குப்தர்களின் தோற்றம் மற்றும் முக்கியமான குப்தப் பேரரசர்களும் அவர்களின் வெற்றிகளும் ( இந்திய வரலாறு : TNPSC, RRB & SSC Exams)

குப்தர்கள்

    ஏறத்தாழ கி.பி 300 முதல் கி.பி 700 வரையிலான காலகட்டம் அரசு அமைப்பில் ஒரு செவ்வியல் முறை தோன்றி பல பகுதிகளில் பேரரசர் ஆட்சி உருவாக வழி வகுத்த காலமாக இருந்தது. மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் பல சிறு அரசுகள் தோன்றியவாறு வீழ்ந்தவாரும் இருந்தன. கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கே சாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்த வலிமை வாய்ந்த பேரரசுகள் பெருமையையும் வலிமையையும் இழந்தனர். இச்சூழலில் குப்த அரசுதான் ஒரு பெரும் சக்தியாக உருவாகி துணை கண்டத்தின் பெரிய பகுதியை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்தது. கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் குப்த பேரரசு ஸ்ரீ குப்தர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

Gupta Empire - Indian History for TNPSC

வரலாற்றுச் சான்றுகள்

குப்தர்கள் காலத்து வரலாற்றை மீள் உருவாக்கம் செய்ய மூன்று வகையான சான்றுகள் உள்ளன

இலக்கியச் சான்றுகள்

  • விஷ்ணு மத்தியச வாயு பாகவத புராணங்கள்
  • நாரதரின் நீதி சாஸ்திரம்
  • நாரதர் விஷ்ணு பிரகஸ்பதி காத்தியாயனர் ஸ்மிருதிகள்
  • அரசருக்கு கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமாந்தகாரரின் நீதி சாரம் என்ற தரும சாத்திரம்(கிபி 400).
  • விசாகத்தரின் தேவி சந்திரகுப்தம், முத்ரா ராட்சசம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விபரங்களை அளிக்கின்றன.
  • பாணரின் ஹர்ஷ சரிதம் காளிதாசனின் படைப்புகள்
  • இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த சீன பயணி பாகியானின் குறிப்புகள் (போகோகி எனப்பட்ட பயண குறிப்புகள்).
  • ஹர்ஷரின் இரத்னா வழி,  நாகாநந்தா, பிரியதர்ஷிகா
  • யுவான்சுவாங்கின் சி யூ கி
  • புத்த மற்றும் சமண இலக்கியங்கள்

கல்வெட்டுச் சான்றுகள்

  • மெக்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் சாதனைகளை குறிக்கின்றது.
  • அலகாபாத் தூண் கல்வெட்டு சமுத்திரகுப்தரின் ஆட்சி அவரது ஆளுமை சாதனைகள் ஆகியவற்றை இது விளக்குகிறது. இதனை பொறித்தவர் ஹரிசேனர். இது 33 வரிகளில் நாகரீ வடிவத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது.
  • இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகை கல்வெட்டு,  மதுரா பாறை கல்வெட்டு, சாஞ்சி பாறை கல்வெட்டு
  • ஸ்கந்தகுப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு
  • கத்துவா பாறை கல்வெட்டு
  • மதுபான் செப்புப்பட்டயம், பஞ்சாப்
  • சோனாபட் செப்புப்பட்டயம்
  • நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு

நாணய ஆதாரங்கள்:

  • குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  • இந்த தங்க நாணயங்கள் குப்த அரசர்களின் பட்டங்கள் குறித்தும், அவர்கள் நடத்திய சடங்குகள் குறித்தும் தெரிவிக்கின்றன.

குப்த வம்சத்தின் தோற்றம்

    குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் என கருதப்படுகிறார். கி.பி 240 முதல் 280 வரை அவர் தற்போதைய வங்காளம் பீகார் பகுதிகளை ஆண்டதாக கருதப்படுகிறது. நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் இவருடையது. இவருக்கு பின்னர் இவரது மகன் கடோத் கஜர் (கி.பி 280 - 319) அரச பதவி ஏற்றார். இவர்கள் இருவருமே கல்வெட்டுகளில் மகாராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 முதலாம் சந்திரகுப்தர் (கி.பி 319 - 335):

  • கடோத் கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் கி.பி 319 முதல் 335 வரை ஆட்சி புரிந்தார். இவர் குப்த பேரரசின் முதல் பேரரசராக கருதப்படுகிறார்.
  • இவர் மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார்.
  • இவரது ஆட்சி காலத்திய கல்வெட்டோ, நாணயமோ நமக்கு கிடைக்கவில்லை.
  • முதலாம் சந்திரகுப்தர் புகழ் பெற்ற வலிமை மிகுந்த லிச்சாவி அரசு குடும்பத்தைச் சேர்ந்த குமார தேவியை மணந்தார்.
  • சந்திரகுப்தரால் வெளியிடப்பட்டவை என கருதப்படும் தங்க நாணயங்களில் சந்திரகுப்தர், குமார தேவி ஆகிய இருவரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. "லிச்சாவையா" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது.
  • லிச்சாவி: லிச்சாவி என்பது வடக்கு பீகாரில் இருந்த பழமையான கனசங்கம் ஆகும். அது கங்கைக்கும்,  நேபாள தெராய்க்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

சமுத்திரகுப்தர் (கி.பி 335 முதல் 380 வரை):

Samudra Gupta - Gupta Empire

  • முதலாம் சந்திரகுப்தரின் மகனான சமுத்திரகுப்தர் குப்த அரச வம்சத்தின் தலைசிறந்த அரசர் ஆவார்.
  • சமுத்திரகுப்தரின் அவைக்கால புலவரான ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி ( பிரசஸ்தி) அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது.
  • இந்தக் கல்வெட்டு சமுத்திரகுப்தர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்ற பொழுது அவருக்கு அடிபணிந்த அரசர்கள் , ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்தும், மிகப்பெரும் பட்டியலை தருகிறது.
  • பிரசஸ்தி = மெய்கீர்த்தி. பிரசஸ்தி (சமஸ்கிருத சொல்)- ஒருவரை பாராட்டி புகழ்வது ஆகும்.
  • சமுத்திரகுப்தர் மகத்தான போர் தளபதியாவார். அவர் தென்னிந்தியாவில் பல்லவ நாட்டு அரசர் விஷ்ணு கோப்பணை தோற்கடித்தார்.
  • வட இந்தியாவில் சமுத்திரகுப்தர் 9 அரசுகளை கைப்பற்றினார்தென்னிந்தியாவை சேர்ந்த 12 அரசர்களை தனக்கு கட்டுப்பட்ட சிற்றரசுகள் ஆக்கி அவர்களை கப்பம் கட்டவும் செய்தார்.
  • கிழக்கு வங்காளம்,  அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் அரசர்களும், இராஜஸ்தானி சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் சமுத்திரகுப்தரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
  • மாளவர்கள், யுதேயர்கள் உள்ளிட்ட இராஜஸ்தான் பகுதியின் 9 குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபத்தியத்தை ஏற்கும் வரை கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • காட்டு ராஜாக்களும், மத்திய இந்தியா மற்றும் தக்காணத்தின் பழங்குடி இன தலைவர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • மேற்கு இந்தியாவில் சாக அரசர்களை தோற்கடிக்க முடியவில்லை என்பதால் நேரடி அதிகாரம் கங்கை சமவெளி வரையிலும் தான் இருந்துள்ளது.
  • பஞ்சாப் சமுத்திரகுப்தரின் அதிகாரத்திற்கு வெளியே இருந்தது. சமுத்திரகுப்தரின் படையெடுப்பு இப்பகுதியில் பழங்குடி குடியரசுகளின் அதிகாரத்தை குறைத்ததால் இங்கு ஹீணர்களின் ஊடுருவல் அடிக்கடி நிகழ்ந்தது.
  • இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் என்னும் பௌத்த அரசன் சமுத்திரகுப்தரின் சமகாலத்தவர் ஆவார். மேகவர்மன் பரிசுகளை அனுப்பி ஒரு பௌத்த மடம் கட்ட சமுத்திரகுப்தரிடம் அனுமதி கோரி உள்ளார்.
  • சமுத்திரகுப்தர் ஒரு விஷ்ணு பக்தர். தனது மேலாதிக்கத்தை நிலை நாட்டும் அரசரால் நடத்தப்படும் வேதகால சடங்கான குதிரைகளை பலியிடும் வேள்வியான அசுவமேத யாகத்தை சமுத்திரகுப்தர் மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.
  • தங்க நாணயங்களை வெளியிட்டார். அவற்றுள் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கவிதை பிரியரும் இசை பிரியருமான சமுத்திரகுப்தர் "கவிராஜா" என்றும் அழைக்கப்பட்டார்.
  • சமுத்திரகுப்தர் அறிஞர்களையும் , ஹரிசேனர் போன்ற கவிஞர்களையும் ஆதரித்தார். இதன் மூலம் சமஸ்கிருதம் இலக்கியத்தை வளர்ப்பதில் பங்காற்றினார்.
  • வைணவத்தை அவர் தீவிரமாக பின்பற்றினார் என்றாலும் வசுபந்து போன்ற மாபெரும் பௌத்த அறிஞர்களையும் ஆதரித்தார். இவரது தென்னிந்திய ஆட்சியர்களுக்கு எதிரான படையெடுப்பு "தட்சிணபாதா" என்று அழைக்கப்படுகிறது
  • வரலாற்று அறிஞர்கள் முத்திரகுப்தரை இந்திய நெப்போலியன் என அழைக்கின்றனர்.

இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி 375 முதல் 415 வரை)

Chandra Gupta II -  Gupta Empire

  • மிகத் திறமையான அரசர்.
  • தனது சகோதரரான ராமகுப்தருடன் (கி.பி 370 - 375) வாரிசு உரிமைக்கு போராடி ஆட்சிக்கு வந்தார்.
  • இரண்டாம் சந்திரகுப்தர் தனது அரசின் எல்லைகளை திருமண உறவுகள் மூலம் விரிவுபடுத்தினார்மத்திய இந்தியாவின் நாக இளவரசி குபேரநாகா என்பவரை மணந்து கொண்டார். தன் மகள் பிரபாவதியை வாகடக அரசர் இரண்டாம் ருத்ரசேனனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
  • மேற்கு மாளவம், குஜராத் ஆகிய பகுதிகளை 400 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சாக அரசர்களை வென்றார். இந்த மகத்தான வெற்றிக்கு பிறகு இரண்டாம் சந்திரகுப்தர் அசுவமேதயாகம் நடத்தியதோடு சாகர்களை அழித்தவர் என்று பொருள் கொண்ட சாகரி என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார்
  • ரோமானிய பேரரசுடனான வணிகத்தால் அரசின் வளம் பெருகியது. கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவை வென்ற பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர் ஹீணர், காம்போஜர் போன்ற வடநாட்டு அரசுகளை வென்றார். இவர் சிறந்த வெற்றி வீரராக மட்டுமின்றி சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். தென்னிந்திய அரசுகளோடு நட்புறவை பேணினார். குதும்பினாருக்கு அருகே உள்ள இரும்புத்தூண் விக்ரமாதித்யாரால் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்

  • விக்ரமாதித்தியர் 
  • நரேந்திர சந்திரர் 
  • சிம்மச்சந்திரர் 
  • நரேந்திரசிம்மர் 
  • விக்ரமதேவராஜர் 
  • தேவகுப்தர் 
  • தேவஸ்ரீ 
  • விக்ரமன் 
  • தேவராஜன் 
  • சிம்ம விக்கிரமன் 
  • சாகரி 

கலை இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய நவரத்தினங்கள் எனப்பட்ட 9 அறிஞர்கள் இவரது அவையில் இருந்தனர்.

  1.  காளிதாசர் - சமஸ்கிருத புலவர்
  2.  ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர்
  3.  அமரசிம்மர்-  அகராதியல் ஆசிரியர்
  4.  தன்வந்திரி -  மருத்துவர்
  5.  காக பானகர் -  ஜோதிடர்
  6.  சன்கு -  கட்டிடக்கலை நிபுணர்
  7.  வராகமிகிரர் - வானியல் அறிஞர்
  8.  வராச்சி - இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருத புலவர்
  9.  விட்டல் பட்டர் -  மாய வித்தைக்காரர்(Magician)

வெள்ளி நாணயங்களை வெளியிட்ட முதல் குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தரே. இவருடைய ஆட்சியின்  பொழுது பாகியான் என்னும் சீன பௌத்த அறிஞர் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

பாகியான்

பாகியான் - சீனப்பயணி


இந்தியாவிற்கு வந்த முதல் சீன பயணி பாகியான். இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார். பெஷாவர், காசி, கயா உள்ளிட்ட பட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். இவர் ஒன்பது ஆண்டுகள் இந்தியாவில் தங்கி இருந்தார். பாடலிபுத்திரத்தில் மூன்று ஆண்டுகள் இருந்து சமஸ்கிருத மொழியையும், பௌத்த இலக்கியங்களையும் கற்றார்.

இவருடைய குறிப்புகள் இரண்டாம் சந்திரகுப்தரின் கால அரசியல், சமூக மற்றும் பொருளாதார சமய நிலைகளை பற்றி கூறுகின்றன.மேலும் குப்தர் காலத்து மக்களின் சமூக பொருளாதார மத ஒழுக்க நிலைகள் பற்றிய செய்திகளை நமக்கு வழங்குகின்றன. 

பாகியான் கூற்றுப்படி,

மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர். கடுமையான தண்டனை இன்றி நீதி வழங்கப்பட்டது. மரண தண்டனை வழங்கப்படவில்லை. கயா பாழடைந்து இருந்தது. கபிலவஸ்து காடாகி இருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தின் மக்கள் செல்வத்தோடும், செழிப்போடும் வாழ்ந்தனர்.

மதுரா பாடலிபுத்திரம் குறித்து பாகியான்,

மதுராவில் மக்கள் தொகை அதிகம் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் தமது குடும்பத்தை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அரசருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் மட்டும்  தானியத்தின் ஒரு பகுதியை அரசருக்கு தர வேண்டும். சூழலைப் பொறுத்து குற்றவாளிகளுக்கு மிதமாகவோ கடுமையாகவோ அவதாரம் விதிக்கப்பட்டது.

மீண்டும் மீண்டும் கலகம் செய்தால் குற்றம் முளைத்தால் வலது கை துண்டிக்கப்படும் நாடு முழுவதும் மக்கள் எந்த உயிரினத்தையும் கொள்வதில்லை எந்த மதுபானத்தையும் அருந்துவதில்லை. பாடலிபுத்திரத்தில் நல்ல பணக்காரர்கள் வசதியானவர்கள் ஈகை குணத்தில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுவார்கள். நகரங்களில் வைசிய குடும்பத்தினர் தர்மம் செய்வதற்கும் மருத்துவத்திற்கும் சத்திரங்களை கட்டி இருக்கிறார்கள். அனைத்து ஏழைகள், ஆதரவற்றோர், அனாதைகள் விதவைகள், குழந்தை இல்லாதவர்கள் அங்க வீரர்கள் ஊனமுற்றோர்கள் என அனைவருக்கும் அனைத்து விதமான உதவிகளும் செய்யப்படுகின்றன.

முதலாம் குமாரகுப்தர் (கி.பி 415 முதல் 455 வரை):

நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தார். இரண்டாம் சந்திரகுப்தரின் புலவர். சக்ராதித்யார் என்று அழைக்கப்பட்டார்.

ஸ்கந்தகுப்தர் (கி.பி 455 முதல் 467 வரை):

முதலாம் குமாரகுப்தரின் புதல்வர். இவர் ஹீணர்களின் படையெடுப்பை தடுத்தார். ஆனால் ஹீணர்கள் மீண்டும் மீண்டும் படையெடுப்பு மேற்கொண்டதால் அரசு கருவூலம் காலியானது. கி.பி 467 ஸ்கந்தகுப்தரின்  இறப்பிற்குப் பிறகு பின்னர் குத்த பேரரசு வீழ்ச்சி அடைந்தது.

பாலாதித்யன்:

மிகச்சிறந்த புத்த பேரரசு களின் கடைசிப் பேரரசரான பாலாதித்யன் முதலாம் நரசிம்ம குப்தர் என்ற பெயரில் அரியணை ஏறினார். பௌத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவர். இவர் மிகரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார். ஆனால் மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்ததால் மனவேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார். மிகிரகுலரை கைது செய்து சிறையில் அடைப்பதில் பாலாதித்யர் வெற்றிப் பெற்றாலும் மிகிரக்குலர் வஞ்சகமாக பாலாயதித்யரை மகதத்தில் இருந்து வெளியேற்றினார்.

விஷ்ணுகுப்தர் (கி.பி 540 - 550):

குப்தப்பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்.

ஹீணர்கள் 

ஹீணர்களின் தோற்றம் குறித்து எதுவும் தெரியவில்லை. அவர்கள் காஸ்பியன் கடல் அருகில் வாழ்ந்த நாடோடி பழங்குடி இனப் குழுக்கள். அடில்டாவின் (ஹீணர்களின் மாபெரும் தலைவர்) தலைமையில் திரண்ட இவர்கள் ஐரோப்பாவில் கொடுங்கோன்மைக்கு பெயர் பெற்றவர்கள், ரோமாபுரி பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் வெள்ளை ஹீணர்கள் என்று அழைக்கப்பட்ட ஹீணர்களின் ஒரு பிரிவு மத்திய ஆசியாவில் இருந்து இந்தியா நோக்கி நகர்ந்தது. இவர்களது படையெடுப்பு குஷாணர்கள் காலத்திற்கு 300 ஆண்டுகளுக்கு பின் ஆரம்பமானது. ஸ்கந்தகுத்தரை தோற்கடித்த பின்னர் மத்திய இந்தியாவில் பரவினர். அவர்களின் தலைவரான தோரமானர் தனக்குத்தானே முடிச்சூட்டி கொண்டார். அவருக்குப்பின் மிகிரகுலர் ஆட்சி செய்தார். முடிவில் மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்து வந்த யசோதவர்மன் அவர்களை தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்கு முடிவுகட்டினார்.

 

 

Resources:


Image Attribution:



"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"





No comments:

Post a Comment