Indian Constitution Articles 1 to 51A – Explained in Tamil & English for Competitive Exams

 Articles 1 to 51A of the Indian Constitution



The Constitution of India originally had 22 Parts and 395 Articles, but now it consists of 25 Parts and approx. 470 Articles (as amended till date). Among them, Articles 1 to 51A are considered the most fundamental — covering the Union and its territory, citizenship, fundamental rights, directive principles of state policy, and fundamental duties. 

Detailed Notes on Indian Constitution Articles 1 to 51A in Tamil and English – TNPSC, UPSC, SSC Exam Preparation



PART I – THE UNION AND ITS TERRITORY (Articles 1 – 4)




Article 1 – Name and territory of the Union


  • The country is known as India, that is Bharat, and shall be a Union of States.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பெயர் மற்றும் எல்லைகள்: இந்த நாடு "இந்தியா" என்றும் "பாரதம்" என்றும் அழைக்கப்படுகிறது; இது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும்.

Article 2 – Admission or establishment of new States

  • Parliament may by law admit new States into the Union or establish new States.
  • புதிய மாநிலங்களை சேர்த்தல் அல்லது நிறுவல் : புதிய மாநிலங்களை ஒன்றியத்தில் சேர்க்க அல்லது நிறுவ, பாராளுமன்றம் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.


Article 3 – Formation of new States and alteration of areas
  • Parliament has power to form new States, alter names or boundaries.
  • மாநிலங்களின் உருவாக்கம் மற்றும் எல்லை மாற்றங்கள்: பாராளுமன்றத்துக்கு புதிய மாநிலங்களை உருவாக்கும் மற்றும் மாநிலங்களின் பெயர்கள், எல்லைகளை மாற்றும் அதிகாரம் உள்ளது.


Article 4 – Laws under Articles 2 and 3
  • Any law under Article 2 or 3 is not considered a constitutional amendment.
  • 2 மற்றும் 3வது கட்டுரைகளின் கீழ் சட்டங்கள்: இந்த கட்டுரைகளின் கீழ் இயற்றப்படும் சட்டங்கள் அரசியலமைப்புத் திருத்தமாகக் கருதப்படாது.

PART II – CITIZENSHIP (Articles 5 – 11)


Article 5 – Citizenship at the commencement of the Constitution
  • Defines who were Indian citizens at the time of the Constitution’s commencement.
  • அரசியலமைப்பின் துவக்கத்தில் குடியுரிமை: அரசியலமைப்பின் அமல்படுத்தும் நேரத்தில் யார் இந்திய குடிமக்கள் என்றதை விளக்குகிறது.

Article 6 – Rights of citizenship of certain persons who have migrated to India from Pakistan
  • Gives rights to migrants from Pakistan before July 19, 1948.
  • பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடியேறியவர்களின் குடியுரிமை உரிமைகள்: 1948 ஜூலை 19க்குமுன் குடியேறியவர்களுக்கு குடியுரிமை உரிமை அளிக்கப்படுகிறது.

Article 7 – Rights of citizenship of certain migrants to Pakistan
  • Those who migrated to Pakistan after March 1, 1947 are not citizens unless they return under special permits.
  • பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் குடியுரிமை: 1947 மார்ச் 1க்கு பிறகு பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள், சிறப்பு அனுமதியுடன் திரும்பினால்தான் குடியுரிமை பெறலாம்.

Article 8 – Rights of citizenship of certain persons of Indian origin residing outside India
  • Indian origin people living abroad can be citizens if registered by Indian diplomatic missions.
  • வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரின் குடியுரிமை உரிமைகள்: இந்திய தூதரகத்தில் பதிவு செய்தால், அவர்கள் இந்திய குடிமக்கள் ஆவார்கள்.

Article 9 – Persons voluntarily acquiring citizenship of a foreign State not to be citizens
  • If a person voluntarily acquires foreign citizenship, Indian citizenship ends.
  • வெளிநாட்டு குடியுரிமையை விருப்பமாக பெற்றவர்கள் இந்திய குடிமக்கள் அல்ல: வேறொரு நாட்டின் குடியுரிமையை விருப்பமாக பெற்றால், இந்திய குடியுரிமை நீங்கும்.

Article 10 – Continuance of the rights of citizenship
  • Citizens continue to enjoy their rights unless otherwise provided by law.
  • குடியுரிமை உரிமைகளின் தொடர்ச்சி: சட்டப்படி மாறாகக் கூறப்படாத வரை, குடிமக்கள் தங்கள் உரிமைகளை தொடர்வார்கள்.

Article 11 – Parliament to regulate the right of citizenship by law
  • Parliament has the power to make laws regarding citizenship.
  • குடியுரிமையை சட்டப்படி ஒழுங்குபடுத்தும் பாராளுமன்றத்தின் அதிகாரம்: குடியுரிமையைப் பற்றிய சட்டங்களை அமைப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

PART III – FUNDAMENTAL RIGHTS (Articles 12 – 35)


Article 12 – Definition of the State
  • State includes Government, Parliament, Legislature, and local bodies under control of the government.
  • "மாநிலம்" என்ற சொல்லுக்கான வரையறை: மாநிலம் என்றால் அரசு, பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும்.

Article 13 – Laws inconsistent with or in derogation of the fundamental rights
  • Any law violating fundamental rights is void.
  • அடிப்படை உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள்: அடிப்படை உரிமைகளை மீறும் சட்டங்கள் தவிர்க்கப்படுகின்றன.

Right to Equality (Articles 14 – 18)

Article 14 – Equality before law
  • All persons are equal before the law.
  • சட்டத்தின் முன்னிலையில் சமத்துவம்: எல்லோரும் சட்டத்தின் முன் சமமாக இருக்கின்றனர்.

Article 15 – Prohibition of discrimination
  • Prohibits discrimination on grounds of religion, race, caste, sex, or place of birth.
  • வேறுபாடுகள் காட்டக்கூடாது: மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் காட்டக் கூடாது.

Article 16 – Equality of opportunity in public employment
  • Equal opportunity for all in public jobs.
  • அரசு வேலை வாய்ப்புகளில் சம வாய்ப்பு: அனைவருக்கும் அரசுப் பணிகளில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Article 17 – Abolition of Untouchability
  • Untouchability is abolished and its practice is a punishable offence.
  • தீண்டாமை ஒழித்தல்:  தீண்டாமை ஒழித்தல் மற்றும் இதன் செயல்பாட்டினை தடுத்தல்.

Article 18 – Abolition of titles
  • No title (except military/academic) shall be conferred.
  • பட்டங்களை ஒழித்தல்: இராணுவம் மற்றும் கல்வி பட்டங்களைத் தவிர்த்து வேறு பட்டங்கள் வழங்கப்படக் கூடாது.

Right to Freedom (Articles 19 – 22)

Article 19 – Protection of certain rights regarding freedom of speech etc.
  • Right to speech, assembly, association, movement, residence, profession.
  • சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளின் பாதுகாப்பு : பேச்சு, கூட்டம், சங்கம் அமைத்தல், நகர்வு, தங்கும் இடம், தொழில் ஆகிய ஏழு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

Article 20 – Protection in respect of conviction for offences
  • No ex post facto law, double jeopardy, or self-incrimination.
  • குற்றவியல் தண்டனைகளில் பாதுகாப்பு: முந்தைய சட்டங்களை பின்பற்றி தண்டிக்க கூடாது, இருமுறை தண்டிக்கக் கூடாது, தன்னை எதிர்த்துச் சாட்சி தரவேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

Article 21 – Protection of life and personal liberty
  • No person shall be deprived of life or liberty except by procedure established by law.
  • வாழ்வும் தனிப்பட்ட சுதந்திரமும் பாதுகாப்பு: சட்டப்படி இல்லாமல் யாருக்கும் வாழும் உரிமை மற்றும் சுதந்திரம் .

Article 22 – Protection against arrest and detention in certain cases
  • Gives rights regarding arrest and preventive detention.
  • கைதுகள் மற்றும் தடுப்பு கைதுகள் தொடர்பான பாதுகாப்பு: சில சமயங்களில் கைதுகள் மற்றும் தடுப்பு கைதுகள் தொடர்பான உரிமைகள் வழங்கப்படுகின்றன.

Right Against Exploitation (Articles 23 – 24)

Article 23 – Prohibition of traffic in human beings and forced labour
  • Human trafficking, begar (forced labour) and similar forms are prohibited.
  • மனிதக் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பு தடுப்பு: மனிதர்களை விற்பனை செய்வது, கட்டாயமாக வேலை வாங்குவது உள்ளிட்டவை தடைசெய்யப்பட்டுள்ளது.

Article 24 – Prohibition of employment of children in factories, etc.
  • Children below 14 cannot be employed in hazardous work.
  • குழந்தைகளை ஆபத்தான தொழில்களில் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது: 14 வயதிற்கு குறைவான குழந்தைகளை ஆபத்தான தொழில்களில் வேலைக்கு அமர்த்த முடியாது.

Right to Freedom of Religion (Articles 25 – 28)

Article 25 – Freedom of conscience and free profession, practice and propagation of religion
  • Freedom to profess, practice, and propagate any religion.
  • மத சுதந்திரம் மற்றும் மதத்தை பின்பற்றும் உரிமை: மதத்தை நம்பும், பின்பற்றும், பிரசாரம் செய்வதற்கான உரிமை வழங்கப்படுகிறது.

Article 26 – Freedom to manage religious affairs
  • Religious denominations can manage their own affairs.
  • மத அமைப்புகளின் நிர்வாக சுதந்திரம்: ஒவ்வொரு மத அமைப்பும் தங்களுடைய மத விவகாரங்களை தானாக நடத்த உரிமை பெற்றுள்ளன.

Article 27 – Freedom as to payment of taxes for promotion of any particular religion
  • No person shall be compelled to pay any tax for promotion of any religion.
  • மத பிரச்சாரத்திற்காக வரி செலுத்த கட்டாயம் இல்லை: யாரும் ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்காக கட்டாயமாக வரி செலுத்தச் சொல்லப்பட முடியாது.

Article 28 – Freedom from attending religious instruction
  • No religious instruction in government-run educational institutions.
  • அரசு கல்வி நிறுவனங்களில் மதம் தொடர்பான கற்றல் இருக்கக் கூடாது.அரசு நடத்தும் பள்ளிகள் மதப் பாடங்கள் வழங்கக் கூடாது.

Cultural and Educational Rights (Articles 29 – 30)

Article 29 – Protection of interests of minorities
  • Minorities have the right to conserve their language, script, and culture.
  • சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பு: சிறுபான்மையினருக்கு தங்கள் மொழி, எழுத்து, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் உரிமை உண்டு.

Article 30 – Right of minorities to establish and administer educational institutions
  • Religious or linguistic minorities can establish and manage educational institutions.
  • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவும் மற்றும் நிர்வகிக்கும் உரிமை: மத அல்லது மொழி அடிப்படையிலான சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்களை நிறுவும் உரிமை உண்டு.

Article 31 – [Repealed]
  • This article regarding the right to property was repealed by the 44th Amendment in 1978.
  • சொத்துரிமை தொடர்பான உரிமை நீக்கப்பட்டு . இது 1978-இல் 44வது திருத்தத்தால் ரத்து செய்யப்பட்டது. இச்சரத்து தற்போது பகுதி XII-ல் 300A-வாக உள்ளது.

Right to Constitutional Remedies (Article 32)

Article 32 – Right to Constitutional Remedies
  • Allows individuals to move to the Supreme Court to protect fundamental rights.
  • அரசியலமைப்பு வாயிலாக தீர்வு பெறும் உரிமை: அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

Article 33 – Power of Parliament to modify the rights of armed forces, etc.
  • Parliament can restrict rights of armed forces for discipline and duty.
  • பாதுகாப்பு படையினருக்கான உரிமைகள் குறைவு செய்யும் பாராளுமன்ற அதிகாரம்: பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளுக்காக உரிமைகள் மாற்றப்படும்.

Article 34 – Restriction on rights during martial law
  • Rights can be restricted when martial law is in force.
  • படைச்சட்ட காலங்களில் உரிமைகளுக்கு கட்டுப்பாடு: படைச்சட்டம் அமலிலுள்ளபோது, அரசு அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தலாம்.

Article 35 – Power to make laws on fundamental rights
  • Only Parliament can make laws on certain fundamental rights.
  • அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு: சில அடிப்படை உரிமைகள் தொடர்பாக சட்டங்கள் அமைப்பதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


PART IV – DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY (Articles 36 – 51)


Article 36 – Definition of State
  • For Part IV (DPSP), ‘State’ includes government, Parliament, state legislature, etc.
  • மாநிலத்தின் வரையறை – பகுதி IV (DPSP): மாநிலம் என்றால் அரசு, பாராளுமன்றம், மாநில சட்டமன்றம் ஆகியவை சேரும்.

Article 37 – DPSPs are non-justiciable but fundamental in governance
  • Directive Principles are not enforceable in court but important to governance.
  • முறைகாட்டி கொள்கைகள் நீதிமன்றத்தால் அமல்படுத்த முடியாதவையாக இருந்தாலும், ஆட்சி செய்ய மிக முக்கியமானவை. அவை நீதிமன்றத்தில் உரிமையாயில்லை, ஆனால் அரசின் கடமைகளில் முக்கியமானவை.

Article 38 – State to secure a social order for welfare of people
  • The state must strive to promote welfare and justice.
  • மக்கள் நலனுக்காக சமூக ஒழுங்கை நிலைநாட்டும் கடமை. நீதி மற்றும் நலத்தை முன்னேற்றும் வகையில் அரசு செயல்பட வேண்டும்.
Article 39 – Certain principles of policy to be followed by the State
  • Includes equal pay, adequate livelihood, protection of children, etc.
  • அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள். சம உரிமை, சம ஊதியம், குழந்தைகள் பாதுகாப்பு போன்றவை.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமவேலைக்கு சம ஊதியம்
  • Article 39 A: ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி
Article 40 – Organisation of Village Panchayats
  • State shall organize village panchayats and grant them powers.
  • கிராம பஞ்சாயத்துகளின் அமைப்பு. அரசு கிராம பஞ்சாயத்துகளை அமைக்கவேண்டும் மற்றும் அதிகாரம் வழங்க வேண்டும்.

Article 41 – Right to work, to education, and to public assistance
  • The state shall secure the right to work, education, and assistance in case of unemployment, old age, sickness, etc.
  • வேலை, கல்வி மற்றும் அரசு உதவிக்கு உரிமை. வேலை இல்லாதது, வயோதிபம், நோய் போன்ற சமயங்களில் அரசு உதவியும், வேலை மற்றும் கல்விக்கான உரிமையையும் வழங்க வேண்டும்.

Article 42 – Just and humane conditions of work and maternity relief
  • State should provide fair working conditions and maternity leave.
  • நியாயமான வேலை சூழல் மற்றும் மகப்பேறு விடுப்பு. அரசு, வேலை செய்யும் மக்களுக்கு நியாயமான சூழலை வழங்க வேண்டும். மகப்பேறு காலத்தில் சிறந்த உதவிகளை வழங்க வேண்டும்.

Article 43 – Living wage, etc. for workers
  • Ensure living wage, decent standard of life and social & cultural opportunities for all workers.
  • தொழிலாளர்களுக்கான வாழ்வூதியம் மற்றும் பண்பாட்டுரிமைகள். அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்வதற்கேற்ற ஊதியம் மற்றும் சமூக, கலாச்சார வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

Article 43A – Workers’ participation in management
  • Workers should participate in management of industries.
  • தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பங்கேற்பு. தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும்.

Article 44 – Uniform Civil Code for the citizens
  • State shall try to secure a Uniform Civil Code (UCC) for all citizens.
  • ஒரே மாதிரியான சிவில் சட்டம் – யுனிஃபார்ம் சிவில் கோட் (UCC). அனைத்து குடிமக்களுக்கும் சமமான சிவில் சட்டம் அமைய அரசு முயற்சி செய்ய வேண்டும்.

Article 45 – Provision for early childhood care and education
  • Free and compulsory education for children below 6 years.
  • 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் பராமரிப்பு. அரசு, சிறுவயது குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பராமரிப்பை வழங்கவேண்டும்.
Article 46 – Promotion of educational and economic interests of SCs, STs and weaker sections
  • State shall promote education and economy of Scheduled Castes & Tribes and other weaker sections.
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பின்தங்கியோரின் கல்வி மற்றும் பொருளாதாரம் மேம்பாடு. அரசு, எஸ்சி, எஸ்டி மற்றும் பிற பின்தங்கியோரின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

Article 47 – Duty of the State to raise the level of nutrition and public health
  • Prohibition of intoxicating drinks and drugs; improve public health.
  • அரசின் கடமை – ஊட்டச்சத்து மற்றும் பொதுசுகாதார மேம்பாடு. மயக்கப் பொருட்கள் தடை மற்றும் மக்களின் சுகாதார நிலையை உயர்த்துவது அரசின் கடமை.

Article 48 – Organisation of agriculture and animal husbandry
  • Improve agriculture and preserve cow breeds; ban slaughter of cows and calves.
  • விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு மேம்பாடு. மாடுகள் மற்றும் காளைகளை பாதுகாத்து, விவசாய வளர்ச்சிக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Article 49 – Protection of monuments and places of national importance
  • State shall protect monuments of historical/national importance.
  • பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை பாதுகாப்பது அரசின் கடமை. மரபுவழி நினைவுச்சின்னங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் கொண்ட இடங்களை அரசு பாதுகாக்க வேண்டும்.

Article 50 – Separation of judiciary from the executive
  • Ensure separation of judiciary from the executive in public services.
  • நீதித்துறையையும் நிர்வாகத்தையும் பிரிக்க வேண்டும். நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை தனிப்படுத்த அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Article 51 – Promotion of international peace and security
  • The State shall:
  • Promote international peace and security
  • Maintain just and honorable relations between nations
  • Foster respect for international law
  • Encourage settlement of international disputes by arbitration
Article 51 – உலக அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்
  • அரசு பின்வரும் செயல்களில் ஈடுபட வேண்டும்:
  • உலக அமைதியும் பாதுகாப்பும் நிலைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • நாடுகளுக்கு இடையிலான மரியாதையான மற்றும் நியாயமான உறவுகளை பேண வேண்டும்
  • சர்வதேச சட்டங்களை மதிக்க ஊக்குவிக்க வேண்டும்
  • சர்வதேச மோதல்களை நடுவர் முறையில் தீர்க்க வழிவகை செய்ய வேண்டும்

Article 51A – Fundamental Duties (முக்கிய கடமைகள்)
  • Added by: 42nd Constitutional Amendment, 1976
  • Total Duties: 11 Fundamental Duties. 
List of Fundamental Duties 
  1. To abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem / அரசியலமைப்பையும் அதன் சிந்தனைகளையும், தேசியக்கொடியையும் தேசிய கீதத்தையும் மதிக்க வேண்டும்.
  2. To cherish and follow the noble ideals that inspired the national freedom struggle / இந்திய விடுதலைப் போராட்டத்தின் சிறந்த இலக்குகளை பின்பற்ற வேண்டும்.
  3. To uphold and protect the sovereignty, unity, and integrity of India / இந்தியாவின் இறையாட்சியை, ஒற்றுமையை மற்றும் முழுமையை பாதுகாக்க வேண்டும்.
  4. To defend the country and render national service when called upon / தேவைப்படும் போது நாட்டை பாதுகாக்கவும் தேசிய சேவையை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.
  5. To promote harmony and the spirit of common brotherhood / மதம், மொழி, மாநிலம், பிரிவினை இல்லாமல் சகோதரத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும்.
  6. To value and preserve the rich heritage of our composite culture / இந்திய கலாச்சார மரபுகளை மதித்து பாதுகாக்க வேண்டும்.
  7. To protect and improve the natural environment / சுற்றுச்சூழல், வனங்கள், நீர், காற்று, உயிரினங்கள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்.
  8. To develop scientific temper, humanism, and the spirit of inquiry and reform / அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூக மாற்றங்களுக்கான ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.
  9. To safeguard public property and to abjure violence / பொது சொத்துக்களை பாதுகாக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும் வேண்டும்.
  10. To strive towards excellence in all spheres of individual and collective activity / தனிப்பட்ட மற்றும் சமூக செயல்களில் சிறந்த நிலையை நோக்கி முயற்சிக்க வேண்டும்.
  11. For parents/guardians: To provide opportunities for education to children aged 6 to 14 years / பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு வழங்க வேண்டும்.

Resource :

  • Tamil Nadu School Samacheer books from 6th standard to 12 th standard.


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"






No comments:

Post a Comment