TNPSC பொதுத்தமிழ் :மரூஉ பெயர்கள்
அறிமுகம்
நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது இருவகைப்படும். அவை,
1) இயல்பு வழக்கு
2) தகுதி வழக்கு
ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இது மூன்று வகைப்படும். அவையாவன,
1) இலக்கணமுடையது
2) இலக்கணப்போலி
3) மரூஉ
இப்பதிவில் மரூஉ பெயர்களைப் பற்றி விரிவாகக் காண்போம்.
மரூஉ பெயர்கள்
இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
(எ.கா) தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம். இவ்வாறு ஊர்களின் முழுப்பெயர் இங்கு சிதைந்து வருவதால் இவை மரூஉ பெயர்கள் என அழைக்கப்படுகின்றன.
TNPSC பொதுத்தமிழ் பகுதி : ஊர்களின் பெயர்கள் மற்றும் மரூஉ பெயர்கள் – முழுப் பட்டியல்:
ஊர்களின் பெயர்கள் | மரூஉ பெயர்கள் |
---|---|
1. திருச்சிராப்பள்ளி | திருச்சி |
2. கோவன் புத்தூர் | கோயம்புத்தூர் / கோவை |
3. நாகப்பட்டினம் | நாகை |
4. புதுச்சேரி | புதுவை |
5. கும்பகோணம் | குடந்தை |
6. மயிலாப்பூர் | மயிலை |
7. வண்ணார்பேட்டை | வண்ணை |
8. பூவிருந்தவல்லி | பூந்தமல்லி |
9. திருநெல்வேலி | நெல்லை |
10. உதகமண்டலம் | ஊட்டி / உதகை |
11. சோழநாடு | சோணாடு |
12. தேவகோட்டை | தேவோட்டை |
13. பாளையங்கோட்டை | பாளை |
14. நாகர்கோவில் | நாஞ்சி |
15. தஞ்சாவூர் | தஞ்சை |
16. திருநின்றவூர் | தின்னனூர் |
17. புதுக்கோட்டை | புதுகை |
18. சைதாப்பேட்டை | சைதை |
19. ஆற்காடு | ஆருக்காடு |
20. நாமக்கல் | ஆரைக்கல் |
21. ஈரோடு | ஈரோடை |
22. ஏற்காடு | ஏரிக்காடு |
23. கரூவூர் | கரூர் |
24. கோடம்பாக்கம் | கோடலம்பாக்கம் |
25. செங்கற்பட்டு | செங்கை |
26. ஆற்றூர் | ஆத்தூர் |
27. பரமக்குடி | பரம்பை |
28. சிங்காளந்தபுரம் | சிங்கை |
29. அம்பாசமுத்திரம் | அம்பை |
30. அறந்தாங்கி | அறந்தை |
31. கொடைக்கானல் | கோடை |
32. மன்னார்குடி | மன்னை |
33. சோழிங்கநல்லூர் | சோளிங்கர் |
34. மணப்பாறை | மணவை |
35. கருந்தட்டைக்குடி | கரந்தை |
36. விருதுநகர் | விருதை |
37. சங்கரன்கோவில் | சங்கை |
38. மயிலாடுதுறை | மயூரம் |
39. திருத்தணி | தணிகை |
40. திருக்குருகூர் | குருகை |
41. தர்மபுரி | தகடூர் |
42. அலங்காநல்லூர் | அலங்கை |
43. ஸ்ரீவில்லிபுத்தூர் | ஸ்ரீவி |
44. ஸ்ரீவைகுண்டம் | ஸ்ரீவை |
45. சிங்காநல்லூர் | சிங்கை |
👉 whatsapp.com/channel/0029Vb5rLcbHgZWjO2F5UH3E
Resources:
- Tamil Nadu State Samacheer School Tamil Books from 6th Standard to 12th Standard
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"
No comments:
Post a Comment