இந்திய தேசிய காங்கிரஸில் மிதவாதிகள், தீவிரவாதிகள்

 மிதவாத தேசியவாதிகளின் காலம் (1885 - 1905)

  • ஆங்கிலேயர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.
  • தங்களுடைய கருத்துகளையும் ,கோரிக்கைகளையும் ஆங்கிலேயர்களுக்கு மனுக்கள் மூலம் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் ஆங்கிலேயர்களின் கருத்துக்களை மக்களிடம் தெரிவித்தனர்.
  • இவர்கள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர்.
  • ஆங்கிலேர்களின் முடிவை எதிர்த்து கேள்வி கேட்பவர்களாக இல்லை. அவர்களுக்கு விசுவாசியாகவே இருந்தனர்.
  • காங்கிரசிலிருந்த ஒரு சாரருக்கு இந்த நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், அக்கட்சிகுள்ளேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்கள் மிதவாதிகளின் கோரிக்கைகளை "அரசியல் பிச்சை" போல் உள்ளது என்றனர்.

மிதவாத தேசியவாதிகள்:

  1. சுரேந்திரநாத் பானர்ஜி
  2. தாதாபாய் நௌரோஜி
  3. பெரோஷா மேத்தா
  4. கோபால கிருஷ்ண கோகலே
  5. எம். ஜி. ரானடே

சுரேந்திரநாத் பானர்ஜி (1848 - 1925):


மிதவாதி : சுரேந்திரநாத் பானர்ஜி


  • 1848-ல் கல்கத்தாவில் பிறந்தார். 1868-ல் பட்டபடிப்பு முடித்தவர், இந்திய குடிமைப்பணி தேர்வுக்காக இங்கிலாந்து சென்றார்.
  • குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றும் , வயதை கரணம் காட்டி அவரை ரத்து செய்தனர். நீதிமன்றத்திர் வழக்கு தொடர்ந்து மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சில்கட் நகரில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஆங்கிலேயே அரசு அவரை பணியிலிருந்து நீக்கியது. இதற்கு எதிராக இங்கிலாந்து சென்று முறையிட்டும் பயனில்லாமல் போனதால் இந்தியா திரும்பினார்.
  • கல்கத்தாவில் மெட்ரோபொலிட்டன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றினார்.
  • 1876-ல் இந்திய தேசிய சங்கம் (Indian National Association)என்னும் அமைப்பை நிறுவினார். பின்னர் இவ்வமைப்பு 1885-ல் காங்கிரசுடன் இணைக்கப்பட்டது.
  • 1879-ல் பெங்காலி என்ற ஆங்கில நாளிதழை தொடங்கினார்.
  • 1882-ல் ரிப்பன் கல்லூரியைத் தொடங்கி அதில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தற்போது இக்கல்லூரி சுரேந்திரநாத் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.
  • இந்திய தேசிய காங்கிரசில் இரண்டு முறை தேசிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
    •      புனே - 1895
    •     அகமதாபாத் - 1902
  • காந்தியடிகளின் ஒத்துழையமை இயக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் தீவிரவாதிகளின் கருத்துக்களையும் ஆதரிக்கவில்லை.
  • ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகிய சுரேந்திரநாத் பானர்ஜி , 1925 ஆம் ஆண்டு பரக்பூரில் தன்னுடைய 77 ஆவது அகவையில் உயிரிழந்தார்.


 தாதாபாய் நௌரோஜி (1825- 1917)


இந்தியாவின் முதுபெரும் மனிதர் தாதாபாய் நௌரோஜி

  • இந்தியாவின் முதுபெரும் மனிதர் 
  • இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான அதிகாரியாக இங்கிலாந்தில் அறியப்பட்டார் 
  • பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் அவையில் உறுப்பினரான முதல் இந்தியர் ஆவார்.
  • 1865- இலண்டனில் இந்திய சங்கத்தை நிறுவினார்.
  • 1866-ல் இலண்டனில் கிழக்கிந்தியக் கழகம் எனும் அமைப்பை தோற்றுவித்தார்.
  • 1870களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1892ல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 1886- கல்கத்தா
    • 1893- லாகூர்
    • 1906-  கல்கத்தா
  • 1901- ல் "வறுமையும், பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்" (Poverty and Un British Rule in India ) என்ற நூலை எழுதினார்.
  • இந்நூலில் செல்வச்சுரண்டல் எனும் கோட்பாட்டை முன்வைத்தார். 1835 முதல் 1872 வரை ஒவ்வொரு ஆண்டும் 13 மில்லியன் பவுண்ட் மதிப்புடையப் பொருட்கள் இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் , ஆனால் அந்த அளவிற்கு பணம் இந்தியா வந்து சேரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல் (Voice of India) , ராஸ்ட் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிக்கைகளை தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

 கோபாலகிருஷ்ண கோகலே (1866 - 1915):


மிதவாதி : கோபாலகிருஷ்ண கோகலே


  • காந்தியின் அரசியல் குரு
  • 1889-ல் கோகலே , M.G.ரானடேவின் வழிகாட்டுதலால் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
  • 1890-ல் புனே சர்வஜனிக் சபையின் கௌரவ செயலாளராக தேந்தெடுக்கப்பட்டார்.
  • 1905 - பனாரஸ் மநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1905 இல் இந்திய பணியாளர் சமூகம்( Servants of Indian Society) எனும் அமைப்பை உருவாக்கினார். இதன் நோக்கம் இந்திய தேசத்திற்கு தொண்டு செய்யும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதே ஆகும் 


 தீவிரவாத தேசியவாதிகளின் காலம் (1905 -1917) 


    மிதவாதிகளின் அணுகுமுறைகளான மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்குக் கொள்வது, விண்ணப்பம் அனுப்புவது போன்றவற்றிற்கு மாற்றாக தீவிரமான அணுகுமுறைகளை பரிந்துரைத்தோர் தீவிர தேசியவாதிகள் என்றழைக்கப்பட்டனர்.


 தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்கள்


    காங்கிரஸின் ஒரு பிரிவினர் மிதவாத தேசியவாதிகளின் அணுகுமுறையின் மீது நம்பிக்கையை இழந்தனர். அவர்கள் சுதந்திரத்திற்கு அரசின் கருணையைச் சார்ந்திருக்கவில்லை, சுதந்திரம் பெறுவது தங்களின் உரிமை என்று நம்பினா். 

  • 1892ல் இந்திய கவுன்சில் சட்டப்படி சட்டசபை விரிவாக்கம் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியும் மிதவாத தேசியவாதிகள் பெற தவறினர். 

  • 1896-97 காலக்கட்டத்தில் ப்ளேக் நோய் மற்றும் பஞ்சத்தினால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகினர் 

  • 1899 கல்கத்தா மாநகராட்சி சட்டம் (கர்சன் பிரபு) மூலமாக இந்தியர்களில் அதிகாரம் குறைக்கப்பட்டது 

  • 1904-பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி தன்மை குறைக்கப்பட்டது.

  •  1905 வங்கப் பிரிவினை


தீவிர தேசியவாதிகள்:

  1. பாலகங்காதர திலகர்
  2. லாலா லஜபதிராய்
  3. பிபின் சந்திரபால்
  4. அரவிந்த் கோஷ்

 பாலகங்காதர திலகர் (1856-1920):


இந்திய அமைதியின்மையின் தந்தை பாலகங்காதர திலகர்


  • இந்தியாவில் பிரிட்டிஷருக்கு எதிரான ஒரு முழுமையான இயக்கத்தை தோற்றுவித்தவர் பாலகங்காதர திலகர்
  • திலகர் இரண்டு பத்திரிக்கைகளில் ஆசிரியராகப் பணிப்புரிந்தார்.
    • கேசரி - மராத்தி மொழி
    • மராட்டா- ஆங்கில மொழி
  • சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என்று பாலகங்காதர திலகர் முழங்கினார் 
  • இந்திய அமைதியின்மையின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
  • மக்களை தேசிய போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பதற்காக சிவாஜி பண்டிகை (1895) மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை (1893) தொடங்கினார்.
  •  1916 இல் பூனாவில் தன்னாட்சி இயக்கத்தை நிறுவினார். 

 லாலா லஜபதிராய் (1865 - 1928)


பஞ்சாபின் சிங்கம் லாலா லஜபதிராய்


  • பஞ்சாபின் சிங்கம் ( பஞ்சாப் கேசரி) என்று அழைக்கப்பட்டார். 
  • மகிழ்ச்சி அற்ற இந்தியா என்ற நூலை எழுதினார் 
  • 1916 இல் அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தை நிறுவினார்.
  • பஞ்சாபி என்ற செய்திதாளில் தொகுப்பாளராக இருந்தார்.
  • சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் போலீசாரால் (ஜேம்ஸ் ஸ்காட்) நடத்தப்பட்ட தடியடியில் காயமடைந்து நவம்பர் 17, 1928 அன்று உயிரிழந்தார்


 பிபின் சந்திர பால் (1858 - 1932)



புரட்சி சிந்தனைகளின் தந்தை பிபின் சந்திர பால்


  • இந்தியாவின் புரட்சி சிந்தனைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
  • இவர் எழுதிய நூல்கள், 
    • இந்தியாவின் ஆன்மா 
    • இந்திய தேசியம் 
    • சமூக மறுமலர்ச்சியின் அடிப்படை 
    • சுயராஜியமும் தற்கால நிலைமையும்
  • பத்திரிக்கைகளில் இதழாசிரியர் பணி,
    • பெங்கால் பப்ளிக் ஒப்பீனியன்( Bengal Public Opinion) -1882
    • டிரைபூன் (Tribune) -1887
    • நியூ இந்தியா (The new India) - 1892
    • வந்தே மாதரம் தினசரி (Bandematharam) - 1906















Resources:

Image Attribution :

No comments:

Post a Comment