனத் தனியாக அலுவலகம் (அதிகரணர்) உள்ள ஒரு உயர் அதிகாரியை குறிப்பிடுவது போல் உள்ளது.
- அமாத்தியா என்ற சொல் பல முத்திரைகளில் காணப்படுகிறது. குமாரமாத்தியா என்பது அமத்தியாக்களில் மிக முக்கியமான பதவியாக , அரசகுல இளவரசர்களின் தகுதிக்குச் சமமானதாக இருக்கும் போல் தெரிகின்றது.
- குமாரமாத்யாக்கள், அரசர், பட்டத்து இளவரசர், வருவாய்த்துறை அல்லது ஒரு மாகாணம் என்று பலவற்றோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
- ஒரு லிச்சாவி முத்திரை, லிச்சாவியர்களின் பட்டமேற்பு விழாவிற்கான புனித குளத்திற்கு பொறுப்பான ஒரு குமாரமாத்யா பற்றி குறிப்பிடுகிறது.
- குமாரமாத்யா பொறுப்பில் உள்ளவர்கள் சில சமயங்களில் கூடுதல் பொறுப்புகளையும், பதவிப் பெயர்களையும் கொண்டிருந்தனர்.இந்த பொறுப்புகள் வாரிசு அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கலாம்.
- எடுத்துக்காட்டு அலகாபாத் பிரசஸ்தியை எழுதிய ஹரிசேனர் ஒரு குமாரமாத்யா, சந்திவிக்ரகஹிகா, மகாதண்டநாயகா ஆகிய பட்டங்களைக் கொண்டவராக இருந்து உள்ளார். அவர் மகாதண்டநாயகா துருவப்பூதியின் புதல்வர் ஆவார்.
அமைச்சர்குழு
- குப்த அரசர்களுக்கு ஒரு அமைச்சர் குழு உதவி புரிந்தது. அலகாபாத் கல்வெட்டு சபா என்ற குழு குறித்து கூறுகின்றது. இது அமைச்சர் குழுவாக இருக்கலாம்.
- மகாசந்திவிக்ரஹா என்பவர் அமைச்சர்களில் உயர் நிலையில் இருந்துள்ளார். இவர் அமைதி மற்றும் போருக்கான அமைச்சர்.
- நீதித்துறை, இராணுவம் ஆகியவற்றில் பொறுப்பு வகித்தவர் தண்டநாயகா அல்லது மகாதண்டநாயகா என்று அழைக்கப்பட்டுள்ளார்.
- ஒரு முத்திரை அக்கினி குப்தர் என்ற மகாதண்டநாயகா குறித்துப் பேசுகிறது. அலகாபாத் கல்வெட்டு மூன்று மகாதண்டநாயக்கர்களை பற்றிக் கூறுகிறது.
- இவை அனைத்தும் இந்த பதவிகள் எல்லாம் வாரிசு உரிமையாக வருபவை என்பதை காட்டுகின்றன.
- மற்றொருவருக்கு மகா அஸ்வபதி (குதிரை படை தலைவர்) என்ற பதவி இருந்துள்ளது.
குப்தப்பேரரசின் பிரிவுகள்
- குப்தர்களின் பேரரசு தேசம் அல்லது புக்தி எனப்படும் மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. உபாரிக்கா எனப்படும் ஆளுநர்களால் இவை நிர்வகிக்கப்பட்டன.
- உபாரிக்காக்கள் அரசர்களால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். உபாரிக்காக்கள் மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரிகளையும், வாரிய அதிகாரிகளையும் நியமித்தனர். உபாரிக்காக்கள் நிர்வாக அதிகாரத்தோடு யானைகள், குதிரைகள் வீரர்கள் என்று இராணுவ நிர்வாகத்தையும் கையில் வைத்திருந்தனர்.
- தாமோத்பூர் செப்பேடு 3 உபாரிகாக்களுக்கு மகாராஜா என்ற பட்டம் இருந்ததாக குறிப்பிடுகின்றது.
- குப்த ஆண்டு 165 என்று தேதியிடப்பட்டுள்ள புத்தக் குப்தரின் ஏரான் தூண் கல்வெட்டு காளிந்தி மற்றும் நர்மதை நதிகளுக்கு இடையேயான நிலங்களை ஆட்சி செய்த லோகாபாலா என்று மகாராஜா சுரேஷ்மிசந்திரா என்பவரை குறிப்பிடுகிறது. இங்கு லோகாபாலா என்பது மாநில ஆளுநரை குறிக்கலாம்.
- மாநிலங்கள் விஷ்யபதி என்ற அதிகாரியின் கீழ் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை விஷ்யா என அழைக்கப்பட்டன.
- விஷ்யபதிகள் பொதுவாக மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டனர். சில சமயங்களில் அரசரே நேரடியாகவும் விஷ்யபதிகளை நியமித்தார்.
- விஷ்யபதியின் நிர்வாக கடமைகளுக்கு நகரத்தின் சில முக்கியமான மனிதர்கள் உதவி புரிந்தனர்.
நிர்வாக அலகுகள் (மாவட்ட மட்டத்திற்கு கீழே )
- மாவட்ட மட்டத்திற்கு கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு நிர்வாக அலகுகள் இருந்தன.
- ஆயுக்தகா விதி - மகாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்தும் குறிப்புகள் காணப்படுகின்றன.
- கிராம மட்டத்தில் கிராமிகா, கிராம் அத்யக்ஷா போன்ற அதிகாரிகள் இருந்துள்ளனர்.
- இவர்களை கிராம மக்களே தேர்ந்தெடுத்துள்ளனர்.
- புத்த குப்தர் காலத்து தாமோத்பூர் செப்பேடு மகாதாரா என்பவர் தலைமையிலான அஷ்டகுல - அதிகாரனா( 8 உறுப்பினர்கள் கொண்ட குழு) குறித்து குறிப்பிடுகிறது.
- மகாதாரா கிராமப்பெரியவர், கிராமத்தலைவர் குடும்பத்தலைவர்.
- இரண்டாம் சந்திரகுபர் குப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்ச மண்டலி என்பதைக் குறிப்பிடுகின்றது. பஞ்ச மண்டலி - குழு நிறுவனம்
இராணுவம்
- முத்திரைகள், கல்வெட்டுகள் பாலாகிருத்யா, மகாபாலாதிருத்யா போன்ற இராணுவப் பதவிகளை குறிப்பிடுகின்றது.
- பாலாகிருத்யா மற்றும் மகாபாலாகிருபத்யா - காலாட்படை மற்றும் குதிரைப்படை தளபதி
- சேனாபதி என்ற சொல் குப்தர் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. ஆனால் சில வாகடக கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
- ஒரு வைசாலி முத்திரை இராணுவ கிடங்கின் அலுவலகமான ரணபந்தகர் அதிகாரனாவைக் குறிப்பிடுகின்றது. மற்றொரு வைசாலி முத்திரை தண்டபாஷிகா என்ற அதிகாரியின் அலுவலகத்தை குறிப்பிடுகிறது. இது மாவட்ட அளவிலான காவல்துறை அலுவலகமாக இருக்கலாம்.
- மஹாபிரதிஹரா - அரண்மனைக் காவலர்களின் தலைவன்
- கத்ய தபகிதா - அரச சமையலறை கண்காணிப்பாளர்
- ஒரு வைசாலி முத்திரை மஹாபிரதிகராகவும் , தாராவராகவும் இருந்த ஒருவரைக் குறிப்பிடுகிறது .
- நிர்வாக மேல்மட்டத்தில் அமாத்தியா, சச்சிவா ஆகியோர் இருந்தார்கள்.(பல்வேறு துறைகளுக்கு பொறுப்பானவர்கள்)
- துடகா - ஒற்றர்கள் கொண்ட உளவு அமைப்பு .
- ஆயுக்தகா - மற்றொரு உயர்மட்ட அதிகாரப் பதவி.
- அக்ஷபதலதிக்கிருதா - அரசு ஆவணங்களை பாதுகாப்பவர்.
பொருளாதார நிலைகள்
குப்தர் காலத்தில் காமாந்தகர் எழுதியது நீதி சாரம் அல்லது நிதிசாரம் என்ற நூலாகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றி குறிப்பிடுகின்றது .சமுத்திரகுப்தர் மேற்கொண்ட படையெடுப்புகளுக்கான நிதி இது போன்ற வருவாய்களின் உபரியில் இருந்து தான் கிடைத்திருக்க வேண்டும். குப்தர் கல்வெட்டுகளில் கிலிப்தா, பலி, உத்ரங்கா, உபரிகரா மற்றும் இரணியவெஷ்தி போன்ற சொற்களை குறிப்பிடுகின்றன. இரணியவெஷ்தி - கட்டாய உழைப்பு . நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது.
வேளாண்மையும் வேளாண் அமைப்பு:
- குப்தர் காலத்தில் அரசு சார்பில் ஏராளமான பாசனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக வேளாண்மை மேம்பாடு அடைந்தது . பிராமணர்கள், புத்த , சமண சங்கங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட தரிசு நிலங்களிலும் கூட வேளாண்மை செய்யப்பட்டது.
- பயிர்களை நாசம் செய்வதற்கு தண்டனை வழங்கப்பட்டது
- வேளாண் நிலங்களைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டது .
- நெல், கோதுமை, பார்லி , கடலை, தானியம் , பயறு , கரும்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்டன.
- "தென் பகுதியானது மிளகு, ஏலம் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றிருந்தது." -காளிதாசர்
- "பழ மரங்கள் வளர்ப்பது குறித்த விரிவான அறிவுரைகள்" - வராகமிகிரர்
- "அரசர் தான் நிலத்தின் ஒரே உரிமையாளர்"- பஹார்பூர் செப்பேடு
- "உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் நிலப்பரிமாற்றம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்தார்" - பஹார்பூர் செப்பேடு .
- கிராமத்தில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை கிராம கணக்கர் பராமரித்தார் .
- விவசாயிகளின் நிலைமை பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் பல்வேறு வரிகளை செலுத்த வேண்டிய நிலையில் இருந்தனர் .
- சாதிப் பிரிவுகள் காரணமாகவும், நிலங்களும் உரிமைகளும் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டதாலும், மானியங்கள் வழங்கப்பட்டதாலும் அவர்கள் கொத்தடிமை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
- குத்தகைதாரர்களும் நிலையான குத்தகைதாரர்களாக இல்லை.
- நாரதஸ்மிருதி என்ற நூலில் வயல்களை வெள்ளங்களில் இருந்து பாதுகாத்த பந்தியா , பாசனத்திற்கு உதவிய கரா என்ற இருவகை அணைக்கரைகள் பற்றி குறிப்பிடுகின்றன.
- "தண்ணீர் தேங்குவதை தடுக்க ஜலநிர்கமா என்ற வடிகால்கள் இருந்தன" - அமரசிம்மர்.
- ஆறுகள் , ஏரிகள் , குளங்களிலிருந்தும் கூட வாய்க்கால்கள் வெட்டப்பட்டன.
- குஜராத்தின் கிர்னார் மலையின் அடிவாரத்தில் இருந்த சுதர்சனா ஏரி மிகவும் புகழ்பெற்றதாகும்.
குப்தர் கால நில வகைப்படுத்துதல்
- சேத்ரா - பயிரிடக்கூடிய நிலம்
- கிலா - தரிசு நிலம்
- அப்ரஹதா - காடு அல்லது தரிசு நிலம்
- வாஸ்தி - குடியிருக்க கூடிய தகுந்த நலம் நிலம்
- கபட சஹாரா - மேச்சல் நிலம்
நில குத்தகை முறை
- நிவிதர்மா: அறக்கட்டளை போன்ற அமைப்பின் மூலம் நிலமானியம். இம்முறை வடக்கு , மத்திய இந்தியா மற்றும் வங்கத்தில் நிலவியது.
- நிவிதர்ம அக்சயனா: நிரந்தரமான அறக்கட்டளை உரிமை பெற்றவர். அதிலிருந்து வரும் வருவாயை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அப்ரதா தர்மா: வருவாயை பயன்படுத்தலாம் . ஆனால், அதை பிறருக்கு தானம் செய்ய முடியாது. நிர்வாக உரிமையும் இல்லை.
- பூமி சித்ராயனா: தரிசு நிலத்தை முதன்முதலாக சாகுபடி நிலமாக மாற்றுவதற்கு தரப்படும் உரிமை. இந்த நிலத்திற்கு குத்தகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது .
நிலக் கொடைகள்
- அக்ரஹார மானியம் - பிராமணர்களுக்கு தரப்படுவது. நிரந்தரமானது ,பரம்பரையாக வரக்கூடியது . இதற்கு வரி கிடையாது.
- தேவகிரஹார மானியம் - கோவில் மராமத்து, வழிபாடு பணிகளுக்காக பிராமணர்கள் , வணிகர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும் நில மானியம்.
- சமயச்சார்பற்ற மானியம் - குப்தர்களுக்கு கீழ் இருந்த நிலப்பரப்புகளுக்கு தரப்படும் மானியம்.
வரிகள்
- பகா : விளைச்சலில் அரசன் பெறும் வழக்கமான ஆறில் ஒரு பங்கு வரி
- போகா :அரசருக்கு கிராமங்கள் அவ்வவ்போது வழங்க வேண்டிய பழங்கள் விறகு பூக்கள் போன்றவை.
- கரா: கிராமத்தினர் மீது குறிப்பிட்ட கால இடைவெளியில் விதிக்கப்படும் ஒரு வரி. இது வருடாந்திர வரியின் ஒரு பகுதி அல்ல.
- பலி : விருப்ப வரியாக இருந்து பின்னர் கட்டாயமாக்கப்பட்டது. இது ஒரு ஒடுக்குமுறை வரி.
- உதியங்கா : காவல் நிலையங்களின் பராமரிப்பிற்காக வழங்கப்பட்ட காவல் வரியாகவோ அல்லது நீர் வரியாகவோ இருக்கலாம். எனினும் இது ஒரு கூடுதல் வரிதான்.
- உபரிகரா : கூடுதல் வரிதான். இது எதற்காக வசூலிக்கப்பட்டது என்பது குறித்து அறிஞர்கள் மாறுபட்ட விளக்கங்களை தருகின்றனர்.
- ஹிரண்யா : தங்க நாணயங்களின் மீது விதிக்கப்படும் வரி( நேரடி பொருள்) . குறிப்பிட்ட தானியங்களின் விளைச்சலில் ஒரு பங்கினை அரசின் பங்காக பொருளாகவே அளிப்பதாகும்
- வாத - பூதா: காற்றுகளுக்கும் , ஆவிகளுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளுக்காக விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள்.
- ஹலிவகரா: கலப்பை மீதான வரி. கலப்பை வைத்திருப்பவர்கள் இவ்வரியை கட்ட வேண்டும்.
- சுல்கா : வர்த்தகர்கள் நகரத்திற்கோ , துறைமுகத்திற்கோ கொண்டுவரும் வணிக சரக்குகளில் அரசருக்கான பங்கு. இதை சுங்கவரி நுழைவு வரிகளுக்கு இணையாக ஒப்பிடலாம் .
- கிளிப்தா , உபகிளிப்தா: நிலப்பதிவின்போது விதிக்கப்படும் விற்பனை வரி.
சுரங்கமும் உலோகவியலும்
- குப்தர் காலத்தில் மிகவும் செழித்த தொழில்கள் சுரங்க தொழில், உலோகவியல் ஆகியன ஆகும்.
- சுரங்கங்கள் குறித்து அமரசிம்மர், வராகமிகிரர், காளிதாசர் ஆகியோர் அடிக்கடி குறிப்பிடுகிறார்கள். இக்காலகட்டத்தில் பீகாரிலிருந்து இரும்புப் படிவுகள், இராஜஸ்தானில் இருந்து செம்பு படிவுகள் ஆகிய பெருமளவில் தோண்டி எடுக்கப்பட்டன .
- இரும்போடு, தங்கம் , செம்பு , தகரம் , ஈயம், பித்தளை, வெண்கலம் , மைக்கா , மாங்கனீஸ் , அஞ்சனக்கல், சுண்ணாம்புக்கல் மற்றும் சிவப்பு ஆர்சனிக் ஆகியவற்றையும் பயன்படுத்தினர் .
- விவசாயிகளுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் உலக வேலை செய்பவர்களுக்கு இருந்தது.
- இரும்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னர் கொழுமுனை மேம்படுத்தப்பட்டு, ஆழமான உழவிற்கு உதவியதால் இக்காலகட்டத்தில் வேளாண்மை அதிகரித்தது .
- நாணயங்கள் வடித்தல், உலோகச் செதுக்கு வேலைபாடு, பானை வனைதல் , சுடுமண் சிற்பங்கள் , மரசெதுக்கு வேலைப்பாடு ஆகியவை வேறு சில கைவினை தொழில்களாகும் .
- முத்திரைத் தயாரித்தல், புத்தர் மற்றும் பிற கடவுள் சிலை வடித்தல் ஆகியவை இக்காலகட்டத்தில் உலோகவியலில் ஏற்பட்ட ஒரு குறிப்பிட தகுந்த முன்னேற்றம் ஆகும் .
- இரும்பு , தங்கம் , வெள்ளி , செம்பு , தகரம்மற்றும் ஈயம் ஆகியவற்றை உருக்கி பிரித்தெடுப்பதில் ஏற்படும் இழப்பிற்கு (சேதாரம்) சேர்த்து மக்கள் பணம் தர வேண்டியிருந்தது .
- குப்தர்கள் அதிக எண்ணிக்கையில் தங்க நாணயங்களையும், ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் வெள்ளி , செம்பு நாணயங்களையும் வெளியிட்டனர்.
- குப்த காலத்திற்குப் பின்னர் தங்க நாணயங்களின் புழக்கம் குறைந்து போனது.
- குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார். குஷாணர்களின் நாணயம் சமுத்திரகுப்தருக்கு உந்துதலை வழங்கியது.
- குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்று அழைக்கப்பட்டன .
- உலோகத்தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு டெல்லியில் உள்ள துருப்பிடிக்காத மெக்ராலி இரும்புத்தூண் ஆகும்.
- Tamil Nadu State Board School Samacheer Books from 6th Standard to 12th Standard.
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
No comments:
Post a Comment