ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள்
- சிந்துவெளியில் மைய அரசு இருந்தமைக்கான சான்றுகள் மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ளன
- நகரத்தின் தெருக்கல் அகலமாகவும் நேராகவும் சுகாதார வசதி கொண்டதாகவும் அமைக்கப்பட்டு இருந்தன
- மேல் நகர அமைப்பு: சிட்டாடல் மேற்பகுதி சற்று உயரமானது அது கோட்டை எனப்பட்டது. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர். பெருங்குளமும் தானிய களஞ்சியமும் இருந்தது.
- கீழ்நகர அமைப்பு: நகரத்தின் கிழக்கு பகுதி சற்று தாழ்வானது அதிக பரப்பு கொண்டது. பொதுமக்கள் வசிக்கும் இடமாக இருந்தது
- தெருக்கல் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன பெரிய தெருக்கள் 33 அடி அகலமும் சிறிய தெருக்கள் 9 முதல் 12 அடி வரை அகலமும் கொண்டதாக இருந்தது.பெரிய தெருக்களில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையும் இருந்தது. மூன்று வண்டிகள் ஒரே வரிசையில் செல்லும் வகையில் பெரிய சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
- தெருக்கள் ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டி கொள்ளும் படியும் இருந்தன. ஹரப்பா மக்கள் கட்டுமானத்திற்கு சுட்ட, சுடாத செங்கற்களையும், கற்களையும் பயன்படுத்தினார்கள்.
- கழிவுநீர் வடிகால்கள் திட்டவட்டமான ஒழுங்குடன் கட்டப்பட்டன வீடுகள் சேற்றுமண்ணால் ஆன செங்கற்கள்களாலும், கழிவு நீர் வடிகால் சுட்ட செங்கற்களாலும் கட்டப்பட்டன.
- வீடுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களைக் கொண்டிருந்தன. வீடுகளில் சுட்ட செங்கற்களால் தளம் அமைக்கப்பட்ட குளியல் அறையும் சரியான கழிவுநீர் வடிகாலும் இருந்தன.
- மேல் தளம் இருந்ததை உணர்த்தும் வகையில் சில வீடுகள் படிக்கட்டுகளை கொண்டிருந்தன. பல வீடுகளில் வீடுகளில் சுற்றிலும் அறைகளுடன் கூடிய முற்றமும், கிணறும் அமைந்திருந்தது.
- அரண்மனைகளோ, வழிபாட்டு தலங்களோ இருந்ததை தீர்மானிக்க கூடிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஏறத்தாழ எல்லா நகரங்களிலும் மூடப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. வடிகால்கள் செங்கற்கள், கல் தட்டைகளைக் கொண்டு மூடப்பட்டிருந்தன.
- வடிகால்களில் நீர் தேங்காமல் செல்ல மென் சரிவைக்கொண்டு இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் திடக்கழிவுகளை தேக்கும் குழிகள் இருந்தன.
ஹரப்பா தானிய களஞ்சியம்
- செங்கற்களால் அடித்தளம் இடப்பட்ட பெரிய உறுதியான கட்டட அமைப்பு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டன
அகலம் 135 அடி
- சுவர்கள்,
கனம் 9அடி
- இவை இரண்டு வரிசைகளாக கட்டப்பட்டு இருந்தன. இவ்விரண்டு வரிசைகளுக்கு இடையில் உள்ள தூரம் 23 அடி ஆகும்.ஒவ்வொரு வரிசையிலும் ஆறு மண்டபங்களும் ஒவ்வொரு மண்டபத்திலும் மூன்று பெருஞ்சுவர்களும் அதில் நான்கு அறைகளும் இருந்தன. மண்டபத்தின் தரை மரப்பலகையால் ஆனது. தல வெடிப்புகளில் கோதுமை, பார்லி, திணை வகைகள், எள் மற்றும் பருப்பு வகைகளின் மிச்சங்கள் சிதறி கிடந்தன.
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ஹரியானா மாநிலத்தில் உள்ள ராக்கிகார்ஹியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தைச் சார்ந்தது.
மொகஞ்சதாரோ பெருங்குளம்
- இதன் அளவு 39 அடி நீளம் X 23 அடி அகலம் X 8 அடி ஆழம் ( 11.88 மீ X 7.01 மீ X 2.43 மீ )
- இப்பெருங்குளம் நன்கு அகன்று செவ்வக வடிவத்தில் அமைந்திருந்தது. இது நகரின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.நீர் கசியாத கட்டுமானத்திற்கான மிகப் பழமையான சான்று ஆகும். அதன் சுவர்கள் ஜிப்சம் செறிந்த சுண்ணச்சாந்தால் பூசப்பட்டு (இயற்கை தார்) நீர் புகாதபடி இருந்தன.
- குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருக்க நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது.
- குளத்தின் நான்கு பக்கங்களிலும் நடைபாதை இருந்தது. வடக்கு பக்கத்திலும் தெற்கு பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைத்துள்ளது.
- நடைபாதையின் அருகே பல அறைகளும் இருந்தன. அருகில் இருந்த கிணற்றிலிருந்து நீர் இறைக்கப்பட்டு பெருங்குளத்தில் விடப்பட்டது.
- குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றவும் புதிய நீரை உள்ளே கொண்டு வரவும் செங்கற்களால் கட்டப்பட்ட நீர் பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குளத்தின் தென்மேற்கு மூலையில் நீராவி பயன்பாட்டிற்கான வசதியும் செய்யப்பட்டு இருந்தது.
மொகஞ்சதாரோ கூட்ட அரங்கு:
- மிகப்பெரிய பொது கட்டிடம் கூட்டு அரங்கு ஆகும்
- 20 தூண்கள் 4 வரிசைகளை கொண்டு பரந்த விரிந்து காணப்பட்டது.
வேளாண்மை:
- ஹரப்பா மக்கள் நிலையாக வாழ்வதற்கு வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது.
- கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள் மற்றும் வெவ்வேறு திணை வகைகளை பயிரிட்டார்கள்.
- ஹரப்பா மக்கள் இரட்டை பயிரிடல் முறையை பின்பற்றினார்கள்.
- உழவுக்கு கலப்பையை பயன்படுத்தினார்கள்.
- உழுத நிலங்களை காலிபங்களில் காண முடிகின்றது. பாசனத்திற்கு கால்வாய்களையும், கிணறுகளையும் பயன்படுத்தினார்கள்.
- வேளாண்மைக்கு திமிலுடன் இருக்கும் காளைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. ஒட்டகங்களும் எருமைகளும் வேளாண்மைக்கு பயன்பட்டன.
கால்நடை வளர்ப்பு:
- ஹரப்பாவில் மேய்ச்சலும் ஒரு முக்கியமான தொழிலாக இருந்தது.
- செம்மறியாடு, வெள்ளாடு, கோழி உள்ளிட்ட பறவைகளை வளர்த்தார்கள். பன்றி, எருமை, யானை போன்ற விலங்குகள் குறித்த அறிவும் அவர்களுக்கு இருந்தது.
- ஆனால் குதிரையைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
- ஹரப்பாவில் மாடுகள் செபு எனப்பட்டன. பெரிய உடல் அமைப்பை கொண்ட இவ்வகை மாடுகள் முத்திரைகளில் காணப்படுகின்றன.
- மெசபடோமிய புராணத்தில்,
என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. (ஹாஜா பறவை- மயில்)
- பூனை, மான், மயில், வாத்து மற்றும் கிளி போன்றவற்றையும் வளர்த்தார்கள். வீட்டை பாதுகாக்கவும் வேட்டைக்காகவும் நாயை வளர்த்தனர்.
உணவு முறை
- ஹரப்பா மக்களின் உணவில் மீன், பறவை இறைச்சி ஆகியவையும் இருந்தது. கோதுமை, பார்லி, பேரிச்சம்பழம், பால் மற்றும் இறைச்சி வகைகளையும் மக்கள் உண்டனர்.
- தானிய வகைகளும், பட்டாணி முதலிய பருப்பு வகைகளும், முலாம்பழம் முதலிய பழ வகைகளும் பயிரிடப்பட்டன.
- ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளின் இறைச்சியையும் ஆமை, மீன் முதலை முதலியனவும் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
- இறைச்சி வகைகளை பதை பதப்படுத்தி வைத்தும் உண்டனர்.
- மாவு அரைக்கும் இயந்திரங்கள், அம்மி, ஆட்டுக்கல், உரல், எண்ணெய் சட்டி, இட்லி சட்டியும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் ஆகும்.
உடைகள் மற்றும் அணிகலன்கள்
- ஹரப்பா மக்கள் துணியாலான ஆடைகளை அணிந்தார்கள். கல்லாலும், உலோகங்களாலும் ஆன அணிகலன்களை பயன்படுத்தினார்கள்.
- பருத்தி, பட்டு ஆகியவை குறித்த அறிவு இருந்தது.
- கார்னீலியன், செம்பு, தங்கம் ஆகியவற்றால் ஆன அழகிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களை உருவாக்கினர். அவற்றில் சில பொறிக்கப்பட்ட வடிவங்களை கொண்டுள்ளன. இவை மெசபடோபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களை பயன்படுத்தினார். இக்கற்கள் கார்னீலியன் என அழைக்கப்படுகின்றது.
- கல் அணிகலன்களையும் சங்கு வளையல்களையும் செய்தார்கள்.
- பருத்தி ஆடைகளை பயன்பாட்டில் இருந்தன. நூலை சுற்றி வைப்பதற்கான சுழல் அச்சுகள் மூலம் அவர்களை நூற்க்கவும் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
- நாற்பட்டாடை உடலோடு ஒட்டி ஒளி ஊடுருவுமாறு இருந்தது. கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன. ஆண்கள் , பெண்கள் இருவரும் மங்கோலியர்கள் போல முண்டாசு கட்டிக் கொண்டனர்.
மட்பாண்டங்கள்
- மட்பாண்டங்களை சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயில் இட்டு சுடப்பட்டன.
- மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைபாடுகளை செய்தனர்.
- அரச மர இலை, மீன் செதில், ஒன்றை ஒன்று வெட்டும் வட்டங்கள், குறுக்கும் நெடுக்குமானக்கோடுகள், கிடைகோட்டு பட்டைகள், கணித வடிவியல் வடிவங்கள் (ஜியோ மதி) , செடி கொடிகள் என பல்வேறு ஓவியங்களை கருப்பு நிறத்தில் தீட்டினார்கள் .
- டெரகோட்டா எனப்படும் சுடுமட்பாண்டம் செய்வதில் திறமையானவர்கள் .
மருத்துவம்
- சிந்துவெளி மக்கள் கண், காது,தொண்டை,தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை செய்வதற்கு கட்டில் என்ற ஒரு வகையான மீனின் எலும்புகளை பயன்படுத்தினர்.
- மான், காண்டாமிருகத்தின் எலும்புகள், பவழங்கள் மற்றும் வேப்பந்தழைகளும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
உலகங்களும் ஆயுதங்களும்
- செம்பு, வெண்கல கருவிகள் செய்ய தெரிந்தவர்கள்.
- போர் கருவிகள் செய்வது இவர்களின் முதன்மை தொழிலாகும். கோடாரி, ஈட்டி, வில், அம்பு, கதாயுதம், கவன், கத்தி போன்ற ஆயுதங்களை போரில் பயன்படுத்தினர்.
- இரும்பு பற்றி அறிந்திருக்கவில்லை
- ரோரிசெர்ட் எனப்படும் படிக்கக் கல்லில் செய்யப்பட்ட கத்திகளை பயன்படுத்தினார்கள். (செர்ட் - சிலிகா கல்)
- ரோரிசெர்ட் இந்த படிவு பாறை பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில் காணப்படுகிறது .
- கூர்முனை கருவிகள், உளிகள், ஊசிகள், மீன் பிடிப்பதற்கான தூண்டில், சவரக்கத்திகள், தராசு தட்டுகள், கண்ணாடிகள், அஞ்சன கோல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.
- மொகஞ்சதாரோவில் கிடைத்துள்ள நடனமாடும் பெண்ணின் சிலை அவர்களுக்கு மெழுகு அச்சில் உலகத்தை உருக்கி ஊற்றி சிலை வார்க்கும் லாஸ்ட் வோக்ஸ் தொழில்நுட்பம் தெரிந்ததை காட்டுகின்றது.
- எலும்பு, தந்தத்தினால் ஆன கருவிகளையும் பயன்படுத்தினார்கள்.
- செம்பு, தங்கம் மற்றும் பலவகைப்பட்ட மரங்கள் மெசபடோமியாவிற்கு ஏற்றுமதி ஆயின.
- ஹரப்பா பகுதியில் கிடைக்கும் நிக்கல் பொருட்கள் மெசபடோமியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
பொருட்களும் அவற்றின் உற்பத்தி மையங்களும்
வரிசை எண் | நகரம் | பொருள் |
---|---|---|
1 | நாகேஸ்வர், பாலகோட் | சங்கு |
2 | ஷார்ட்டுகை | வைடூரியம் |
3 | லோத்தல் | கார்னீலியன் மணி |
4 | தெற்கு ராஜஸ்தான் | ஸ்டீடைட் (நுரைக்கல்) |
5 | ராஜஸ்தான், ஓமன் | செம்பு |
கலைகள் மற்றும் பொழுதுபோக்குகள்
- ஹரப்பா பொருளாதாரத்தில் கைவினை தயாரிப்பு ஒரு முக்கிய பகுதி ஆகும். மணிகள் மற்றும் அணிகலன் செய்தல், சங்கு வளையல் செய்தல், உலோக வேலைகள் ஆகியவை கைவினை செயல்பாடுகளாக இருந்தன.
- கலைபொருட்கள் ஏற்றுமதியான செய்தி மெசபடோமியாவில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் தெரிகின்றது .
மொகஞ்சதாரோ - தலைவர் சிலை (ஸ்டீடைட் அல்லது மாக்கல்):
- அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை மொகஞ்சதாரோவில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது . (மதகுரு அல்லது அரசன்).
- நெற்றியில் ஒரு தலைப்பட்டையுடனும், வலது கை மேல்பகுதியில் ஒரு சிறிய அணிகலனுடனும் காணப்படுகின்றது.
- தலைமுடியும் தாடியும் ஒன்றாக ஒழுங்கு படுத்தப்பட்டு இருக்கின்றது.
- காதுகளின் கீழ் காணப்படும் இரு துளைகள் தலையின் அணியப்படும் அணிகலன்களை காது வரை இணைக்க ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
- இடது தோள் பூக்கள் மற்றும் வளையங்களின் வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்ட ஒரு மேலங்கியால் மூடப்பட்டுள்ளது.
மொகஞ்சதாரோ நடனமாடும் பெண்சிலை:
- நடனமாடும் பெண் சிலையின் முழங்கையின் மேல் பகுதி வரை வளையல்கள் காணப்படுகின்றன.
- இச்சிலையை பற்றி,
- சர் ஜான் மார்ஷல்
- ஹரப்பா, மொகஞ்சதாரோ மற்றும் தோலவீராவில் கிடைத்த கற்சிலைகள் இப்பகுதியின் முக்கியமான படைப்புகள் ஆகும்.
- பொம்மை வண்டிகள், கிளுகிளுப்பைகள், பம்பரங்கள், கோலி குண்டுகள், சுடுமண் சிலைகள், சில்லுகள் ஹரப்பா மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுகளை காட்டுகின்றன. பகடைக்காய், சொக்கட்டான், சதுரங்கம் அவர்களுடைய சாதாரண பொழுதுபோக்காகும்.
- சதுரங்க அட்டை மரத்தாலும், சதுரங்க காய்கள் களிமண்ணாலும் செய்யப்பட்டு இருந்தன.
- விளையாட்டுப் பொருட்களில் (மொகஞ்சதாரோவில் கிடைத்த) கோலிகளே அதிகமாக கிடைத்துள்ளன .
Resources:
- Tamilnadu School Samacheer Books
- https://en.wikipedia.org/wiki/Indus_Valley_Civilisation
Images:
No comments:
Post a Comment