சிந்து வெளி நாகரிகம்
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகம் ஆகும். இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம் சிந்து நாகரிகம். ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படும் சிந்துவெளி நாகரிகம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சுமார் 1.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரவி இருந்தது ஹரப்பா தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் என்பதால் சிந்துவெளி நாகரிகம் ஹரப்ப நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் சிந்து நதிக்கு அப்பாலும் பரவி உள்ளதால் சிந்து சமவெளி நாகரிகம் என்று முன்னர் அழைக்கப்பட்டதற்கு மாறாக சிந்து வெளி நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது .
கால வரையறை
- புவி எல்லை : தெற்கு ஆசியா
- காலப்பகுதி : கிமு 3300 முதல் 1900 வரை
- காலம்: வெண்கல காலம்
- பரப்பளவு: 13 லட்சம் சதுர கிலோமீட்டர்கள்
- பெரிய நகரங்கள் : ஆறு
- கிராமங்கள் : 200க்கும் மேல்
புவி எல்லைகள்
- மேற்கு : சட்காஜென்டோர் (பாகிஸ்தான், ஈரான் எல்லை)
- வடக்கு : ஷார்ட்டுகை (ஆப்கானிஸ்தான்)
- கிழக்கு : ஆலம்கீர்பூர் (உத்திர பிரதேசம்)
- தெற்கு : தைமாபாத் மகாராஷ்டிரா
தொல்லியல் ஆராய்ச்சிகள்
- சுமார் 5000 ஆண்டுகள் பழமையான இன் நாகரிகம் முதன்முதலில் 1921ல் கண்டறியப்பட்டது
- ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை முதன் முதலில் சார்லஸ் மேசன் என்னும் ஆங்கிலேயர் தமது நூலில் விவரித்தார்.அவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்த படைவீரரும் ஆராய்ச்சியாளரும் ஆவார்
"அந்தப் பாழடைந்த செங்கற்கோட்டை உயரமான சுவர்களுடனும் கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது"
- சார்லஸ் மேசன்
- சார்லஸ் மேசன் 1826 இல் ஹரப்பாவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சில செங்கல் திட்டுகள் இருப்பதை கண்டார்
- 1831 இல் அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு அலெக்சாண்டர் பர்னஸ் வருகை தந்தார்
- 1856 இல் லாகூரில் இருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைப்பதற்கான ஹரப்பா அழிக்கப்பட்டது இப்பகுதியில் இருந்து ஒரு முத்திரை அலெக்சாண்டர் கன்னிங்ஹாமுக்கு கிடைத்தது. அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 1853 , 1856 மற்றும் 1875 களில் ஹரப்பாவை பார்வையிட்டார்
அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையாளர் இவரின் உதவியுடன் 1861-ல் இந்திய தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது.
- 1856 இல் லாகூரில் இருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைக்கும் பொருட்டு நிலத்தை தோன்றிய பொழுது ஏராளமான சுட்ட செங்கற்கள் கண்டறியப்பட்டன. அவற்றின் முக்கியத்துவம் உணராமல் அவற்றை ரயில் பாதைக்கு இடையில் போடப்படும் கற்களுக்கு பதிலாக பயன்படுத்தினர். ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரீகத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடக்கு காரணமாக இருந்தவர் சர் ஜான் மார்ஷல். இவர் இந்திய தொல்லியல் துறையின் இயக்குனராக பொறுப்பேற்ற நிகழ்வு இந்திய வரலாற்றின் திருப்புமுனை எனலாம்.
- 1924இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் இயக்குனர் சர் ஜான் மார்ஷல் ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரவிற்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருப்பதை கண்டறிந்தார். இரண்டுமே பெரிய நாகரிகத்தைச் சார்ந்த வெவ்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கு வந்தார்.
- 1940-களில் ஆர்.இ.மார்ட்டினர் வீலர் ஹரப்பாவில் அகழாய்வுகளை நடத்தினார். இது நகர நாகரிகம் என உறுதி செய்தார்.
- இந்திய பிரிவினைக்கு பிறகு ஹரப்பா நாகரிக பகுதியில் பெரும்பாலான இடங்கள் பாகிஸ்தானுக்கு உரியதாகிவிட்டன. எனவே ஆய்வாளர்கள் இந்தியாவில் உள்ள ஹரப்பா பகுதிகளை கண்டறிய ஆவல் கொண்டனர். இத்தகைய முயற்சியில் காளிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, தோலாவீரா ஆகியவை அகழாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
- 1950 களுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பயணங்களும் அகழாய்வுகளும் ஹரப்பா நாகரிகத்தையும் அதன் இயல்பையும் புரிந்து கொள்ள உதவின.
ஹரப்பா பண்பாட்டின் முக்கிய நிலைகள்
- ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலை
- ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை
- ஹரப்பா பண்பாட்டின் உச்ச நிலை
- ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை
1.ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய நிலை
- காலம் : கிமு 7000 முதல் 5500 வரை - முதல் பண்பாட்டு காலம்
கி மு 4800 முதல் 3500 வரை - மூன்றாம் காலகட்டம்
- மொகஞ்சதாரோவிற்கு வட மேற்கில் 150 மைல் தூரத்தில் உள்ள மெஹர்கர் என்ற இடத்தில் ஹரப்பா பண்பாட்டிற்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் காணப்படுகின்றன.
- மெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு இடமாகும் .
- இது பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தின் போலன் ஆற்று பள்ளதாக்கில் அமைந்துள்ளது
- இது தொடக்ககால மனிதர்கள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்ட இடங்களில் ஒன்று.
- மக்கள் வேளாண்மைகளும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டதற்கான சான்று கிடைத்துள்ளது.
- புதிய கற்காலத்திலிருந்து மக்கள் அரைத்த தானியங்களையும், சமைத்த உணவுகளையும் உண்ண தொடங்கினார்கள். இது பல் கோளாறுகளுக்கு பிற உடல் பிரச்சினைகளுக்கும் வழி வகுத்தது . உயிருள்ள ஒரு மனிதனின் பல்லில் துளையிடப்பட்டதற்கான மிகப் பழமையான சான்று மெஹர்கரில் கிடைத்துள்ளது .
- மண்பாண்டங்கள் பயன்படுத்தப்படவில்லை.
2. ஹரப்பா பண்பாட்டின் தொடக்க நிலை
- காலம் கி மு 3300 முதல் 2600 வரை
- சிந்து சமவெளியில் நகரங்கள் தோன்றி வளரத் தொடங்கின.
- மக்கள் பெரும் கிராமங்களை உருவாக்கி அங்கு வாழ்ந்தனர்
- எடுத்துக்காட்டு: அம்ரி, கோட்டிஜி (பாகிஸ்தானின் மேற்கு பகுதி)
3.ஹரப்பா பண்பாட்டின் உச்ச நிலை
- காலம் கி மு 200600 முதல் 1900 வரை
- இக்காலகட்டத்தில் பெரிய நகரங்கள் எழுச்சி பெற்றன
- எடுத்துக்காட்டு: மொகஞ்சதாரோ, ஹரப்பா
4. ஹரப்பா பண்பாட்டின் இறுதி நிலை
- காலம் கிமு 1900 முதல் 1700 வரை.
- ஹரப்பா பண்பாடு சிதைவு அடைய தொடங்கியது .
- லோத்தல் நகரமும் அதன் துறைமுகமும் மிகவும் பிற்காலத்தில் தான் நிறுவப்பட்டன.
திட்டமிடப்பட்ட நகரங்கள்
ஹரப்பா
- புதையுண்ட நகரம்
- முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது
- ராவி நதிகரையில் அமைந்துள்ளது.பழைய பஞ்சாபின் மாண்ட்கொமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது (பாகிஸ்தான்).
- 'Gate Way City' என்று அழைக்கப்படுகிறது.
- இங்கு அகழ்வராய்ச்சியில் ஈடுபட்டவர் தயாராம் சாகினி- 1921
முக்கிய கண்டுபிடிப்புகள்
- ஆறு தானிய களஞ்சியங்கள்
- மனித உள்ளமைப்பு காட்டப்பட்ட கற்கள்
- நாயினால் தாக்கப்படுகின்ற மான்
- R-37 கல்லறை
- லிங்கம் மற்றும் யோனி குறியீடு
- செம்பு அளவுகோல்
- தாய் கடவுள்
மொகஞ்சதாரோ
- இறந்தவர்களின் மேடு
- கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1922
- சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது. லர்கானா மாவட்டம் பாகிஸ்தான்
- ஆர் டி பானர்ஜி 1922-ல் மொஹஞ்சதாரோவை கண்டுபிடித்தார்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
- பெரிய நீச்சல் குளம்
- பெரிய தானிய களஞ்சியம்
- நடன மங்கையின் சிலை
- மத குருவின் சிலை
- பசுபதி மகா தேவரின் முத்திரை
- பெரிய கூட்டு அரங்கு
லோத்தல் குஜராத் இந்தியா
- 'லோத்' என்றால் 'இறந்த' என்று பொருள்.
- எஸ்.ஆர்.ராவ் அவர்களால் 1953 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
- துறைமுக நகரம்.
- சிந்து சமவெளியின் மான்செஸ்டர்.
- குஜராத் மாநிலத்தில் உள்ள காம்பே வளைகுடாவில் பொகேவா (சபர்மதி) ஆற்றங்கரையில் அமைந்துள்ளது
கண்டுபிடிப்புகள்
- துறைமுகம்
- மணிகள் செய்யும் தொழிற்சாலை
- கப்பல் கட்டும் தளம்
- அரிசி உமி
- உடைகள், சாயம் மற்றும் சீல்
காளிபங்கன் (ராஜஸ்தான், இந்தியா)
- காளிபங்கன் என்றால் கருப்பு வளையல் என்று பொருள்
- 1960 இல் பிபி.லால் மற்றும் பிகே.தாபர் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது
- கக்கார் நதிக்கரையில் அமைந்துள்ளது
கண்டுபிடிப்புகள்
- உழுசால் நிலம்
- ஒட்டகத்தின் எலும்பு
- வளையல் தொழிலகம்
தோலவீரா (கபீர் மாவட்டம், குஜராத்)
- 1967-ல் ஆர்.எஸ்.பிஸ்த் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது
- சமீபத்தில் கண்டுபிடித்ததில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது
- கட்ச வளைகுடாவில் அமைந்துள்ளது
கண்டுபிடிப்புகள்
- நீர் மேலாண்மை தொழில்நுட்பம்
பனாவாலி (ஹரியானா )
- 1974 இல் ஆர் எஸ் பிஸ்த் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது
கண்டுபிடிப்புகள்
- மணிகள் விற்கும் கடை
- குதிரையின் எலும்புகள்
சாங்கு தாரோ (ராஜஸ்தான்)
- 1931இல் எம் ஜி மசூம் தாரால் கண்டுபிடிக்கப்பட்டது
- கோட்டைகள் அற்ற ஒரே ஹரப்ப நகரம்
கண்டுபிடிப்புகள்
- மணிகள் விற்கும் கடை
- நாயின் கால் தடம்
- பூனையை விரட்டும் நாய்
சர்கோட்டடா (குஜராத்)
- 1964 இல் ஜேபி ஜோசியால் கண்டுபிடிக்கப்பட்டது. மணிகள் விற்கும் கடைகள் இருந்தன
- ரூபார் - சட்லெஜ் நதியோரம் பஞ்சாப்
- கோட்டிஜி - சிந்து மாகாணம்
- ராக்கிகார்ஹி - ஹரியானா
Resources :
- Tamilnadu School Samacheer Books
- https://en.wikipedia.org/wiki/Indus_Valley_Civilisation
No comments:
Post a Comment