நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு மற்றும் இந்திய விடுதலைப்போராட்டத்தில் அவருடைய பங்கு

தேசத்தலைவர்கள் : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளம் வயதில்
  • பிறப்பு: ஜனவரி 23, 1897 
  • இடம்: ஒரிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்தார்
  • பெற்றோர்: ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி
  • இவருக்கு எட்டு சகோதரர்கள் மற்றும் ஆறு சகோதரிகள் 
  • தந்தை: வழக்கறிஞர் 
  • தாய்: ஹட்கோலாவின் தட்ஸ் குடும்பத்தை சேர்ந்தவர். தெய்வ பக்தி மிக்கவர். 

நேதாஜியின் வாழ்க்கை வரலாறு


ஆரம்பகால வாழ்க்கை 

  • ஆரம்பக் கல்வியை கட்டாக்கில் உள்ள பப்பஸ்டன்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். 
  • ராவண்ஷா கல்லூரியில் தனது உயர் படிப்பை தொடர்ந்தார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் படிப்பில் உள்ள கவனம் அவருக்கு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வில் இரண்டாம் இடத்தை பெற்று தந்தது. 
  • 1913 ல் கல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சேர்ந்த அவர் 'சி.எப்.ஓட்டன்' என்ற ஆசிரியர் இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை சொன்னதால் ஏற்பட்ட தகராறில் 1915 ல் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
  • பின்னர் 'ஸ்காட்டிஷ் சர்ச்' கல்லூரியில் சேர்ந்து 1918 இல் இளங்கலை பட்டம் பெற்றார். 
  • 1919 ஆம் ஆண்டு ICS (Indian Civil Service) தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார்.
  • 1920 ICS தேர்வில்  நான்காவது மாணவனாக தேர்ச்சியும் பெற்றார்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலை அவரை ஏப்ரல் 1921 ல் சிவில் சர்வீஸ் இல் இருந்து ராஜினாமா செய்யத் தூண்டியது.ராஜினாமா செய்து விட்டு ஜூன் 1921 இந்தியா திரும்பினார். 
  • விவேகானந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். 

இந்திய தேசிய காங்கிரஸில் இணைவு 
  • 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். 
  • ஆரம்பத்தில் சுபாஷ் சந்திரபோஸ் கல்கத்தாவில் காங்கிரஸின் தீவிர உறுப்பினரான தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் பணியாற்றினார்.
  • போஸ் சித்தரஞ்சன் தாசை தனது அரசியல் குருவாகவும் கருதினார். 
இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு 
  • வங்காளத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு கல்வி அறிவு அளித்து அவர்களை தேசிய இயக்கத்திற்கு தயார் படுத்துவதன் மூலம் அவர்களுக்கு தளபதியாக பணியாற்றினார் .
  • 1921ல் தனது புரட்சிகர நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
  • விடுதலையான பிறகு 'ஸ்வராஜ்' என்ற பத்திரிகையை தொடங்கி வங்காள மாகாண காங்கிரஸ் கமிட்டியின் விளம்பரத்திற்காக பணியாற்றினார்.
  • 1922 ல் வேல்ஸ் இளவரசர் வருகையை எதிர்த்து போரிட்டு கைது செய்யப்பட்டார்.
  • போஸ் 1923 இல் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராகவும், வங்காள மாநில காங்கிரசின் செயலாளர் ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
  • சி.ஆர்.தாஸ் அவர்கள் எழுதிய பார்வர்ட் செய்தித்தாளில் ஆசிரியராக பணியாற்றினார்.
  • கல்கத்தா மாநகராட்சியின் தலைமை நிர்வாகியாக 1924ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1927 -ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். நேருவுடன் இணைந்து பணியாற்றினார்.
  • 1928-ல் கல்கத்தாவில் INC-ன் வருடாந்திர கூட்டத்தை ஏற்பாடு செய்தார். எஸ்.சீனிவாச ஐயங்கர் தலைவராகவும், போஸ் மற்றும் தேரு இருவரும் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 1930 - போஸ் கல்கத்தா மேயரானார்.
  • 1930-ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
  • 1930 -ல் போஸ் ஐரோப்பா சென்றார். அங்கு அவர் இந்திய மாணவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெனிட்டோ முசோலினியை சந்தித்தார். 
  • 'இந்திய போராட்டம் 1920 - 1934' என்ற புத்தகத்தின் முதல் பகுதியை அவர் எழுதினார்.
  • இப்புத்தகம் இந்திய சுதந்திர இயக்கத்தை உள்ளடக்கியது. இது 1935-ல் இலண்டனில் வெளியிடப்பட்டது. ஆனால் இப்புத்தகம் ஐரோப்பிய காலனிகளில்  தடை செய்யப்பட்டது. 
திருமண வாழ்க்கை


நேதாஜி மற்றும் அவருடைய மனைவி எமிலி

  • நாட்டின் விடுதலைக்காக பல நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி 1934ல் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலி என்பவரை சந்தித்தார்.
  • டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
  • இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு அனிதா போஸ் என்ற மகளும் பிறந்தார். 

இந்திய தேசிய காங்கிரஸில் தலைமை 


நேதாஜியும் , மகாத்மா காந்தியடிகளும்

  • 1938 ஹரிபுரா மற்றும் 1939 திரிபுரி ஆகிய இருமுறை காங்கிரஸ் மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். 
  • 1938-ல் போஸ் ஜவகர்லால் நேருவை தலைவராகக் கொண்ட தேசிய திட்டக் குழுவை அமைத்தார்.
  • 1939-ல் போஸ் , காந்தியின் விருப்ப வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவை எதிர்த்து திரிபுரி காங்கிரஸ் கூட்டத்தொடரில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். (முத்துராமலிங்க தேவர் அனைத்து தென்னிந்திய வாக்குகளையும் போஸுக்கு திரட்டினார்) 
  • தேர்தலில் பட்டாபி சீத்தாராமையாவின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்  மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால் நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து தானாகவே வெளியேறினார்.
பார்வர்ட் பிளாக் கட்சி 
  • அரசியல் மாறுபாடுகள் காரணமாக போஸ் INCயின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து மே 3, 1939 அன்று வங்காளத்தில் பார்வர்ட் பிளாக் கட்சியை நிறுவினார். 
  • பார்வேர்ட் பிளாக் கட்சி தலைவர்: போஸ்
  • துணைத் தலைவர்: சர் துளசிங் கவிஷார் 
  • பொது செயலாளர்: லால் சங்கர்லால் 
  • செயலாளர் : பண்டிட் பி திரி பாதி மற்றும் குருஷத் நாரிமன் 
  • உ.முத்துராமலிங்க தேவரும் ஃபார்வேர்ட் பிளாக்கில் உறுப்பினராக இருந்தார்.
  • சுபாஷ் சந்திர போஸ் கல்கத்தாவில் வெகுஜன போராட்டங்களை ஏற்பாடு செய்தார். (ஹோல்வெல் நினைவுச் சின்னம் அகற்ற) 
  • ஜூலை 1940 இல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார்.
  • அவரின் உடல்நிலை மோசமடையவே எதிர் வினைகளுக்கு பயந்து அவரை வீட்டுக்கு காவலில் வைத்தனர். 
ஐரோப்பாவிற்கு தப்பி செல்லுதல் 
  • வீட்டு காவலில் இருந்து தப்பி ஜனவரி 17, 1941 ஜெர்மனியின் பெர்லினை அடைந்தார்.
  • ஜெர்மனியில் 'ஆசாத் ஹிந்த்' வானொலியின் ஒளிபரப்பு சேவைகளின் நிர்வகிக்கும் இந்தியாவுக்கான சிறப்பு பணியிடத்துடன் இணைந்து பணியாற்றினார்.
  • போஸ் 1941 முதல் 1943 வரை பெர்லினில் வாழ்ந்தார்.
  • நவம்பர் 1941ல் ஜெர்மன் வானொலியில் அவரது ஒளிபரப்பு ஆங்கிலேயர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
  • மே 1 1942ல் ஹிட்லரின் அழைப்பை ஏற்று ஹிட்லரை சந்தித்தார்.

இந்திய தேசிய ராணுவம் 

  • இந்திய தேசிய இராணுவம் ஜப்பானிய புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் முன்னாள் பிரிட்டிஷ் இந்திய இராணுவ கேப்டன் மோகன் சிங் ஆகியோரால் டிசம்பர், 1941-ல் தொடங்கப்பட்டது 
  • போஸ் ஜப்பானிய போர் கைதிகளை மோகன் சிங்கிடம் ஒப்படைத்து INA வலுப்படுத்தினார் 
  • ஒரு முக்கிய இந்திய புரட்சி தலைவரும் கதர் கலகத்தின் அமைப்பாளரும் ஆன ராஜ்பிகாரி போஸ் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள இந்தியர்களின் ஆதரவுடன் இந்திய சுதந்திரக் கழகத்தை நிறுவினார். 
  • 1942 வாக்கில் INAவின் 40 ஆயிரம் பேர் இருந்தனர் இருப்பினும் ஜப்பானிய ஜெனரலுக்கும் மோகன் சிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாட்டால் டிசம்பர் 1942 இல் INAகலைக்கப்பட்டது. 
  • அக்டோபர் 21, 1943இல் போஸ் சிங்கப்பூரில் 'இந்திய தேசிய ராணுவம்' அல்லது 'ஆசாத் ஹிந்த் ஃபவுஜ்' க்கு புத்துயிர் அளித்தார். 
  • பெண்கள் பிரிவு கேப்டன் லக்ஷ்மி சுவாமிநாதன் தலைமையிலான இராணுவ பிரிவு 'ராணி ஆஃப் ஜான்சி' ரெஜிமென்ட் என்று அழைக்கப்பட்டது.
  • போஸ் இந்திய சமூகத்தினரிடம் வானொலி மூலம் உரையாடி இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார். 
  • 1944 இல் ஆசாத் ஹிந்த் வானொலி ஒளிபரப்பு உரையின் மூலமாக மகாத்மா காந்தியை 'தேசத்தின் தந்தை' என்று அழைத்த முதல் நபர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.
  • 1944 இல் INA ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டது. மார்ச் 18, 1944 மணிப்பூர் பகுதியில் 'மொய்ரங்' என்ற இடத்தில் மூவர்ண கொடியை ஏற்றியது. ஆனால் INA பல காரணங்களால் தோல்வியை தழுவியது.
  • ஆகஸ்ட் 15, 1945 நேதாஜி வானொலி மூலம் மக்களுடன் உரையாடினார். "இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள் இந்தியாவை நிரந்தரமாக அடிமை தளத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. ஜெய்ஹிந்த்" என்று கூறினார்.

போஸ் மரணம் 

  • ஆகஸ்ட் 18, 1945 போஸ் தற்போது தைவானியாவில் அமைந்துள்ள பார்முசாவின் விமான விபத்தில் இறந்தார்.
  • போஸ் மரணத்திற்கு பிறகு INA முற்றிலும் கலைக்கப்பட்டது.


போஸின் புகழ்மிக்க முழக்கங்கள் 


"நான் தீவிரவாதி தான் எல்லாம் கிடைக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் என் கொள்கை"

"எனக்கு ரத்தம் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன்" 

 "டெல்லி சலோ" 

"ஜெய்ஹிந்த்" (ஜெய்ஹிந்த் முழக்கத்திற்கு சொந்தமானவர் தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் பிள்ளை உலகறிய செய்தவர் நேதாஜி)







Resources:


Image Attribution :

No comments:

Post a Comment