சிந்து சமவெளி நாகரிக முத்திரைகள், அளவுகள் மற்றும் எழுத்துமுறைகள்

 

முத்திரைகளும் எழுத்து முறையும் 


சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்

  • ஹரப்பா பகுதியில் நுரைக்கல், செம்பு, சுடுமண், தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளன. இவை வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். 
  • சிந்துவெளி முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளது சித்திரை எழுத்துக்களாகும். இதுவரை இவை வாசிக்கப்படவில்லை. சிந்துவெளி எழுத்துமுறை வலமிருந்து இடதுபுறமாக மற்றும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளது. 
  • 5000க்கும் மேற்பட்ட எழுத்து தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படுவது 26 குறியீடுகளை கொண்டுள்ளது. தமிழகத்தில் கீழ்வாலை, குளிர்சுனை, புறக்கல், ஆலம்பாடி, செத்தாவரை, நேகனூர் பட்டி ஆகிய இடங்களில் காணப்படும் எழுத்துக்கள் சிந்து சமவெளியில் உள்ள எழுத்துக்களோடு தொடர்புடையது.
  • வடபிராமி மற்றும் தென்பிராமி எழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து வளர்ச்சி பெற்றவை. 
 

எடைகளும் அளவுகளும்


சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட எடைக்கற்கள்

  • ஹரப்பா மக்கள் முறையான எடைகளையும் அளவுகளையும் பயன்படுத்தினார்கள் . ஹரப்பா நாகரிக பகுதிகளில் இருந்து படிகக்கல்லால் ஆன கனசதுர வடிவ எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன. அவற்றின் விகிதம் 1:2:4:8:16:32 ஆகும்.
  • 16-ன் விகிதம் கொண்ட சிறிய அளவீடு இன்றைய அளவீட்டில் 13.63 கிராம் உள்ளது . ஹரப்பா மக்கள் இன்றைய அளவீட்டில் ஒரு இன்ச் = 1.75 சென்டிமீட்டர் ஆக கொள்ளும் விதத்தில் அளவுகோலையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள லோத்தலின் கண்டுபிடிக்கப்பட்ட தந்ததிலால் ஆன அளவுகோல் 1704 மில்லிமீட்டர் வரை சிறிய அளவீடுகளைக் கொண்டுள்ளது. ( சமகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதில் மிகச் சிறிய பிரிவு)
  • நீளத்தை அளக்க அடிமுறையை பயன்படுத்தினர். நிலத்தை அளக்க வெண்கல அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • செப்பு தராசு ஒன்று மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளது. 

ஹரப்பாவில் கிடைத்த தராசு


வணிகமும், பரிமாற்றமும்

  • ஹரப்பா மக்கள் பெரும் வணிகர்களாக இருந்தன. சக்கர வண்டிகளை பயன்படுத்தினர். ஆரக்கால் இல்லாத திடமான சக்கரங்களை பயன்படுத்தினர். போக்குவரத்திற்கு காளைகளையும் பயன்படுத்தினர் .
  • மெசபடோமியா உடன் விரிவான கடல் வணிகம் நடைபெற்று இருக்கிறது. சிந்துவெளி முத்திரைகள் தற்கால ஈராக், குவைத் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளை குறிக்கும் பண்டைய மெசபடோமியாவில் உள்ள சுமேர் பகுதிகளில் கிடைத்துள்ளமை இதை உறுதிப்படுத்துகிறது .
  • சுமேரியாவின் அக்காடிய பேரரசிற்குட்பட்ட அரசன் நாரம் - சின் என்பவர் சிந்துவெளி பகுதியில் உள்ள மெலுக்கா (சிந்து பகுதி) என்னும் இடத்தில் இருந்து அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியுள்ளார் . (கியூனிபார்ம் கல்வெட்டு) 
  • பாரசீக வளைகுடா மற்றும் மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்டதை போன்று உருளை வடிவ முத்திரைகள் சிந்துவெளி பகுதியில் காணப்படுகின்றன.
  • ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி ஓமனில் கண்டெடுக்கப்பட்டுள்ளது . மெசபடோமியாவில் கண்டெடுக்கப்பட்டவை,
  • ஹரப்பாவை சேர்ந்த முத்திரைகள், எடைக்கற்கள், தாயக்கட்டைகள் , மணிகள். கார்னீலியன், வைடூரியம், செம்பு, தங்கம் மற்றும் பலவகைப்பட்ட மரங்கள் ஆகியவை ஹரப்பாவிலிருந்து மெசபடோமியாவிற்கு ஏற்றுமதியாயின. 

சமயம்

  • சிந்து மக்கள் இயற்கையே வழிபாட்டார்கள். அரச மரங்கள் வழிபாட்டுக்குரியதாக இருந்திருக்கலாம்.
  • சுடுமண் உருவங்கள் தாய் தெய்வத்தை போல் உள்ளன.
  • காலிபங்கனில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மகாயோகி முத்திரை : ஹரப்பா


  • ஹரப்பாவில் கிடைத்த முத்திரைகளில் அமர்ந்த நிலையிலுள்ள மகாயோகியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று முகங்களைக் கொண்ட கடவுள் யோக நிலையில் அமர்ந்திருப்பதை போல உள்ளது. அதனை சுற்றி, 
வலப்புறம் - யானை, புலி உருவங்கள்
இடப்புறம் - காண்டாமிருகம், எருது உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
(மூன்று முக கடவுள் - சிவன்
பசுபதி - விலங்குகளின் கடவுள்
யோகேஸ்வரன் - யோகிகளின் கடவுள்) 
  • நீர் வழிபாடு இருந்துள்ளது. முத்திரைகளில் ஆமை, வாயில் சிறு மீன்களை வைத்துள்ள முதலைகள் உருவங்கள் ஆறுகளுடன் சேர்ந்து பொறிக்கப்பட்டுள்ளது .
  • விலங்குகள் வழிபாடு இருந்துள்ளது. (பசு, பறவை, பாம்பு, எருது, புலி) 
  • சூரியன் மற்றும் நெருப்பு வழிபாடும் இருந்துள்ளது. 
 

இறந்தோரைப் புதைத்தல் 

  • சிந்துவெளி மக்கள் இறந்தோரை புதைத்தனர். உடலை அடக்கம் செய்வதில் மூன்று வகையான வழிமுறைகளை பின்பற்றினார்.
  1. முழு உடலையும் புதைப்பது
  2. எரிந்த உடலில் எஞ்சிய பாகங்களையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் தாழிகளில் வைத்து புதைப்பது.
  3. இறந்த உடல்களை ஊருக்கு புறத்தே திறந்த வெளியில் பறவைகள், விலங்குகள் உண்ணும் படி வைத்து விடுவது. எஞ்சிய பாகங்களை அவர்களின் பொருட்களோடு தாழிகளில் இட்டு புதைப்பது. 
  • வடக்கு தெற்காக புதைக்கும் பழக்கம் பண்டைய சிந்து வெளிக்கும் தமிழகத்திற்கும் பொதுவான நடைமுறையாக இருந்துள்ளது.

ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சிக்கான காரணங்கள் 

  • 1900 இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய தொடங்கியது. 
  • சிந்து நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சிந்து நதியின் திசை மாற்றம் காரணமாக இப்பகுதி வீழ்ச்சியடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • நிலநடுக்கம், காடுகள் அழிப்பு, சுற்றுச்சூழல் அல்லது பருவநிலை மாற்றம், நோய் தொற்று ஆகியவையும் காரணங்களாக கூறப்படுகின்றன. 
  • "ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இரு நகரங்கள் மிகப்பெரிய வணிக தளங்களாக இருந்துள்ளன. இங்கு பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு நகரங்களை விட்டு மக்கள் வெளியேறி இருக்கலாம்."
- கிருஷ்ணா ரெட்டி (வரலாற்றாசிரியர்) 
 

சிந்து நாகரிகமும் தமிழர் நாகரிகமும் 

  • ஹரப்பாவில் அகழாய்வு மேற்கொண்ட சர் ஜான் மார்ஷல் திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிடுகிறார் .
  • ஆதிச்சநல்லூர் அரிக்கமேடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள் தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது.
  • தமிழ்நாட்டில் ஆரணி, கொற்கை, மயிலம், மானூர், நாகல், தொண்டி, கண்டிகை போன்ற இடப்பெயர்கள் தற்போதைய பாகிஸ்தானில்( பண்டைய சிந்துவெளியில்) உள்ளன.
  • தமிழ்நாட்டிலுள்ள ஆலூர், அசூர், படூர், இஞ்சூர், குந்தா, நாகல், தானூர், செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ளன. 
  • பலுசிஸ்தானில் பிராகுயி என்ற திராவிட மொழி இன்று வரை பேசப்படுகின்றது.
  • சிந்துவெளி நாகரிகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களாக தான் இருக்க வேண்டும் என்பது சர் ஜான் மார்ஷல், ஆர்.டி.பானர்ஜி மற்றும் ஹீராஸ் பாதிரியார் ஆகியோரின் கருத்தாகும். 
  • பண்டைய காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த யவனர்கள் ( கிரேக்கர்கள்) இந்நாட்டை திரமிளிகே என்று அழைத்தனர்.
  • காஞ்சியை ஆண்ட நந்திவர்ம பல்லவன் தமிழ அரசர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • கங்காதேவி தனது மதுரா விஜயம் நூலில் தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றும், தமிழ் மன்னர்களை திரமிள ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  
  • சிந்துவெளிய எழுத்துக்களுக்கும் திராவிட எழுத்துக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று ஹீராஸ் பாதிரியார், ஐராவத மகாதேவன், பாலகிருஷ்ணன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். 
  • தமிழ் மொழியில் உள்ள ழ,ன, ள, ,ற, ண ஆகிய எழுத்துக்கள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன .

சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி, 

  • கணினி மூலம் பகுப்பாய்வு செய்த இரஷ்ய அறிஞர் யூரி நோரோசேவ் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிட மொழிக் குடும்பம் போன்ற வார்த்தை வரிசையை பெற்றுள்ளன என்று கூறினார்.
  • "ஹரப்பா மொழியின் மூல வேர்கள் தென்னிந்திய திராவிட மொழிகளை ஒத்திருப்பதை நாம் காணலாம்"
- ஐராவதம் மகாதேவன் 
  • "சிந்துவெளி எழுத்துக்களின் குறியீடுகள் திராவிட ஒற்றைக் குறிப்பு வேர்களுடன் ஒத்துப் போகின்றன."
-பர்போலா (வரலாற்று அறிஞர்) 
  • மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியில் உள்ள குறியீடுகள், சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளை ஒத்து இருக்கின்றன என்று கூறுகிறார் ஐராவத மகாதேவன் 
  • மே 2007, தமிழ்நாடு தொல்லியல் துறையால் பூம்புகாருக்கு அருகில் மேலப்பெரும்பள்ளம் என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பானைகளில் உள்ள அம்பு போன்ற குறியீடுகள் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட இலச்சினைகள் போன்று உள்ளன. 

 நடப்பு நிகழ்வுகள்:

  • தோலவிரா (குஜராத்) - யுனெஸ்கோ 2021 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.







Resources:


Images Attribution: 

No comments:

Post a Comment