இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம் மற்றும் முக்கிய அமர்வுகள்

 இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம்

இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியவர் A.O.ஹியூம்


  • A.O.ஹியூம் ( பணி நிறைவுபெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி டிசம்பர் 1885ல், சென்னயில் நடைபெற்றிருந்த பிரம்மஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார்.
  • இக்கூட்டத்தில் அகில இந்திய அளவில் செயல்படும்  ஒரு அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து உருவானது.
  • அதனடிப்படையில் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில்  இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

W.C.பானர்ஜி

 INC முக்கிய அமர்வுகள்

1) ஆண்டு:1885
  • நடைபெற்ற இடம் : பம்பாய்
  • தலைவர்: W.C. பானர்ஜி
  • கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் : 75 பேர்
  • தமிழகத்தின் (சென்னை மாகாணம்) சார்பாக கலந்து கொண்டவர்கள் - 22 பேர். 
2) ஆண்டு: 1886
  • நடைபெற்ற இடம் : கல்கத்தா
  • தலைவர்: தாதாபாய் நௌரோஜி
  • கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் : 436 பிரதிநிதிகள் 
  • தமிழகத்தின் (சென்னை மாகாணம்) சார்பாக கலந்து கொண்டவர்கள் - 47 பேர்.
3) ஆண்டு: 1887
  • நடைபெற்ற இடம் : சென்னை ( மக்கீஸ் தோட்டம் , ஆயிரம் விளக்கு பகுதி)
  • தலைவர்: பக்ருதீன் தியாப்ஜி
  • கூட்டத்தில் பங்குபெற்றவர்கள் : 607 பிரதிநிதிகள் 
  • தமிழகத்தின் (சென்னை மாகாணம்) சார்பாக கலந்து கொண்டவர்கள் - 300 பேருக்கும் மேல்.

4) ஆண்டு: 1888

  • இடம்: அலகாபாத்
  • தலைவர்: ஜார்ஜ் யூல்(முதல் ஆங்கிலேய தலைவர் )

5) ஆண்டு :1896

  • இடம் :கல்கத்தா
  • தலைவர் :ரஹீம்துல்லாஹ் M. சயானி
  • தேசிய பாடல் “வந்தே மாதரம்.. “ முதன் முதலில் பாடப்பட்டது

6) ஆண்டு: 1905

  • இடம்: பனாரஸ்
  • தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே
  • முடிவுகள்:

    • வங்காளப் பிரிவினைக்கு எதிராக அதிருப்தி காட்டப்பட்டது
    • சுதேசி இயக்கம் பிரகடனம் செய்யப்பட்டது

7) ஆண்டு: 1906

  • இடம்: கல்கத்தா
  • தலைவர்: தாதாபாய் நௌரோஜி
  • தீர்மானங்கள்:

    • சுயராஜ்ஜியம், கல்வி, சுதேசி இயக்கம் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது

8)ஆண்டு : 1907

  • இடம்: சூரத்
  • தலைவர்: ராஷ் பிஹாரி கோஷ்
  • முடிவுகள்:

    • காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரண்டாக பிரிந்தது

9) ஆண்டு :1911

  • இடம் :கல்கத்தா
  • தலைவர் - பிஎன் தார்

    • தேசிய கீதம் " ஜன-கண-மன..." முதன்முறையாக பாடப்பட்டது

10)ஆண்டு: 1916

  • இடம்: லக்னோ
  • தலைவர்: அம்பிகா சரண் மஜும்தார்
  • முடிவுகள்:

    • காங்கிரஸின் இரு பிரிவுகளும் ஒன்றுபட்டன, அதாவது மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகள்
    • காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இணைந்து லக்னோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

11) ஆண்டு: 1917

  • இடம்: கல்கத்தா
  • தலைவர்: அன்னி பெசன்ட்(முதல் பெண் தலைவர் )

12) ஆண்டு: 1920

  • இடம்: கல்கத்தா
  • (சிறப்பு INC அமர்வு)
  • தலைவர்: லாலா லஜபதி ராய்
  • முடிவுகள்:

    • ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் கிலாபத் இயக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க இந்த INC அமர்வு அழைக்கப்பட்டது.
    • கூட்டத்தொடரில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

13) ஆண்டு: 1920

  • இடம்: நாக்பூர்
  • தலைவர்: சி.விஜயராகவாச்சாரியார்
  • முடிவுகள்:

    • ஒத்துழையாமை இயக்கத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முயன்றது.
    • எந்தவொரு வெளிநாட்டு வர்த்தக உறவுகளையும் புறக்கணிக்குமாறு வணிகர்களை அது வலியுறுத்தியது.

14)ஆண்டு: 1923

  • இடம்: டெல்லி
  • (சிறப்பு INC அமர்வு)
  • தலைவர்: மௌலானா முகமது அலி
  • முடிவுகள்:

    • வன்முறையற்ற ஒத்துழையாமை கொள்கைகளுக்கு காங்கிரஸ் தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

15) ஆண்டு: 1924

  • இடம்: பெல்காம்
  • தலைவர்: எம்.கே.காந்தி

16) ஆண்டு: 1925

  • இடம்: கான்பூர்
  • தலைவர்: சரோஜினி நாயுடு

  • சரோஜினி நாயுடு காங்கிரஸுக்குத் தலைமை தாங்கிய இரண்டாவது பெண் மற்றும் முதல் இந்தியப் பெண்மணி ஆவார்

17) ஆண்டு: 1929

  • இடம்: லாகூர்
  • தலைவர்: ஜவஹர்லால் நேரு
  • முடிவுகள்:

    • இது வரலாற்று சிறப்புமிக்க பூர்ண சுயராஜ்ஜியம்  (மொத்த சுதந்திரம்) தீர்மானத்தை நிறைவேற்றியது
    •  இதனையொட்டி,  டிசம்பர் 31, 1929 ராவி நதிக்கரையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது
    • ஜனவரி 26, 1930 விடுதலை நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

18)ஆண்டு: 1931

  • இடம்: கராச்சி
  • தலைவர்: வல்லபாய் ஜே. படேல்

19) ஆண்டு: 1936

  • இடம்: லக்னோ
  • தலைவர்: ஜவஹர்லால் நேரு

20)ஆண்டு: 1937

  • இடம்: பைஸ்பூர்
  • தலைவர்: ஜவஹர்லால் நேரு

21) ஆண்டு: 1938

  • இடம்: ஹரிபுரா (குஜராத்)
  • தலைவர்: சுபாஷ் சந்திர போஸ்
  • முடிவுகள்:

    • ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசிய திட்டக்குழு அமைக்கப்பட்டது
    • பூர்ண ஸ்வராஜை அடைவதற்கும், பொறுப்பான அரசாங்கத்தின் தேவைக்கும் தங்கள் உறுதிப்பாட்டை INC வலுப்படுத்தியது.

22) ஆண்டு: 1939

  • இடம்: திரிபுரா
  • தலைவர்: சுபாஷ் சந்திர போஸ்
  • முடிவுகள்:

    • தலைவருக்கான தேர்தலில் காந்தியின் ஆதரவில் இருந்த பட்டாபி சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார் .
    •  இதனால் காந்தியடிகள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.  இதனல் போஸ் தனது தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

23) ஆண்டு: 1946

  • இடம்: மீரட்
  • தலைவர்: ஜே.பி.கிருபாலானி
  • முக்கிய தீர்மானங்கள் :
    • அமைச்சரவை பணித் திட்டத்தை ஏற்றுக்கொள்வது
    • அரசியலமைப்பு சபையில் பங்கேற்பதற்கான முடிவு
    • தேசிய திட்டக்குழுவின் உருவாக்கம்

24) ஆண்டு: 1948

  • இடம்: ஜெய்ப்பூர்
  • தலைவர்: பி. பட்டாபி சீதாராமையா

சென்னை காங்கிரஸ் மாநாடுகள் மற்றும் தலைவர்கள்

  • 1887 - பக்ருதின் தியாப்ஜி
  • 1894 - ஆல்பிரட் வெட்
  • 1898 - ஆனந்த் மோகன் போஸ்
  • 1903 - லால் மோகன் கோஷ்
  • 1908 - ராஜ் பிகாரி கோஷ்
  • 1914 - பூபேந்திரநாத் போஸ்
  • 1927 - M.A.அன்சாரி

                                                                                                                           

Resources:

No comments:

Post a Comment