ஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள்
முக்கிய தினங்கள்
- ஜனவரி 4 - உலகப் பிரெய்லி தினம்
- பிரெய்லியைக் கண்டுபிடித்த லூயிஸ் பிரெயிலியின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.
- பிரெய்லி என்பது பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட தொட்டு உணரக்கூடிய ஒரு எழுத்து முறையாகும்.
- ஜனவரி 9 - பிரவாசி பாரதிய திவாஸ்
- மகாத்மா காந்தி 1915, ஜனவரி 9-ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியதை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது
- முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது
- ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்
- சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது
- ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்
- முதல் முதலில் 2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது
- ஜனவரி 25 வாக்காளர்கள் தினம்
- 13 வது தேசிய வாக்காளர் தினம் 2024 ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
- 2013 முதல் இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்த தினம் கொண்டாடப்படுகிறது
- ஜனவரி25, 1950இல் இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.
- ஜனவரி 26 உலக தொழுநோய் தினம்
- உலகத் தொழுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
- 2024 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: "Beat Leprosy"
- ஜனவரி 30 தியாகிகள் தினம்
- மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தியடிகள் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார்.
தேசிய செய்திகள்
- நிதி ஆணையத்தின் புதிய தலைவர்:
- 16 வது நிதி ஆணையத்தின் தலைவராக நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனக்காரியாவை மத்திய அரசு நியமித்துள்ளது.
- அரவிந்த் பனக்காரியா 2015 முதல் 2017 வரை திட்ட குழுவிற்கு பதிலாக தொடங்கப்பட்ட நிதி அயோக்கியன் முதல் துணைத் தலைவராக பணிபுரிந்தவர்.
- இராணுவத்தின் முதல் பெண் சுபேதார்: ப்ரீத்தி ரஜக்
- 2022-ல் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுவதில் ப்ரீத்தி ரஜக் வெள்ளி பதக்கம் வென்றார்.
- MILAN 24 கடற்பயிற்சி
- இது இந்திய கடற்படையின் பன்னாட்டு கடற்படை பயிற்சி ஆகும்.
- பிப்ரவரி 19 முதல் 27 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது
- அயுத்யா கடற்படை பயிற்சி
- இந்தியாவும் மற்றும் தாய்லாந்திற்கு இடையிலான இருதரப்பு கடற்பயிற்சி
- இதற்கு 'எக்ஸ்-அயுத்யா' என்றும் பயிரிடப்பட்டுள்ளது.
- அயுத்யா என்றால் , இந்தியாவில் உள்ள அயோத்தி மற்றும் தாய்லாந்தில் உள்ள அயுத்யா இண்டின் சுருக்கமாகும்.
- GDPமதிப்பு 2023-24
- தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் 2023-24 ஆண்டிற்கான இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி 7.3 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு 7.2 ஆக இருந்தது
- ASER அறிக்கை 2023
- இந்த ஆய்வு இந்தியாவில் கிராமப்புறங்களில் 14 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.
- தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் கணக்கெடுப்புக்கு தேர்வு செய்யப்பட்டது.
- பெரம்பலூரில் 97.2 சதவீத பதின்ம வயதினர் ஏதேனும் ஒரு முறையான கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
- பெரம்பலூரில் கணக்கு எடுக்கப்பட்டவர்களில் 21.4 சதவீதம் பேர் இரண்டாம் வகுப்பு பாடத்தைக் கூட படிக்க முடியவில்லை என தெரிய வந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 25 சதவீதம் குறைவாக உள்ளது.
- இந்தியாவின் பெட்ரோலிய தலைநகரம்:
- இந்தியாவில் பெட்ரோலிய தலைநகரமாக குஜராத் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- குஜராத்தில் இரண்டு பெரிய என்னை சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன.
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட்டின் ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம் (உலகின் மிகப்பெரிய மற்றும் சிக்கலான சுத்திகரிப்பு நிலையம்)
- பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜில் அமைந்துள்ள OPAL ( ONGC Petrol Additions Limited)அதிநவீன பெட்ரோ கெமிக்கல் வளாகம் ஆகும்.
- இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்
- மகாராஷ்டிராவில் மும்பையில் அடல் பிகாரி வாஜ்பாய் செவ்ரி- நவ சேவா அடல் சேது பாலத்தை பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
- இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.
- இதன் நீளம் 21.8 கிலோ மீட்டர்.
- கடலில் சுமார் 16.5 கிலோ மீட்டர் நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிலோமீட்டர் நீளமும் உடையது,
- உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை
- ஆந்திர பிரதேச அரசு விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் திறக்க உள்ளது.
- சமூக நீதியின் சிலை என்றும் அழைக்கப்படுகிறது.
- இதன் உயரம் 206 அடி( சிலை 125 அடி மற்றும் பீடம் 81 அடி)
- இந்தியாவின் முதல் இரவு வான் பூங்கா
- மகாராஷ்டிராவில் உள்ள பென்ச் புலிகள் சரணாலயம் இந்தியாவில் முதல் மற்றும் ஆசியாவின் ஐந்தாவது இரவு பூங்காவாக உருவாகியுள்ளது .
- இந்தியாவில் முதல் இரவு வான் சரணாலயம் லடாக்கில் ஹான்லேயில் அமைந்துள்ள இந்திய வானியல் ஆய்வு மையம் ஆகும்.
- 19வது அணிசேரா உச்சி மாநாடு
- உகண்டாவில் உள்ள பாம்பாலாவின் நடைபெற்றது
- இதன் கருப்பொருள் : Deepening cooperation for shared global fluence
திட்டங்கள்
- MGNREGS திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (ABPS)
- ஜனவரி 1, 2024 ஆம் முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறை மூலம் மட்டுமே ஊதியம் வழங்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது
- MGNREGS திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது.
- பிரேரணா திட்டம்
- மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை பிரேரணா என்ற கற்றல் செயல் முறையை தொடங்கியுள்ளது
- ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக ஒரு வார காலம் அளவிலாளான உண்டு உறைவிட கல்வி திட்டம் ஆகும்
- பிருத்வி விக்யான் திட்டம்
ஐந்து துணை திட்டங்களை உள்ளடக்கியுள்ளது
- பெருங்கடல் சேவைகள், மாதிரி செயல்முறை வளங்கள் மற்றும் தொழில்நுட்பம் - O-SMART
- பூகம்பவியல் மற்றும் புவி அறிவியல் - SAGE
- வளிமண்டலம் மற்றும் காலநிலை ஆராய்ச்சி கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் சேவைகளுக்கான முறைகள் - ACROSS
- ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் மக்கள் தொடர்பு - REACHOUT
- துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி- PACER
- PM ஜன்மன் திட்டம்
- PM ஜன்மன் - பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டம்
- பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களைச் சேர்ந்த ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 540 கோடி நிதி உதவியின் முதல் தவணையை இணை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
- இத்திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் (PMAYG) திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
- MPLADS e-SAKSHI செயலி
- நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் வெளிப்படை தன்மை அணுகல் தன்மை மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதில் இந்த செயலி நோக்கமாக கொண்டு செயல்படுகிறது
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் இச்செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
- சூரிய மேற்கூரை திட்டம்
- பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா
- இத்திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளில் சூரிய மின் தகடுகளை பொறுத்து இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இதன் நோக்கம் 40 ஜிகாவாட் சூரிய திறனை அடைவதை நோக்கமாகக் ஆகும் .
- அம்ரித் தரோஹர் முன் முயற்சி
- நோக்கம்: ராம்சார் தளங்களின் பாதுகாப்பு மதிப்புகளை மேம்படுத்துவது.
- 16 ராம்சார் இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் கீழ் 5 (சதுப்பு நிலங்கள்) முன்னோடி திட்டங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
- சுல்தான்பூர் தேசிய பூங்கா, ஹரியானா
- சிலிக்கா ஏரி, ஒடிசா
- சிர்பூர், மத்திய பிரதேசம்
- யஷ்வந்த் சாகர், மத்திய பிரதேசம்
- பிதர்கனிகா சதுப்பு நிலங்கள், ஒடிசா
- இத்திட்டத்தினை மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அமிர்த் தரோஹர் திறன் மேம்பாட்டு திட்டம் 2023 கீழ் தொடங்கியுள்ளது.
- போயிங் சுகன்யா திட்டம்
- நோக்கம்: விமானப் போக்குவரத்து துறையில் பெண்களின் வருகையை ஆதரிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது
- திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பள்ளிகளில் ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் திறன்களை கற்றுக் கொள்வதற்கும், விமான போக்குவரத்து துறையில் பயிற்சி அளிப்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
விளையாட்டு செய்திகள்
- கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுகள் 2023
- சென்னை ஜவர்கலால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள் தென்னிந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
- கேலோ விளையாட்டில் முதல்முறையாக தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு விருதுகள் 2023
ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களால் தேசிய விளையாட்டு விருதுகள் 2023 வழங்கப்பட்டது.
- மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, 2023
- சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக் ராங்கிரெட்டி (பேட்மிண்டன்)
- அர்ஜுனா விருதுகள் - 26 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது
- தமிழக சதுரங்க வீராங்கனை வைஷாலி அவர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது
- சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருது (வழக்கமான பிரிவு)
- லலித் குமார் - மல்யுத்தம்
- ஆர்.பி.ரமேஷ் - சதுரங்கம்
- மஹவீர் பிரசாத் சைனி - பாரா தடகளம்
- சிவேந்திர சிங் - ஹாக்கி
- கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் - மல்லகம்ப்
- சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியா விருது (வாழ்நாள் பிரிவு)
- ஜஸ்கிர் ஜிங் கிரேவால் - கோல்ப்
- பாஸ்கரன்.இ - கபடி
- ஜெயந்த குமார் புஷிலால் - டேபிள் டென்னிஸ்
விருதுகள்
- எம் எஸ் சுவாமிநாதன் விருது
- பேராசிரியர் பி.ஆர்.காம்போஜ் அவர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான எம் எஸ் சுவாமிநாதன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர உள்ளார்.
- இந்தியாவில் வேளாண் துறையில் உலகளாவிய தாக்கத்தை தன் வாழ்நாளில்ஏற்படுத்திய நபர்களுக்கு இவ்விருது 2004 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள், 2023
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நடத்தப்பட்டது
- ஒட்டுமொத்த பிரிவில் சூரத் மற்றும் இந்தூர் முதலிடத்தை பிடித்தன.
- வாரணாசி தூய்மையான கங்கை நகரமாக தேர்வு
- சிறந்த செயல் திறன் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தேர்வு
- நாட்டில் உள்ள 446 நகரங்களில் சென்னை சென்னை 199 வது இடத்தை பிடித்துள்ளது
பத்ம விருது பெற்ற தமிழர்கள்
- தமிழகத்தில் சேர்ந்த எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
- பத்மவிபூஷன் (இரண்டாவது உயரிய சிவிலியன் விருது)
- வைஜெயந்திமாலா பாலி
- பத்மா சுப்ரமணியம்
- பத்மபூஷன்- விஜயகாந்த்
- பத்மஸ்ரீ
- எம். பத்திரப்பன்
- ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு
- ஜோ. டி . குரூஸ் - இலக்கியம் மற்றும் கல்வி
- நாச்சியார்.ஜி - மருத்துவம்
- சேஷம்பட்டி டி.சிவலிங்கம் - கலை (நாதஸ்வர கலைஞர்)
தமிழகச் செய்திகள்
- கோவையில் வனவிலங்குகளுக்கான மறுவாழ்வு மையம் - RTRC
- ரூபாய் 19.5 கோடி செலவில் தமிழக அரசு தொடங்க உள்ளது
- காயம் அடைந்த மற்றும் ஆதரவற்ற விலங்குகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் பராமரிக்கும் மையமாகும்
- இதே போல் கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- TNEB பாதுகாப்புச் செயலி
- பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான பராமரிப்பு ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது.
- தோழி விடுதிகள்
- தாம்பரம் சானிட்டோரியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாநில அரசு நடத்தும் தோழி விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
- தமிழ்நாடு. முழுவதும் உயர்தர மலிவு விலையில் தங்கும் விடுதிகளை உருவாக்க தமிழ்நாடு பணி புரியும் மகளிர் விடுதிகள் நிறுவனமானது சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரம் அளிக்கும் துறையின் கீழ் உருவாக்கப்பட்டது.
- நான்கு புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி
- 2024 ஆம் ஆண்டு நான்கு புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப் போவதாக இந்திய தொல்லியல் துறையின் அனுமதியை தமிழக அரசு கோரி உள்ளது.
- மருங்கூர், கடலூர்
- கொங்கல் நகரம், திருப்பூர்
- திருமலாபுரம், தென்காசி
- சென்னானூர், கிருஷ்ணகிரி
- பத்தாவது உலகத் தமிழர் பொருளாதாரம் மாநாடு
- சென்னையில் நடைபெறுகிறது
- முதல் உலக தமிழர் பொருளாதாரம் மாநாடு 2009இல் சென்னையில் நடைபெற்றது
- நலம் நாடி செயலி
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தொடங்கி வைத்தார்.
- கற்றல் குறைபாடுகள் உள்ள மாணவர்களை கண்காணிக்க சிறப்பு கல்வியாளர்களுக்கு இந்த செயலி உதவும் .
- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையால் தொடங்கப்பட்டது
- தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் அதிகரிப்பு
- 2022 ல் அதிக உறுப்பு தானம் வழங்கியதற்கான சிறந்த மாநில விருதை தமிழக அரசு பெற்றுள்ளது .
- 2022 உடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் தமிழகத்தின் உடல் உறுப்பு தான 14 சதவீதம் அதிகரித்துள்ளது .
- 2022-ல் 156 ஆக இருந்தது தற்போது 2023-ல் 178 ஆக உயர்ந்துள்ளது
- மக்களை தேடி மருத்துவம்
- இத்திட்டம் 2021ல் கிருஷ்ணகிரியில் தொடங்கப்பட்டது.
- தொற்று அல்லாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்லும் தேவையை நீக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது
- TN BEAT EXPO 2024
- ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான கண்காட்சி தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற்றது.
- தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பட்டியல் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கான தென்னிந்தியாவின் மிகப்பெரிய வணிக கண்காட்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
தமிழக அரசு விருதுகள்
- அய்யன் திருவள்ளுவர் விருது 2024: தவ திரு. பாலமுருகன் அடிமை சுவாமிகள்
- பேரறிஞர் அண்ணா விருது 2023: பத்தமடை பரமசிவம்
- பெருந்தலைவர் காமராஜர் விருது 2023: பூ. பலராமன்
- மகாகவி பாரதியார் விருது 2023: கவிஞர் பழனி பாரதி
- பாவேந்தர் பாரதிதாசன் விருது 2023: முத்தரசு
- முத்தமிழ் காவலர் கி.ஆ.பே. விசுவநாதம் விருது 2023: ஆர் கருணாநிதி
- அம்பேத்கர் விருது 2023: பி. சண்முகம்
- தமிழ் தென்றல் திருவிக விருது 2023: எஸ். ஜெயசீல ஸ்டீபன்
- தந்தை பெரியார் விருது 2023: சுப வீரபாண்டியன்
- கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது 2024 : முகமது ஜீபைர் ( ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர்)
- முதலமைச்சரின் சிறப்பு விருது: பூரணம் (எ) ஆயி அம்மாள் (மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த கோரி தனக்கு சொந்தமான நிலம் 1.52 ஏக்கரை அரசுக்கு வழங்கியதற்காக)
- சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது : எஸ். பாலமுருகன்
- சிறந்த காவல் நிலையம் : C3 S.S.காலனி காவல் நிலையம், மதுரை
- அண்ணா பதக்கம் 2024: யாசர் அராபத், டி.டேனியல் செல்வசிங் மற்றும் எஸ். சிவக்குமார்.
Resources:
No comments:
Post a Comment