மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2024

 

நடப்பு நிகழ்வுகள் - பிப்ரவரி 2024 


மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2024

முக்கிய தினங்கள்

பிப்ரவரி 2

  • உலக ஈர நில தினம் 
  • கருப்பொருள்(2024): சதுப்பு நிலங்களும் மனித நலவாழ்வும் 

பிப்ரவரி 5

  • உலகப் புற்றுநோய் தினம் 
  • கருப்பொருள்(2024) : closest the care gap; everyone deserves access to cancer care 

பிப்ரவரி 9

  • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ( தமிழக அரசால் அனுசரிக்கப்படுகிறது)
  • நோக்கம் : கொத்தடிமை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை 2030க்குள் மாற்ற இலக்கு 

பிப்ரவரி 10

  • தேசிய குடற்புழு நீக்க தினம் 
  • ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ) கொண்டாடப்படுகிறது

பிப்ரவரி 13

  • தேசிய மகளிர் தினம்
  • சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகின்றது 

பிப்ரவரி 21

  • சர்வதேச தாய்மொழி தினம் 
  • கருப்பொருள் (2024) Multilingual education - A pillar of learning and intergenerational learning  

பிப்ரவரி 24

  • தமிழ்நாடு பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்
  • மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அவர்களின் பிறந்த நாள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக 2020 முதல் அனுசரிக்கப்படுகிறது.

பிப்ரவரி 28

  • தேசிய அறிவியல் தினம்
  • ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.  
  • கருப்பொருள் (2024):   Indigenous Technology for viksit Bharat 

சர்வதேச நிகழ்வுகள்


அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவில்


அபுதாபியில் சுவாமி நாராயணன் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது

  • அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோவில் ஆகும்
  • இக்கோவில் அபுதாபியில் உள்ள அல் முரக்கா என்ற பகுதியில் சுமர் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 
  • இக்கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
  • BAPS (Bochasanwasi Shri Akshar Purushottam Swaminarayan Sanstha) என்ற அமைப்பால் இக்கோவில் கட்டப்பட்டது. 

மரியம் நவாஸ்: பாகிஸ்தானில் முதல் பெண் முதல்வர்

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர்

  • மரியம் நவாஸ், பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் முதல் பெண் முதலமைச்சராக பதவியேற்றார்.
  • மரியம் நவாஸ், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மூத்த மகள் ஆவார். 


 தேசிய செய்திகள்


சதா தான்சீக் 2024

  • இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையான முதல் கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்.
  • இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகக் குறிக்கப்படுகிறது.
  • நோக்கம்: 12 நாள் பயிற்சி ஆனது இரு நாட்டு படைகளுக்கும் இடையேயான இயங்கும் தன்மையை மேம்படுத்துவது

தோஸ்தி 16 (2024)

  • இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கை இடையே நடைபெறும் முத்தரப்பு பயிற்சி.
  • மாலத்தீவில் நடைபெற்று வருகிறது 
  • முதன் முதலில் இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே 1991ல் தொடங்கியது. இலங்கை 2012இல் இணைந்தது.

கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுகள் 2024

  • ஆறாவது கேலோ இந்திய விளையாட்டு கேலோ விளையாட்டுகள் சென்னை ஜவகர்லால் நேரு அரங்கத்தில் நிறைவடைந்தது. 
    • முதலிடம் - மகாராஷ்டிரா மாநிலம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பியும் கைப்பற்றியுள்ளது (நான்காவது முறை). 
    • இரண்டாவது இடம் - தமிழ்நாடு
    • மூன்றாவது இடம் - ஹரியானா 
  • தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் முதல் முறையாக டெமோ விளையாட்டாக அறிமுகப்படுத்தப்பட்டது 


மகரிஷி தயானந்த சரஸ்வதி ( 200 வது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது) 

இளம்  வயதில் சுவாமி தயானந்த சரஸ்வதி

  • தயானந்த சரஸ்வதி (1824-1883) ஒரு முக்கியமான இந்து தத்துவவாதி, சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஆரிய சமாஜத்தின் நிறுவனர் ஆவார். 
  • தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் மூல் சங்கர் (Mool Shankar) ஆகும்.
  • தயானந்தர் இந்துக்களின் மத மரபுகளை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில் 1875-ஆம் ஆண்டு ஆரிய சமாஜத்தை தொடங்கினார். அவரது சிந்தனைகள் இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கும் ஒரு தூண்டுதலாக விளங்கின.
  • தயானந்த சரஸ்வதியின் புகழ்பெற்ற புத்தகம் சத்தியார்த்த பிரகாஷ் (Satyarth Prakash).

 

பாரத ரத்னா விருது 2024 (இந்தியாவின் உயரிய குடிமகன் விருது

இந்திய குடிமகனின் உயரிய விருது

  • முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது 
  • முன்னாள் பிரதமர் பி வி நரசிம்மராவ் , சவுத்ரி சரண் சிங் ( வட இந்திய விவசாயிகளின் தலைவராக போற்றப்பட்டவர்)  மற்றும் பசுமை புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராமிய விருதுகள் 2024

  • சக்தி குழுவானது the moment ஆல்பத்திற்காக உலகளாவிய சிறந்த ஆல்பம் பிரிவில் 2024 ஆம் ஆண்டிற்கான கிராமிய விருதை வென்றது 
  • சக்தி குழுவில் சங்கர் மகாதேவன் கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாஸ் ஜாகிர் உசேன் மற்றும் வி செல்வகணேஷ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் 

58 ஆவதுஞானபீட விருது (2024)

  • உருது கவிஞர் குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராமபத்ராச்சாரியா ஆகியோர் தேர்வு.
  •  ஞானபீட விருது இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகும்.
  • 1944 இல் நிறுவப்பட்ட பாரதிய ஞானபீட நிறுவனத்தால் இவரது வழங்கப்படுகிறது 
  • குல்சார்: ஒரு பிரபல உருது கவிஞர், அவரது கவிதைகள் மற்றும் பாடல்களுக்கு புகழ்பெற்றவர். இவர் உருது இலக்கியத்தில் மகத்துவமான பங்களிப்பு செய்துள்ளார்.
  • ஜகத்குரு ராமபத்ராச்சாரியா: சமஸ்கிருதத்திற்கான சிறந்த அறிஞர், பல தத்துவப் பாடல்களைப் படித்தவர் மற்றும் ஆராய்ச்சியாளர். இவர் சமஸ்கிருத மொழியின் பாதுகாப்புக்கும், மேம்பாட்டுக்கும் முன்வருபவர்.

 ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு

  • நாடு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறு பற்றி ஆராய்வதற்கான குழு சமீபத்தில் முன்னால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உருவாக்கப்பட்டது. 

ஜார்க்கண்ட்டின் முதல்வர்-சம்பாய் சோரன்

  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சம்பாய் சோரன் ஜார்கண்டின் பன்னிரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றார்.
  • தனி ஜார்கண்ட் மாநிலத்தை உருவாக்குவதற்காக 1990களில் நடத்தப்பட்ட போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததற்காக 'ஜார்கண்டின் புலி' என்று அழைக்கப்படுகின்றார்

 பதினாறாவது நிதி ஆணையம் 

  •  16வது நிதி ஆணையத்தின் முதல் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது 
  •  அரவிந்த் பணக்காரியா தலைமை தாங்குகிறார் 
  •  இக்குழு அக்டோபர் 31 2021 பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும் 

லோக்பாலின் புதிய தலைவர் 

  •  நீதிபதி அஜய் மாணிக்க ராவ் கான்வில்கர் நியமனம் 
  • லோக்பால் அமைப்பு இந்தியாவில் 2013 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதற்கான சட்டம், லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம் (2013) என அழைக்கப்படுகிறது.
  • லோக்பால் என்பது இந்தியாவில் ஊழல் எதிர்ப்பு அமைப்பு மற்றும் நெறிமுறைகளை சீர்செய்யும் ஒரு அமைப்பு.
  • லோக்பாலின் தலைவர் ஐந்து பேர் கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்படுகிறது.

  1.  பிரதமர் தலைவர்
  2. இந்திய தலைமை நீதிபதி
  3. மக்களவை சபாநாயகர்
  4. மக்களவை எதிர்க்கட்சி தலைவர்
  5. சிறப்பு சட்ட நிபுணர் 

பொது தேர்வுகள் மசோதா 2024 (முறையற்ற செயல்பாடுகளை தடுக்க)  

  • நோக்கம் : பொதுத்தேர்வு முறைக்கு அதிக வெளிப்படை தன்மை, நேர்மை மற்றும் நம்பகத் தன்மை கொண்டு வருவதற்கான முறையற்ற செயல்பாடுகளை தடுப்பது.
  • அரசுபணிக்கு ஆட்சேர்ப்பு தேர்வுகளில் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காக மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • இதன் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி வரை அவதாரம் விதிக்கப்படும்.

இந்திய கோயிலில் முதல் ரோபோட்டிக் யானை 

  • கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சாடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில், திருப்பணிகளுக்காக ரோபோ யானையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இதன் மூலம் கோயில் திருப்பணிகளுக்கு ரோபோ யானையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா மாறி உள்ளது. 

ஹெலிகாப்டர் மூலம் அவசர மருத்துவ சேவைகள்

  • நாட்டிலேயே முதன் முதலாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேசஷில், அவசர மருத்துவ சேவைகள் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
  • சஞ்சீவினி திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இச்சேவையானது , அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது. 

மிக நீளமான ரயில் சுரங்க பாதை 

  • இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்க பாதை உதம்பூர் (ஜம்மு) மற்றும் பார்முலா (ஸ்ரீ நகர்) இடையே தொடங்கப்பட்டுள்ளது.
  • ரயில் - T 50
  • சுரங்க பாதை நீளம் : 17 12.77 கிலோ மீட்டர்  
  • இந்த ரயிலானது காரி மற்றும் சம்பத் பகுதிக்கு இடையே இயக்கப்படுகிறது. 

மிக நீளமான கேபிள் பாலம்


இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம்

  • இந்தியாவின் நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை (குஜராத்) பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார் .
  • நீளம் : 2.32 கிலோமீட்டர்
  • இப்பாலம் ஓகா நிலப்பகுதியையும், பேட் துவாரகாவையும் இணைக்கின்றது 

முதல் தனியார் வெடி மருந்து உற்பத்தி ஆலை - கான்பூர்

  • இந்தியாவில் வெடி மருந்துகள் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதற்காக முதல் இரண்டு தனியார் வெடி மருந்து உற்பத்தி ஆலைகள் அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தால் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்த இரட்டை தயாரிப்பு வளாகம் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு  

  • இந்திய சூரிய ஆற்றல் நிறுவனம், மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை ராஜ்நந்த்கானில் (சத்தீஸ்கர்) வெற்றிகரமாக அமைத்துள்ளது. 
  • சூரிய சக்தியை பயன்படுத்தி இந்த மின்கல ஆற்றல் சேமிப்பான் ஆற்றலை சேமித்த வைக்கிறது. 
  • இத்திட்டத்திற்கு தேவையான நிதியை உலக வங்கி மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் ஆகியவை அளிக்கிறது.

ஊழல் கண்ணோட்ட குறியீடு 2023

  • 2023 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் இந்தியா 93வது இடத்தில் உள்ளது.
  •  இந்த கணக்கெடுப்பு மொத்தம் 180 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
  • Transparency International என்ற அரசுசாரா நிறுவனம் இக்குறியீட்டை வெளியிட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்கள் 

  • பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது.
  • பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்கிய ஆதினியம் ஆகியவை முறையே இந்திய தண்டனை சட்டம் 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும் .
  • டிசம்பர் 25 2023 அன்று இச்சட்டம் ஜனாதிபதியின் முழு ஒப்புதலை பெற்றது. 

பிரதான் மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா : PM-MKSSY

(Pradhan Mantri Matsya Kisan Samridhi Yojana )

  • மத்திய அமைச்சரவை சமீபத்தில் PM-MKSSY திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. 
  • இது Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மீன் உற்பத்தியை மேம்படுத்தவும், மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்க்கையை உயர்த்தவும் உருவாக்கப்பட்டது. 

PMFBY கீழ் மூன்று புதிய திட்டங்கள் 

  • PMFBY :Pradhan Mantri Fasal Bima Yojana
  • அர்ஜுன் முண்டா பிரதான் மந்திரி பசில் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று முன் முயற்சிகளை தொடங்கி வைத்தார். இவர் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஆவார். 
  • கிஸான் ரசக் ஹெல்ப்லைன் மற்றும் போர்டல்: இந்த திட்டம், விவசாயிகளுக்குப் பசல் பீமா யோஜனா (PMFBY) தொடர்பான கேள்விகளுக்கு உதவுவதற்கான ஒரு மைய ஹெல்ப்லைன் மற்றும் ஆன்லைன் போர்டலை வழங்குகிறது. இது காப்பீட்டுக்கு சம்பந்தமான விவரங்கள், புகார் செயல்முறை மற்றும் திட்டப் பற்றிய பொதுவான தகவல்களை குறிப்பிட்ட நேரத்தில் வழங்கும்.
  • சார்த்தி போர்டல்: சார்த்தி போர்டல், காப்பீட்டு புகார்களை சுலபமாக மற்றும் கையாளக்கூடியதாக அமைக்கப்பட்டது. இது மைய பிளாட்ஃபாரமாகக் கொண்டு, புகார்களை சமர்ப்பிக்கவும், கண்காணிக்கவும் உதவுகிறது.
  • எல்.எம்.எஸ் (லாஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்): லாஸ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் (LMS) பயிர் நஷ்டங்களை மதிப்பீடு செய்ய மற்றும் நிர்வகிக்க உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொழில்நுட்பம் மற்றும் தரவுத்தொகுப்புகளை பயன்படுத்தி, பயிர் சேதங்களை நேர்மையான மற்றும் விரைவான முறையில் மதிப்பீடு செய்ய உதவுகிறது.

SWATI Portal 

  • இதனை இந்திய தேசிய அறிவியல் அகடாமி உருவக்கியுள்ளது.
  • SWATI - Science for Women technology and innovation 
  • இது STEMM துறையில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு ஆன்லைன் Portal ஆகும்.
  • STEMM - Science Technology Engineering Mathematics and Medical Science

 ஸ்வயம் பிளஸ் இணையதளம் 

  • இந்த திறந்தவெளி ஆன்லைன் இணையதளம் மூலம் கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்முறை மேம்பாடு சார்ந்த திட்டங்களை கொண்டு வருவதற்காக முன்னனி தொழில் துறை நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
  • திரு. தர்மேந்திர பிரதான் (மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர்) அவர்கள், ஸ்வயம் பிளஸ் இணையதளத்தை தொடங்கி வைத்தார். 

உலகிலேயே மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் 

  • நோக்கம்:  உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது.
  • இத்திட்டம் 11 மாநிலங்களில் உள்ள 11 முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களை உள்ளடக்கியது. 
  • இந்த முன் முயற்சியின் கீழ் சேமிப்பு கிடங்குகள் மற்றும் பிற விவசாயம் உள் கட்டமைப்புகளை நிர்வகிப்பதற்காக நாடு முழுவதும் கூடுதலாக 500 முதன்மை வேளாண்மை கடன் சங்கங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  

 ராம்சார் தளங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • சமீபத்தில் ஐந்து ஈரநிலங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்ப்ட்டுள்ளன.
  • இதன் மூலம் இந்தியாவில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 75லிருந்து 80 ஆக உயர்ந்துள்ளது.
  •  புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஈர நிலங்கள் 
    •  கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - தமிழ்நாடு 
    •  மாகடி கெரே பாதுகாப்பு காப்பகம் - கர்நாடகா 
    •  லாங்வுட் சோலை - தமிழ்நாடு 
    •  அங்காசமுத்ரா பறவைகள் பாதுகாப்பு சரணாலயம் - கர்நாடகா 
    •  அகனசினி கழிமுகம் - கர்நாடகா 
  • இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈர நிலங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிகமான ஈர நிலங்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

 விண்வெளி செய்திகள்


சதீஸ்தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா


GSLV - F14 ராக்கெட்

  • இன்சாட் - 3 DS செயற்கைக்கோள் GSLV - F14 இராக்கெட் மூலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்(ஸ்ரீஹரிகோட்டாவில்) இருந்து ஏவப்பட உள்ளது. 
  • இலக்கு : இந்த செயற்கைக்கோள் வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை தொடர்புடைய ஆய்வு சேவைகளை மேம்படுத்துவது.
  • GSLV - F14 என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பத்தாவது கிரையோஜெனிக் என்ஜின் ஆகும் 

CE20 கிரையோஜெனிக் என்ஜின் 

  • இஸ்ரோ ககன்யான் திட்டத்திற்காக, LVM 3ஏவுகணையின் CE 20 கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 
  • நோக்கம் : ககன்யான் திட்டமானது 3 மனிதர்களை கொண்ட குழுவை, 400 கிலோ மீட்டர் சுற்று பாதைக்கு மூன்று நாட்கள் விண்வெளிக்கு அனுப்பி அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வருவதாகும்.

ககன்யான் குழு 

  • ககன்யான் திட்டத்தின் மூலம் 2025-ல் விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்களின் பெயர்களை இந்திய அறிவித்துள்ளது.
  •  விமானப்படை விமானிகளின் பெயர்கள் 

  1.  குரூப் கேப்டன் பிரசாத் பாலகிருஷ்ணன் நாயர் 
  2.  குரூப் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்
  3.  குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் 
  4.  வின் கமாண்டர் சுபான்ஷி சுக்லா 

தமிழக செய்திகள்


மக்களை தேடி ஆய்வக சேவை திட்டம்

  • மக்களை தேடி ஆய்வாக சேவை திட்டத்தை தொல்லைவிளை (நாகர்கோவில் ) ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • நோக்கம்: நோய் கண்டறியும் ஆய்வகங்களின் வசதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆதரிக்கும் விதமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டம்

  • இத்திட்டம் மூலம் நடப்பாண்டில் ( 2024 ) கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
  • நான் முதல்வன் திட்டம் மார்ச் 2022ல் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கணித் தமிழ் மாநாடு 2024 

  • சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8 அன்று தொடங்கியது.

புதுமைப்பெண் திட்டம்

  • நோக்கம் : 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூபாய் 1000 /- உதவி தொகை வழங்குவது.
  • ஆளுநர் உரையில், 2023-2024 ஆம் ஆண்டில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் மூலம் 2023 -2024 அரசு பள்ளிகளில் இருந்து கல்லூரி சேரும் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் 

  • திருச்சியில் பிப்ரவரி 7, 2024 ஆம் தேதி அன்று கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கும் என்று விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு பஞ்சாயத்துகள் திருத்த மசோதா 202

  • மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 5/ 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இரண்டில் எது முன் வருகிறதோ அதுவரை பதவியில் இருக்கலாம் .
  • இம்மசோதா மூலம் தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் , 1994 திருத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் மினி டைட்டில் பூங்கா 

  • விழுப்புரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இது வானூர் தாலுகாவில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அமைந்துள்ளது.
  • 5 ஏக்கர் நிலப்பரப்பில் 63,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • தூத்துக்குடி, காரைக்குடி ,தஞ்சாவூர், வேலூர் நாமக்கல், திருப்பூர், சேலம் மற்றும் உதகமண்டலம் ஆகிய இடங்களில் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக பூங்காக்கள் நிறுவப்பட உள்ளன.

பஞ்சுமிட்டாய்களில் ரோடமைன் -பி

  • பஞ்சுமிட்டாகளில் தொழில்துறை சாயமான ரோடமைன- பி இருப்பது மாதிரிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன் காரணமாக பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மகிழ்ச்சி திட்டம்

  • சமீபத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் மகிழ்ச்சி திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார்.
  • நோக்கம்:குடிப்பழக்கத்திற்கு அடிமையான மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான காவலர்களுக்கு சிகிச்சை அளிப்பது.
  • இது காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கான மன நலத்திட்டம் ஆகும்.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்

  • தமிழ்நாட்டில், மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தை நிறுவுவதற்காக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது .
  • இது தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த ஒரு சட்டபூர்வமான அங்கீகாரமாகும்.

யுமாஜின் 2024

  • இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு.
  • கருப்பொருள் inform the present in weight the future 
  • தமிழக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை நடத்தியுள்ளது.
  • யுமாஜின் 2024க்கான புத்தாக்க கூட்டளர் நாடு ஆஸ்திரேலியா ஆகும். இம்மாநாட்டின் போது இலவச வைபை திட்டத்தின் முதல் கட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது. 

விடியல் பயணத் திட்டம்

  • பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டமான விடியல் திட்டம் சமீபத்தில் நீடிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின் விரிவாக்கம் மலைப்பகுதிகளில் செயல்பட உள்ளது. இது முதல் கட்டமாக உதகமண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற மலைப்பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

யானைகளுக்காக செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்பு 

  • நோக்கம்: இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுப்பது.
  • நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் நிறுவப்பட்டுள்ளது.

18 ஆவது வனவிலங்கு சரணாலயம் 

  • தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயத்தை தமிழ்நாடு அரசு மாநிலத்தின் 18 வது வனவிலங்கு சரணாலயமாக அறிவித்துள்ளது.
  • ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலையில் 8014.8 பரப்பளவில் அமைந்துள்ளது.
  • இப்பகுதி ஏற்கனவே தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் புலிகள் வழித்தடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு 2024

  • ஈர நில பறவைகள் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 6,80,028 ஈர நில பறவைகள் உள்ளன. இதில் 5,36,245 நீர் பறவைகளும் மற்றும் 1,43,783 நிலப்பரவைகளும் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளன.





Resources:

Image Attributions:

No comments:

Post a Comment