சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்

 சங்க இலக்கியங்கள்


சங்க காலப் புலவர்கள்


எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் எனவும், பதினெண்மேல்கணக்கு நூல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. சுமார் 473 புலவர்களல் பாடப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது.


எட்டுத்தொகை நூல்கள் 


1. நற்றிணை

2. குறுந்தொகை

3. ஐங்குறுநூறு 

4. பதிற்றுப்பத்து 

5. பரிபாடல் 

6. கலித்தொகை 

7.அகநானூறு

8.புறநானூறு

 

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று

இச்சிறந்த எட்டுத்தொகை"

 

  • எட்டுத்தொகை நூல்களில் அகப்பொருள் பற்றியது ஐந்து நூல்கள்.

அவை, 

    • நற்றிணை
    • குறுந்தொகை
    • ஐங்குறுநூறு
    • அகநானூறு
    • கலித்தொகை 

  • எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றியது இரண்டு.

அவை,

    • பதிற்றுப்பத்து
    • புறநானூறு 

  • எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் கலந்த நூல் பரிபாடல் 


நற்றிணை

  • நற்றிணை = நல்+திணை
  • பாடல்கள்: 400 
  • அடி வரையறை: 9 - 12 அடிகள்
  • பாடிய புலவர்கள்: 275 பேர் 
  • தொகுத்தவர்: பெயர் தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: பன்னாடு  தந்த மாறன் வழுதி 
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  •  எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து போற்றத்தக்க சிறப்புடையது 
முக்கியமான பாடல் வரிகள்

                  "நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று தன் செய்வினை பயனே 

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புண்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வமென்பதுவே". 

                             -மிளைகிழான் நல்வேட்டனார் 

 

"சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் 

         முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே". -300


 "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசையுடன் இருந்தோர்க்கு  

ரும்புணர்வு இன்பமென". -214


"தன்னாடு விளைந்த வெண்ணெல் தந்து 

பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி 

……..............................................................

உமணர் போகலும்".  -183


 "அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்" -142


"கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய

நரம்பின் முடிமுதிர் பரதவர்" 


 "முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை"


"அரிகால் மாறிய அங்கன் அகல்வயல்

மறுகால் உழுத ஈரச் செறுவின் 

வித்தோடு சென்ற வட்டி பற்பல 

மீனொடு பெயரும் யாணர்  ஊர" 


 குறுந்தொகை

  •  குறுந்தொகை = குறுமை + தொகை 
  •  நல்ல என்னும் அடைமொழி கொண்ட நூல் 
  •  பாடல்கள்: 401( கடவுள் வாழ்த்து நீங்கலாக )
  •  பாடிய புலவர்கள்: 205 பேர்
  •  அடி வரையறை: 4 - 8 அடிகள் 
  •  தொகுத்தவர்: பூரிக்கோ
  •  தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை 
  •  கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  •  முதலில் பதிப்பித்தவர் சௌரி அரங்கனார் 1915 

 முக்கிய பாடல் வரிகள்


" வினையே ஆடவர்க்கு உயிரே". 


"பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உள்ளீரோ". -118 

"பாலோடு வந்து கூழோடு பெயரும்". 

 "நசை பெரிது உடையார் நல்கலும் நல்குவர் 

 பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

 மென்சினை யாஅம் பொளக்கும் 

 அன்பின தோழி அவர் சென்ற ஆறே". -37( பாலை பாடிய பெருங்கடுங்கோ )


" நிலத்திலும் பெரிதே வானினும் உயர்ந்தன்று 

 நீரினும் ஆரள வின்றே சாரல் 

 கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு 

 பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே".  - தேவ குலத்தார் 


 "யாதும் இல்லை தானே கள்வன் 

 தான் அது பொய்ப்பின் யானெவன் செய்கோ". 


 "செம்புல பெயல் நீர் போல 

 அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"


 ஐங்குறுநூறு 

  • ஐங்குறுநூறு =  ஐந்து +குறுமை +நூறு 
  •  பாடல்கள்: 500 (ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள்)
  •  அடி வரையறை: 3-6 அடிகள் 
  •  புலவர்கள்

  1.  குறிஞ்சி : கபிலர்
  2.  முல்லை : பேயனார் 
  3.  மருதம் : ஓரம் போகியார் 
  4.  நெய்தல் : அம்மூவனார் 
  5.  பாலை : ஓதலாந்தையார் 

  • தொகுத்தவர்: புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் 
  • தொகுப்பித்தவர்: யானை கண்சேய் மாந்தரசேரல் இரும்பொறை 
  •  கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  •  முதன் முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா 

 முக்கிய பாடல் வரிகள்

 

"கொற்கை கோமான் கொற்கையம் பெருந்துறை"  -188


 "மருவில் தூவி சிறு கருங் காக்கை

 அன்புடை மரபினின் கிளையோ டாரப் 

 பச்சூன் பெய்த பைந்நின வல்சி". 


 பதிற்றுப்பத்து 

  •  பத்து சேர மன்னர்களை பற்றி 10 புலவர்கள் முறையே 10 பாடல்கள் பாடியதால் இப் பெயர் பெற்றது 
  •  முதல் 10 மற்றும் கடைசி 10 கிடைக்கவில்லை 
  •  தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை

முக்கிய வரிகள்


"நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு.." 

"நன்கல வெறுக்கை துன்சும் பந்தர்" -55
 
"பந்தர் பெயரிய பேரிசை மூதூர்" -67

"பந்தர் பயந்த பலர் புகழ்  முத்தம்" -74

"அருங்கலம் தரீஇயற் நீர்மிசை நிவக்கும் 

பெருங்கலி வங்கம்"  -52


 பரிபாடல்

  •  மொத்த பாடல்கள்: 70
  •  கிடைத்திருப்பது: 24 பாடல்கள்
  •  அடி வரையறை: 25 முதல் 400 வரை 
  •  பாடியவர்கள்: 13 பேர்
  •  முதல் இசை நூல் 
  •  ஓங்கு பரிபாடல் என்னும் புகழ் உடையது
  •  பரிபாடலுக்கு உரை எழுதி பதிப்பித்தவர் உ.வே.சா 

 முக்கிய வரிகள் 


"விசும்பில் ஊழி ஊழி ஊழ் செல்லக் 

 கரு வளர் வானத்து இசையில்தோன்றி 

 உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் 

 உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் 

 செந்தீச் சுடறிய ஊழியும் பனியொடு 

 தன் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று 

 உள்முறை வெள்ள மூழ்கி ஆர் தருபு 

 மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் 

 உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்". 



"இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்

தன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்"  -19:54-55



 கலித்தொகை 

  •  பாடல்கள்: 150 
  •  பாடிய புலவர்கள்: ஐந்து பேர்

  1.  குறிஞ்சி : கபிலர்
  2.  முல்லை : சோழன் நல்லுருத்திரன் 
  3.  மருதம் : மருத இளநாகனார் 
  4.  நெய்தல் : நல்லந்துவனார் 
  5.  பாலை : பெருங்கடுங்கோ 

  •  தொகுத்தவர்: நல்லந்துவனார் 
  •  கடவுள் வாழ்த்து பாடியவர்: நல்லந்துவனார் 

 முக்கிய வரிகள்

 

"பிறர் நோயும் தம் நோய்ப்போல் போற்றி

அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்" -நல்லந்துவனார்


"எழுந்தது துகள் 

ஏற்றனர் மார்பு 

கவிழ்ந்தன மருப்பு 

கலங்கினர் பலர்" -102


 "நீர் எடுப்பவை நிலம் சாடுபவை 

 மாரி ஏற்றுச் சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய் 

 துளங்கு இமில் நல்ஏற்றினம் பலகளம் புகும் 

 மள்ளர்  வனப்பு ஒத்தன" -106


 "ஆற்றுதல் என்பது அலந்தவர்க்கு உதவுதல் 

 போற்றுதல் என்பது புணந்தாரைப் பிரியாமை

 பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் 

 அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை 

 அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல் 

 செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

 நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை 

 முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வெளவல் 

 பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்" 


 அகநானூறு 

  •  நீண்ட அடிகளை கொண்ட பாடல்கள் உள்ளதால் நெடுந்தொகை என்று அழைக்கப்படுகிறது 
  •  பாடல்கள்: 400 
  •  அடி வரையறை : 13 முதல் 31 வரை 
  •  தொகுத்தவர்: மதுரை உப்பூரி குடிக்கிழார்  மகனார் உருத்திரசன்மன் 
  •  தொகுப்பித்தவர்:  பாண்டியன் உக்கிர பெருவழுதி 
  •  கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  •  மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது 

  1.  களிற்று யானை நிரை: 120 பாடல்கள்
  2.  மணிமிடை பவளம்: 180 பாடல்கள் 
  3.  நித்தில கோவை: 100 பாடல்கள் 

  •  உரை எழுதிப் பதிப்பித்தவர் நா.மு. வெங்கடசாமி நாட்டார் 

  •  திணை  வாரியாக பாடல்கள் 

 1, 3, 5, 7 ..... : பாலை 

 2, 8, 12, 18 ....: குறிஞ்சி 

 4, 14, 24, 34...: முல்லை 

 6, 16, 26, 36...: மருதம் 

 10, 20, 30 ......: நெய்தல் 


 முக்கிய வரிகள்

 

"கறங்கு இசை விழவின் உறந்தை -4:14 


 "கடும் பகட்டு யானை நெடுந்தேர் கோதை 
 திருமா வியல் நகர் கருவூர் முன்துறை" -93:20-21


 "பொன்னொடு வந்து கறியோடு பெயரும்" 


"சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க 

 யவனர் தந்த வினைமான் நன்கலம் 

 பொன்னொடு வந்து கறியோடு பெயரும் 

 வளம் கெழு முசிறி" -149


 "திரை தந்த ஈரம் கதிர் முத்தம் 

 கவர் நடைப்புரவி கால்வடுத் தபுக்கும் 

 நற்றேர்வழுதி கொற்கை முன் துறை" -130( வெண் கண்ணனார் )


 "வலம்புரி மூழ்கிய வாந்திமில் பரதவர்"  -350


 "நல்லமர்க் கடந்த நானுடை மறவர்  

 பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் 

 பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுக்கல்" -67


 "அறுமீன் சேரும் அகலிரு நடு நாள் 

 மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி" -141


 "நெல்லும் உப்பும் நேரே ஊரீர் 

 கொள்ளீ ரோவெனச் சேரிதொறும்  நுவலும்" -390


 "கொற்கையில் பெருந்துறை முத்து" 


 "உலகு கிளர்ந் தன்ன உரு கெழு வங்கம் 

 புலவுத் திரை பெருங்கடல் நீர் இடைப் போழ 

 இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி 

 விரைசெலல் இயற்கை வன்கூழ் ஆட்ட 

 கோடு உயர் திணிமணல் அகன்துறை நீகான் 

 மாட ஒள்ளறி மருங்கு அறிந்து ஒய்ய"  - மருதன் இளநாகனார் 


 புறநானூறு

  •  புறம், புறம்பாட்டு எனவும் அழைக்கப்படுகிறது. 
  •  பாடல்கள்: 400 
  •  தொகுத்தவர், தொகுப்பித்தவர் தெரியவில்லை 
  •  கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  • பண்டைய தமிழர்களின் அறவுணர்வு, வீரம், கொடை, ஆட்சி சிறப்பு, கல்வி பெருமை, நாகரீகம்,பண்பாடு ஆகியவற்றை காட்டும் பண்பாட்டுக் கருவூலமாக விளங்குகிறது.
  •  புறநானூற்று பாடல்கள் சிலவற்றை ஜி.யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

 முக்கிய வரிகள்

 

"நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி 

 வளிதொழில் ஆண்ட உரவோன் மருக 

 களி இயல் யானைக் கரிகால் வளவ" - 66 ,வெண்ணி குயத்தியார் 


 "உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் 

 அமிழ்தம் இயைவ தாயினும் இனிது எனத் 

 தமிழர் உண்டலும் இலரே" - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 


 "குரல் உணங்கு விதைத்தினை உரல் வாய்ப்பெய்து 
 சிறிது புறப்பட்டன்றோ இலள்" -33


"நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் 
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்று இக்    கருங்கோட்டு சீறி யாழ் பனையம்" -316

 "நீரற வறியாக் கரகத்து" 


"இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும்

 அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்"  


 "அறம் அறக்கண் நெறி மான் அவையம்" 


 "உண்பது நாழி உடுப்பவை இரண்டே 

 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே 

செல்வத்தின் பயனே ஈதல் 

 துய்ப்பேம் எனினே தப்புந பலவே"  -189 மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் 


 "எறியார் எறிதல் யாவணது எறிந்தார் 

 எதிர் சென்று செறிதலும் செல்லான்" 


 "கூர்வேல் குவைஇய மொய்ம்பின்

 தேர்வண் பாரிதண் பறம்பு நாடே"  -118:4-5


 "நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம் 

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 

 உண்டி முதற்றே உணவின் பிண்டம் 

 உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

 நீரும் நிலமும் புணரியோர் ஈண்டு 

 உடம்பும் உயிரும் படைத்திசினோரே" - குடபுலவியனார் 


 "யாதும் ஊரே யாவரும் கேளீர்" -192


 "சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே 

 நன்னடை நல்கல் வேந்தர்குக் கடனே" -312


 "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் 

 பிற்றநிலை முனியாது கற்றல் நன்றே" -183


 "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வளவன் ஏவா வான ஊர்தி" -27


 "களிறு எறிந்து பெயர்தல் காளைக்கு கடனே" - பொன்முடியார் 


 "புகை விரிந்தன்ன பொங்கு துதுகில் உடீஇ 

 ஆவியன்ன அவிநூற் கலிங்கம்" -398


 "இமையத்துக் 

 கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் 

 தீது இல் யாக்கையொடு மாய்தல்

 தவத்தலையே" -214


"இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த 

நுண் பஃறுளியினும் வாழிய பலவே" -34


" நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

 பாணன் சூடான் பாடினி அணியாள் "


"கலை உணக்கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" 


"மீனோடு நெற்குவைஇ 
மிசையம்பியின் மனை மறுக்குந்து 
கலம் தந்த பொற்பரிசும்
கழித்தோணியால் கரை சேர்க்குந்து"-343


"சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் 
யாண்டு உளனோ எனவினவுதி என்மகன் 
யாண்டு  உளன் ஆயினும் அறியேன் ஓரும்                                                      புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே 
தோன்றுவன் மாதோ போர்களத் தானே". - காவற்பெண்டு


 "நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால் யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே".  – மோசிகீரனார்

 

"பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும் 
இடைப்படச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித்தோன்றி யாங்கு என்றும் சான்றோர்                    சான்றோர் பாலர் ஆப
சாலர் சாலர் ஆகுபவே".   - கண்ணகனார்

 

"பல்சான்றீரே பல்சான் றீரே கயமுள்ளன்ன
நரைமுதிர் திரைகவுட்..."






Resources:

  • Tamilnadu School Samacheer Books 

 

 

 

 



No comments:

Post a Comment