இந்திய தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான முக்கிய காரணங்கள்
புதிய நில உடமை கொள்கைகள்
- நிலத்தை விற்பனை பொருளாக்குவது
- வேளாண்மையை வணிகமயமாக்குவது
கட்டுப்பாடுகளற்ற வணிகக் கொள்கை
- பருத்தி சணல் பட்டு போன்ற கச்சா பொருட்கள் இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்தியாவில் விற்கப்பட்டது.
- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்பட்டது.
- உள்நாட்டில் தயாரான பொருட்களுக்கான உள்நாட்டு தீர்வை வரி அதிகமாக்கப்பட்டது.
- அவுரிச்செடி (இண்டிகோ சாயம் ஏற்ற பயன்படும்) பயிர்களை உற்பத்தி செய்யும் படி இந்திய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர். (1859 முதல் 1860 வரை இண்டிகோ புரட்சி)
- 1770 முதல் 1900 வரை இடைப்பட்ட காலங்களில் ஏறத்தாழ 25 மில்லியன் மக்கள் உலக அளவில் பஞ்சத்தால் மாண்டனர்
- 1793 முதல் 1900 வரை பல்வேறு படையெடுப்புகளால் 5 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்
- 1891 முதல் 1900 வரை பஞ்சத்தின் காரணமாக 19 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர் என மெட்ராஸ் டைம் பத்திரிகையின் ஆசிரியர் வில்லியம் டிக்பை குறிப்பிட்டுள்ளார்.
- பட்டினியால் மக்கள் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் பல மில்லியன் டன் கோதுமை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- 1866 - இல் ஒடிசாவில் கடினமான பஞ்சம். ஏறத்தாழ 1 1/2 மில்லியன் மக்கள் பட்டினிக்கு பலியாகினர். அதே சமயம் 200 மில்லியன் பவுண்ட் அரிசி இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
- ஒடிசா சம்பவத்திற்கு பிறகு தாதாபாய் நௌரோஜி இந்தியாவில் வறுமை குறித்து தனது வாழ்நாள் முழுவதுமான ஆய்வை தொடங்கினார்.
- 1876 - 1978 பருவ மழை பொய்த்ததால் மதராசில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் 3.5 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர். ஒடிசா பஞ்சத்தின் போது பின்பற்றப்பட்ட தலையிடாக் கொள்கையையே லிட்டன் பிரபு பின்பற்றினார்.
- 1860 முதல் 1900 வரை 10 பெரும் பஞ்சாங்கள் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 1 1/2 கோடி மக்கள் உயிரிழப்பு என ரோமேஷ் சந்திரதத் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்த கூலி தொழிலாளர் முறை
- உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 5 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கூறியதை விட கூலி குறைவாகக் கொடுக்கப்பட்டது.
- அடிமைத்தொழிலை விடவும் மோசமானதாக இருந்தது. வறுமையில் வாடிய ஏழைத் தொழிலாளர்களை சூழ்ச்சியின் மூலமாகவோ அல்லது கடத்தியோ வர அரசு முகவர்களை அனுமதித்தது. ( முகவர்கள் - கங்காணிகள்)
- ஆங்கிலேய காலனிகளான சிலோன், மலேயா, மொரிசியஸ், பிஜி, கரீபியன் தீவுகள், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தேயிலை காப்பி தோட்டங்களில் பணிபுரிய கூலி தொழிலாளர்கள் தேவைப்பட்டனர்.
- முதலில் அந்த நாடுகளில் வேலைக்கு செல்ல மறுத்த மக்கள் , 1833 மற்றும் 1843 இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலே மக்கள் புலம் பெயர்ந்தனர்.
- தமிழ்நாட்டிலிருந்து சிலோனுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை
- 1828 - 150 பேர்
- 1837 - 10,000 பேர்
- 1846 - 80,000 பேர்
- 1855 - 1, 28,000 பேர்
- 1875 - 3, 80, 000 பேர்
- 1856 - 57 கல்கத்தாவிலிருந்து டிரினிடாட் சென்ற கப்பலில் சென்ற ஒப்பந்த கூலி தொழிலாளர்களின் இறப்பு விபரம் ,
- ஆண்கள் - 12.3%
- பெண்கள் - 18.5%
- சிறுவர்கள் - 28%
- சிறுமியர்கள் - 36%
- குழந்தைகள் - 55%
மேற்கத்திய கல்வி முறை
- 1835-ல் இந்திய கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றியது. ஆங்கிலக் கல்விமுறையை வடிவமைத்தவர் டி.பி.மெக்காலே பிரபு.
- டி.பி.மெக்காலே பிரபு "இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் (Minutes on Indian Education)" எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
- ஆங்கிலேயர் தங்கள் நலனுக்காக கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அதை பாபு வர்க்கமென என ஏளனப்படுத்தினார். ஆனால் அந்த வர்க்கத்தினரே இந்தியாவின் புரட்சிகர, படித்த வர்க்கமாக மாறி நாட்டின் விடுதலைக்காக மக்களை திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர்.
- பொருளாதார நிர்வாக மாற்றங்கள் ஒருபுறமும், மேற்கத்தியக் கல்வியின் வளர்ச்சி மறுபுறத்திலுமாக புதிய சமூக வர்க்கங்கள் வளர இடமளித்தன.
- இந்திய வணிக வர்த்தகர்கள், நிலபிரபுக்கள், வட்டிக்கு பணம் கொடுப்போர்கள் (லேவாதேவி செயல்பாடு) ஆங்கில அரசின் துணை நிர்வாகப்பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டனர்.
- தொடக்கத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த இவர்கள் , பின்னாளில் சுதந்திர இந்தியாவை உருவாக்க ஏனைய மக்களிடையே நாட்டுப்பற்றை ஊட்டினர்.
- நவீன இந்திய கற்றறிந்த வகுப்பை சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், சுவாமி விவேகானந்தர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், அரவிந்த் கோஷ், கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, பெரோஸ்ஷா மேத்தா, சுரேந்திரநாத் பானர்ஜி இந்திய மத மற்றும் சமுதாய இயக்கங்களுக்கு தலைமையேற்றனர்.
1857 புரட்சி
- 1857 புரட்சியே இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்த நாளாகும்.
- 1857 புரட்சி மிகவும் மோசமான முறையில் ஒடுக்கப்பட்டது. இப்புரட்சி குறித்து பம்பாய் ஆளுநர் எல்பின்ஸ்டன் ,அப்போதைய இந்தியாவின் எதிர்கால அரசப்பிரதிநிதி ( 1864) சர். ஜான் லாரன்ஸீக்கு எழுதியது, "நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழி வாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளையடிப்பதைப் பொறுத்தமட்டில் நாம் நாதிர்ஷாவையே மிஞ்சிவிட்டோம்".
இனப்பாகுபாடு:
- அரசு உயர்ப்பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு ஒதுக்கி வைத்தனர்.
- ஆரம்பத்தில் ( வயது 21) குடிமைப்பணித் தேர்வுகளில் இந்தியர்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர்களை எழுதவிடாமல் தடுக்க வயது வரம்பு 19 ஆக குறைக்கப்பட்டது.
- குடிமை பணித்தேர்வுகளை ஒரே நேரத்தில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடத்த வேண்டுமென்ற இந்தியர்களின் கோரிக்கையை ஆங்கிலேய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டங்கள்:
- 1875க்கும் 1885க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்றன.
- 1875- இறக்குமதியாகும் பருத்தி துணிகளின் மீது இறக்குமதி வரி விதிக்க வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்
- 1877-ல் இந்திய அரசுப் பணிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டுமென்று பல முழக்கங்கள்
- 1878- வட்டார மொழிப் பத்திரிக்கைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள்
- 1883- இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவான கிளர்ச்சிகள்
- இப்போராட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றதால் தோல்வியை தழுவின. இந்த உணர்தலின் அடிப்படையில் உருவானதே இந்திய தேசிய காங்கிரஸ்.
Resources:
- Tamilnadu School Samacheer Books
No comments:
Post a Comment