ஔரங்கசீப்பின் ஆட்சி , போர் வெற்றிகள் மற்றும் முகலாய காலத்தின் ஆட்சிமுறை, சமூகம் மற்றும் பெண்களின் நிலைபாடு

ஔரங்கசீப்பின் ஆட்சி  , போர் வெற்றிகள்

ரங்கசீப் கி.பி 1658 - 1707 

The Mughal Emperor : Aurangazeb

  • ஷாஜகானின் மூன்றாவது மகன்.
  • வைதீக சன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்.
  • கடின உழைப்பாளர் , ஒழுக்கசீலர் மற்றும் எளிமையானவர்.
  • குரானைப் படி எடுத்து அவற்றை விற்று வரும் பணத்தில் தமக்கு வேண்டிய செலவுகளை செய்து கொண்டார்.
  • மது அருந்தும் பழக்கம் இல்லாதவர்.
  • முகலாய வம்சத்தின் கடைசி வலிமை வாய்ந்த பேரரசர்.
  • வாரிசுரிமை போரில் தன்னோடு போட்டியிட்ட தன் சகோதரர்கள் தாரா , சூஜா , முராத் ஆகியோரைக் கொன்று 1658ல் அரியணை ஏறினார் .
  • இவர் ஆலம்கீர் (உலகை வெல்பவர்) என்னும் பட்டத்தை சூட்டிக்கொண்டார் .
  • இவர் தனது 50 ஆண்டுகால ஆட்சியில் முதல் 25 ஆண்டுகள் வட இந்திய அரசியலிலும் அடுத்த 25 ஆண்டுகள் தக்காண அரசியலிலும் கவனம் செலுத்தினார்.
  • ஔரங்கசீப் மேற்கொண்ட நீடித்த போர் நடவடிக்கைகளால் விவசாயிகள் மீதான வரிச் சுமைகள் உயர்த்தப்பட்டன.
  • தொடக்கத்தில் ஷாஜகானாபாத் ஔரங்கசீப்பின் தலைநகராக இருந்தது . ஆனால் அவரது கடைசி 25 ஆண்டு கால ஆட்சியில் படையெடுப்புகள் மேற்கொண்ட போது முகாமிட்டிருந்த இடங்கள் தலைநகராக மாறின.

வட இந்தியாவில் ஔரங்கச்சீப்பிற்கு எதிராக மூன்று கிளர்ச்சிகள்

  • ஜாட் (மதுரா மாவட்டம்) : ஜஹாங்கீர் , ஷாஜகான் காலத்தில் இருந்தே கலகம் செய்து வந்த ஜாட்டுகளின் கிளர்ச்சி 1669 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டது .ஔரங்கசீப்பின் மரணத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் தொடர்ச்சியில் ஈடுபட்டனர் .
  • சத்னாமியர் (ஹரியானா பகுதி) : சத்னாமியர்களின் கிளர்ச்சி உள்ளூர் ஜமீன்தார்களின் உதவியோடு ஒடுக்கப்பட்டது. 
  • சீக்கியர்களின் கிளர்ச்சி: அதிகாரப்பூர்வமாக சீக்கிய குரு என்ற பதவி வகித்து வந்த சீக்கிய குரு தேஜ் பகதூருக்கு எதிராக பதவியின் மீது உரிமை கொண்டாடிய ராம்ராஜ் மேற்கொண்ட சூழ்ச்சிகளின் காரணமாக கிளர்ச்சி வெடித்தது. இறுதியில் சீக்கிய குரு தேஜ் பகதூர் (ஒன்பதாவது சீக்கிய குரு) கொல்லப்பட்டதோடு கிளர்ச்சி முடிவுக்கு வந்தது .

ஔரங்கசீப்பின் தக்காண கொள்கை 

  • ஔரங்கசீப் தனது முதல் 25 ஆண்டு கால ஆட்சியில் வடமேற்கு எல்லைப் பகுதியில் கவனம் செலுத்தினார் .இந்நேரத்தில் மராத்திய அரசர் சிவாஜி வடக்கு மற்றும் தெற்கு கொங்கண பகுதியில் தனக்கென்று ஒரு அரசை ஏற்படுத்திக் கொண்டார் .
  • மராத்தியர்களின் பரவி வரும் செல்வாக்கை ஒடுக்க ஔரங்கசீப் பீஜப்பூர் , கோல்கொண்டா மீது படையெடுத்தார் .
  • பீஜப்பூர் சுல்தான் சிக்கந்தர்ஷாவை தோற்கடித்து அப்பகுதிகளை இணைத்துக் கொண்டார் .
  • கோல்கொண்டா மீது படையெடுத்து குதுப்ஷாகி மரபை அடியோடு அழித்து அதனையும் இணைத்துக் கொண்டார் .
  • தக்காண அரசுகளை அழித்தது ஔரங்கசீப்பின் பெரிய அரசியல் தவறாகும். முகலாயருக்கும் மராத்தியருக்கும் இடைப்பட்ட நாடாக இது இருந்தது. இதனால் முகலாயருக்கும் மராத்தியருக்கும் இடையே நேரடியாக மோதல் உருவாக வழி வகுத்தது . மேலும் தக்காணப் படையெடுப்புகளால் கருவூலங்கள் காலியாகின .


 

                "தக்காண புற்றுநோய் ஔரங்கசீப்பை அழித்தது"

                                                                                      - ஜே.என். சர்க்கார்



மராத்தியருக்கு எதிரான நடவடிக்கைகள்

  • சிவாஜியின் தலைமையிலான மராத்தியர்கள் ஔரங்கசீப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்தனர் .
  • இதனால் ஔரங்கசீப் தனது தளபதிகளான செயிஷ்டகான் , ஜெய்சிங் ஆகியோரை ஒருவருக்கு பின் ஒருவராக சிவாஜியை கைது செய்துவர அனுப்பினார் .
  • ஜெய்ஹிந்த் சிவாஜியை கைது செய்து தில்லுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிவாஜி அங்கிருந்து தப்பி தக்காணத்தை அடைந்தார் .
  • சிவாஜி தன்னுடைய மரணம் வரை 1680 முகலாயப் படைகளுக்கு எதிராக போரிட்டார். 


ஔரங்கசீப்பின் பிற நடவடிக்கைகள்

  • அரியணைப் போட்டியில் தனது சகோதரர் தாராஷிகோவுக்கு சீக்கியர் உதவினர் என்ற காரணத்திற்காக அவர்களின் மீது ஔரங்கசீப் வெறுப்புக் கொண்டார் .
  • இந்நிலையில் ரஜபுத்திர அரசர்கள் தங்களை சுதந்திர அரசுகளாக பிரகடனம் செய்து கொண்டனர்.
  • இவர்களுக்கு எதிராக இளவரசர் அக்பர் ஔரங்கசீப்பின் மகன் தலைமையில் படை அனுப்பப்பட்டது . இளவரசர் தன்னை முகலாய பேரரசராக அறிவித்துக் கொண்டார் இவரது தொடர் நடவடிக்கைகளால் தக்காணத்திலிருந்து துரத்தப்பட்டார். சிவாஜி மகன் சாம்பாஜி இளவரசர் அக்பருக்கு உதவினார். இதனால் ஔரங்கசீப் நேரடியாக போரில் இறங்கவே இளவரசர் அக்பர் பாரசீகத்திற்கு தப்பிச் சென்றார் (இறுதிவரை திரும்பவேயில்லை ).
  • கி.பி 1689இல் சாம்பாஜி கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார் .
  • பேரரசின் தொலைதூரப் பகுதிகளை மேலாண்மை செய்யும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரிய நபர்களை அவுரங்கசீப் பெற்றிருக்கவில்லை .
  • ஔரங்கசீப் பிற மதங்கள் மீதான சகிப்புத்தன்மையை கொண்டிருக்கவில்லை .
  • ஜிஸியா வரியை மீண்டும் விதித்தார் .
  • புதிய கோவில்கள் கட்டப்படக்கூடாது எனவும் ஆணைகள் பிறப்பித்தார் (ஆனால் முகலாயப் பேரரசுக்கு கீழ்ப்படியும் நிலையில் இருந்த பகுதிகளுக்கு கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது ).
  • ஆனால் பழைய கோவில்களில் பழுது நீக்கும் பணிகள் அனுமதிக்கப்பட்டன.
  • வழக்கமாக விதிக்கப்படும் நிலவரிக்கு மேலாக வசூலிக்கப்பட்ட 'அப்வாப்' எனும் வரி வசூலை (ஷரியத் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்காக ) நிறுத்தினார். 
  • ஷாஜகான் உடைய ஆட்சி காலத்தை காட்டிலும் ஔரங்கசீப்பின் ஆட்சி காலத்தில் இந்து அதிகாரிகள் அதிகமாக எண்ணிக்கையில் அரசு நிர்வாகத்தில் பணியாற்றினர் . ஒழுக்க நெறிகளை நடைமுறைப்படுத்த முதாசீபுகள் என்ற உயர் அதிகாரம் படைத்த அதிகாரிகளை கொண்ட துறையை ஏற்படுத்தினார் .
  • மது தடை செய்யப்பட்டது .பாங்க என்ற ஒரு வகை தாவரம் மற்றும் இதர போதை பொருட்களும் தடை செய்யப்பட்டது .
  • தாரோக்காதர்ஷன் (அரசர் மணிமாடத்தில் மக்கள் முன் தோன்றுவது ) நிகழ்ச்சியும் தடை செய்யப்பட்டது . தசரா விழாவுக்கும் தடை விதிக்கப்பட்டது.
  • மொகரம் பண்டிகைக்கும் தடை விதிக்கப்பட்டது (ஷியா பிரிவு மீது  இருந்த வெறுப்பின் காரணமாக) 

முகலாய காலத்தின் ஆட்சிமுறை, சமூகம் மற்றும் பெண்களின் நிலைபாடு


முகலாயர் கால ஆட்சி நிர்வாகம் 


The Mughal's Map


  • பேரரசுக்கு உதவிட அமைச்சரவை இருந்தது . வசீர் அல்லது தலைமை அமைச்சர் முக்கிய அமைச்சராக கருதப்பட்டார் .
  • சுபாவினை நிர்வாகம் செய்தவர் சுபேதார்.
  • அக்பர் காலத்தில் பேரரசில் 15 சுபாக்கள் இருந்தன .
  • சர்க்காரின் ஆட்சியாளர் பவுஜ்தார் .
  • கிராமங்கள் மாநிலத்தின் கடைசி பிரிவு.


சமுதாய நிலை 

  • சமூக அமைப்பில் கிராம சமூகமே முதன்மை நிறுவனம் ஆகும் .
  • முக்காடம் என்று அழைக்கப்பட்ட கிராம தலைவர்கள் கிராமத்தின் நிர்வாக உறுப்பான பஞ்ச் (பஞ்சாயத்து) என்று அமைப்பினை உருவாக்கினர்.
  • கிராம அளவில் வரிகளை வசூலிப்பதும் அவை தொடர்பான கணக்குகளை பராமரிப்பதும் பஞ்சாயத்தின் பொறுப்பாகும் .
  • பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாத நிலங்களை கிராம கைவினைஞர்கள் கடைநிலை ஊழியர்கள் சேவை செய்வோர் ஆகியோருக்கு அவர்கள் செய்யும் சேவைகளுக்கு கைமாறாக இப்பஞ்சாயத்து வழங்கியது .
  • சமூகத்தின் நடுத்தர வர்க்கமானது சிறிய மன்சப்தார்கள் , சிறு கடைகள் வைத்திருப்போர் , ஹக்கீம் (மருத்துவர்கள்) , இசை கலைஞர்கள் , ஏனைய கலைஞர்கள் மற்றும் முகலாய நிர்வாகத்தின் கீழ்நிலை அலுவலர்கள் ஆகியோரை கொண்டிருந்தது  .
  • ஊதியம் பெரும் ஒரு வர்க்கமும் இருந்தது. இவர்கள் மதாத் - இ- மாஷ் எனப்பட்ட மானியத்தை முகலாய பேரரசிடமிருந்தும் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஜமீன்தார்கள் ஆகியோரிடமிருந்தும் பெற்றனர். இவர்கள் கிராமத்து மேன்மக்களின் ஒரு பகுதியாக மாறி கிராமத்தையும் நகரத்தையும் இணைக்கும் கண்ணிகளாய் இருந்தனர் .
  • தில்லி , ஆக்ரா , பதேப்பூர் சிக்ரி , லாகூர் , அகமதுநகர் , டாக்கா , முல்தான் ஆகிய பேரரசின் முக்கியமான நகரங்களாகும் . இவை சமகால ஐரோப்பிய நகரங்களான லண்டன் , பாரீஸ் போன்றவற்றிற்கு இணையாக கருததக்க நிலையில் இருந்தன .
  • சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த மக்களில் ஆண்கள் லங்கோடு எனப்பட்ட கோவணத்தையும் பெண்கள் சேலையையும் அணிந்தனர். ஏழை மக்கள் மண் வீடுகளில் வசித்தனர் .
  • முகலாய சமூகத்தில் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றிருந்த ஜமீன்தார்களையும் பிரபுக்களையும் கொண்டிருந்த வர்க்கம் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தனர் .
  • அபுல் பாசல் தன்னுடைய அயினி அக்பரியில் ஜமீன்தார்கள் ஆவதற்கான தகுதிகளை உடைய சாதிகளை பட்டியலிடுகிறார் .
  • அக்பருடைய ஆட்சிக்காலத்தில் 15 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பிரபுக்கள் ரஜபுத்திரர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது .
  • ராஜா தோடர் மால் , ராஜா மான்சிங் , ராஜா பீர்பால் ஆகியோர் அக்பர் காலத்தில் புகழ்பெற்ற பிரபுக்களாவர் . ஜஹாங்கீர் , ஷாஜகான் ஔரங்கசீப் ஆகியோர் மராத்தியரை பிரபுக்களாக நியமித்தனர். எடுத்துக்காட்டாக சிவாஜியின் தந்தை ஷாஜி சிலகாலம் ஷாஜகானிடம் பணியாற்றினார் .
  • சாதிமுறை ஒரு மேலாதிக்க நிறுவனமாக இருந்தது .
  • கீழ்நிலை சாதிகள் அதிகமாக ஒடுக்கு முறைக்கு உள்ளாகினர் .
  • சமூக பாகுபாடுகளுக்கு எதிராக பக்தி இயக்கம் புரட்சி கொடியை உயர்த்தினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வறுமையில் வாடிய நிலமற்ற விவசாயிகள் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர் .


பெண்களின் நிலை

  • மரபுவழி சொத்துக்களில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்ச உரிமையே பெண்களுக்கு இருந்தது .
  • உயர் சாதி பெண்கள் இடையில் விதவை மறுமணம் தடை செய்யப்பட்டிருந்தது .
  • அன்றாட வீட்டு வேலைகளோடு பெண்கள் நூல் நூற்றனர் . வேளாண் பணிகளிலும் உதவி செய்தனர் .
  • முகலாய நிர்வாகம் மேல்சாதி சமூகங்களுடைய நிலவிய உடன்கட்டை ஏறும் பழக்கத்தை நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டது .
  • முஸ்லீம் மணப்பெண்கள் திருமணத்தின் பொழுது மகர் என்னும் பணப்பரிசை பெறுவதற்கு உரிமை பெற்றிருந்தனர் .
  • பரம்பரை சொத்துக்களில் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு சமமாக இல்லாவிட்டாலும் பெண்களும் ஓரளவு பங்குபெறும் உரிமையை பெற்றிருந்தனர்.

Resource :

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"



No comments:

Post a Comment