மார்ச் 2024 நடப்பு நிகழ்வுகள்
முக்கிய தினங்கள்
மார்ச் 3
- உலக வனவிலங்கு தினம்
- கருப்பொருள் : Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation
- மார்ச் 3, 2014 முதல் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 4
- தேசிய பாதுகாப்பு தினம்
- கருப்பொருள்: Safety Leadership for Environmental, Social and Governance Excellence
மார்ச் 8
- சர்வதேச மகளிர் தினம்
- கருப்பொருள்: Invest in Women: Accelerating Progress
- 1975ல் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டது.
மார்ச் 15
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
- கருப்பொருள்: Fair and Responsible AI for Consumers
- 1983 முதல் கொண்டாடப்படுகிறது
மார்ச் 16
- தேசிய தடுப்பூசி தினம்
- கருப்பொருள்: Vaccines work for all
- 1995ஆம் ஆண்டில் இந்தியாவில் போலியோ தடுப்பு ஊசியின் முதல் தவனை செலுத்தப்பட்டதை சிறப்பிக்கும் விதமாக தேசிய தடுப்பூசி தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது
மார்ச் 21
- சர்வதேச காடுகள் தினம்
- கருப்பொருள்: Forests and Innovation: New Solutions for a Better World
- முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் கொண்டாடப்பட்டது
மார்ச் 22
- உலக தண்ணீர் தினம்
- கருப்பொருள்: Leveraging Water for Peace
- 1993 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது
மார்ச் 23
- உலக வானில் வானிலை தினம்
- கருப்பொருள்: At the Front line of Climate Action
- உலக வானிலை அமைப்பு நிறுவப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 24
- உலக காசநோய் தினம்
- கருப்பொருள்: yes we can in TB
சர்வதேச செய்திகள்
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தார் நியமனம்
- பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிப் அலி சர்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் ஒரே அதிபர்.
நோட்டோவின் 32 வது உறுப்பினராக ஸ்வீடன்
- நோட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக்கு உடன்படிக்கை 1949 மூலம் நிறுவப்பட்ட அட்லாண்டிக் அரசியல் மற்றும் ராணுவ கூட்டு கூட்டணியாகும்.
- இதன் தலைமையகம் ப்ரெசெல்ஸ் பெல்ஜியத்தில் அமைந்துள்ளது
- ஸ்வீடன் சமீபத்தில் இதன் உறுப்பினராக மாறி உள்ளது
இரஷ்ய அதிபர்
- விளாடிமர் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் முதன்முதலில் டிசம்பர் 31, 1999 இல் இரஷ்யாவின் அதிபர் ஆனார்.
உலகின் முதல் அணுசக்தி உச்சி மாநாடு
- பெல்ஜியத்தில் உள்ள பிரசல்ஸ்சில் நடைபெற்றது
- பெல்ஜியம் அரசாங்கம் மற்றும் சர்வதேச அணுசக்தி முகமின் கூட்டாக இந்த உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
- இவ்வுச்சி மாநாட்டில் இந்தியா உட்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன.
- சர்வதேச அணுசக்தி முகமை 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதில் இந்தியா உட்பட மொத்தம் 178 உறுப்பினர்கள் உள்ளன.
தேசிய செய்திகள்
INS JATAYU (ஜடாயு)
- இந்திய கடற்படையின் இரண்டாவது கடற்படை தளமான INS ஜடாயு மினிக்காய் தீவில் (இலட்சத்தீவு) திறக்கப்பட்டுள்ளது.
- இது 9° கால்வாய்க்கு அருகில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தளமாகும். 9 கால்வாய் மினிக்காய் தீவையும், இலட்ச தீவையும் பிரிக்கின்றது.
- கவராத்தியில் உள்ள INS வீப்ராக்ஷக் முதல் கடற்கரை தளம் ஆகும். இது 2012-ல் இயக்கப்பட்டது.
அதிதி திட்டம்
- அதிதி திட்டத்தைப் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்தார்.
- நோக்கம்: IDEX (பாதுகாப்பு துறையில் சிறந்த கண்டுபிடிப்புகள்) உடன் கூடிய புதுமையான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது.
- முக்கியமாக பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் புதுமைகளை ஊக்குவிப்பது.
கடற்படை தளபதிகள் மாநாடு
- கடற்படை தளபதிகள் மாநாடு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகின்றது
- இந்த ஆண்டின் முதல் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது
- இம்மாநாட்டின் தொடக்க அமர்வு, விமானம் தாங்கி கப்பலான INS விக்ரமாதித்யாவில் நடைபெற்றது
- இம்மாநாட்டில் கடல் சார்ந்த பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது
இந்திய கடற்படையின் முதல் தலைமையகம்: நௌ சேனா பவன்
- இந்திய கடற்படையின் பிரத்தியேக தலைமையகமான நௌ சேனா பவன், இது புதுடில்லியில் அமைந்துள்ளது
- இதனை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் திறந்து வைத்தார்.
- இதற்கு முன்பு வரை 13 வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த கடற்படையின் ஒருங்கிணைந்த வளாகமாக நௌ சேவா பவன் கட்டப்பட்டுள்ளது.
லமிட்டியே பயிற்சி 2024
- இது இந்திய ராணுவம் மற்றும் செஷல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடைபெறும் கூட்டு இராணுவ பயிற்சி ஆகும்.
- இதன் பத்தாவது பதிப்பு இந்த ஆண்டு செஷல்ஸில் நடைபெறவுள்ளது.
- இது 2001 முதல் நடத்தப்பட்டு வருகிறது.
- லமிட்டியே (கிரேக்கம்) - நட்பு
Exercise Tiger Triumph 2024
- இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இரு தரப்பு முப்படை மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சி ஆகும்.
- இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான முதல் முப்படை இராணுவ பயிற்சி .
- இது மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நடைபெறுகிறது.
- நோக்கம்: இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே விரைவான மற்றும் சுமூகமான ஒருங்கிணைப்பை செயல்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) மேம்படுத்துவது.
ஐ எம் டி முத்தரப்பு பயிற்சி 2024
- இது இந்தியா மற்றும் மொசாம்பிக் (தான்சானியா) பங்கேற்கும் முத்தரப்பு கடற் பயிற்சியாகும்
- தற்போது இதன் இரண்டாவது பதிப்பில் இந்திய கடற்படை பங்கேற்க உள்ளது.
- இதன் முதல் பதிப்பு அக்டோபர் 2022-ல் நடத்தப்பட்டது
ஆப்ரேஷன் சங்கல்ப்
- .ஆப்ரேஷன் சங்கல்ப் என்பது கடல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடங்கப்பட்ட இந்திய கடற்படையின் முன்முயற்சியாகும்
- சங்கல்ப் (சமஸ்கிருதம்) - அர்பணிப்பு
- இது மார்ச் 23 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேசிய அடையாளம் சீத்தல் தேவி
- முதன்முறையாக இந்திய தேர்தல் ஆணையம் BCCI உடன் இணைந்து ITCA மற்றும் DDCA அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியை கர்னைல் சிங் மைதானத்தில் (புது தில்லி) நடத்தியது.
- இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையம் சீத்தல் தேவியை மாற்றுத் திறனாளிகள் பிரிவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையளமாக அறிவித்தது.
- இவர் ஒரு புகழ் பெற்ற பாரா வில்வித்தை வீராங்கனை மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் ஆணையர்கள்
- ஞானேஷ் குமார் மற்றும் சுபீர் சிங் சந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளனர், இவர்கள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவார் .
- தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023 இன் படி தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
ஹரியானாவின் புதிய முதல்வர்
- ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
- இவருக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவி பிரமாணம் செய்து வைத்தார்
மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 80(3) பிரிவின்படி கலை, அறிவியல், இலக்கியம் அல்லது சமூக சேவை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை குடியரசு தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கலாம்.
- சுதா மூர்த்தி அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இவர் கன்னடம், ஆங்கில மொழி எழுத்தாளர் மற்றும் சமூகப்பணி தொண்டில் சிறந்து விளங்குபவர்.
குடியுரிமை திருத்த விதிகள் 2024
- டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவிற்கு வந்த வங்காளதேசம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், சைனர்கள், பௌத்தர்கள், ஆசியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இச்சட்டத்தின் மூலம் இந்திய குடியுரிமை பெற தகுதி உடையவர்கள் ஆவர்
- குடியுரிமை திருத்த விதிகள் 2024 குடியுரிமை விதிகள் 2009 திருத்துகிறது. மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அமல்படுத்த முயலுகிறது.
- இச்சட்டம் 2019 அன்று தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க உதவும்.
- குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 முஸ்லிம் அல்லாத துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
- முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்பித்தது
முதல் நீருக்கடியிலான மெட்ரோ சேவை
- கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது
- இது கொல்கத்தாவில் இரட்டை நகரங்களான ஹவுரா மற்றும் சால்ட் லேக் ஆகியவற்றை இணைக்கும்
- இது கூகுளி ஆற்றின் அடியில் 16.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை
- ஹரியானாவில் ஹிஸாரில் உள்ள ஜிண்டாஸ் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தில் அமைந்துள்ளது
- இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலயை மத்திய எங்கு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யன் சிந்தியா சமீபத்தில் திறந்து வைத்தார்
இந்தியாவின் முதல் சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் ஆராய்ச்சி மையம்
- நோக்கம்: சிவில் விமான போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்
- ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் தெலுங்கானா இந்தியாவின் முதல் சிவில் போக்குவரத்து அமைப்பின் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடியின் திறந்து வைத்தார்
சர்வதேச கூட்டுறவு அருங்காட்சியக கட்டிடம்
- கூட்டுறவு அருங்காட்சியக கட்டிடம் கேரளாவின் கோழிக்கோட்டில் திறக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் கூட்டுறவு அருங்காட்சியகமாகும்.
மனித வளர்ச்சிக் குறியீடு(HDI) 2023-24
- ஐக்கிய நாடுகளில் மேம்பாட்டு திட்டத்தால் மனித வளர்ச்சி அறிக்கை 2023 - 24 வெளியிடப்பட்டுள்ளது.
- கருப்பொருள்: Breaking the Grid lock: Reimagining cooperation in a polarized world
- இந்தியா மனித வளர்ச்சி குறியீட்டில் நடுத்தர பிரிவில் உள்ளது.
- 2022-ல் இந்தியா 134-வது இடத்தில் உள்ளது.
- 2022-ல் இந்தியாவில்,
- வாழ்நாள் எதிர்பார்ப்பு காலம்: 67.7 ஆண்டுகள்
- சராசரி பள்ளி படிப்பில் காலம்: 12.6 ஆண்டுகள்
- தனிநபர் வருமானம்: 6,951
பாலின சமத்துவமை குறியீடு 2022
- 193 நாடுகளில் இந்தியா 0.437 மதிப்பெண்களுடன் 108 வது இடத்தில் உள்ளது
காற்று தர அறிக்கை 2023
- சுவிட்சர்லாந்தின் IQ Air அமைப்பு சமீபத்தில் காற்று தர அறிக்கையை வெளியிட்டது.
- அதிக மாசுபட்ட நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
1-வங்கதேசம்
2-பாகிஸ்தான்
- உலகில் மிகவும் மாசுபட்ட தலைநகராக புது டெல்லி இடம் பெற்றுள்ளது.
- உலகில் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 42 இந்தியாவில் உள்ளது
உலக மகிழ்ச்சி குறியீடு (WHR)-2024
- இந்த குறியீட்டில் இந்தியா 126 வது இடத்தில் உள்ளது.
- இந்தியாவில் முதியவர்கள் அதிக வாழ்க்கை திருப்தியுடன் வாழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது.
- தொடர்ந்து ஏழாவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்திலும்,டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
இந்திய காசநோய் அறிக்கை 2024
- மத்திய சுகாதார அமைச்சகத்தால் இ்வ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- 2015 முதல் இந்தியாவில் காசநோய் பாதிப்பு 16 சதவீதம் மற்றும் இறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளது.
- இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 1 இலட்சம் மக்கள் தொகைக்கு 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022-ல் 1 இலட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதம் 23 ஆகும்.
- இந்தியா காசநோயை ஒழிப்பதற்கான இலக்காக 2025 -யை நிர்ணயித்துள்ளது.
திட்டங்கள்
பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா
- பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு மத்திய அமைச்சரவு ஒப்புதல் அளித்துள்ளது.
- நோக்கம் : ஒரு கோடி வீடுகளின் கூரையில் சூரிய தகடுகளை 75,021 கோடி மதிப்பீட்டில் அமைப்பதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 300 மீட்டர்கள் வரை இலவச மின்சாரம் வழங்குவது.
PM-AJAY
- பிரதான் மந்திரி அணுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா
- இது மூன்று திட்டங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
- 1.பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா(PMAGY)
- 2. பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு சிறப்பு மத்திய உதவி திட்டம் (SCA முதல் SCSP வரை)
- 3. பாபு ஜக்ஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா(BJR-CY)
- நோக்கம்: இத்திட்த்தின் மூலம் சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கும் மற்றும் கல்வியில் பின்தங்கிய சமூகங்களுக்கும் உகந்த கற்றல் சூழலை மேம்படுத்துவது ஆகும்.
நமோ ட்ரோன் தீதி திட்டம்
- இத்திட்டத்தின் நோக்கம் பெண்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் பொருளாதார வலுவூட்டல் மற்றும் நிதி சுயாட்சியை மேம்படுத்துவதாகும். இத்திட்டத்தின் கீழ் விவசாய நோக்கங்களுக்காக ட்ரோன் பைலட்டாக கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் தொடர்புடைய நோக்கங்களுக்காக ஆளில்லா விமானங்களை இயக்க தேர்வு செய்யப்பட்ட 1000 பெண்களுக்கு ட்ரோன்களை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்
PM-SURAJ போர்ட்டல்
- PM-SURAJ :பிரதான் மந்திரி சமாஜிக் உதனேவம் ரோஜ்கர் ஆதாரித் ஜன்கல்யான்
- சமூகத்தில் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு கடன் ஆதரவை வழங்குவதற்காக இந்த போர்ட்டல் தொடங்கப்பட்டது.
- சமூகத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்கனவே கிடைக்கும் அனைத்து கடன் மற்றும் கடன் திட்டங்களின் முன்னேற்றத்தையும் கண்காணிக்கும் வகையில் இந்த போர்ட்டல் இருக்கும்
SAKHI செயலி
- SAKHI-Space -borne Assistant and Knowledge Hub for Crew Interaction
- இச்செயலியை விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கியுள்ளது.
- மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்தை இஸ்ரோ 2025 இல் தொடங்க திட்டமிட்டுள்ளது.
- விண்வெளி வீரர்கள் பூமியுடன் தொடர்பு கொள்ளவும் அவர்களின் உணவு அட்டவணைகள் குறித்து அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் இந்த செயலி உதவும்.
விண்வெளிச் செய்திகள்
அக்னி-5
- உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- இச்சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) Multiple Independently Target Re-Entry Vehicle(MIRV ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நடத்தியது.
- MIRV தொழில்நுட்பம் - ஒரு ஏவுகணை பல போர்க்கப்பலை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
முதல் திரவஆக்சிஜன் - மண்ணெண்ணெய் இராக்கெட்
- சென்னையே மையமாக கொண்ட இயங்கும் விண்வெளி அடிப்படையில் ஆன ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் என்ற தனியார் நிறுவனம் அதன் முதல் ராக்கெட் ஆன அக்னிபான் ஆர்பிட்டல் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டரை (SorTeD) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவியது.
அக்னிபான் SorTeD
- தனியார் ஏவுதளத்திலிருந்து இருந்து ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் ஆகும். இந்தியாவின் முதல் செமி கிரையோஜெனிக் இஞ்சின் ராக்கெட் ஆகும்.
- உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட இன்ஜின் மற்றும் உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டது.
- இன் ஸ்பேஸ் நிறுவனத்தின் முயற்சியின் கீழ் ISRO உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நிறுவனம் அக்னிக்குல் காஸ்மோஸ் ஆகும்.
சிவசக்தி தளம்
- சந்திராயன் 3 -ன் சந்திராயன் மூன்றில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இப்பெயரை சர்வதேச வானியல் சங்கம் IAU அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து உள்ளது
கலாம் 250
- கலாம் 250 என்பது விக்ரம்-1ன் ( ஏவு வாகனம்) நிலை 2 ஆகும்.
- விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான sky root Aerospace சமீபத்தில் கலாம் 250 ஏவுதலை வெற்றிகரமாக சோதனை செய்தது.
- இச்சோதனையானது ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
விருதுகள்
அவ்வையார் விருது 2024
- பாஸ்டினா சூசை ராஜ் (எ) பாமா அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இவர் சிறந்த எழுத்தாளர் ஆவார். இவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தலித் மக்களுக்காக இலக்கியத்தின் மூலமாக சமூகத் தொண்டாற்றி வருகிறார்.
- இவர் எழுதிய கருக்கு என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது 2000 ஆண்டிற்கு ஆண்டில் கிராஸ் வேர்ல்ட் புக் விருதைப் பெற்றுள்ளது.
- அவ்வையார் விருது 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் சர்வதேச மகளிர் தினத்தை குறிக்கும் வகையில் நிறுவப்பட்டது.
தேசிய படைப்பாளிகள் விருது
- மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட 23 படைப்பாளிகளுக்கு தேசிய படைப்பாளிகள் விருது இவ்வாண்டு வழங்கப்பட்டது.
- சிறந்த கதை சொல்லிக்கான விருதை தமிழகத்தை சேர்ந்த கீர்த்திகா கோவிந்தசாமி பெற்றார்.
ஆஸ்கார் விருதுகள் 2024

- 96 ஆவது ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் வழங்கப்பட்டது
- சிறந்த இயக்குனர்: கிறிஸ்டோபர் நோலன், ஓப்பன் ஹைமர் (Oppenheimer)
- சிறந்த படம்: ஓபன் ஹைமர் (Oppenheimer)
- சிறந்த நடிகர்: சில்லியன் மர்பி, ஓப்பன் ஹைமர் (Oppenheimer)
- சிறந்த நடிகை எம்மா ஸ்டோன் , புவர் திங்க்ஸ் (Poor Things)
சாகித்ய அகதாமி விருது
- 2024 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமியின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் கண்ணையன் தக்ஷிணாமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவரது கருங்குன்றம் என்ற நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
- மமாங் தாயின் (அருணாச்சலப்பிரதேசம்) The Black Hill என்ற ஆங்கில நாவலை கண்ணையன் தக்ஷிணாமூர்த்தி கருங்குன்றம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
பாரத ரத்னா 2024
- ஜனாதிபதி திரௌபதி முர்மூ அவர்கள் 2024 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா விருதை வழங்கினார்.
- 2024 ஆம் ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெற்றவர்கள்,
- பி வி நரசிம்ம ராவ்
- பி சவுத்ரி சரண் சிங்
- கர்பூரி தாக்கூர்
- டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன்
- எல் கே அத்வானி
- பாரத ரத்னா விருது : இலக்கியம் அறிவியல் மற்றும் கலை போன்ற துறைகளில் ஆற்றும் சேவைக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இது இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும். நிறுவப்பட்ட ஆண்டு 1954 .
விளையாட்டுச் செய்திகள்
பாரிஸ் ஒலிம்பிக் 2024
- 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பாரிஸில் (பிரான்ஸ்) நடைபெற உள்ளது.
- இந்திய ஒலிம்பிக் சங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமலை இந்திய ஒலிம்பிக் குழுவின் கொடி ஏந்தி செல்பவராகவும் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமை இந்திய ஒலிம்பிக் குழுவின் ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் நியமித்துள்ளது.
தமிழ்நாடு செய்திகள்
நம்மாழ்வார் விருது
- முதல் பரிசு கோ. சித்தர் தஞ்சாவூர்( 2.5 லட்சம் ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் )
- இரண்டாவது பரிசு கே வி பழனிசாமி திருப்பூர் மாவட்டம்
- மூன்றாம் பரிசு கே எழிலன் காஞ்சிபுரம் மாவட்டம்
- இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்குவதற்காக நம்மாழ்வார் விருது வழங்கப்படுகிறது
தோழி விடுதிகள்
- பணி புரியும் பெண்களுக்காக தோழி விடுதிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 21 தோழி விடுதிகள் நிறுவப்பட்டுள்ளன
- சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையானது அதன் கீழ் செயல்படும் பத்து தங்கும் விடுதிகளை பணிபுரியும் பெண்களுக்காக தோழி விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் சீரமைக்க முன்மொழிந்து உள்ளது. இவ்விடுதிகள் 1980 இல் அமைக்கப்பட்டன.
- அவற்றில் 10 விடுதிகள் ஏற்கனவே தோழி விடுதிகளாக ஒன்பது இடங்களில் மாற்றப்பட்டுள்ளன.
நீங்கள் நலமா திட்டம்
- மாநில அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களை முறையாக செயல்படுத்துவது உறுதி செய்வதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்காக முதல்வர், அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பயனாளிகளுடன் தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்களின் கருத்துக்களை பெறுவார்கள்.
HBV தடுப்பூசி திட்டம்
- விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையார் புற்றுநோய் நிறுவன கண்காணிப்பு மையத்தில் HBV தடுப்பூசி திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
- திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 9 - 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான இலவச தடுப்பூசி வழங்கப்படும்.
- தடுப்பூசியில் இரண்டு தவணை பயனாளிகளுக்கு வழங்கப்படும். கர்ப்பப்பை புற்றுநோய் முக்கியமாக மனித பார்பிலோனா வைரசால் ஏற்படுகின்றது
மக்களை தேடி மருத்துவம்
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் போன்ற மிகவும் பாதிப்படையக்கூடிய மக்கள் பயனடைந்துள்ளதாக மாநிலத் தழுவிய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் தொற்று அல்லாத நோய்களான நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கான பரிசோதனை அதிகமாகவும், புற்றுநோய் பரிசோதனை மிகவும் குறைவாகவும் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
- மக்களை தேடி மருத்துவம் திட்டம் 2021 இல் தொடங்கப்பட்டது.
- மருத்துவ சேவையை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சேர்ப்பதாகும்.
முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு
- இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் 30 பேர் கொண்ட முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இம்மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.
நான்கு புதிய மாநகராட்சிகள்
- தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் அமைப்பு சட்டம் 1998 இன் கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க நான்கு புதிய மாநகராட்சிகள் நிறுவப்பட உள்ளது.
- அவை,
- புதுக்கோட்டை
- நாமக்கல்
- திருவண்ணாமலை
- காரைக்குடி
இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
- 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்து நாட்கள் சென்னையில் நடைபெறும் முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
- முதல் உலக செம்மொழி மாநாடு 2010 ஜூன் மாதம் கோவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது
புலிக்குத்தி பட்டான் நடுக்கல்
- திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த புலி குத்தி பட்டான் நடுகல் அகழ்வாராட்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பு பகுதிகளில் இருந்து புலிகளை துரத்தும் போது உயிர் தியாகம் செய்தவர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டுள்ளது.
Resources:
- Virtual Learning Portal https://tamilnaducareerservices.tn.gov.in/
Image Source:
- Sheetal Devi Image by Unknown author - Press Information Bureau, CC BY-SA 4.0
- OSCAR Image by GRAVILLIS™ - https://twitter.com/GravillisInc/status/1732861215519768629/photo/4, Fair use
- Bharat Ratna Image by Kumar Rajendran - Transferred from en.wikipedia to Commons by Hekerui using CommonsHelper., Public Domain
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
No comments:
Post a Comment