மனித இரத்தம், இரத்த செல்கள், இரத்தம் உறைதல் மற்றும் இரத்த வகைகள் ( உயிரியல் : TNPSC, RRB and SSC Exams)

இரத்தம் , இரத்த செல்கள் மற்றும் இரத்த வகைகள்

    இரத்தம் என்பது தண்ணீரை விட அதிகப் பாகுத்தன்மை கொண்ட  ஒரு இணைப்பு திசுவாகும். மனிதனின் மொத்த உடல் எடையில் 8% இரத்தம் காணப்படுகின்றது.  இரத்தத்தின் இயல்பான வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகும். இயல்பான இரத்த குளுக்கோஸ் அளவு 80 - 120mg/ 100ml . இரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன.  இரத்தத்தில் பிளாஸ்மா மற்றும் இரத்த செல்கள் காணப்படுகின்றன. 

  • பிளாஸ்மா 55 % 
  • இரத்த செல்கள் 45 %
Human Blood Cells

இரத்தத்தின் பணிகள்

  • உடல் வெப்பநிலையை சீராக பராமரிக்கின்றது. மனிதனின் இயல்பு வெப்பநிலை 98.4 டிகிரி பாரட் அல்லது 36.9 டிகிரி செல்சியஸ் ஆகும்.
  • ஜீரண உறுப்புகளில் இருந்து ஊட்டச்சத்துகளை உடலின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றது.
  • யூரியா, யூரிக் ஆசிட் மற்றும் அம்மோனியா போன்ற கழிவு பொருட்களை கழிவு நீக்க மண்டலத்திற்கு கடத்துகின்றது. 
  • ஆக்சிஜனை நுரையீரல்களில் இருந்து உடலின் அனைத்து திசுக்களுக்கும் , கார்பன்-டை-ஆக்சைடை திசுக்களில் இருந்து நுரையீரல்களுக்கும் கொண்டு செல்கின்றது. 
  • இயல்பான உடல் வெப்பநிலையை பராமரிக்கின்றது 
  • இரத்த உறைதல் செயல்முறை மூலம் இரத்த இழப்பிற்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றது. 
  • நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
  • ஹார்மோன்களை கடத்துகின்றது 
  • உடலில் உள்ள திசுக்களை ஈரமாக பராமரிக்கின்றது.

பிளாஸ்மா (இரத்த மின்மம்)

  • பிளாஸ்மா என்பது வெளிய மஞ்சள் நிற திரவமாகும். இது லேசாக காரத்தன்மை கொண்டது. 
  • இதில்,
    • தண்ணீர் 90-92 சதவீதம் 
    •  பிளாஸ்மா புரதங்கள் 7-8 சதவீதம் 
    •  கரிமம் சாரா சேர்மங்கள் 1 சதவீதம் 
    •  உணவு மற்றும் வாயுக்கள் 1- 2 சதவீதம் 

காணப்படுகின்றன. 

  • பிளாஸ்மாவின் முக்கிய கரிம பொருளாக பிளாஸ்மா புரதங்கள் காணப்படுகின்றன. பிளாஸ்மா புரதங்கள், 
    • குளோபுலின் - உடல் எதிர்ப்பு சக்தி 
    • பைபிரினோஜன் - இரத்தம் உறைதல் 
    • ஆல்புமின் - நீர் சமநிலை 

இரத்த செல்கள்

  • இவை பிளாஸ்மாவில் மிதக்கின்றன.
  • மூன்று வகையான இரத்த செல்கள் உள்ளன.

அவை

    • இரத்த சிவப்பணுக்கள்
    • இரத்த வெள்ளையணுக்கள்
    • இரத்தத்தட்டுகள் 

இரத்த சிவப்பணுக்கள் (RED BLOOD CELLS)

Human Blood - RBC

  • இவை எரித்ரோசைட்ஸ் என்று அழைக்கப்படுகின்றது 
  • இவை வட்டமான, இருபுறமும் குழி உடைய, தட்டு வடிவ அமைப்பாகும் 
  • இவற்றில் ஹீமோகுளோபின் எனப்படும் நிறமி காணப்படுவதால் சிவப்பு நிறமாக காணப்படுகிறது
  • இவற்றில் உட்கரு இல்லை 
  • ஒரு கன சென்டி மீட்டரில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை 4.5 - 5 மில்லியன். 
  • இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் : 120 நாட்கள்
  • இதன் பணி: சுவாச வாயுக்களை கடத்துகிறது.

இரத்த வெள்ளையணுக்கள் (WHITE BLOOD CELLS)

Human Blood - WBC

  • லியுக்கோசைட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இவை  ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை.
  • நிறம் அற்றவை. 
  • தெளிவான உட்கரு காணப்படுகிறது.
  • ஒரு கன சென்டிமீட்டரில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை 7,000 - 10,000
  •  இரத்த வெள்ளையணுக்களின் ஆயுட்காலம் : நான்கு வாரம் 
  •  பணி: .உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குகிறது.

இரத்த வெள்ளையணுக்களின் வகைகள் 


Human Blood - Types of WBC


  • துகள் உள்ள வெள்ளையணுக்கள் - கிரானுலோசைட்டுகள் (உட்கரு இருக்கும்)

  1. நியூட்ரோபில் 60 - 65 சதவீதம் 
  2. ஈசனோபில் 2 -3 சதவீதம் 
  3. பேசோபில் 0.5 -10 சதவீதம் 

  •  துகள் அற்ற வெள்ளை அணுக்கள்- அக்கிரானுலோசைட்டுகள் ( உட்கரு இல்லை) 

  1.  லிம்போசைட் 20 - 25 சதவீதம் 
  2.  மோனோசைட் 5 - 6% 

இதன் பணிகள்

  • உடலில் வீக்கம் ஏற்பட்டால் நியூட்ரோவில் மற்றும் பேசோபில் அதிகரிக்கும் 
  • உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால் ஈசனோப்பில் அதிகமாகும் 
  • லிம்போசைட்: நோய் எதிர்ப்பு ஆற்றல்
    1. வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும்.
    2. உடலின் மிகச் சிறிய வெள்ளையணு 
  • மோனோசைட் 
    1. உடலின் மிகப் பெரிய வெள்ளையணு .
    2. பேகோசைட்டாசிஸ் எனப்படும் செல் விழுங்குதலில் பயன்படுகிறது.( பேகோசைட்டாசிஸ் : பாக்டீரியாவை விழுங்கி அதன் வீரியத்தை குறைக்கும்) 

இரத்த தட்டையணுக்கள் (PLATELETS)

  • இவை த்ரோம்போசைட்டுகள் என அழைக்கப்படுகின்றன.
  • ஒழுங்கற்ற வடிவம் கொண்ட உயிரணுத் துகள்கள் 
  • உட்கரு இல்லை
  • நிறம் அற்றவை
  • ஒரு கன மில்லி மீட்டரில் 2,50,000 என்ற எண்ணிக்கையில் இருக்கும். 
  • ஆயுட்காலம் 6 - 8 நாட்கள் 
  • இரத்தம் உறைதலில் பயன்படுகின்றன.

இரத்தம் உறைதல்

Blood Clotting process

Blood Clotting - process of Fibrin threads formation

  1. காயம் பட்ட இடத்தில் உள்ள உயிரணுக்களும், இரத்த தட்டுகளும் தத்ரோம்போபிளாஸ்டின் என்றழைக்கப்படும் ஒரு நொதியை வெளிவிடுகின்றன. 

  2. இந்த த்ரோபோபிளாஸ்டின் கால்சியம் அயனிகளின் முன்னிலையில், இரத்த நீர்மத்தில் உள்ள புரோத்ரோம்பின் மீது வினைபுரிந்து அதனை த்ரோம்பினாக மாற்றுகின்றது 

  3. த்ரோம்பின் இரத்த செல்களின் காணப்படும் பைபிரினோஜன் மீது வினைபுரிந்து அதனை கரைசல் தன்மை அற்ற பைப்ரினாக நிலை மாற்றம் அடைய செய்கின்றது.

  4. பைப்ரின் கரையும் தன்மையற்றது. இது வலை பின்னல் போன்ற அமைப்பை உருவாக்குகின்றது. அதில் இரத்த சிவப்பணுக்களும் , வெள்ளையணுக்களும் சிக்கிக்கொண்டு இரத்த உறையை உருவாக்குகின்றன. இந்த இரத்த உறை உலர்ந்து, கடின நிலையை அடைந்து ஒரு படலத்தை உருவாக்குகின்றது. இப்படலத்திற்கு கீழே காயம் ஆறத் தொடங்குகின்றது. 



இரத்த செல்கள் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

  • இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பு : பாலிசைதீமியாா
  • இரத்த சிவப்பணுக்கள் குறைதல் : அனீமியா 
  • இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிப்பு: லியுகோசைட்டாசிஸ்
  • இரத்த வெள்ளை அணுக்கள் குறைதல்: லியுகோபீனியா
  • இரத்த தட்டை அணுக்கள்: த்ரோம்போசைட்டோபீனியா (இரத்தம் உறையாது) 

இரத்தத்தின் வகைகள்

நான்கு வகையான இரத்த வகைகள் காணப்படுகின்றன.

  1. A
  2. B
  3. AB

  • இரத்த வகைகள் A, B, O ஆகியவற்றை கண்டறிந்தவர் : கார்ல்லேன்ஸ்டைனர்
  • ரத்த வகையான ஏ பி ஐ கண்டறிந்தனர் டீகால்டிலோ மற்றும் ஸ்டெய்னி

 .
Blood Type RBC Plasma Can Donate to Can Receive From
A A B A, AB A, O
B B A B, AB B, O
AB A, B-- ABA, B, AB, O
O -- A,B A, B, AB, O O

  • O  - Universal Donar
  • AB- Universal Acceptor


Resources:

  • Tamil Nadu School Samacheer Books from 6th Standard to 12 th standard




"This Content Sponsored by Genreviews.Online

Genreviews.online is One of the Review Portal Site

Website Link: https://genreviews.online/

Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"




No comments:

Post a Comment